டே லா ரூ என்ற நிறுவனத்திலிருந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க தாள் வாங்கியதில் ஊழல்

ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் தாளை மீண்டும் அதே ஊழல் நிறுவனத்தில் இருந்து வாங்கியதால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ‘கோட்டை’ விட்ட ப. சிதம்பரம் கோஷ்டி

0
5810
ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் தாளை மீண்டும் அதே ஊழல் நிறுவனத்தில் இருந்து வாங்கியதால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ‘கோட்டை’ விட்ட ப. சிதம்பரம் கோஷ்டி
ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் தாளை மீண்டும் அதே ஊழல் நிறுவனத்தில் இருந்து வாங்கியதால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ‘கோட்டை’ விட்ட ப. சிதம்பரம் கோஷ்டி

தேசியப் பாதுகாப்பில் அக்கறை இல்லாத ப சிதம்பரம் & சில அதிகாரிகள்

காங்கிரஸ் தலைமையில் நடந்த ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் ப. சிதம்பரம் போன்ற கட்சிக்காரர்கள்  சுய லாபம் பார்ப்பதில் மிகவும்  கெட்டிக்காரர்களாக இருந்தனர். நாட்டின் பாதுகாப்பை அந்நியரிடம் அடகு வைத்து மனசாட்சியே இல்லாமல் அவர்களின் பழுதான பொருட்களையே மீண்டும் மீண்டும் வாங்கி நாட்டுக்குக் கேடு விளைவித்தனர். பிரிட்டனில் உள்ள டே லா ரூ என்ற நிறுவனம் ருபாய் நோட்டு அச்சடிக்கும் தாளை இந்தியாவுக்கு வழங்கி வந்தது. அதன்பிறகு அந்நிறுவனத்தின் தரம் சரி இல்லை என்று அங்கிருத்து வாங்கக் கூடாது என்று விலக்கி [பிளாக் லிஸ்ட்] வைத்துவிட்டனர். ஆனால் மீண்டும் அதே நிறுவனத்திலிருந்து இந்தியாவில்  ருபாய் நோட்டுக்கள் அச்சடிக்க தாள் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஊழலைச் செய்தவர்கள் ஊழலுக்கு பேர் போன ப. சிதம்பரமும் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கியுள்ள அசோக் சாவ்லா மற்றும் அரவிந்த் மாயாராம்  போன்ற இன்னும் சில அதிகாரிகளும் ஆவர்.

2010ஆம் ஆண்டு டே லா ரூ நிறுவனம் வழங்கிய தாளின் தரம் சரியில்லை என்பதால் இனி அங்கிருந்து தாள் வாங்க வேண்டாம் என்று ஒருமனதாகக் முடிவெடுக்கப்பட்டு வாங்குவோர் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் இந்த ஊழல் தொடக்கியது. அப்போது நிதி அமைச்சகத்தில் இணை செயலராக அரவிந்த் மாயாராமும் கூடுதல் செயலராக அசோக் சாவ்லாவும் இருந்தனர். இந்த அமைச்சகத்தில் இருந்த ஒரு சிலரே கூடி  Security Printing & Minting Corporation of India Ltd. (SPMCIL), என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை 2006இல் தொடங்கினர். இந்த மேலாண் இயக்குனராக அரவிந்த்  மாயாராமும் தலைவராக அரவிந்த் சாவ்லாவும் இருந்தனர்.

ஏ சி சி யில் அனுமதி இன்றி இயக்குனர் & தலைவர் நியமனம்

ஏ சி சி எனப்படும்  அமைச்சகத்தின் நியமனக் குழுவின் [Appointments Committee of the Cabinet (ACC)] அனுமதியின்றி முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமனம் பெற்றனர். Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) என்ற அரசு அமைபப்பு இந்த அசோக் சாவ்லா மற்றும் அரவிந்த்  மாயாராம் ஆகியோரிடம் இந்தியாவில் ருபாய் நோட்டுக்கள் அச்சடிக்க தகுதியான தாள்களை வழங்கக் கூடிய நிறுவனத்தை தேடி பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது. இது ஐக்கிய முன்னேற்ற அரசின் ஒரு தந்திரம் ஆகும். ஒரு பொருள் வாங்குவதாகக் கூறியதும் அதில் பணம் செலுத்துவதற்கான இன்வாய்ஸ்களில் அதிக தொகையை குறிப்பிட்டு அரசு பணத்தை சுரண்டி விடும்.  இது தான் இங்கும் நடந்துள்ளது  என்பதை இனி காண்போம்.

டே லா ரூ வுடன் ஒப்பந்த முறிவு

மத்திய அரசு கள்ள நோட்டு அடிப்பவரிடம் இருந்து நல்ல நோட்டுக்களின் நுட்பத்தை பாதுகாக்க அடிக்கடி தன் உற்பத்தி பொருட்களுக்கான சில தொழில் நுட்பங்களை  மாற்றி கொண்டே இருக்கும். பொதுவாக ருபாய் நோட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உலோகக் கம்பிஅச்சு மைநீர்க் குறி [வாட்டர் மார்க்] போன்றவை அடிக்கடி மாற்றப்படும். அனைத்து நாடுகளிலும் இந்த மாற்றங்கள்  நடைபெறுவது இயல்பு.  2009 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டு தயாரிப்பில் கொண்டு வர வேண்டிய  மாற்றங்கள் குறித்து ஆராய சிலாபத்ரா பானர்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு டே லா ரூ நிறுவனம் வழங்கிய தாளின் தரம் சரியில்லை என்பதால் இனி அங்கிருந்து தாள் வாங்க வேண்டாம் என்று ஒருமனதாகக் முடிவெடுக்கப்பட்டு வாங்குவோர் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் ப சிதம்பரம் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டது.  உடனே பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர் ஆக்கப்பட்டார். அதன் பிறகும் அதே நிறுவனத்திடம் இருந்து தற்காலிக ஒப்பந்த முறையில் இந்தியா ருபாய்  நோட்டு அச்சடிக்கும் தாளை வாங்கி வந்தது. [இதனால் பின்னர் இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கமும் அதிகமாயிற்று என்பதை பின்னர் விளக்குவோம்]

2௦11  – 2012 ஆண்டில் ருபாய் நோட்டு அச்சடிக்கும் தாளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒரு அறிவிக்கை [டெண்டர்] விட தயாரானது.  அப்போது சிதம்பரத்தின் கீழ் பொருளாதார நடவடிக்கைகள் பிரிவின் செயலராக மாயாராம் இருந்தார்.

இப்போது ஆரம்பித்தது அட்டுழியம்

டே லா ரூ நிறுவனம் இனி இங்கிருந்து வாங்கக் கூடாது என விலக்கப்பட்ட நிறுவனம் என்று நன்றாகத் தெரிந்திருந்த போதும் மாயாராம் அங்கிருந்தே தொடர்ந்து ரூபாய்  நோட்டு அச்சடிக்கும் தாளை வாங்கினார்.  இவர் உள்துறை அமைச்சகத்துக்கு தானே கடிதம் எழுதி 3 ஆண்டுகளுக்கு இதற்கு அனுமதி வாங்கினார். சிலாபத்ரா பானர்ஜி அறிவிக்கை [டெண்டர்]  அனுப்பி விலைப்பட்டி கேட்டிருந்த நிலையில் மாயாராம் தன்னிச்சையாக முடிவெடுத்தார். இந்த கோப்பை ப சிதம்பரம் பார்க்காமலேயே கையெழுத்து இட்டார்,. காரணம் என்னவெனில் டே லா ரூ நிறுவனம் சார்பான எந்த கோப்பு போனாலும் அவர் அமைதியாக கையெழுத்திட்டு விடுவார். அவரிடம் கோப்பின் விவரங்களை விளக்க வேண்டிய அவசியம் அவரது செயலர்களுக்கு கிடையாது. ப. சிதம்பரம் நுணுக்கமாக மேலாண்மை செய்யும் திறன் உடையவர் எதுவும் அவர் கண்களில் இருந்து தப்பி விடாது. அப்படி இருக்கும் போது இந்த கோப்பு மட்டும் அவர் படிக்காமலேயே கை எழுத்திட்டார் என்பது நம்பும்படியாக இல்லை.

அரசு மாறியது

2௦14ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பி ஜே பி ஆட்சிக்கு வந்தது. டே லா ரூ நிறுவனத்தில் இருந்து ருபாய் அச்சடிக்க தாள் வாங்கும் விஷயம் புதிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் காதுகளை எட்டியது. அவர் அடுத்த ஆண்டே அங்கிருந்து வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டார். வேறு காகித நிறுவனங்களில் இருந்து தாளை வாங்கும்படி உத்தரவு பிறப்பித்தார். இப்போது 2௦15 ஆம் ஆண்டு வாங்கிய தாளின் விலை முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 2௦௦5இல் வாங்கிய விலையை விட குறைவாக இருந்தது.  ஆக இந்த கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாகப் போலி இன்வாய்ஸ் கணக்கு காட்டியவர்களில் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி உட்பட மூவர்  குற்றவாளி ஆகின்றனர்.

மாயாராமின் ஊழல் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதும் இலஞ்சம்  ஊழல் தடுப்பு துறை மூலமாக விசாரணை குழு அமைத்து அவர் மீது விசாரணை தொடங்கியது. ராஜீவ் என்பவர் அப்போது அந்த துறையின் சார்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார நடவடிக்கை பிரிவில் இருந்து கோப்புகளைக் கேட்டு விட்டார்.

ஜெட்லி தலைமையின் கீழ்  இயங்கிய பொருளாதார நடவடிக்கை பிரிவு ராஜீவ் கேட்ட எந்த தகவலையும் கோப்பையும் தரவில்லை.  இத்தகவல் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டதும் கோப்புகள் வந்து சேர்ந்தன.  அந்த வேளையில் இலஞ்ச ஊழல் தடுப்பு துறையில் இருந்து ராஜீவ் மாற்றப்பட்டு கே.வி. சவுத்ரி பொறுப்பேற்றார். கே. வி. சவுத்ரி ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் இனி இந்த வழக்கில் உண்மைகள் வெளி வராது. நேர்மையான அதிகாரியை மாற்றிவிட்டு கோப்புகளைக் கொடுத்துவிட்டார் ஜெட்லி. இது ப. சிதம்பரத்துக்கு சாதகமாக அவர் எடுத்த தந்திரமான முடிவு.

குற்றச்சாட்டுகள் பதிவாயின

தற்போதைய நிலவரப்படி இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவும் சி பி ஐயும் மாயாராமின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே நிறுவனத்தில் இருந்து தாள் வாங்கியதால் இப்போது இந்திய ருபாய் நோட்டுகளை பாகிஸ்தானில் கள்ள நோட்டாக அடித்து வெளியிடுவது அவர்களுக்கு எளிதாகிறது. அங்கும் இந்திய ருபாய் அடிக்கும் தாள் அதிகளவில் இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இங்கு கள்ள நோட்டு புழங்க விடுவதன் ரகசியம் இது தான். ப.  சிதம்பரம் அந்த டே லா ரூ நிறுவனத்திடம் இருந்து தாள் வாங்கியதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தவறு செய்தவர் பெரிய உயர் அதிகாரியாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை ஆகும். நியாயத்தின் குரலும் ஆகும். அதிகாரிகளுடன் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்த ப. சிதம்பரமும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்

2௦௦8இல் மாயாராமுக்கு அமைச்சக நியமனக் குழுவின் ஒப்புதல்

ஏ சி சி எனப்படும் அமைச்சக நியமனக் குழு மேலாண் இயக்குநராகக் பதவி அளித்தது . ஆனால் சாவ்லாவின் தலைவர் பதவியை அக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தான் வினோதம். ஒருவரது பதவி நியமனம் ஒப்புக்கொள்ளப்பட்டது; மற்ற ஒருவருடையது நிராகரிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையில் பேரழிவை கொண்டு வரக் கூடிய ஆபத்தான செயல்களில் ஈடுபட்டிருந்த ப. சிதம்பரத்தையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய இந்த அரசு முன் வருமா? இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து குற்றவாளிகளை பிடித்து மக்கள் முன் இந்த அரசு நிறுத்துமா? பிரதமர் அவர்களே இவ்வழக்கில் சற்று விரைவாக நடவடிக்கை எடுங்கள் . உங்கள் சாட்டையை சுழற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here