வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முன்பே தொகுதியில் எதிர்ப்புக் குரல் வலுக்கிறது

0
2428
வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்
வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாட்டில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன்  கார்த்தியை வேட்பாளராக நியமித்ததும் அத்தொகுதியின் மூத்த அரசியல்வாதியும் காங்கிரஸ்காரருமான சுதர்சன நாச்சியப்பன் இவரை வேட்பாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனக் குரல் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் பதினெட்டாம் நாள் அன்று பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே அங்கு கார்த்திக்கு கடும் எதிர்ப்பு புகையத் தொடங்கிவிட்டது.

முக்குலத்தோரின் வாக்குகளை சசிகலாவின் வழிகாட்டுதலோடு களத்துக்கு வந்திருக்கும் டி டி வி தினகரனின் அ ம மு க கட்சியினர் பிரிப்பார்கள், என்றார்.

ப சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நெருக்கமான அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் “இந்த முறை சிவகங்கை தொகுதியில் கார்த்தி கண்டிப்பாகத் தோற்பார். இதில் சந்தேகமே வேண்டாம். ஆசைக்கும் ஓர் அளவுண்டு” என்றார். வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளருக்கு சிவகங்கைத்  தொகுதியைக் கொடுக்கலாம் என்று பலரும் வலுயுறுத்தி சொல்லியும் பலனில்லை அப்பாவும் மகனும் கேட்கவில்லை. தங்களுக்கே வேண்டும் என்று இத்தொகுதியை எடுத்துக் கொண்டனர். இனி தோற்று கேவலப்படப் போகின்றனர்’ என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மூத்த காங்கிரஸ்காரர் கூறினார்.

சிதம்பரத்தின் கையாளாக ஒரு காலத்தில் பவனி வந்த சேவா தளத்தின் தலைவரான அருணகிரிநாதன் அச்சமின்றி கார்த்தியின் தோல்வியை அமபலப்படுத்தினார். இவர் “சிவகங்கையில் கார்த்தியின் குடும்பத்துக்கு பல வகையிலும் எதிர்ப்பு காணப்படுகிறது. எங்களை அந்தக் குடும்பத்தினர் கொஞ்சமும் மதிப்பது கிடையாது . கிள்ளுக்கீரை போல நடத்துகின்றனர்.  நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் தன் மானம் உடையவர்கள்” என்றார் . தற்போது அருணகிரிநாதன் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் ஹெச். ராஜாவுக்கு இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார். “அவர் காரைக்குடியைச்  சேர்நதவர். மக்கள் அவர் மிக நல்ல மனிதர் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றனர்”.

2௦14 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கார்த்தி 1,04,678  வாக்குகளைப் பெற்று நான்காமிடத்தில் இருந்தார்.  அவர் தனது  தேர்தல் வாக்குறுதியில் சிவகங்கையில் கிராமங்கள் தோறும் டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவதாகத் தெரிவித்தார். அவரும் அவர் தந்தையும் தொகுதியில் காணப்படும் கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கவில்லை. இது குறித்து நாங்கள் எப்போது சிதம்பரத்தை அணுகினாலும் அவர் எங்களை கோபிப்பார். போய் பஞ்சாயத்து அலுவலகத்தில் கேளுங்கள் என்று சத்தம் போடுவார். என்று அருணகிரிநாதன் தெரிவித்தார்.

இன்னொரு காங்கிரஸ் தலைவர் இந்த முறை அதிமுக வாக்குகள் சிதறும். முக்குலத்தோரின் வாக்குகளை சசிகலாவின் வழிகாட்டுதலோடு களத்துக்கு வந்திருக்கும் டி டி வி தினகரனின் அ ம மு க கட்சியினர் பிரிப்பார்கள், என்றார். முக்குலத்தோரின் வாக்குகளைப் பத்து சதவிகிதமாவது தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே வரும் மே மாதம் 23ஆம் தேதி ராஜா எம் பி யாக பதவியேற்க புது டில்லிக்கு விமானம் ஏறலாம், என்று ஒரு காங்கிரஸ்காரர் தெரிவித்தார்.

முக்குலத்தோரின் வாக்குகளின் சரிவதைச் சரிக்கட்டவே தே மு தி க கட்சியுடன் அ தி மூ க வினர்  வலியப் போய் கூட்டணி வைத்துள்ளனர். 2௦௦9இல் தனித்து நின்ற தே மு தி க கட்சி 60,054 வாக்குகளைப் பெற்றிருந்தது. ரங்கராஜ் பாண்டே தொடங்கியுள்ள சாணக்யா டிவி கிறிஸ்தவ ஊடகவியலாரான மேத்யு சாமுவேல் கொடநாட்டு கொலை, கொள்ளை சம்பவங்களில்  நடந்த சதியை அம்பலப்படுத்தியதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவிக்கிறது. இதுவும் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்.

காங்கிரஸ்காரர்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி, வேட்பாளர் தேர்வில் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஸ்டாலின் மீது ஏற்பட்ட கோபம், ஆகியவை ராஜாவுக்கு ஆதரவு வாக்குகளாக திரும்பும். எனவே அவருக்கு வெற்றி உறுதி.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரும்படி சி பி ஐ க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி பி ஐ இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதி பெற்று ஆறு வாரம் முடிந்துவிட்ட நிலையில் எதற்காக இன்னும்  ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்பது புரியவில்லை. தேர்தல் முடியும் வரை காத்திருக்கலாம் என்று சி பி ஐ மௌனம் சாதிக்கிறதா? அல்லது யாராவது தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்களை கைது செய்யாமல் தடுத்து நிறுத்துகிறார்களா என்பதும் தெரியவில்லை.  நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் பாராளுமன்றத் தேர்தலா அல்லது யாருடைய தடுப்பு முயற்சியா என்பது தெளிவாகவில்லை.  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறையினரும் கார்த்தி குடும்பத்தினரைக் கைது செய்து விசாரிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். இது தேர்தலுக்காகவா அல்லது விசாரணை எதுவும் தேவையில்லை என்ற கருத்தில் வேண்டுமென்றே அமைதியாக இருக்கின்றனரா?  தெரியவில்லை. இரண்டுமே பொருந்தாத காரணங்கள் . தேர்தல் நடந்தால் சி பி ஐ யும் அமலாக்கத்  துறையும் ஒய்வு எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா? தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடரக் கூடாதா? தேர்தல் காரணமல்ல என்றால் வேறு யார் அல்லது எது அவர்களின் விசாரணைக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here