என் டி டிவியை நடத்தி வரும் பிரணாய் ராயும் அவரது மனைவி ராதிகா ராயும் இப்போது இன்னொரு அரசு ஏஜென்சி மூலம் சூடு வைக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் பிரனாய் ராய்க்கு கஷ்ட காலம் தொடங்கியுள்ளது.
செபியிட்ட ஆணை திருடனுக்கு தேள் கொட்டியது போலாகிவிட்டது.
விஷ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் என்ற VCPL நிறுவனம் விதிமுறைகளை மீறி நியு டில்லி டெலிவிஷன் லிமிட்டெட் எனப்படும் என் டி டிவி க்கு 26% உரிமையை அளித்துள்ளது. ஸாஸ்ட் [SAST] 1997, விதிமுறைகளின் படி 45 நாட்கள் அவகாசம் அளித்து பொது அறிவிப்பு தந்து இந்த பங்குகளை கை மாற்றியிருக்க வேண்டும். அன்று வி சி பி எல் நிறுவனம் அவ்வாறு முறைப்படி செய்யாததால் இன்று அந்த நிறுவனத்தின் முறைகேட்டை செபி (SEBI) கண்டித்துள்ளது. PGurus இந்த முறைகேடு குறித்து செபியில் இயலாமை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக இத்தகவலை விளக்கமாக வெளியிட்டிருந்தது. தற்போதைய நடவடிக்கைக்கு நாம் செபிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
வி சி பி எல்லின் தாய் நிறுவனமான ரிலையன்சுக்கும் செபி சில வினாக்களை எழுப்பியுள்ளது. 2011 இல் நியுஸ்18 சேனலை வாங்கிய போது ரிலையனஸ் நிறுவனம் என் டி டிவியிடன் அதற்கிருந்த உரிமையை உடைமத்துவத்தை விட்டு விலகிவிடவில்லை. இது காம்ப்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் INDIA (CCI) ஓர் உரிமை விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகும். அந்த நேரத்தில் என் டி டிவியும் நெட் ஒர்க் 18 உம் இணைந்து செய்தி வெளியீட்டில் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டன. அவை இரண்டும் ஒரே அதிகாரத்தின் கீழ் இயங்குவதாகவே செய்தி நிகழ்ச்சிகளை வெளியிட்டன.
ரிலையன்ஸ் நிறுவனம் நெட் ஒர்க் 18 ஐ அரசுக்கு தெரிவிக்காமல் வாங்கியதில் எந்த விதி மீறலும் இல்லை என்று செபி முன்பு தெரிவித்ததை நேற்று 2018 ஜூன் மாதம் 23ஆம் தேதி செபி அப்பெல்லேட் டிரிபியுனல் (SAT) வெளியிட்ட அறிக்கைமாற்றிவிட்டது. 2011இல் இருந்த ஒரு அறக்கட்டளை இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் முறையிட்டனர். இதில் ஒரு ஊடக நிறுவனத்தின் உரிமை அரசின் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்படாமல் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கை மாறியிருக்கிறது. ஊடகம் செய்திகளை உலகம் முழுக்க கொண்டு செல்வதாலும் இதில் தேசத்தின் பாதுகாப்பு குறித்த விஷ்யங்களும் உள்ளடங்கி இருப்பதாலும் உரிமை வழங்கப்படும் முன்பு அதன் உரிமையாளர் தேசத்துக்கு உண்மையானவரா என்பது குறித்து முறையான ஆய்வு நடத்தப்படுவது மரபு. அதற்கு வாய்ப்பே அளிக்காமல் இந்த நெட் ஒர்க் 18 கைமாறியுள்ளது. ரிலையன்ஸ் எனப்படும் மிகப் பெரிய தொழில் நிறுவனம் எப்படி இந்த இரண்டு செய்தி நிறுவனங்களையும் கட்டி காத்து வந்தது என்பது பற்றி செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும்.
செபி இப்போது வெளியிட்டிருக்கும் ஆணை பிரணாய் ராய்க்கும் அவரது மனைவி ராதிகா ராய்க்கும் பெரிய மண்டையடியை கொடுக்க போகிறது. ஆரம்பத்தில் இந்த கோழைத்தனமான பித்தலாட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக அமைச்சகமும் நடவடிக்கை எடுத்தது; இப்போது செபியும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இனி ராய்கள் மேற்கொண்ட விதிமீறல்களுக்கு பற்பல சட்டங்களின் கீழ் [Insider Trading Regulation & SBI Fraudulent and Unfair Trade Practices Regulations] செபி கடுமையான அபராதங்களை விதிக்கும். ஏற்கெனவே செபி இவர்களுக்கு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணச் சட்டத்தின் [PMLA Prevention of Money Laundering Act] கீழ் இருவரும் கைது செய்யப்படலாம்; வழக்குகளைச் சந்திக்கலாம்
ரிலையன்ஸ்/வி சி பி எல் ஆண்டுக்கு 10% வட்டி தரவேண்டும்
ரிலையன்ஸ் நிறுவனம் அல்லது வி சி பி எல் நிறுவனம் விதி மீறிய தேதிக்குள் பங்குகளை வாங்கியவர்களுக்கு ஆண்டுக்கு பத்து சதவீதம் வட்டி தரவேண்டும் என்றும்செபி ஆணையிட்டுள்ளது. இந்த சம்பவம் 2009இல் நடந்ததால் பங்குதாரர்கள் ஆண்டுக்கு பத்து % என பத்தாண்டுகளுக்கு 100 % வட்டி பெறுவர். பங்கு வாங்கிய காலத்தில் அதன் விலை ரூ.214 – 65 பைசா ஆகும். இன்றைக்கு என் டி டிவியின் பங்கு விலை வெறும் ரூ.32 – 50 பைசா மட்டுமே. அன்றைய விலையை காட்டிலும் இன்றைக்கு ஏழு மடங்கு குறைந்துவிட்டது.