அடுத்த போப் ஒரு இந்தியராம்!

போப் பதவியை ஒரு இந்தியருக்கு அளித்து இந்தியாவில் மதமாற்றத்தை முடுக்கிவிட வேடிக்கன் திட்டம்

0
3776
அடுத்த போப் ஒரு இந்தியராம்
அடுத்த போப் ஒரு இந்தியரா?

இந்தியாவில் கிறிஸ்தவர்களை அதிகமாக்க வேடிகன் ஒரு ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுக்க நற்செய்தியை பரப்பும் நோக்கில் வேடிகன் இந்தியாவை குறி வைத்துள்ளது.  தமது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு இந்தியரையே போப்பாக்கிவிட்டால் என்ன என்று சிந்திக்கின்றது. இந்தியரை போப் ஆக்கினால் அவர் இங்குள்ள இந்து மதச் சிந்தனைகளை பொசுக்கிவிடுவார் என வேடிகன் கருதுகிறது.  கேரளாவில் உள்ள கத்தோலிக்கத்  திருச்சபையைச் சேர்ந்த ஸிரியோ மலங்கரை திருச்சபையின்  பேராயரான 59 வயது நிரம்பிய மார் பெசிளியஸ் க்லிமிஸ் என்பவரை அடுத்த போப் ஆக்கலாம் என வேடிகன் முடிவு செய்துள்ளது.  சரி. இப்போதிருக்கும் போப்பை என்ன செய்வது? இது ஒய்வு பெறும் பதவி இல்லையே?  இவர் நல்ல திடகாத்திரமாக உற்சாகமாக செயல்பட்டு வருகின்றாரே. என கேட்டால் அவர் தானாகவே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டு பத்திரமாக போய்விட வேண்டும். இல்லையென்றால் முதலாம் ஜான் பால் போப்புக்கு ஏற்பட்ட கதி தான் இவருக்கும் ஏற்படும். அவர் பாவம் 1978இல்பதவியேற்ற ஒரே மாதத்தில் ஒரே அடியாகப் போய்விட்டார்’

கேரளாவில் பத்தனம்திட்டாவை சேர்ந்த க்ளிமிஸ், போப் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் மட்டுமல்ல; முதல் ஆசியரும் ஆவார். 2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை வெள்ளை தோல் அல்லாத ஒருவர் போப் ஆவது என்பது நினைத்து பார்க்க இயலாத புதுமை ஆகும்.இன்று நிலைமை மாறிவிட்டது.

சி ஐ ஏ (CIA) எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனத்தாலும் இத்தாலியின்  மாபியாவாலும் கட்டுப்படுத்தப்படும் வேடிகன் இந்தியரை போப் ஆக்குவதிலும் ஒரு ரகசியத் திட்டம் அடங்கியிருக்கிறது.   உள்நாட்டுக்காரரை போப் ஆக்கிவிட்டால் உள்நாட்டில் கூட்டம் கூட்டமாக  மக்களை மதம் மாற்றுவது எளிதாகிவிடும். இதனால் இந்தியாவை விரைவாக ஒரு கிறிஸ்தவக் குடியரசாக மாற்றிவிடலாம்.  1978  முதல் வேடிகன் இது போன்ற ஒரு செயல்திட்டத்தை தான் நிறைவேற்றி வருகிறது. அப்போது தான் போப் முதலாம் ஜான் பால் மர்மமான முறையில் அவரது போப் மாளிகையில் மரணம்அடைந்தார்.  பல பத்தாண்டுகள் ஆன பின்னாலும் அவரது மரணத்தின் மர்மம் விலகவில்லை. அவரது உடலை சவ ஆய்வு நடத்தவும் அனுமதிக்கவில்லை. விரைவாக நல்லடக்கம் செய்துவிட்டனர். அல்பினோ லூசியாணி என்ற இயற்பெயர் கொண்ட முதலாம் ஜான் பாலின் மரணம் குறித்து பலர் பலவிதமாக எழுதியிருந்தாலும் இப்போது நமது செய்தி இணைய தளம் தற்கால விஷயங்களுக்கு முக்கியத்துவும் கொடுத்து உண்மைகளின் அடிப்படையில் சிலவற்றை தனது வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்த  பனிப்போர் 1978 இல் உச்சத்தை எட்டியபோது அமேரிக்கா ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்க ஆட்சியை ஒழிக்க திட்டமிட்டது. அப்போது தான் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏயின் ரோம் நாட்டு தலைவராக இருந்தவர் வேடிகனில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்தார். அவர் கால் வைத்ததும் காரியம் கச்சிதமாக முடிந்தது. போப்பின் மரணச் செய்தி வெளிவந்தது. சி ஐ ஏ தலைவர் அங்கிருந்த கொலை பாதகங்களுக்கு அஞ்சாத உம்பர்ட் ஒர்டோழ என்ற தொழிலதிபருடன் கை கோர்த்து ஒரு ரகசிய வேலை பார்த்தார். இந்த உம்பர்ட் இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து வந்த கத்தோலிக்க திருச்சபைகளுக்கும் மற்றும் வேடிகனுக்கும் சார்பாக  நிழல் மறைவில் சில தவறான செயல்களை செய்துவந்தார்.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருந்து வந்த கம்யுனிச செல்வாக்கையும் கட்டமைப்பையும் தகர்த்தெறிவதற்கு ஏற்ற ஒரு ஆளை நியமிப்பதே இந்த ரகசியச் செயல்பாட்டின் நோக்கமாகும். அவர்கள் அந்த பணியைச் செவ்வனே நிறைவேற்ற  போலந்து நாட்டில் பிறந்து வளர்ந்த கரோல் ஜோசப் ஒஜ்ட்ழா என்ற  58 வயது மூத்த ஆயரை தெரிவு செய்தனர்.  இவர் வேடிகன் மற்றும் சி ஐ ஏயின் அம்பாக விரைந்தார். எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்? இவரை இரண்டாம் ஜான் பால் என பெயரிட்டு போப் பதவியில் அமர்த்தினர். இவரும் தனக்கு பதவி கொடுத்தவர்களின் எதிர்பார்ப்பை சரியாக நிறைவேற்றினார். சீட்டு கட்டு கொட்டுவது போல ஒவ்வொரு கம்யுனிஸ் நாட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

முதலில் தனது சொந்த நாடான போலந்தில் இருந்து கம்யுனிசத்தை ஓட ஓட விரட்டினார். இதை தொடர்ந்து 1991இல் கம்யுனிச நாடுகளின் கோட்டையாக விளங்கிய ரஷியாவில் கம்யுனிசம் குலைந்தது . உடனே கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரிசையாக கம்யுனிச கோட்பாட்டை துறந்து பேரழிவை சந்தித்தன.

இப்போது வேடிகன் இந்தியாவின்  மீது கண் வைத்துள்ளது. மத மாற்றத்துக்கு இந்தியா ஒரு தங்கச் சுரங்கமாக வேடிகனுக்கு தோன்றுகிறது.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவியாக அவர்களின் நாட்டைச் சேர்ந்த திருமதி [சோனியா] ஒரு வெகுமதியாக கிடைத்திருப்பதும் வேடிகனுக்கு அதிக ஊக்கத்தை அளித்துள்ளது.  இந்தியச் சட்டங்களும் இங்கு மதமாற்றத்துக்கு உகந்தவையாக் உள்ளன. ஒரு இந்தியரே போப்பாக தலைமை பொறுப்பில் இருந்துவிட்டால் இனி மதமாற்றத்தை பற்றி கவலைப்படத் தேவையில்லை அவர் தன சிந்தனையை செய்ல் வடிவாக்குவார் என்று வேடிகன் உறுதியாக நம்புகிறது. வேடிகனின் இலக்கு இன்னும் தனது மதம் சென்று சேராத மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பெங்கால், உத்தரகண்ட், ஜார்கன்ட், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் அங்கு வசிக்கும்  மக்களுக்கு கிறிஸ்தவம் சென்று சேர வேண்டும்

இந்தியாவில் கத்தோலிக்க மதத்தில் பிறந்து போப்பாக போகும் அந்த புண்ணியவான் யார்? போப் பதவி என்பது வேடிகனின் தலைவர் என்பதோடு சில நாடுகளின் கூட்டமைப்புக்கும் அவரே தலைவர் ஆவார். பொதுவாக போப் என்பவர் வேடிகன் என்ற ஒரு நாட்டின் தலைவராக் இருந்துகொண்டு மற்ற நாடுகளின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட முடியும்.

வாசகர்களே உங்களுக்கு தெரியுமா? நம் நாட்டின் அனைத்து ஆயர்களும் பேராயர்களும் கர்தினால்களும்  இந்த வேடிகனின் போப் மூலமாகவே நியமிக்கப்படுகின்றனர்.  நம் நாட்டில் உள்ள தேவாலயங்கள் திருச்சபை நடத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துமனை. கன்யாஸ்தீரி மடம், இறையியல் கல்லூரி,  இன்னும் திருச்சபையின் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் போப்பே உடமையாளர் ஆவார். அவருக்கே இந்த அமைப்புகள் அனைத்திலும் சர்வ அதிகாரம் உண்டு.  அது தான் பட்டவர்த்தனமான உண்மை.

கேரளாவில் மலயாற்றூரில்  உள்ள புனித தோமாவின் தேவாலயத்துக்கு சர்வதேச புனிதத்தலம் என்ற தகுதியை அளித்ததும் பி gurus இணைய தளம் சற்று அதிர்ச்சி அடைந்தது. இந்த அறிவிப்பை கேரளா அரசோ அல்லது இந்திய அரசோ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் போப் அதை அறிவித்ததற்கு காரணம் என்னவென்றால் அவர் தான் அந்த தேவாலயத்துக்கும் அதை சுற்றியுள்ள பல நுறு ஏக்கர் காடுகளுக்கும் நிலத்துக்கும் சொந்தக்காரர். எனவே தனது நிலத்தில் உள்ள கோயிலை பற்றி அவர் அறிவிப்பு வெளியிடுகிறார்.  இந்த தகவலை ஆங்கிலப் பேராசிரியராக இருந்து கிறிஸ்தவ இயலுக்கு மாறிய பேரா. ஜோசப் புளிக்குன்னல் தந்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.  அவர் ‘’ தேவாலயமாக இருந்தாலும் மருத்துவமனை அல்லது கல்வி நிலையம் அல்லது மடம் என எதுவாக இருந்தாலும் போப் நியமித்தவரே அதனை நிர்வகிக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தற்காலத்துக்கு வருவோம்.  வேடிகன் உலகின் பல நாடுகளோடு நல்லுறவு கொண்டுள்ளது.  இப்போது இந்தியாவிலும் அதற்கு மதமாற்றத்துக்கு நல்ல வழி இருப்பதால் இந்தியாவோடும் உறவு கொண்டாடுகிறது. இந்தியர் ஒருவர் போப் ஆக தெரிவு செய்யப்பட்டால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கோடிக்கணக்கான் பேர் உற்சாகம் பெறுவார். அவர்களின் மதமாற்றப்  பிரச்சாரம் சூடு பிடிக்கும். உற்சாகம்  அதிகரிக்கும். 1978இல் வேடிகன் ஏன் கரோல் ஜோசப் ஒஜ்ட்லாவை போப்பாக தெரிவு செய்தது? போலந்தில் இருந்து கம்யுனிசத்தை அழிக்க அங்கு போலிஷ் மொழியில் பேசும் ஒருவர் தேவைப்பட்டார். அதனால் போலிஷ் மொழி பேசும் கரோல் ஜோசப்பை  போப் ஆக்கியது. இப்போது இந்தியாவில் இந்துத்தவத்தை அழிக்கவும் கிறிஸ்தவத்தைப் பரப்பவும் வேடிகனுக்கு இந்திய மொழி பேசும் ஒருவர் தேவைப்படுகிறார். அதனால் இந்தியரை போப் ஆக நியமிக்கிறது.

இதுவரை விளக்கியதில் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் குஞ்சனந்தன் நாயர் எழுதிய “பொலிச்செழுத்து” என்ற நூலை வாசித்து பாருங்கள் இவரை பெர்லின் குஞ்சனந்தன் நாயர் என்பர். இவர் மார்க்சிஸ்ட் பிரிவை சேர்ந்தவர். இப்போது வெளிவராமல் நின்று போன ப்ளிட்ஸ் பத்திரிகையில் ஐரோப்பிய நிருபராக கிழக்கு ஜெர்மனியின் தலைநகரான  பெர்லினில் தங்கியபடி ஐம்பதாண்டுகள் பணியாற்றியவர். அதனால் பெர்லின் குஞ்சனந்தன் ஆனார். இவர் தன சுய வரலாற்றை ஒரு நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில் பதவியேற்ற ஒரே மாதத்தில் மர்மமான முறையில் இறந்து போனபோப்பின் மரணம் பற்றி விவரித்துள்ளார்.

1978 இல் முதலாம் ஜான் போப் பதவியேற்ற முப்பத்து மூன்று நாட்களில் திடீர் மரணம் அடைந்த போது வேடிகனுக்கு செய்தித்திரட்ட போன  நிருபர்களில் நாயரும் ஒருவர். இவர் தன புத்தகத்தில், ‘’முதலாம் ஜான் பால் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் உற்சாகமான மன நிலையோடும் இருந்தார் அவருக்கு இதய நோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.  அவரது மரணம் வேடிகனின் புனிதக் கொலையாக கருதப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யப்படாததால் இனி வரும்காலங்களிலும் இதன் மர்மம் வெளிப்படாது. வேடிகனின் நாற்றங்களை வெளியே அவர்  தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காக இத்தாலிய மாபியா கும்பலை சேர்ந்த தொழில்முறை கொலையாளி ஒருவனே அவரை கொன்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் திருச்சபையின் ஆயர், பேராயர், உயர் அதிகாரிகள் மற்றும் கர்தினால்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையின் மர்மம், அவர்கள் மாபியாவுடன் கொண்டிருந்த ரகசியத் தொடர்பு, போதை பொருள் கூட்டமைப்பு,  இவற்றுடன் மிகப் பெரிய அளவில் நடந்த பாலியல் தொழில் ஆகியவற்றால் வேடிகன் நாற்றம் எடுத்தது.’’ என்று விரிவாக எழுதியுள்ளார்.

கரஞ்சியா தனது ப்ளிட்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய நாயருக்கு செய்தி திரட்டி உண்மையை வெளியிட முழு சுதந்திரம் அளித்திருந்தார்.  ஆனால் வேடிகனில் இருந்து வந்த மிரட்டலுக்கு பயந்து ‘’இனிமேல் இது பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம்’’ என்று நாயருக்கு கட்டுப்பாடு விதித்துவிட்டார்.  அப்போது நாயர் தான் திரட்டிய பலவேறு தகவல்களை அவர் தனது பொழிச்செழுத்து என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

போப் பதவிக்கு க்ளிமிசை ஏன் தெரிவு செய்தார்கள்?  அவரது இயற்பெயர் ஐசக் தோட்டிங்கல். இவருக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராவதகு அனைத்து தகுதிகளும் உண்டு. அதாவது அவர் இந்துக்களை அறவே வெறுப்பவர். மோடி  2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற உடனேயே அப்போது இந்திய கத்தோலிக்க பேராயர் குழுவின் தலைவராக இருந்த இவர் நாடு முழுக்க பயணம் செய்து மோடியின் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் நிம்மதியாக வாழமுடியாது என்று பொய் பிரச்சாரம் செய்தார்.  உலகமெங்கும் சுற்றி வந்து மந்திர வித்தைகள் காட்டும் ஜான் தயால் போல அப்போது இந்த ஐசக் தோட்டிங்கல்பெயரும் உலகப் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பிரபலமாயிற்று

அன்று முதல் வேடிகன் இவரை இந்திய கிறிஸ்தவர்களின் இரட்சகராகக் காண்கிறது. அவரை போப் ஆக்கினால் அவர் இந்தியாவையே திசை மாற்றி கிறிஸ்தவக் குடியரசாக மாற்றி அமைப்பார் என்று பகல் கனவு காண்கிறது.  அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏயும்  வேடிகனும் இணைந்து 1950 முதல் இந்தியாவை ஆபரேஷன் பிரம்மபுத்ரா என்ற பெயரில் துண்டாடப் பார்க்கிறது.  இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான  அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோராம்,, மேகாலயா, திரிபுரா, அஸ்ஸாம், மணிபுரி ஆகியவற்றை நாட்டை விட்டு தனியாக பிரித்து விடத் திட்டமிடுகிறது.  உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த நாடுகளில் வாழும் மக்கள் பின்பற்றும் மதத்தை தெரிந்துகொள்ளுங்கள்.  பெரும்பான்மையோர்  கிறிஸ்தவர்களே. ஆவர்.

க்ளிமிசுக்கு இந்தியக் கம்யுனிஸ்டுகளுடன்  நல்ல தொடர்பு உண்டு சீத்தாராம் யேச்சூரி அடிக்கடி திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்துக்கு போய் கிளிம்சின் கரத்தில் முத்தமிடுவதை காணலாம். 1950 மற்றும் 1960 களில் திருச்சபையை எதிர்த்து வந்த மார்சிஸ்டுகளும் பின்பு திருச்சபை ஆயர்களுடன் நட்பு பாராட்ட தொடங்கிவிட்டனர்.இந்து மதம் இருக்கும் வரை தம்மால் இந்தியாவை கைப்பற்ற முடியாதென்பது  மார்க்சிஸ்டுகளுக்கும் ஆயர்களுக்கும் நன்றாகத் தெரியும். எனவே இவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து இந்து மதம், இந்துத்துவம் மற்றும் இந்து பண்பாட்டை அழிக்க முனைகின்றனர்.

அடுத்து வருவது….இந்து மதத்தை கிறிஸ்தவத் திருச்சபை  குறைவாக மதிப்பிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here