வால்மார்ட் ப்ளிப்கார்ட்டை தன்னகப்படுத்துவதால்  இந்தியாவுக்கு என்ன  நன்மை?

வால்மார்ட் ப்ளிப்கார்ட் இணைப்பு - சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா?

1
1507
வால்மார்ட் ப்ளிப்கார்ட் இணைப்பு
வால்மார்ட் ப்ளிப்கார்ட் இணைப்பு

திரைப்படத்தில் வருவது போல வணிக தொடர்புகள் சிலரால் ‘ஏற்பாடு’ செய்யப்படுவது கிடையாது. இரண்டு வணிக  நிறுவனங்களில் இருந்தும் தீர ஆலோசித்து ஆராய்ந்து ஏராளமான ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்த இணைப்பு நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனம் நன்கு வளர்ந்திருந்தாலும் அதற்கு மேலும் மேலும் பணம் முதலீடு செய்யவேண்டி இருந்தது. மேலும் முதலீடு இல்லையென்றால் இந்நிறுவனம் மூடுவிழா காணும் நிலையில் இருந்தது அதே சமயம்  இந்தியாவில் இதன் சந்தை மிகப்பெரியது. இவ்வாறு அதிகமான வாடிக்கையாளர்களை ப்ளிப்கார்ட் பெற்றிருப்பதால் வால்மார்ட் இந்நிறுவனத்தை தன்னுடன் இணைக்க துடித்தது. வால்மார்ட் ஒரு மிகப்பெரிய ராட்சச  நிறுவனம் என்பதால் அதன் வருகை இந்தியாவில் உள்ள இணைய தள சந்தைக்கு பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்று நினைத்து இங்குள்ள நிறுவனங்கள் பதறுகின்றன. ஆனால் இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு குறித்து என்னுடைய கருத்து சற்று வித்தியாசமானது.

வால்மார்ட் அமேசான் போல் ‘நிற்க’ வேண்டும்

வால்மார்ட் இன்றும் ‘எப்போதும் குறைந்த விலை’ என்ற விளம்பர வாசகத்தையே பயன்படுத்துகிறது. இப்போது அதன் சந்தை விரிவடைவதால் அதிகமானோர் பொருள் வாங்குவர்  பொருட்களை தன்னிடம் விற்பதற்காகக் கொடுத்து வந்தவர்களுக்கு அவற்றிற்குரிய விலையை கொடுப்பதற்கு இது வரை வால்மார்ட் ஒன்பது மாத கால அவகாசம் கேட்டிருந்தது. இதனால் வால்மார்ட்டுக்கு பொருளை விற்க அதிக கால அவகாசம் இருந்தது. தன வாடிக்கையாளருக்கு குறைந்த விலைக்கு விற்கவும் முடிந்தது. சிறு வணிக நிறுவனங்கள் வால்மார்ட் அளவுக்கு தம்மால் விலையை குறைத்து கொடுக்க இயலாததால் தம் கடைகளை இழுத்து மூடி விட்டன.

அமேசான் வால்மார்ட்டை ‘சாப்பிட்டுவிட்டது’

ஆரம்பத்தில் வால்மார்ட்  வியாபாரத்தில் அடியெடுத்து வைத்த[போது அமெரிக்காவில் சிறிய கடைகளின் வியாபாரம் பாதிக்கும் வகையில்  நடந்துகொண்டது. ஆனால் அமேசான் போட்டியாக வந்தபிறகு வால்மார்ட்டின் விற்பனை  தள்ளாடத் தொடங்கியது. அமெரிக்க மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வால்மார்ட் கடைக்கு வந்து குறைந்த விலைக்கு வாங்காமல் வீட்டில் இருந்தபடியே அமேசான் இணையதளத்தில் கேட்டு வாங்கிக் கொண்டனர். அமேசானில் வாங்கும்போது  அவர்கள் வாஷிங்க்டனுக்கு வெளியில் இருந்தால் விற்பனை வரி கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

அமேசானும் ப்ளிப்கார்ட்டை போல ஆன்லைனில் புத்தகம் விற்பதாகத்தான் தன தொழிலை தொடங்கியது. மக்கள் வீட்டில் புத்தகங்களை வாங்கி அடைக்காமல் இடத்தை சேமிக்க ஆன்லைனில் புத்தகம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அமேசான் வளர்ந்த பிறகு ௨௦௦௦இல் அது இணையதளச் சந்தையில் கால் வைக்காத பகுதிகள் நிறைய இருப்பதை அறிந்துகொண்டு அமேசான் வெப் சர்விசஸ் என்ற பெயரில் தன்னுடைய இணையதள சேவையை விரிவுபடுத்தியது. மைக்ரோசாப்ட்டும் கூகுளும் வந்து அமேசானின் இடத்தை பிடிக்கும் வரை இணையதள சேவையில் அமேசான் உச்சத்தில் இருந்தது.

வால்மார்ட் பெரிய கட்டிடத்தில் கடை பரப்பி இருப்பதையே தன்னுடைய பலமாக நம்பிக்கொண்டிருந்தது. இனி வியாபாரம் என்பது இடத்தை நம்பியிருக்காது இணையத்தைத் தான் நம்பியிருக்கும் என்பது வால்மார்ட்டுக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டதால் அமேசானின் இடத்தை பிடிக்க முயல்கிறது.

ப்ளிப்கார்ட்டை தன்னுடன்  இணைத்துக்கொள்ளப் போவதாக தெரிந்த உடனேயே அதன் பங்குகள் 4.5% வீழ்ச்சி அடைந்தன. அதாவது பத்து பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகளை வால்மார்ட் இழந்தது. வால்மார்ட் ப்ளிப்கார்ட் இணைப்பு மகிழ்ச்சிகரமானதாக தொடங்கவில்லை என்பதை இப்பங்குகளின் வீழ்ச்சி உணர்த்துகிறது.

நன்மைகள்

முதலில் நாம் இரண்டு நிறுவன்ங்களின்  தர வரிசையை கீழ்க்காணும் அட்டவனையின் துணை கொண்டு அறிவோம். ப்ளிப்கார்ட் வால்மார்ட்டை விட உயரத்தில் உள்ளது Figure 1.

Walmart.com மற்றும் Flipkart.com ஒப்பீடு
Fig 1. Walmart.com மற்றும் Flipkart.com ஒப்பீடு

இன்னொரு பை அட்டவணையின் (Figure 2, Figure 3) மூலமாக இணையதளத்தில் அதன் இருப்பின் தரத்தை உறுதிசெய்வோம்.  இதில் ப்ளிப்கார்ட் இந்தியாவின் வளர்ந்துவரும் சந்தை காரணமாக உயரத்தில் இடம் பெற்றுள்ளது. இனி இதனையே மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

Walmart.com இன் இணைய போக்குவரத்து
Fig 2. Walmart.com இன் இணைய போக்குவரத்து
Flipkart இன் தள போக்குவரத்து
Fig 3. Flipkart இன் தள போக்குவரத்து

இணையத்தில் கால் பதித்து தொழில் தொடங்க வால்மார்ட் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது இனி ப்ளிப்கார்ட்டிடம் இருந்து அதன்  நுட்பங்களை அறிந்துகொண்டு வால்மார்ட் தன சிறகுகளை இணைய தள வியாபாரத்தில் விரித்து பறக்க வேண்டும். மற்ற நாடுகளில் வால்மார்ட் தொழிலை விரிவாக்க கருதினாலும் ப்ளிபகார்ட்டின் வழிமுறைகளையும்   நுணுக்கங்ககளையும் அது பின்பற்றலாம். இதற்கு அதிகமான ஆட்களை வால்மார்ட் பணிக்கு அமர்த்த வேண்டும். அதுவும் இந்தியாவில் மேக கணிமை மற்றும்  பகுதி நிபுணர்கள் என பல்லாயிரக் கணக்கானோர்   வால்மார்ட்டுக்கு தேவைப்படுகின்றனர்.  நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் ஆயிரக் கணக்கில் உருவாகும் போது அதனை சார்ந்து இன்னும் பல்லாயிரம் பேருக்கு சார்பு வேலைகளும் கிடைப்பதால் இந்த இரு  நிறுவனங்களின் இணைப்பால் இந்திய மக்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

குறைந்த விலைக்கு பொருட்களை தன வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமும் இப்போதுவால்மார்ட்டுக்கு இருக்கிறது. இதை ஏற்கெனவே இதன் போட்டி நிறுவனங்களான அமேசான் ஸ்நாப் டீல் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகியன தொடங்கிவிட்டன. இப்போது வால்மார்ட் இரட்டை சவால்களை சந்திக்க வேண்டும் ஒன்று விலையை குறைக்க வேண்டும் அதே சமயம் ப்ளிப்கார்ட்டை வாங்குவதற்கு கொடுத்த பணத்தையும் திரும்ப எடுக்க வேண்டும்.

1 COMMENT

  1. நம் அரசும் வரிச்சுமையயும் சிக்கலான வழிமுறைகளையும் தவிர்த்து வால்மார்ட் இந்த இணைய வியாபாரத்தை உலக அளவுக்கு பெருக்க வழிவகை செய்து கொடுத்தால் நம் நாட்டைச் சார்ந்த ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம் உறுவாகும் வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here