பண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்

இந்திய அரசியல் வட்டாரத்தில் வளைய வரும் தனி மனிதர் – அரசியல்வாதி பண மழையைக் கொட்டும் தகுதி உடையவர். பொதுச் சொத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டும் இவர் வரும் தேர்தலில் பணத்தை கொள்ளை கொள்ளையாகக் கொட்ட தீர்மானித்துள்ளார்

1
2795
பணமழைக்காரரின் மாபெரும் திட்டம்
பணமழைக்காரரின் மாபெரும் திட்டம்

வெள்ளை வேட்டி சட்டையில் வளைய வரும் இந்த அரசியல்வாதி வேத பூமியை  பூர்வீகமாகக் கொண்டவர். இடதுசாரி சார்புள்ள இந்த அரசியல்வாதி கட்சிக்கு பணம் புரட்டுவதில் கைதேர்ந்தவர். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் மிக நளினமாக பேசி நடமாடும் இவர் தன்னுடைய இந்த கவர்ச்சியைக் கருவியாகக் கொண்டு பெண் பத்திரிகையாளர்களிடம் நயமாகப் பேசி தன்னைப்பற்றி நல்ல உயர்வான விஷயங்களை மட்டும் பத்திரிகைகளில் வெளியிடும்படி செய்வார். துதிபாடிகளால்  சூழப்பட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் தன்னை பற்றி எழுதப்படும் புகழ் உரையில் மயங்கி தன்னிலை மறந்து இருந்து வருகிறார்.

1996 தேர்தல்களில் வெளிப்பட்ட திறமை

ஒரு நாள் M என்ற எழுத்தை நடுவில் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சி வேத பூமியில் புதிதாக முளைத்தது. மிகப் பழைய  கட்சியின் அதிருப்தியாளர்கள் பலர் இந்த புதிய கட்சியில் இணைந்தனர். 1996 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தோன்றிய இந்த கட்சிக்கு தங்கள் அரசியல் எதிரிகளுடன்  போட்டி போட்டு வெற்றி பெறுவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்பட்டது. பலவகைச் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் இவர்களின் கட்சித் தலைவரால் பணம் புரட்டுவது மட்டும் எட்டாக்கனியாக இருந்தது. வேட்பளர்கள் இவரிடம் பணம் பணம் என்று கேட்டு எச்சரித்தனர். தேர்தல் செலவு அவர்களின் மென்னியைப் பிடித்துக் திருகியது. இப்போது பணமழைக்காரர் இங்கே வருகிறார். இவரை ஏன் பணமழைக்காரர் என்கிறோம்? இவர் அமிர்தவர்ஷினி ராகத்தை பாடி பணத்தை மழையாகப் பொழியச்  செய்யவில்லை. ஆனால் தனி ஒருவராக நின்று பணத்தைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறார். அதனால் அப்படி குறிப்பிடுகிறோம்.

மிகப் பழைய கட்சியின் மூத்த தலைவரிடம் போய் இவர் தான் ஒரு வருடத்தில் அதாவது 1996–97க்குள்  5000 கோடி ரூபாய் தருவதாகக் கூறுகிறார். அதற்கு  அச்சாரமாக 1996 தேர்தலுக்கு 400 கோடி ரூபாயை அளிக்கிறார். இந்த 400 கோடி ரூபாய் இவருக்கு எப்படி கிடைத்தது? வேத பூமியில் வெகு காலமாக விருத்தியாகி வந்த ஒரு வங்கியின் முதலீட்டை சுரண்டி இவர் இந்த 400 கோடியை தேர்தல் நிதிக்காக தன் கட்சித் தலைவர்களிடம்  கொடுத்துள்ளார் என்று அப்போது பலரும் வெளிப்படையாகவே பேசிக் கொண்டனர். இத்தொகை இந்தியாவின் குடிமக்கள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பினால் அவர்களுக்கு கிடைத்த ஊதியத்தின் சேமிப்பாகும். இப்பணத்தை நல்ல பல காரியங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். அதை விடுத்து ஒரு வங்கியை திவாலாக்கி அதில் பணம் போட்டு வைத்திருந்த ஏழை மக்களின் கண்ணீருக்கும் சாபத்துக்கும்  பலியாகி அவர்களின் சிறுசேமிப்பை அபகரிப்பது மாபெரும் தவறல்லவா?

1996 தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் அமைந்தது யாருக்கும் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அப்போது மிகப் பழைய கட்சி தன்னைப் பலி கொடுக்கத் துணிவது போல வேறு கட்சிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியின் தலைவரைப் பிரதமராகக்  கொண்டுவந்தது. இலட்சாதிபதிகளைக் கொண்ட இந்த மிகப் பழைய கட்சி அத்தருணத்தில் பணமில்லாமல் வாடியது. அந்த நேரத்திலும் இந்த குறுக்குப்புத்திக்காரரிடம் பணம் கொட்டிக் கிடந்தது. தொங்கு  பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளிடம் துண்டு துண்டாக ஆதரவு பெற்று பிரதமராக வந்தவருக்கு தொடர்ந்து அந்த கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால் இரண்டு வாரத்திற்குள் அவருடைய ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பதவியேற்ற பதின்மூன்றாம் நாள் நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அவர் தோல்வியடைந்து பதவி விலகினார். இப்போது இன்னொரு கூட்டணி அரசு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தோன்றியது. உடனே வேத பூமியின் இன்னொரு கட்சி அதற்கும் நடுவில்M எழுத்தை கொண்டிருக்கும் இன்னொரு கட்சியின் தலைவர்; தான் பிரதம மந்திரியாக முடியாததால் மிகப்பழைய கட்சியின் முன்னாள் தலைவரும், பிரதமராக முடியாததால் அவரது அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனார். அவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பிரதமர் பதவியில் இருத்தி வைக்கப்பட்டார்.

5000 கோடி புரட்டி தருவதாக தன் கட்சி தலைவரிடம் சொன்ன படி தன் சொல்லை நிறைவேற்றிய பண மழைக்காரர் பணம் கொடுத்து பலரை விலைக்கு வாங்கி இந்த அரசையும் கவிழ்த்துவிட்டார். இந்த புதிய பிரதமரும் தன் பதவியை இழக்க நேரிட்டது.இப்போது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற கூடிய ஒரு புதிய திட்டம் தீட்டப்பட்டது.

2004இல் எதிர்பாராத வெற்றி

பணமழைக்காரர் தன்னுடைய மிகப் பழைய கட்சி 2004ஆம் ஆண்டு மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கனவிலும் கருதவில்லை. எனினும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கட்சிக்காரர்களின் இரும்பு பெட்டியை சில நூறு கோடிகளை கொண்டு நிரப்பினார். இப்போது அவரது கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டதால் கட்சித் தலைவருக்கு அவரது  குடும்பத்திற்கு விசுவாசம் உள்ளவராக காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவரது குடும்பத்திற்கு தன்னுடைய மரியாதையை பவ்யமாகச் செலுத்தினார்.

தொட்டதெல்லாம் பொன்னாயிற்று 

அடுத்த நான்கு ஆண்டுகளும் இவருக்கு பொற்காலமாக விளங்கின. அவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. அவர் கட்சியானது  ஊரார் சொத்தை கொள்ளை அடிக்கவும் தன் கட்சிக்காரர்களுக்கு அவ்வப்போது அதை கொஞ்சம் வீசி எறியவும் அவருக்கு  முழு சுதந்திரத்தை கொடுத்திருந்தது. அவர் தன் கட்சிக்காரர்களின் இரும்பு பெட்டியை மட்டும் நிரப்பவில்லை. தன்னுடைய இரும்பு பெட்டியிலும் ஏராளமான பணத்தை நிரப்பினார். கணக்கற்ற சொத்து சேர்த்துக் கொண்டார். இந்த ஆட்சிக் காலத்தில் ஒரு துறையும் நேர்மையாக நீதியுடன் செயல்படவில்லை. எல்லா துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடியது. அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு தான் நிறைவேற்றப்பட்டன. இலாபகரமாக இயங்கி வந்த பொதுத் துறைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த துறைகளையும் நஷ்டக் கணக்கு காட்டி முழுமையாக அதன் இலாபங்களை அரசியல்வாதிகள் அபகரித்துக் கொண்டனர். இவர்கள் தமக்கு எதிராக நின்ற உண்மை விளம்பிகளான  நேர்மையான அதிகாரிகளை அலட்சியப்படுத்தினர். சிலர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களின் நடமாட்டத்தை முடக்கினர். செல்வத்தை மேலும் மேலும் குவிப்பதையே தனது நோக்கமாக கொண்டு செயல்பட்டனர்.

2009 தேர்தலும் தேவைப்படும் நிதியும்

2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் முந்தைய அரசு [1999 – 2004]  உருவாக்கிய திட்டங்களின் நன்மைகள் செயல்பாடுகள் ஆகியவற்றின் பலன்களை தம்முடையதாக்கி இந்த அரசு விளம்பரப்படுத்தியது. இதனால் இந்த அரசு நல்ல அரசாக மக்களால் நம்பப்பட்டது. இந்த அரசால் எந்த புதிய நல்லதொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே அந்த கட்சியின் பொருளாளர் தன் கட்சிக்காரர்களை திருப்திபடுத்த கோடி கோடியாக பணம் தேவை என்று தலைவரிடம் வற்புறுத்தினார். இத்தருணத்தில் பணமழைக்காரர் உள்ளே நுழைந்து 12 ஆயிரம் கோடியை எடுத்து தலைவர் முன்வைத்தார்.2009ஆம் ஆண்டில் கிடைத்த  தேர்தல் வெற்றி இவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஊழல் செய்வதற்கான அனுமதியை வழங்கியதாகக் கட்சிக்காரர்கள் அகமகிழ்ந்தனர். ஆனால்  இவர்களின் ஊழலைக் கண்டு மக்கள் கொதிப்படைந்தனர்.

2014ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சி தோற்கப்போவது உறுதி என்பது மக்களின் அதிருப்தியால் தெளிவாயிற்று. இப்போது பணமழைக்காரர் என்ன செய்தார்? 2014ல் இவர் மிகப் பழைய கட்சியை ஆதரித்தார்.. ஆனால் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறப்போவது உறுதி என்று தெரிந்ததால் இவர் சுமார் 6000 கோடி ரூபாவை எதிர்க் கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதியாக வழங்கினார். யார் செய்ததாலும் தன் காரியங்களை சிறப்பாக நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு பணத்தை இரு கட்சிகளுக்கும் கொட்டி கொடுத்தார்.  இது தோற்கப் போகும் மிகப் பழைய கட்சிக்கும் தெரிந்தே நடந்தது. இது கூட ஒரு ஏற்பாடுதான். வெற்றி பெற்று வந்தவர்களிடம் தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வதற்காக இந்த பணக்காரர் செய்து வைத்த முன்னேற்பாடு எனலாம். இந்தக் காலகட்டத்தில் இவரும் இவர் கட்சிக்காரர்களும் செய்த ஊழல்கள் ஒன்றை அடுத்து ஒன்றாக வெளிவரத் தொடங்கின.

2019  பணமழைக்காரரின்  கடைசி வாய்ப்பு

புதிய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் என்பது ஏழைகளை பாதித்திருக்கலாம். ஆனால் அது சிறிய அளவில் தான். அந்த பாதிப்பு  அரசியல்வாதிகளை புரட்டிப் போட்டு விட்டது. திடீரென்று பிரதமர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் சரக்கு லாரிகளில் ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக ஏற்றப்பட்டு சிலபல ஒப்பந்த ஏற்பாடுகளுடன் நேபாள நாட்டில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் வழியில் அந்த சரக்கு வண்டிகள்பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் சிலர் தாங்கள் செய்த அநியாயத்தை ஒத்துக்கொண்டனர். இப்போது 2019ஆம் தேர்தலில் செலவு செய்ய மற்றவர்களுக்கு நிதி வழங்க இந்தப் பண மழைக்காரரிடம் பைசா கூட இல்லை.. யோசித்தார்; தீவிரமாக யோசித்தார்; ஒரு திட்டத்துடன் புறப்பட்டார். வேத பூமியின் தலை நகரை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் இப்போது இந்த பணமழைக்காரர் அடுத்து வரும் 2019 தேர்தலுக்காக 50 ஆயிரம் கோடி பணம் புரட்ட ஒரு திட்டம் தீட்டி உள்ளார். இந்த 50 ஆயிரம் கோடியை அவர் யாரிடம் கொடுப்பார் என்றால் தன்னை பிரதமராக அறிவிக்கும் கட்சிக்கு தர தயாராக இருக்கிறார். இந்தப் பணம் இப்போது இந்தியாவில் இல்லை. ஆனால் இந்தப் பணத்தை தேர்தல் நேரத்தில் கொண்டு வந்து தேவைப்படுவோர்க்கு தர முடியும்.இதற்கு பணமழைக்காரரிடம்  பயங்கரமான ஒரு திட்டம் உண்டு. அது தேர்தல் நேரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை கறக்கும் திட்டமாகும். அதாவது இதை ரிவர்ஸ் ஹவாலா எனலாம். இது எப்படி நடக்கும் என்று கீழே உள்ள படத்தை பாருங்கள்.

How Rain Man will bring money in
How Rain Man will bring money in

இவரிடம் இப்போது  பணம் இல்லை; காரணம் பல்வேறு இடங்களில் பணம் மாட்டிக்கொண்டுள்ளது. இதனைக் கவனமாக நாட்டுக்குள் எடுத்து கொண்டு வர வேண்டும். இதற்கு அவர் பின்வரும் முறையை பின்பற்றுவார்.

பல பொருள் சந்தையில் [Multi Commodity Exchange] இவருக்கு 30 சதவீதம் பங்குகள் மற்றும் தேசிய பங்குச் சந்தையில்[National Stock Exchange (NSE)]பினாமிகள் மூலமாக 40 சதவீத பங்குகளை பெற்றிருக்கிறார். இவரிடம் இரண்டு திட்டங்கள் உண்டு.

  • ஒன்று, இவர் தேசிய பங்குச்சந்தையை பல்பொருள் சந்தையுடன் இணைக்கலாம்
  • அல்லது, பல்பொருள் சந்தையை  பாம்பே பங்குச் சந்தையுடன் [Bombay Stock Exchange (BSE)]இணைக்கலாம்

மேற்கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்று நடந்தால் பண மழைக்காரரின் திட்டம் வெற்றி பெறும். துறைசார்ந்த மேலாண் சேவைகள் [Portfolio Management Services (PMS))மூலமாக மொரீஷியஸ் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பணமானது பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச புரோக்கர்களுக்கு முதலில் போய்ச் சேரும். அவர்கள் தங்களுக்குரிய 30 சதவீத கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு  இந்தியாவில் உள்ள உள்ளூர் புரோக்கர்களுக்கு வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மூலமாக மீதிப் பணத்தை செலுத்தி விடுவர். பணம் வந்து சேர்வதற்கு முன்பாகவே கூட இந்தத் தொகை வந்துவிட்டதாக கணக்கில் காட்டி விடலாம். இவ்வாறான சில முன்னேற்பாடுகளை இந்த பணமழைக்காரர் தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்து வைத்திருக்கிறார். இந்த திட்டம் செயல்படத் தொடங்கினால் பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். ஆனால் அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை.

பங்குச்சந்தையில் உடனடி திடீர் சரிவு

தேசிய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பு பங்குகள் [Participatory Notes]மூலமாக இடைத்தரகர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த விளையாட்டில் நல்ல பங்குகளின் விலை சரிந்துவிடும். இதனால் பங்குச் சந்தை திடீர் சரிவை சந்திக்கும். இதுவும் தீபாவளி வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஏற்பட்டால் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து அவர்களின் பங்கு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அவை அவர்களுக்கு  பயனற்றுப் போய்விடும். அப்போது பொதுமக்களின் கோபம் ஆளும் கட்சியின் மீது பாயும்; ஆக 2019இல் இவரிடம் பணம் வாங்கிகொண்டு வெற்றி பெற்ற ஆளுங்கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விடும். இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு காய் அடிக்க இவர் திட்டமிட்டுள்ளார். அரசு இதற்கு என்ன செய்யப்போகிறது?

அரசின் புலனாய்வு நிறுவனங்களுக்கு இந்தப் பணமழைக்காரர் என்பது தெளிவாக புரியும். அவர் இன்றும் சுதந்திரமாக நாட்டில் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார். திட்டங்களைத் தீட்டவும் அதற்கான செயல்பாடுகளை முன்னேற்பாடுகளை ஆங்காங்கே நடத்தவும் அவர் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்த தனி மனிதன் மீது ஏராளமான சட்டமீறல் வழக்குகளும் உண்டு. இந்நிலையில் அவரை தண்டிக்கவும் சிறையில் அடைக்கவும் நீதி மன்றத்திற்கு சகல அதிகாரமும் உண்டு.

தற்போதைய அரசு இந்த மோசடிக்காரர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளா விட்டால் வரும் 2019 தேர்தலில் மிக மோசமான விளைவுகளை தற்போதைய அரசின் தலைவர் சந்திக்க வேண்டி இருக்கும். ஆளுங்கட்சி இது பற்றி சிந்திக்க வேண்டும்.

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

1 COMMENT

  1. By this article I could guess the Rain Man is who if i am correct it is indicating to the person who is in lot of problems

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here