நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க மேலிட அனுமதி கோருகிறார். சு. சுவாமி

மூத்த நிதிசெயலர் ஒருவர் (ஆதியா?) மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு கடிதம் எழுதப்போகிறார்

1
2387
மூத்த நிதிசெயலர் ஒருவர் (ஆதியா?) மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு கடிதம் எழுதப்போகிறார்
மூத்த நிதிசெயலர் ஒருவர் (ஆதியா?) மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு கடிதம் எழுதப்போகிறார்

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது வழக்கு தொடுக்க பிரதமரிடம்  அனுமதி கேட்கப் போகிறார். வெள்ளிக்கிழமை சுவாமி வெளியிட்ட டிவீட்களில் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் நீரவ் மோடியிடம் இருந்து தங்கக் கம்பிகளை வாங்கியவர்  என்று குறிப்பிட்டிருப்பது அது ஆதியா தான் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

நிதி அமைச்சகத்தில் இருந்த மூத்த அதிகாரிகள் நீரவ் மோடியின் நகை கடைகளில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரெய்டு நடந்ததை முடி மறைத்துவிட்டனர்.

ஆதியா தங்கக் கம்பிகள் பெற்றதற்காக பிடிபட்டதும் அவர் அதனை ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பரிசு பெட்டகத்தில் ஒப்படைத்து விட்டார். அவர் அந்த தங்கம் பற்றி சி பி ஐயிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் ராஷ்டிரபதியின் பரிசு பெட்டகமான தோஷாகானா இவர் தங்கம் கொண்டு போய் வைப்பதற்கானதன்று.

கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் ப சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தினரின் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதும் அவை வேகமாக விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிடாமல் இருக்க  தடை தாமதங்களை உருவாக்குவதும் நிதி செயலரின் வேலையாக இருப்பதால் அவர் மீது சுவாமி நெடுங்காலமாகக் கோபமாக / அதிருப்தியாக இருக்கிறார். மேலும் கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தாமதப்படுத்தி வரும் சி பி ஐயின் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவின் மீதும் சுவாமிக்கு இதே கோபம் இருக்கிறது. சி பி ஐயின் இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்ட பின்பு அஸ்தானாவின் வேகம் குறைந்ததால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.

சனிக்கிழமை இரவு வழக்கு போட அனுமதி கேட்கப் போவதாக சுவாமி டிவிட் செய்துள்ளார்.


நிதி அமைச்சகத்தில் இருந்த மூத்த அதிகாரிகள் நீரவ் மோடியின் நகை கடைகளில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரெய்டு நடந்ததை முடி மறைத்துவிட்டனர். மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பித்து போகவும் இந்த அதிகாரிகளே உதவினர். மத்திய புலனாய்வு துறை (CBI) , அமலாக்கத்துறை (ED) மற்றும் நிதி புலனாய்வு பிரிவு ஆகியவற்றிற்கு வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும்  இந்த வருமானவரித்துறையினரின்  ரெய்டு விவரங்கள் தரப்படவில்லை, ஜனவரி மாதம் நடந்த ரெய்டு தான் இங்கிருந்து தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மேஹுள் சொக்சி  ஆகியோரின் வங்கி பித்தலாட்டங்களை ஊரறிய செய்தது. சுவாமி சில குஜராத் பணிப்பிரிவு அதிகாரிகள் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் இருக்கின்றனர் என்று ஹஸ்முக் ஆதியாவை பற்றி குறிப்பிடுகிறார்.

மற்றொரு டிவிட்டில் சுவாமி அதிகாரிகள் ப சிதமபரத்தின் ஊழலை மூடி மறைத்து விசாரணைக்கு இடையுறு விளைவிப்பதும் வருத்தமாக இருக்கிறது என்கிறார்.


சிதம்பரம் மற்றும் நீரவ் மோடி வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்து வரும்  ஆதியா அடுத்ததாக GSTN  மற்றும் வோடபோன் சர்வதேச நடுவர் அமைப்பை முறையாக பயன்படுத்த தவறிவிட்டு இப்போது இலண்டனில் இன்னொரு நடுவர் அமைப்பு கேட்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்,

தொலைதொடர்பு அமைச்சர் ராஜா மீது  வழக்கு தொடுக்க அனுமதி வேண்டும் என்று சுவாமி பிரதமரிடம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. அனுமதியளிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மேலதிகாரி அல்லது பிரதமர் மூன்று மாத கால அவகாசம் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக ஒரு மாத கால அவகாசம் எடுக்கலாம் என தீர்ப்பளித்தது. இப்போது பிரதமரிடம் சுவாமி ஆதியா மிது வழக்கு தொடுக்க அனுமதி  கேட்பார். கிடைக்கவில்லையென்றால் அவர் நீதிமன்றத்தை அணுகத் தயாராக இருக்கிறார்.

பொருள் மற்றும் சேவை வரி நெட் ஒர்க் தொடர்பாக ஆதியா செய்த தவறுகள் பற்றி இந்த செய்தி தளம் பல தொடர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here