இந்திய அரசியலில் வேடிகன் & கத்தோலிக்க திருச்சபையின் பங்கு

1950 முதல் இந்திய அரசியலில் வேடிகன் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினரின் தலையீடு

0
2779
1950 முதல் இந்திய அரசியலில் வேடிகன் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினரின் தலையீடு
1950 முதல் இந்திய அரசியலில் வேடிகன் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினரின் தலையீடு

அண்மையில் டில்லி மற்றும் கோவா திருச்சபைகளில் பேராயர்கள் சபையினருக்கு எழுதிய கடிதங்களில் ‘வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அதற்காக உபவாசம் இருக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபிக்கும்படியும் தெரிவித்தன. இந்த அறிவிப்பு தேசத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகும். வேட்டிகனால் நியமிக்கப்படும் பேராயர்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபை மூலமாக இந்திய அரசியலுக்குள் நேரடியாகத்  தலையிடுகின்றனர்.

மலையாளத்தின் “விமோசன சமரம்” எனப்பட்ட இந்த விடுதலை போராட்டத்தின் போது ஏராளமான அமெரிக்க டாலர்கள் கேரளாவில் புழங்கின.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது இது ஒன்றும் புதிது அல்ல என்பதும் பிரிட்டிஷார் வெளியேறிய பிறகும் திருச்சபை எப்போதும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இன்று வரை கார்டினல்களும் பேராயர்களும் ரகசியமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்கை முடிவுகளில் திருச்சபைக்கு ஒரு முக்கியப் பங்கிருப்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.  சில அறிவார்ந்த நேர்மையான மேலை நாட்டாரால் இந்தத் திருச்சபை இந்திய அரசியலில் தீவிரமான பங்கேற்றதை நம்மால் அறிய முடிந்தது.

1959இல் மக்களால் தேர்தேடுக்கப்பட்ட இ எம் சங்கர  நம்பூதிரிபாடை (EMS) முதல்வராகக் கொண்டிருந்த கேரளா சட்டசபை வேடிகன் மற்றும் சி ஐ ஏ  அமைப்பின்  [Central Intelligence Agency] தலையீட்டால் கலைக்கப்பட்டதாக  இந்தியாவின் அமெரிக்க தூதுவரான டேனியல் பேட்ரிக் மொய்நிஹன் A Dangerous Place என்ற தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பிரதமராகவும் இந்திரா காந்தி கட்சி தலைவராகவும் இருந்த காலத்தில் அவர்களின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியும் கேரளாவில் இருந்த திருச்சபையின் நிதி உதவியுடன் ஒரு குழுவினரும் சேர்ந்து நடத்திய கொலைவெறி போராட்டத்தால் பிரிவு 352இன் கீழ் சட்டசபை கலைக்கப்பட்டது.

நமது அரசியல் உரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி தத்துவத்துக்கு இடையுறு விளைவிக்கும் எந்த அரசியல் சூழ்நிலையோ தேசத்தின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் நிலைமையோ உருவாகாத போது  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யுனிச அரசை திருச்சபை கலைக்க நிதி உதவி செய்து ஆதரித்தது. இப்போதும் பொதுவுடமைவாதி கட்சியினர் தான் அங்கு ஆட்சி செய்து வருகின்றனர். தொடர்ந்து தங்களின் வர்க்க அதிரிகளை கூண்டோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் கட்சித்தலைவர்கள் உள்ளுர் உள்துறை அமைச்சர்களை போல செயல்படுகின்றனர். முழுக்க முழுக்க கட்சியினரின் அதிகாரத்திலேயே நிர்வாகம் நடக்கிறது.

திருச்சபையின் பிடியில் இருந்து கல்வித்துறையை விடுவிக்க முயன்ற கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜோசப் முண்டசேரியின் செயல் கல்வி நிறுவனங்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக இருந்த திருச்சபை அதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டியது. இவர் கத்தோலிக்கராய் இருந்து கம்யுனிசவாதியாக மாறியவர். இவரை இ எம் எஸ் நம்பூதிரிபாட் கல்வியமைச்சராக்கி இருந்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வருமானத்தை உத்தேசித்து பல திருச்சபை நிர்வாகங்கள எண்ணற்ற கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருந்தன. ஆசிரியர் நியமனத்துக்கு பெருந்தொகையை இலஞ்சமாக பெற்றன; மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியது. இவர்கள் எதுவும் செலவு செய்வது கிடையாது.

பேராசிரியர் முண்டசேரி பொறுத்திருந்து பார்த்துவிட்டு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் ஆகியவற்றிற்க்கு  கல்வி நிறுவனங்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றார். பல இடங்களில் பங்குத்  தந்தையாக இருக்கும் பள்ளி மேலாளர் ஒன்பது ருபாய் சம்பளம் தந்ததாக கையெழுத்து வாங்கிக்கொண்டு ஐந்து ருபாய் கொடுத்தனுப்பினார். மேலும்  சம்பளம் முறையாக வழங்கப்படுவதும் கிடையாது, என்று அக்காலத்தில் இருந்து வந்த இந்த நிலைமை குறித்து தந்தை ஜோசப் வடக்கன் எழுதியுள்ளார். திருச்சபையின் காலாட்படையாக விளங்கிய ஜோசப் வடக்கன் 1958-59கலீல் கம்யூனிச அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார் பின்பு அவர் மனம் மாறி கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு வேடிகன் எப்படி கேரளத் திருச்சபையினர் நடத்திய போராட்டங்களுக்கு நிதி உதவி செய்தது என்பதை தனது நூலில் விளக்கிவிட்டார்.

இன்றும் திருச்சபை தனது நிறுவனங்களான பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி  மற்றும் பொறியியல் கல்லூரி போன்றவற்றில் அரசின் தலையீட்டை விரும்பவில்லை. ஆனால் சம்பளம் அரசு வழங்குகிறது. இவர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல வருமானம் வேண்டும் ஆனால் செலவு செய்யக் கூடாது.

மலையாளத்தின் “விமோசன சமரம்” எனப்பட்ட இந்த விடுதலை போராட்டத்தின் போது ஏராளமான அமெரிக்க டாலர்கள் கேரளாவில் புழங்கின. திருச்சபையின் ஆதரவாளராக பள்ளி வாத்தியாராக ஒரு ஆன்மீக பிரசங்கியாக தனது  வாழ்க்கையை தொடங்கிய சி பி ஐ [மா] தலைவர் லோனப்பன் நம்படன்சஞ்சாரிக்குன்ன விசுவாசி” என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் [பக் 18-22]  இந்த விடுதலைப்  போராட்டத்தில்  வேடிக்கனின் பங்கு குறித்து விவரிக்கிறார். இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் நம்படனின் நீண்ட காலத்  தோழரான முன்னாள் முதலமைச்சர் வி எஸ். அச்சுதானந்தன் இவரும்  நம்படன் தனது  நூலில் விடுதலை போராட்டத்தில் வேடிகனின் பங்கு பற்றி எழுதியவை எல்லாம் ஆதாரப்பூர்வமானவை என்கிறார்.

போராட்டம் நடந்து முடியும் வரை இந்தியாவின்  வேடிகன் தூதரான ஜேம்ஸ் ராபர்ட் ஹாக்சின் செயல்பாடு  பற்றி நம்படன் விளக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது.

1957இல் அமெரிக்காவின் தூதராக இந்தியாவில் இருந்த எல்சொர்த் பங்கர் சி ஐ ஏவும் வேடிகனும் விடுதலை போராட்டத்துக்கு நிதி உதவி செய்து இந்திய அரசியலில் இருந்து கம்யூனிசக் கட்சியை விரட்டியடிக்க முயன்றதாக குறிப்பிட்டார் என்று நம்படன் தன புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த எஸ். கெ பாட்டில் கேரளாவில் நடந்த விடுதலை போராட்டத்துக்கு நிதி வழங்கினார்.

போராட்டம் நடந்து முடியும் வரை இந்தியாவின்  வேடிகன் தூதரான ஜேம்ஸ் ராபர்ட் ஹாக்சின் செயல்பாடு  பற்றி நம்படன் விளக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது. “கத்தோலிக்க ஆயர்கள் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி பெங்களுருவில் ரகசிய கூட்டம் நடத்தி கேரளப் போராட்டத்துக்கான திட்டமிடலைச்  செம்மையாகச் செய்து முடித்தனர். இந்தக் கூட்டம் பற்றி அப்போது இந்து மற்றும் இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வந்தன” என்று தன நூலில் தெரவித்துள்ளார்.

நம்படன் யார்?  கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த அடிப்படைவாதி. 1958-59 களில் விடுதலை போராட்டத்தை முன்னணியில் இருந்து நடத்தியவர். 1982க்கு பிறகு திருச்சபையின் ஆதரவு பெற்ற காங்கிரசை விட்டு நீங்கி இந்திய மார்க்சிய கம்யுனிஸ்ட கட்சியில் இணைந்தார், இதனால் இ.கெ நாயனார் முதல்வராக இருந்த போது 1987இல்   இவர் அமைச்சராக்கப்பட்டார். பின்பு 2004., இல் முகுந்தபுரத்தில் இருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்றார். நம்படன் 2013இல் தான் மறையும் முன்பு ஒரு நூல் எழுதினார். அதில் அவர் எழுப்பிய வினாக்கள் குறித்து இன்று வரை யாரும் கவலைப்படவில்லை. அப்போது ராஜ்சபாவில் சி பி ஐ உறுப்பினர் கேட்ட கேள்விக்கு 1959இல் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் சொன்ன பதிலையும் இவர் தனது புத்தகத்தில் எடுத்துக்  காட்டியுள்ளார். ‘’ 1959 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலை வரை அமெரிக்காவில் இருந்து 13, 96,162 டாலர்கள் பல்வேறு கேரளா வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளன.’’ இது அந்தக்காலத்தில் மிகப்பெரிய தொகை ஆகும்.

டேனியல் பேட்றிக் மொய்நிஹன் தனது A Dangerous Place  என்ற புத்தகத்தில் கேரளாவில் நடந்த விடுதலை போராட்டத்தில் சி ஐ ஏயின் பங்கும் வேடிகனின் பங்கும் இருந்ததை  தெளிவுபடுத்துகிறார்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here