நிதி அமைச்சர் ஜேட்லி,  35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார்  மின் உற்பத்தி நிறுவனங்களை காப்பாற்ற முயல்வது ஏன்?

பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திடம் மின் உற்பத்தி நிறுவனங்களின் கடனை தள்ளூபடி செய்யும்படி கேட்பது ஏன்? இது கடன் வசூலில் ஆரோக்கியமற்ற நிலைமை அல்லவா?

0
5343
நிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்களை காப்பாற்ற முயல்வது ஏன்?
நிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்களை காப்பாற்ற முயல்வது ஏன்?

மத்திய மாநில அரசுகள் கோடீஸ்வரர்கள் வாங்கும் கடனை வசூலிக்க திராணியற்று போய் தள்ளுபடி செய்வதில் முனைப்பு காட்டுகின்றன. பாரதீய ஸ்டேட் வங்கி தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றத்திடம் மின் உற்பத்தி நிறுவனங்களின் கடனை தாம் தள்ளூபடி செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த  அதானி, டாடா மற்றும் எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அரசு வங்கிகளிடம் வாங்கியிருந்த 35,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த வழக்கு திங்கட்கிழமை அன்று [21-10-18] விசாரனைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்ட்டன் நாரிமன் மின் உற்பத்தியாளர்களை  மின்சார ஒழுங்காற்று மத்திய ஆணையத்தின் ஒழுங்காற்றுனர் முன்பு தத்தம் வாதங்களை முன் வைக்குமாறு தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் மின் உற்பத்தி நிறுவனங்கள் தம் இஷ்டம் போல மின் கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பேசி ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கட்டணத்தையே பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போன வாரம் ஸ்டேட் வங்கி தாமாக முன் வந்து ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்தது. மின் உற்பத்தி நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டி ஸ்டேட் வங்கி இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.  கட்டணத்தை உயர்த்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த்தால் மின் உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்திருப்பதாக ஸ்டேட் வங்கி கருதுகிறது.

இந்தியா முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் சிக்கியிருப்பதை இந்த ஸ்டேட் வங்கியின் பிரமாண வாக்குமூலம் நிரூபிக்கிறது. உச்ச நீதிமன்றம் போன ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்த பிறகு குஜராத அரசு மின் உற்பத்தி நிறுவனங்களின் சிக்கலை அறிய ஒரு ஆய்வுக்குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி அர் கே அக்ரவால் தலைமையில் அமைத்தது. இந்த குழு உருவாக்கம் என்பதே உச்ச நீதிமன்றம் கட்டண உயர்வை அனுமதிக்காததால் நஷ்டப்பட்ட நிறுவனங்களை காப்பாற்ற அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே ஆகும். வங்கியாளர்களையும் நிறுவனத்தின் பங்குகாரர்களையும் கலந்து பேசிய பிறகு இந்த செப்டம்பர் மாதம் இந்த குழு இரண்டு பரிந்துரைகளை முன் வைத்தது. நஷ்டப்பட்டு வரும் நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் அல்லது அரசு அவைகளின் கடனை தள்ளூபடி செய்ய வேண்டும், என்பனவே இந்த குழுவின் பரிந்துரைகள் ஆகும். அகர்வால் குழு அளித்த பரிந்துரைகளில் இரண்டாவதை ஏற்றுக்கொள்ள வங்கியாளர்கள் முன் வந்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டேட் வங்கியின் பிரமாண வாக்குமூலத்தில் மத்திய அரசிடம் இருந்து 35,000 கோடிக்கான கடனை தள்ளூபடி செய்ய அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் வங்கியாளர்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான அக்கறையோடு கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்.  இந்த கூட்டத்தில் பாரதீய ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கியாளர்களும் நிறுவனப் பங்குகாரர்களும் கலந்து கொண்டனர். மின் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இந்த தள்ளூபடி அவசியம் என்பதும் இதனால் தமது வாடிக்கையாளரின் நலன் காக்கப்படும் என்று வங்கிகள் கருதியதும் கூட்டத்தில் உணரப்பட்டது. மத்திய அரசு இந்த பிரச்சனையைத் தீர்க்க ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்தது. ஸ்டேட் வங்கி டாடா, எஸ்ஸார் மற்றும் அதானியைக் காப்பாற்றுவதற்காக அளித்த பிரமாண வாக்குமூலத்தில் குஜராத் அரசு உருவாக்கிய ஆய்வு குழு மத்திய அரசு நியமித்த உயர் மட்டக் குழு ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏன் ஜெட்லி அதானிக்காக இவ்வளவு கவலைப்படுகிறார்? அக்கறை எடுக்கிறார்? பாரத ஸ்டேட் வங்கி ஏன் அதானியின் கடனை தீர்க்க 35000 கோடி சுமையை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும? ஜேட்லி அவர்களே இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களா ?

தற்போது ஸ்டேட் வங்கி 2.3 இலட்சம் வாரக் கடனாளிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனது பிரமாண வாக்குமூலத்தில் அதானியின் முந்த்ரா மின் உற்பத்தி நிறுவனம் 19,127 கோடி ரூபாயும் எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனம் 4,214 கோடியும் டாடாவின் கோஸ்டல் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம் 10,159 ரூபாயும் கடன் பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டுபி சி கோஸ் மற்றும் ரொஹின்ட்டன் நரிமன் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்ட  உச்ச நீதிமன்றம் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அப்போது மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தோனேஷியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால் நிலக்கரியின் விலை அதிகரித்து விட்ட்தாகவும் அதனால் மின் உற்பத்திச் செலவும் அதிகரித்து விட்ட்தாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தன. இன்னும் சில எதிர்பாராத பிரச்னைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விட்ட்தாகத் தெரிவித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவற்றை நிராகரித்துவிட்டனர். ஏர்கெனவே மாநில அரசுகளுடன் பேசி முடிவு செய்த விலைக்கே மின்சாரத்தை விற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

‘’மூன்று நிறுவனங்களும் கடன் கட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஸ்டேட் வங்கியும் மற்ற வங்கிகளும் கொடுத்த கடனை இந்த மூன்றாலும் திருப்பி செலுத்த இயலவில்லை.  எஸ்ஸார் நிறுவனம் ஏற்கெனவே செயல்படாமல் இருக்கிறது. மற்ற இரண்டும் கடனை செலுத்தும்படி உத்தரவிட்டால் நிறுவனத்தை இயக்க இயலாத சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துவிட்டன. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது இயலாது என்று தெரிவித்துவிட்டன.’’என்று ஸ்டேட் வங்கி நீதிமன்றத்தில் அளித்த பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனால் தாங்கள் வாங்கிய 35000 கோடி கடனைத் திருப்பி செலுத்த இயலாது என தங்களின் இயலாமையை முடிவாகத் தெரிவித்துவிட்டன.

‘கட்டணம் பற்றிய வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது. மக்களின் பணத்தை கொண்டு தங்களால் அதிக காலம் நிறுவனத்தை நட்த்த இயலாது என்ற நிலைமையை எட்டிவிட்டன’ என்று ஸ்டேட் வங்கி நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் முயற்சியில் ஸ்டேட் வங்கி இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.  உச்சநீதிமன்றம் ஸ்டேட் வங்கியின் கருத்தை ஏற்றுக்கொண்டால் மற்ற பல வங்கிகளும் தாங்களும் கடன் கொடுத்திருக்கிற பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிக்க இயலவில்லை, எனவே தள்ளுபடி செய்கிறோம், அனுமதி தாருங்கள் என இதே கோரிக்கையுடன் நீதிமன்ற வாசலில் வந்து  நிற்கலாம்.

பஞ்சாப், ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மநிலங்களிலும் இதே பிரச்னை தோன்றியுள்ளது. அருண் ஜேட்லி தொடங்கி வைத்த இந்த மோசமான நடவடிக்கை ஒரு தவறான முன் உதாரணமாக பல தள்ளுபடிகளுக்கு வழி வகுக்க கூடும்.மற்ற பல தனியார் நிறுவனங்களும் ஒரு ஓய்வு பெற்ற நிதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து தங்களால் கடனை செலுத்த இயலாது என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கும். அர்சாங்கமும் தனியார் நிறுவனகளை காப்பற்ற விரும்பி கடனை நிராகரிக்கும்.

பல மின் உற்பத்தி நிறுவன்ங்கள் நிலக்கரி ஊழலில் சிக்கியுள்ளன. எனவே இவை அனைத்தும் தான் வாங்கிய கடனை செலுத்தாமல் நழுவப் பார்க்கின்றன. இதனால் அரசு கஜானாவுக்கு 30,000 கோடி நஷ்டமாகும். ஏற்கெனவே எஸ்ஸார் நிறுவனமும் அதானி நிறுவனமும் தாம் வாங்கிய நிலக்கரிக்கு அதிக விலையைக் குறிப்பிட்டு அரசை ஏமாற்ற திட்டமிட்டன. நமது பி குருஸ் செய்தி தளம் முன்பே ஸ்டேட் வங்கி மேற்கொண்டுள்ள மோசமான முன் உதாரண நடவடிக்கைகளை பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனங்களில் பெயர்களை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரீவிக்கவில்லை. இப்போது இந்த வருவாய் புலனாய்வு இயக்குனரகமும் அதானியும் எஸ்ஸாரும் 10,000 கோடி ரூபாயை அதிக விலையாக காட்டி ஏமாற்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here