ஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை?

காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த  கமிஷன் தொடர்பாக விசாரிக்க கிறிஸ்டியன் மிஷெலை சி பி ஐ கைது செய்தது

0
1392
காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த  கமிஷன் தொடர்பாக விசாரிக்க கிறிஸ்டியன் மிஷெலை சி பி ஐ கைது செய்தது
காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த  கமிஷன் தொடர்பாக விசாரிக்க கிறிஸ்டியன் மிஷெலை சி பி ஐ கைது செய்தது

சி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது  பொறுப்பில் வைத்து  விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத் துறையினரும் சேர்ந்து கொள்கின்றனர். அதன் பிறகு  நிச்சயமாக இவர் சிறையில் தள்ளப்படுவார். சிறையில் அடைத்த பின்பு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பெரும் தலைவலி ஆரம்பித்துவிடும். காங்கிரஸ் அரசு ஆகஸ்டா வெஸ்ட்லேன்ட் என்ற இத்தாலிய நிறுவனத்திடம் இருந்து  12 வி வி பி ஹெலிகாப்டர் வாங்க முனைந்ததில் இவர் தான் முக்கிய தரகராக செயல்பட்டார். 3600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் வழங்கப்படும் தரகு தொகை மட்டும் 375 கோடி ஆகும் . இத்தொகை இத்தாலி நிறுவனம் தான் சொன்னபடி எல்லாம் விதிமுறைகளை மாற்றி எழுதுவதற்காக கொடுத்த இலஞ்சப் பணம் ஆகும்.

1980கள் முதல் சோனியா காந்தியின் குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்  கிறிஸ்டியன் மிஷெல் குடும்பத்தினர் ஆவர்.

2012இல் சுவிட்சர்லாந்தில் இத்தாலிய புலனாய்வு துறையினர் மைக்கேலின் கூட்டாளியான குய்டோ ஹாஷ்கே என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சோனியா காந்திக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதை தெளிவாகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இவருடைய அரசியல் செயலாளராக இருந்த அகமது பட்டேலுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது.  ஹாஷ்கேயிடம் இத்தாலி நீதிமன்றத்தில் இவர்கள் இருவரின் படங்களையும் காண்பித்து கேள்வி கேட்டு இத்தகவல் உறுதி செய்யப்பட்டது. ஹாஷ்கே தான் இந்திய இராணுவ அதிகாரிகளோடும் விமானப் படை உயர் அதிகாரிகளோடும் மட்டுமே பேசியதாகவும் மிஷெல் தான் அரசியல் தலைவர்களோடு பேசியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர்களுக்கு தான் தரகு பணத்தில் இருந்து பெரும் பங்கு கொடுக்கப்பட்டதாகவும் ஹாஷ்கே நீதிமன்றத்தில் கூறினார். இத்தாலிய நீதிமன்றம் இன்னின்னாருக்கு இவ்வளவு வழங்கப்பட்டது என்று கையால் எழுதப்பட்ட ஊழல் பட்டியலை ஆவணமாக இணைத்திருந்தது. அந்தப் பட்டியலில் அகமது பட்டேலின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் ஏ பி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2016இல் இத்தாலியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சோனியா காந்தியின் பெயர் சிக்னோரா காந்தி என நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 193 மற்றும் 204 ஆம் பக்கங்களில் இரண்டிரண்டு முறை சோனியாவின் பெயர் சிக்னோரா காந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் படி அகஸ்டா வெஸ்ட்லான்ட் வி வி ஐ பி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் ஃபின்மெக்கானிகா நிறுவனத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் மிஷெல் 2008 ஆம் ஆண்டு மார்ச்  மாதம்  15ஆம் தேதி  ஹாஷ்கேக்கு எழுதிய ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கடிதம் அப்போது இந்தியாவின் தொடர்பு அதிகாரியாக இருந்த பீட்டர் ஹியுலேட்டுக்கு மிஷெல் எழுதியதாகும். இந்தக் கடிதத்தில் சோனியா தான் இந்த வி வி ஐ பி ஹெலிகாப்டர்களை வாங்குவதில்  மிகவும் ஆர்வம் காட்டுவதாகவும் இனி அவர் எம் ஐ 8 என்ற ஹெலிகாப்டரில் போகப் போவதில்லை என்ற உறுதியுடன் இருப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்ததை அப்படியே வார்த்தை மாறாமல் தீர்ப்பில் இத்தாலிய நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சோனியாவோ அல்லது அகமது பட்டேலோ மைக்கேலிடம்  இனி இப்போதிருக்கும் ஹெலிகாப்டரில் பறக்க போவதில்லை என்று சொல்லியிருக்க கூடும் என்பதை இக்கடிதம் தெளிவாக்குகிறது.

1980கள் முதல் சோனியா காந்தியின் குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்  கிறிஸ்டியன் மிஷெல் குடும்பத்தினர் ஆவர்.  மைக்கேலின் தந்தை உல்ஃப்கேங் மிஷெல் இங்கிலாந்து, ரஷ்யா முதல் லிபியா வரை பல நாடுகளுடன் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விற்பனையின் போது தரகு தொழில் செய்து வந்தார்.  1990களில் சோனியா இலண்டன் போன போது இவரது வீட்டில் தான் தங்கினார் என்பது உலகறிந்த உண்மை.  சோனியா எங்கிருக்கிறார் என்று ரா உளவு படையினரிடம் சொல்லி அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தேடச் சொன்ன போது அவர் மைக்கேலின் வீட்டில் தங்கி இருப்பது உறுதி ஆயிற்று. இத்தகவலை அப்போது ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. ‘ரா’ உளவாளிகள் சோனியா மிஷெல் வீட்டில் தங்கி இருப்பதை படங்களுடன் வெளியிட்டனர்.

இத்தாலிய நீதிமன்றத் தீர்ப்பில் வெளியான இன்னொரு சுவாரசியமான தகவல் இந்த விசாரணைக்கு இந்திய அரசு தரப்பில் ஒத்துழைக்காமல் இவ்வழக்கை கிடப்பில் போடுமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இத்தாலிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்த தகவல்  தீர்ப்பின் 163, 164 ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 163ஆம் பக்கத்தில் ஒர்சி 2013ஆம் ஆண்டு சிறையில் இருந்து எழுதிய குறிப்பு ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் அவர் தன ஆட்களிடம் இத்தாலிய பிரதமர் மாண்டி அல்லது தூதர் டேராசியானோ மூலமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசும்படி எழுதியிருக்கிறார்.

மாண்டி அல்லது தூதரை அழைத்து பிரதமர் சிங்கிடம் பேச சொல்லுங்கள்” என்ற குறிப்பு சிறையில் இருந்த ஒர்சியிடம் இருந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும் தீர்ப்பில் இந்திய தரப்பில் இருந்து வழக்குக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பது ஆங்காங்கே சுட்டப்பட்டுள்ளது. 2013இல் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் இவ்வழக்கு விரைவாக நடக்க ஒத்துழைப்பு தர மறுத்ததுள்ளன. ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் அரசு தானும் விசாரணை நடத்தாமல் இத்தாலிய அரசு நடத்திய விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சோனியா காந்தியின் தூண்டுதலே ஆகும். [அவர் இவ்வழக்கு நடைபெறுவதை விரும்பவில்லை. நடந்தால் தானும் சிக்கி கொள்ள நேரிடும் என்ற அச்சம் காரணமாக் வழக்குக்கு ஒத்துழைப்பு கொடுக்க விடாமல் தவிர்த்திருக்கிறார்]. 2016 ஆம் ஆண்டு நமது பி குருஸ் செய்தி தளம் இவ்வழக்கில் சோனியா சிக்கியிருப்பது குறித்து விரிவாக ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டது வாசகருக்கு நினைவிருக்கலாம்.

இனி வரும் காலங்கள் சோனியாவுக்கு ‘ஏழரையாக’ தான் இருக்கும். சி பி ஐ மைக்கேலிடம் விசாரித்து முடிக்கும் போது சோனியாவுக்கு எதிரான பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துவிடும். புதைந்திருந்த  உண்மைகள் வெளிவரும். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிஷெல் டில்லிக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார். 2017ஆம் ஆண்டில் துபாய் அதிகாரிகள் மைக்கேலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சி பி ஐ சர்வதேசக் காவல் துறையான ‘இன்டர்போலிடம்’ அனுமதி வாங்கும்வரை அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். மைக்கேலை சி பி ஐ  அதிகாரிகள்  இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க போகிறார்கள் என்பது தெரிந்ததும் அவரை விட்டு காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் ஒதுங்கி விட்டனர். இத்தாலி நீதிமன்றம் இந்த ஊழலில் சோனியாவுக்கு பங்கிருப்பதாக தெரிவித்த பிறகும் கூட அவருக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று சான்றிதழ் வழங்கினார் மிஷெல். இந்த பேட்டிக்கு காரணமாக இருந்தவர் கமல் நாத்தின் மகன் பகுள் நாத் என்பவர் ஆவார். அவரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி மைக்கேலை அவர்கள் முன்பு ‘சோனியா குற்றமற்றவர்’ என்று சொல்ல வைத்தார். இதுவே சோனியாவும் அவரது மேலாளர்களும் மைக்கேலுடன் தொடர்பில் இருந்தனர் என்பதை தெளிவாக்குகிறது.

சி பி ஐ நடத்தும் விசாரணையில் கிறிஸ்டியன்  மிஷெல் வெளியிடப் போகும் தகவல்களை எதிர்பார்த்து இந்திய அரசியல் காத்திருக்கிறது. உண்மைகள் வெளிச்சத்துக்கு வரட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here