அப்பாவி முஸ்லிம் ஆண்கள் 42 பேரை சுட்டு கொன்ற வழக்கில் உ. பி. போலிசார் 16 பேருக்கு ஆயுள் தணடனை

ஹாஷிம்புரா என்ற ஊரில் நடந்த மதப் படுகொலை வழக்கில் நேற்று டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

0
2124
ஹாஷிம்புரா என்ற ஊரில் நடந்த மதப் படுகொலை வழக்கில் நேற்று டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
ஹாஷிம்புரா என்ற ஊரில் நடந்த மதப் படுகொலை வழக்கில் நேற்று டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

ஹாஷிம்புராவில் நடந்த கொடூரக் கொலைகளுக்கான விசாரணை முடிந்து புதன்கிழமை அன்று [31-10-18] தீர்ப்பு வழங்கப்பட்டது. 1987இல் ஹாஷிம்புரா என்ற ஊரில் வாழ்ந்த முஸ்லிம் ஆண்கள் 42 பேரை திட்டமிட்டு கொன்ற போலிசார் 16 பேருக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தணடனை வழங்கியது. ஹாஷிம்புரா படுகொலை என்பது உத்தரப் பிரதேசத்தில் நடந்த மிகப் பெரிய மதப் படுகொலை ஆகும். இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள் எஸ். முரளீதர் மற்றும் வினோத் கோயல் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி புதிய தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை தண்டித்தனர். முன்பு விசாரணை நீதிமன்றத்தால் இந்த பதினாறு போலிஸ்காரர்களும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

உயர் நீதிமன்றம் அந்த பதினாறு குற்றவாளீகளையும் ஆட்கடத்தல், கொலைக்கான சதி திட்டம், சாட்சிகளை அழித்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியக் குற்றவியல் சட்டப்படி தண்டித்தது. ஆயுதங்கள் எதுவும் இல்லாமலிருந்த அப்பாவி ஜனங்களை, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அவர்களை போலிசார் சுட்டுக் கொன்றதால் இது திட்டமிட்ட படுகொலை என்று நீதிமன்றம் கருதியது.  குற்றம் சாட்டப்பட்ட பதினாறு பேரும் தற்போது காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். பி ஜே பி தலைவர் சுப்ரமணியன் சுவாமி முஸ்லீம் இளைஞர்களைக் கொன்ற வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற  நோக்கத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு  இவ்வழக்கை சி ஐ டி கிளையின் குற்றவியல் பிரிவுக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. சுவாமி இந்தப் படுகொலைக்கு அப்போது காரணமாக இருந்தவர்  அப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதமபரம் என்பதை பல தருணங்களில் சுட்டிக்காட்டி வந்தார்.

நீதிமன்றம் சுவாமியிடம் இவ்வழக்கு குறித்து மனுதாரர் ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருந்தால் இந்த வழக்கை விசாரித்து வரும்  மத்தியப் புலனாய்வு குழுவினரிடம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தது. ஆனால் விசாரனை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தபோது சுவாமியின் மனு நிராகரிக்கப்பட்டது. அவர் அந்த மனுவை தன் வழக்கறிஞர் ராம்னி தனேஜா மூலமாக சமர்ப்பித்தார். அதில் சி பி. சி ஐ டி போலிசார் இவ்வழக்கில் பி ஏ சி எனப்படும் போலிஸ் பிரிவை சேர்ந்த பதினாறு பேரே குற்றவாளிகள் என்று கருதுவதால் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.  அதன் பேரில் இம்மனு டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. விசாரனை முடிந்து கடந்த புதன் கிழமை அன்று குற்றவாளிகள் பதினாறு பேருக்கும் ஆயுள் தணடனை வழங்கப்பட்டது.

அனைத்து குற்றவாளிகளுக்கும்  ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பாகிவிட்டாலும்  பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கவும்  தங்களின் இழப்புக்கான ஈட்டுத்தொகை பெறவும் 31 ஆண்டுகள் காத்திருக்கும்படியாகி விட்டது. டில்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகளை வரும் 22 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்போ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.

ஹாஷிம்புரா படுகொலை விவரம்

1987ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இந்து முஸ்லீம் மக்களிடையே போராட்டங்கள் வெடித்தன. அயோத்தியில் பாப்ரி மசூதிக்குள் இராமர் கோயிலை இந்துக்களுக்காகத் திறந்து விட்டதால் இரு தரப்பு மக்களுக்கிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. பலர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். வெளியே உயிருக்கு ஆபத்து நிறைந்த  அச்சமான சூழ்நிலை நிலவியது. அக்காலகட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹாஷிம்புரா என்ற கிராமத்தில் அனைவரையும் போலிசார் வீட்டை விட்டு வெளீயே வருமாறு உத்தரவிட்டனர். அனைவரும் ஒரு இடத்தில் வந்து கூடினர். அப்போது பெண்கள் முதியவர் குழந்தைகள் ஆகியோரைத் திரும்பி தத்தம் வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு 45 இளைஞர்களை மட்டும் அழைத்து சென்றனர். அவர்களை ஓரிடத்தில் வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொன்று விட்டு உடல்களை அருகில் இருந்த கால்வாயில் எறிந்துவிட்டனர். இவர்களில் மூன்று பேர் மட்டும் சாகவில்லை; செத்தது போல நடித்தனர். அவர்கள் பின்னர் சாட்சிகளாகி போலிசாரின் திட்டமிட்ட படுகொலை இதுவென்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மீதி 42 பேரும் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டனர். அப்போது மாநில அரசும் மத்திய அரசும் காங்கிரசின் அரசாகவே இருந்தன. இந்தப் படுகொலைகல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அந்த ஊருக்கு வந்திருந்து அங்குள்ள உயர் மட்ட போலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே இவரது வழிகாட்டுதல் படியே இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

1987ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி

பி ஏ சி எனப்படும் ஆயுதம் தாங்கிய ரிசர்வ் போலிசார் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் ஹாஷிம்புரா கிராமத்தைச் சூழ்ந்தனர். வீடுகளுக்குள் பூட்டிக்கிடந்த அனைவரையும் அச்சமின்றி வெளியே வருமாறு அறிவித்தனர். மக்கள் அனைவரும் வெளியே வந்தனர். . அப்போது பெண்கள் முதியவர் குழந்தைகள் ஆகியோரைத் திரும்பி தத்தம் வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு 45 இளைஞர்களை மட்டும் தனியாக தம்முடன் அழைத்து சென்றனர். அவர்களை ஓரிடத்தில் வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொன்று விட்டு 42 பேர் இறந்ததாக அறிவித்துவிட்டனர். அவர்களின் உடல்களை அருகில் இருந்த கால்வாயில் எறிந்துவிட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் தப்பித்த மூன்று பேர் சாட்சிகளாக இருந்து போலிசார் செய்த அநியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட்

அப்போதைய பி ஜே பி தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி பாராளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பினார். இந்தப் பிரச்சனைக்காக டில்லி போட் கிளப் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்த முஸ்லீம் இனப்படுகொலை குறித்து விசாரனை நடத்த உத்தரவிட வேன்டும் என்று கோரிக்கை வைத்தார். பிரதமர் உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கை போட் கிளபில் உண்ணாவிரதத்தில் இருந்த சுவாமியிடம்அனுப்பி போராட்டத்தை முடித்துக் கொள்ளூம்படியும் விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் கேட்டுக்கொண்டார்.

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – ஹாஷிம்புராவில் 42 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து உத்தரப் பிரதேச அரசு சி பி – சி ஐ டி விசாரணைக்கு உத்தரவிட்டது.

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் – சி பி – சி ஐ டி , விசாரனையை முடித்து இந்தப் படுகொலையில் காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரி முதல் சாதாரண காவலர் வரையில் 60 பேரை குற்றவாளிகள் என அறிக்கை அளித்தது.

1996 , மார்ச் மாதம் 20ஆம் நாள் – உத்தரப் பிரதேசத்தின் சி பி- சி ஐ டி போலிசார் காசிபாத் நகரின் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் 161 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் – பாதிக்கப்பட்டோரும் உயிரோடு இருப்பவர்களும் சார்பாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை டில்லிக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. மாநிலக் காவல் துறை, தங்கள் காவலரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முழு முயற்சி எடுத்து வந்தது,.

2006, ஜூலை – குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதும் டில்லி உயர் நீதிமன்றத்தில் கொலை, கொலை முயற்சி, சாட்சிகளை புரட்டுதல், சதி திட்டம் தீட்டுதல் என்ற பிரிவுகளில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

2013 , மார்ச் 8, – இப்படுகொலையில் உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தின் பங்கு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை விசாரனை நீதிமன்றம் தள்ளூபடி செய்தது.

2015,மார்ச் 21 – துப்பாக்கியால் சுட்டவர்களை சரியாக அடையாளம் காட்ட இயலாத காரணத்தால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களில்  உயிரோடு இருந்த பதினாறு போலிசாரையும் விடுதலை செய்தது.

2915 மே மாதம் 18ஆம் நாள் – பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும் கொலையை நேரில் கண்ட சாட்சிகளும் இவ்வழக்கை டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

2015, டிசம்பர் –தேசிய மனித உரிமை ஆணையம் இவ்வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொண்டது. இப்படுகொலை மேலும் துப்பு துலாகியது.

2016, பிப்ரவரி 17 – உயர் நீதிமன்ற சுப்பிரமணியன் சுவாமியின் மனுவையும் மற்ற மனுக்களுடன் விசாரனைக்கு ஏற்றுக்கொண்டது.

2018, செப்டம்பர் 6, – டில்லி உயர் நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

2018, அக்டோபர் 31, — டில்லி உயர் நீதிமன்றம் முன்னாள் ஆயுதப் போலிசார் பதினாறு பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

கீழே உள்ள வீடியோவில் இவ்வழக்கு குறித்து சுவாமியிடம் நடத்திய உரையாடலை நீங்கள் காணலாம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here