கச்சா எண்ணெய் விலை இனி உயராதா?

கச்சா எண்ணெயின் விலை இனி குறையுமா? அதன் விலையை குறைக்கும் அம்சங்கள் யாவை?

1
2404
கச்சா எண்ணெய் விலை இனி உயராதா?
கச்சா எண்ணெய் விலை இனி உயராதா?

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய்களை தாண்டியது. சர்வதேச எரிசக்தி உற்பத்தி முகமை  [IEA] இந்த ஆண்டில் அதாவது 2018 இல் சவுதி அரேபியா மற்றும் ருஷ்யாவை விட அமெரிக்காவே உலகளவில்  அதிக எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்து விடும் என்றது. அதற்கான அறிகுறிகள் உறுதியாக தோன்றுவதாகவும் இவ்வமைப்பு தெரிவித்தது.

அமெரிக்காவில் ஷேல் நிறுவனங்கள் [கச்சா எண்ணெய் நிறுவனங்கள்] அதிக எண்ணிக்கையில் பெருகி கொண்டே போகின்றன.  இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய் எடுக்கும் அளவுக்கு உற்பத்தி உயரும். இதே நிலை நீடிக்கும் போது ஒரு நாளைக்கு 2,60,000 பீப்பாய் கிடைக்கும் அளவுக்கு உயர்ந்துவிடும்.

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு [OPEC]  கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைத்து அதன்  விலையை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கீழே இருக்கும் படம் அமெரிக்காவில் ஒரே வருடத்தில்கச்சா எண்ணெயின் உற்பத்தி ஐம்பது சதவிதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது அங்கே எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டு கொண்டே இருக்கின்றன. கச்சா எண்ணெயின் வரு நாள் விலை[futures] 75 டாலராக இந்த ஆண்டு உயர்ந்ததையும் இந்தப் படம் காண்பிக்கிறது. இனி வரும் அடுத்த இரண்டாண்டுகளில் [2019 – 2020] விலை குறைந்து போக வாய்ப்புண்டு.


அமெரிக்காவில் இருந்து கூடுதலாக எண்ணெய் கிடைக்குமா?

அமெரிக்காவில் எண்ணெய் கிணறுகளின் எண்ணிக்கை உயர்வதால் எண்ணெய் உற்பத்தியும் அதிகரிக்கிறது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் என சந்தைக்கு வந்து கொண்டிருந்தது . இதுவரை ஈரானின் எண்ணெயை அதிகமாக நம்பிக்கொண்டிருந்ததே வருநாள் விலை விதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணம். வரு நாள் விலையை நிர்ணயிக்கும் சந்தைகள் [derivatives market] இந்த எண்ணெயின் விலையை அதிகரித்தன. ருஷ்யா, சவுதி அரேபியா வெனிஜுலா போன்ற நாடுகளின் முக்கிய பொருளாதார அம்சமாக இந்த  எண்ணெய் விற்பனை இருந்து வருகிறது.  எனவே இவையும் தங்கள் இஷ்டம் போல எண்ணெய் விலையை நிர்ணயித்தன. ஆனால் இனி இவை அமெரிக்காவின் முன்பு முற்றிலுமாக சரணடைந்து விடும். மாறாக இவை அமெரிக்காவுக்கு போட்டியாக அதிகளவில் உற்பத்தி செய்ய தொடங்கினால் சந்தை ரணகளமாகி விடும்.

எண்ணெய் தோண்டுவதற்கான செலவு குறைந்துவிட்டது

அமெரிக்கா இடைவிடாமல் செய்துகொண்டிருக்கும் ஒரு செயல் புதியவற்றை கண்டுபிடிப்பது ஆகும். 2014ஆம் ஆண்டில் அமெரிக்காவில்  எண்ணெய் எடுக்கும் தொழில் அதிக பொருட்செலவு உடையதாக இருந்தது.  இதனால் எண்ணெய் எடுக்கும் பல நிறுவனங்கள் திவால் ஆயின. பொதுவாக ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து பத்து ஆண்டுகள் மட்டுமே எண்ணெய் எடுக்க முடியும். ஆனால் சவுதியில் மட்டும் ஒரு எண்ணெய் கிணறு ஐம்பது ஆண்டுகளாக எண்ணெயை அளித்து வருகிறது. பல நாடுகள் எண்ணெயை அதிகளவில் மண்ணில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் எண்ணெய்க்கான தேவை சந்தையில் குறையத் தொடங்கும்.

கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறையும்?

2017ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஐம்பது அமெரிக்க டாலர் ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவ்விலை 44 டாலராக குறைந்தது. அதாவது இதன் விலை 12% குறைந்துவிட்டது. இந்த ஆண்டு சுமார் முப்பது புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டப்படுவதால் இன்னும் விலை அதிரடியாகக் குறையும். ஆகவே சர்வதேச எரிசக்தி உற்பத்தியாளர் அமைப்பு கச்சா எண்ணெயின்  விலையை பீப்பாய்க்கு முப்பது டாலராகக் குறைக்க வேண்டும். அப்போது சவுதி அரேபியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கும்.  ஏனென்றால் அந்நாடு பீப்பாய்க்கு 75 டாலர் என விற்பதையே சரியான விலை என நம்புகிறது.

2016இல் ஈரான் நாடு எண்ணெய் உற்பத்தியில் மறுபடியும் திடீரென  வந்து இறங்கிய போது  ஒரு பீப்பாயின் விலை இருபது டாலராகக் குறையும் என்று நான் எழுதியிருந்தேன். அப்போது விலை 28 டாலராக குறைந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்

சவுதி அரேபியாவின் ராஜ குடும்பத்தினர்

சவுதி அரேபியாவின் ராஜகுடும்பத்தில் நான்கு வருடத்துக்கு முன்பு 15,000 பேர் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் இருக்கின்றனர்.  அவர்களின் கருவூலம் இனி வேகமாக குறையும். இந்த நான்கு வருடங்களுக்குள் இன்னும் பலர் பிறந்திருக்கலாம்.  இனி செலவுகளை குறைக்க அந்நாடு தான் இது வரை அளித்து வந்த சலுகைகளை குறைக்கலாம். ஏமன் நாட்டில் நடக்கும் சண்டையும் இந்நாட்டின் செலவினங்களை அதிகரிக்கிறது. சர்வதேச எரிசக்தி உற்பத்தியாளர்கள் அமைப்புடனான ஒப்பந்தத்தை மீறி ஈரானால் அதிகளவில் எண்ணெய் உற்பத்தியை தொடங்கவும் முடியாது.

ஈரான் எதிர்த்து போராடுமா?

ஈரான் என்ன செய்யும்? அமைதியாக இருந்து அமெரிக்காவின் குறிப்பாக அதிபர் டிரம்பின் நல்லெண்ணத்தைப் பெற முயலுமா? அல்லது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முனைந்து சந்தை விலையில் அதிரடி தள்ளூபடி  [30%] தருமா? [வெனிஜுலா அப்படி தருவதாக ஒரு வதந்தி நிலவுகிறது]. முழு தொகையையும் டாலராக கேட்காமல் ஒரு பகுதியை இந்திய ரூபாயில் பெற்றுக் கொள்ளுமா?  டிரம்ப் இந்தியா அமெரிக்காவுடன் தொடர்பு  கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால அமெரிக்கா இந்திய ரூபாயை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை தருமா? இல்லையென்றால் இந்தியா ஈரானுடனான தனது ஒப்பந்தத்தை தொடருமா? இப்போது இந்தியா நல்ல இடத்தில் இருக்கிறது தனக்கு ஏற்றபடி பேரம் பேசி ஒப்பந்தம் செய்யலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here