தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா?

ஸ்டாலினின் வெற்றி தேர்தலின்  அடிப்படை விதிகளையும் கண்ணியத்தையும் மீறி பெற்ற வெற்றி

0
2769
ஸ்டாலினின் வெற்றி தேர்தலின்  அடிப்படை விதிகளையும் கண்ணியத்தையும் மீறி பெற்ற வெற்றி
ஸ்டாலினின் வெற்றி தேர்தலின்  அடிப்படை விதிகளையும் கண்ணியத்தையும் மீறி பெற்ற வெற்றி

நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டி வந்த  திமுகவுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்த 38  தொகுதிகளில்  திமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது.  வேலூரில் திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகன் மகன் கதிர் ஆனந்த்  நின்ற தொகுதியில் அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பரின் இடத்திலும்  சுமார் 15 கோடி ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றியதால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. அண்ணா திமுகவினர் தான் தனது வீட்டில் பணப்பெட்டியைக் கொண்டு வந்து வைத்ததாக துரை. முருகன் அளித்த பேட்டியை கண்டு மக்கள் நகைத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் நகைக்கவில்லை உடனே நடவடிக்கை எடுத்தது. தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் அண்ணா திமுக தோற்றதில் மைனாரிட்டி வாக்குகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வந்த அன்று திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் அரசியல் சுனாமி அடித்த இடம் போல் தொண்டர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திமுக கூட்டணி அடைந்த வெற்றி ஸ்டாலினுக்குப் பெருமையைத் தேடி தந்துள்ளது. அவர் இந்த அமோக வெற்றியை எப்படிப் பெற்றார் என்பதை அறியும் போது நமக்கு  அதிர்ச்சி ஏற்படுகிறது. தேர்தலுக்கு உண்டான அனைத்து விதிகளையும் கண்ணியத்தையும் திமுக மீறியுள்ளது.

‘பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எதிராகச்  செயல்படுகிறார்’ என்ற பொய் பிரச்சாரத்தைத் திமுகவினர்  செய்துள்ளனர். இத்தலைப்பிலான கட்டுரை ஒன்றை டி. ராமகிருஷ்ணன் என்பவர் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதியுள்ளார். இவர் ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர். அவர் இப்படி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பொய்ப் பிரச்சாரம் அரங்கேறியுள்ளது. திருச்சபையால் நிதி உதவியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படும் தொண்டு நிறுவனங்கள், மாவோயிஸ்ட்கள், இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் வேடிகனில் இருந்தும்  நிதி உதவி பெற்ற தமிழ்த் தேசியவாதிகள் எனப் பலரும் மோடி  தமிழர் நலன்களுக்கு எதிரானவர் என்றும் அவரது இந்துத்துவக் கோட்பாடு மற்ற மதங்களுக்கு எதிரானது என்றும்  அவதூறு பிரச்சாரம் செய்தனர்.

மாநிலத்தின் பத்திரிகையாளர்களும் காட்சி ஊடகங்களும் திமுகவின் அவதூறு பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளன. பத்திரிகைகளும் ஊடகங்களும் மோடி, அமித் ஷா மற்றும் பிற ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மீது சமுக வலைத் தளங்கள் வழியாக அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.  வாட்சப் மற்றும் முக நூல் பக்கங்களில் வந்த தகவல்களை ஆராயும்போது இஸ்லாமிய அமைப்புகளும் தேவாலயங்களும் தேச விரோத சக்திகளாக இயங்கி வந்திருப்பது தெளிவாகிறது, என்று சமுக வலைத்தளப் பதிவுகளைக் கண்காணித்து வந்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரிவினைவாதிகளின் முதல் வெற்றிகரமான செயல்பாடு எதுவென்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டுக்காக மெரீனா கடற்கரையில் பல அமைப்புகளும் கூடி நடத்திய போராட்டம் ஆகும்.   மத்திய அரசு மாநிலத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்காக இறங்கி வந்து புதிய ஆணைகளைப் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்தது மாபெரும் தவறாகும். இந்தப் போராட்டங்கள்  அனைத்தும் தேச விரோத சக்திகளின்  திட்டமிடப்பட்ட சதி .

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான ஆர் எஸ் பாரதி நரேந்திர மோடியை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் முன்னிலை வகிப்பவர், அவர் திமுக பெற்ற மககளவைத் தேர்தலின்  வெற்றிகளைக் குறித்து ஊடகங்களிடம் பேசும்போது ‘கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தின் ஒவ்வொரு முடுக்கு மூலையிலும் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறோம்’ என்றார்.

தமிழ்நாட்டுக்கே எதிரி மோடி என்று தொடர்ந்து திமுக பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தது. அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி ‘மோடியே திரும்பி போ’ என கோஷம் போட்டது. இரண்டு இலட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் ஐந்து இலட்சம் பேருக்கு சார்பு வேலை வாய்ப்பும் தரும் திட்டத்தை தொடக்கி வைக்க பிரதமர் வந்த போது கூட திமுக தனது கருப்பு கொடி போராட்டத்தைக் கைவிட வில்லை. பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் முன்பு  கருப்பு பலூன்களை பறக்க  விட்டது. திமுக சார்பில்  2 ஜி ஊழல் வழக்கு , முறைகேடாக தொலைபேசி தொடர்புகளைப் பயன்படுத்தல், சாதிக் பாட்சாவின் கொலைக்குக் காரணமாயிருத்தல்  போன்ற குற்றவியல் வழக்குகளின் முக்கிய முதல் குற்றவாளிகள் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

அண்ணா திமுக தலைவர் செம்மலை திமுகவின் வெற்றி குறித்து பேசிய போது, ‘திமுக மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் கல்விக் கடன்களும் விவசாயக் கடன்களும் தள்ளுபடி ஆகும் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொருவருக்கும் மாதம் 6,௦௦௦ மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

2017ஆம் ஆண்டிலேயே ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்தவும் மோடியைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கவும் திமுக ஊடகங்கள் திட்டமிட்டு செயல்படத் தொடங்கிவிட்டன.  திமுகவின் நாளேடான தினத்தந்தி ராகுலை நாட்டின் முன்னணித் தலைவராக முன்னிறுத்த விரும்பிப் பல  கருத்துக் கணிப்புகளை நடத்தியது. தந்தி டிவி 68% பேர் ராகுல் காந்தி பிரதமராவதை விரும்புகின்றனர் எனத் தெரிவித்தது. ஊடகவியலார் என்ற பெயரில் சிலரை நியமித்து தமிழ் நாடு முழுக்க இந்தக் கருத்துக்கணிப்பு பற்றிய தகவல்கள் மாநிலம் முழுக்க பரப்பப்பட்டன.  2019 மக்களவை தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெற்ற போது வாக்குப் பதிவில் பல முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சுமத்தி வாக்கு இயந்திரத்தின் மீது கேள்வி எழுப்பிய திமுகவினர்.

இப்போது தங்கள் கட்சி வெற்றி பெற்றிருப்பதால் வாக்கு இயந்திரத்தின் மீது எந்த ஒரு கேள்வியும் சந்தேகமும் எழுப்பவில்லை. தோற்றுப் போன ஒரே வேட்பாளரான பெரியாரின் பேரன் ஈ. வி கே எஸ் இளங்கோவன் மட்டும் தனது  தொகுதியில்  வாக்கு இயந்திரம் முறைகேடாகப் பயன்டுத்தப்பட்டிருப்பதாக அதன்  மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்டப் பஞ்சாயத்துக்குப் பேர் போன விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வெறும் 3,100 வாக்குகளில் வெற்றி பெற்றார்.  இவர் ஜனநாயகத்திலும் சாதி மத பேதமற்ற இறையாண்மையிலும் நம்பிக்கை கொண்டவர். ஆனால் இந்து மதத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர். ஒரு முரை, ‘இந்நாட்டில் தலித்துகள் அமைதியாக வாழ விரும்பினால் அனைத்து தலித்துகளும் இஸ்லாத்துக்கு மாறிவிட வேண்டும்’ என்றவர். நமது செய்தி தளம் ஸ்டாலினும் திராவிட கழகத்தின் தலைவரான கே வீரமணியும் சேர்ந்து இந்தியாவின் பிரிவினைச் சக்திகளாக உருவெடுத்து வருவதைப் பற்றி எச்சரித்திருக்கிறது.

தனி திராவிடநாடு அடைவது திமுகவின் கொள்கைகளில் ஆகும். திராவிட நாடு பெறுவதில் தான் எங்களின்  மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று திமுகவின் கொள்கை ஏடு குறிப்பிடுகின்றது. தனி திராவிட நாடே எங்களின் இலட்சியம் என்று 2௦17ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த மாநாட்டில் ஸ்டாலின் வீர முழக்கம் செய்தார். வையாபுரி கோபாலசாமி என்ற பெயரை எண் சோதிடம் மற்றும் அதிர்ஷ்டத்துக்காக  வைகோ என மாற்றிக்கொண்ட ‘பகுத்தறிவுவாதி’ விரைவில் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனி நாடாக மலரும் என்று மதிமுக மேடைகளில் முழங்கி வருகிறார்.

திமுக இன்னும் சில மாதங்களில் தனது  கோரிக்கைகளை முன் வைக்கும். காங்கிரஸ் தனது  கட்சி மேலிடம் உத்தரவு கொடுத்தால் தவிர திமுகவுடன் சேராது. காங்கிரஸ் தனித்து நிற்கும். தனது கோரிக்கைக்குச்  செவி சாய்க்காத காங்கிரசை விட்டு திமுக மெல்ல விலகத் தொடங்கும். ‘’இந்தியாவின் அறிவாளி’ என நம்பப்படும் ப. சிதம்பரமும் விலகத் தொடங்குவார்.

மத்திய அரசு தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறை தவறானது. ஜெயலலிதா இறந்ததும்  தமிழ் நாட்டில் ஆட்சியைக் கலைத்திருக்க வேண்டும். அல்லது 2௦17 பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு சிறை தண்டனை அளித்ததும் கலைத்திருக்க வேண்டும். 2௦17இல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில்  ரெய்டு நடந்தது ஆனால் இன்னும் அங்கு கைப்பற்றப்பட்ட பணம் ஆவணம் பற்றிய  விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது மத்திய அரசு தமிழகத்தில் எடப்பாடியின் அரசைப் பாதுகாக்க விரும்புகிறதோ என்ற சந்தேகத்தைத்  தோற்றுவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணாதிமுக தோற்றதில் மைனாரிட்டி வாக்குகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக மதமாற்றம் நடந்ததில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பதினைந்து சதவீதத்தை எட்டிவிட்டது. அரசுக்கு மதமாற்றம் பற்றி அறிவிக்க வேண்டியதில்லை என்பதால் நற்செய்தியாளர்கள் ஆங்காங்கே கொத்து கொத்தாக மக்களை மதம் மாற்றிவிட்டனர்.

இப்போது நடந்த மக்களவை தேர்தலில் தோற்றது குறித்து பா ஜ கவும் அணணா திமுகவும் என்ன செய்யப் போகிறது? அது குறித்து இன்னொரு கட்டுரையே  எழுத வேண்டும். காத்திருந்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here