பி ஜே பி யின் தொழில் நுட்ப பிரிவு செத்துவிட்டதா? விழித்துக்கொண்டு தனக்கு  முன் நிற்கும் சவால்களை சந்திக்குமா?

பி ஜே பி தனது எதிரிகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை தனது தொழில்நுட்பப்பிரிவு மூலமாகச் செய்ய வேண்டும்

0
1908
பி ஜே பி தனது எதிரிகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை தனது தொழில்நுட்பப்பிரிவு மூலமாகச் செய்ய வேண்டும்
பி ஜே பி தனது எதிரிகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை தனது தொழில்நுட்பப்பிரிவு மூலமாகச் செய்ய வேண்டும்

இப்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில் பி ஜே பி கட்சியின் தொழில் நுட்ப பிரிவு (Social Media) முழுமையாக திறமையாக செயல்படவில்லை. இக்கட்சியில் தொழில் நுட்ப பிரிவு என ஒன்று இருக்கிறதா என தேட வைத்துவிட்டது. இளைஞர்களின் கூர் வாளாக இருக்க வேண்டிய இப்பிரிவு எங்கேயோ போய் படுத்து கும்பகர்ணனைப் போல தூங்கிவிட்டது.  இந்தியாவில் நாற்பது கோடி பேர் கையில் செல் போனுடன் உலா வருகின்றனர். இவர்களிடம் பி ஜே பி தொழில் நுட்ப பிரிவு தன கருத்துக்களை கொண்டு சேர்த்ததா? இது தவிர புற நகர்ப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளிலும் ஸ்மார்ட் ஃபோன் புழக்கம் அதிகரித்துவிட்டது.

இந்தி பேசும் மக்கள் நிரம்பிய மூன்று மாநிலங்களிலும் இப்பிரிவு தனது பிரச்சாரத்தை வலுவாக செய்திருக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களிலும் பி ஜே பி ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறது. ஆனால் அவற்றில் ஒன்று கூட பிரசாரப்படுத்தப்படவில்லை. இதை தொழில் நுட்பப்பிரிவு செய்திருக்க வேண்டும். எளிமையான காணொளி காட்சிகள், புள்ளி விவரங்களோடு கூடிய அதிகாரப் பூர்வமான தகவல்கள், முந்தைய ஆட்சிக்கும் இன்றைய ஆட்சிக்குமான வேறுபாடு போன்றவற்றை மக்கள் முன்னிலையில் கொண்டு போயிருக்க வேண்டும். அடித்தள மக்கள் மின்சாரம் , சமையல் எரிவாயு போன்றவற்றில் இந்த ஆட்சியில் பல நன்மைகளை அடைந்துள்ளனர் அவற்றை பிரச்சாரப்படுத்தவே இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஜன தன், சமையல் எறி வாயு, ஒய்வூதியம், போன்ற , மத்திய அரசின்  நலத்திட்டங்களால் பயன் பெற்றவர்களின் பேட்டிகளை படமாக்கி வெளியிட்டிருக்கலாம்.

காங்கிரசின் ஊழல், தீவிரவாதம், கட்டாய மத மாற்றம் போன்ற முறை கேடுகளை அமபலப்படுத்தி இருக்கலாம். மோடியின் ஆட்சியில் ஒரு தீவிரவாத தாக்குதல் எதுவும் பெறவில்லை, சோனியா காந்தியின் நிழல் ஆட்சியின் போது நடந்த தீவிரவாத தாக்குதல்கள் எத்தனை எத்தனை என்பதை பொதுமக்களுக்கு காணொளிகள் மூலம் நினைவூட்டி காங்கிரஸ் ஆட்சி இஸ்லாமியருக்கு ஆதரவளித்ததால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் கதைகளை எடுத்து காட்டி இருக்கலாம். தீவிரவாதத் தாக்குதலுக்கு நேரடியாக ஆளான சிலரிடம் நேரடி பேட்டி எடுத்து ஒளிபரப்பியிருக்க வேண்டும். பல குடும்பங்களில் வருமானம் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றும் குடும்பத் தலைவர் தீவிரவாதத் தாக்குதலால் ஊனமுற்று அவதிப்படுவதை படம் எடுத்து அனைவருக்கும் காட்டியிருக்க வேண்டும். நாட்டில் சாலை வசதி, ரயில் வசதி, நீர் வழி போக்குவரத்து என பல வகையான உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை மக்களுக்கு எடுத்து காட்டி விளம்பரப்படுத்தி இருக்கலாம்.  மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியால் பெரு நகரங்களில் பயண நேரம் மிச்சமாகி இருக்கிறது இந்த வசதிகளை இந்த ஆட்சியின் சாதனை என்று ஏன் எடுத்துக்காட்டவில்லை. மன் மோகன் சிங் முஸ்லிம்கள் இந்த நாட்டின் முதலுரிமைக்கு உரியவர்கள் என்றார். ஆனால் நம் மோடி அவர்களோ  ‘Sabka Saath, Sabka Vikas’ என்கிறார். காங்கிரஸ் நம்மை பிரித்து ஆளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது ஆனால் பி ஜே பியோ இணைத்து ஆளும் வழிமுறையை கையாள்கிறது. இவ்விரு கட்சி மற்றும் ஆட்சிகளுக்கான  வேறுபாடுகளை மக்களுக்கு எடுத்து காட்ட வேண்டும்.

இது போன்ற ஒளிப்பதிவு  ஒலிப்பதிவுகளை எடுத்து காட்ட முடியாவிட்டால் தனிப் பேச்சு, உரையாடல் போன்ற உத்திகளை கையாண்டிருக்கலாம். இந்த தொழில் நுட்ப புரட்சி காலத்தில் சமூக வலைத் தளங்கள் தவறான கருத்துக்களை நொடிக்கொரு முறை பரப்பி கொண்டிருக்கும் வேளையில் நாம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தற்கொலைக்கு சமமான செயலாகும். பி ஜே பியினர் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மோடி வருவார் உரையாற்றுவார் நாம் கை கட்டிக்கொண்டு கேட்டு மகிழ்வோம் அது மட்டும் போதும் என்று நினைக்கின்றனர். நாமும் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்று எவரும் கருதவில்லை. நமக்கும் இந்த கட்சியின் வெற்றியில் ஒரு பங்கு இருக்கிறது நமக்கான் கடமைகளை நாம் செய்ய வேண்டும் என்பதைக் கட்சியினரும் இளைஞரும்  உணரவில்லை. எவரும் களப்பணியாற்ற முன் வரவில்லை.  கேமராவையும் மைக்கையும் தூக்கிக் கொண்டு தேர்தல் காலத்துக்கு போய் நேரலை காட்சிகளை எடுத்து களத்தை சூடேற்றி இருக்க வேண்டும். டிவிட்டரில் கருத்து போட்டால் போதும் என்று பலர் கருதுகின்றனர். அது மிகவும் தவறான கருத்து. அமெரிக்க்க ஜனாதிபதி ரீகன் தான் ஆட்சிக்கு வரும் முன் மக்களிடம் நான்கரை வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டார். அதன் பின்  என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும்.

ரபேல் ஊழலில் பி ஜே பி யை கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். உண்மை இன்னதென்று அறியாமலேயே பலர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். பி ஜே பி சார்பில் இருந்து எழுபது முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உண்மையை எடுத்துரைத்த பின்பும் காங்கிரஸ் திரும்ப திரும்ப சொல்லும் பொய்களையே மக்கள் விரும்புகின்றனர்; நம்புகின்றனர்; வாக்கு அளிக்கின்றனர். க்வோத்ரோச்சி பற்றி மோடி பல முறை பேசினார். ஆனால் இளைஞர்களுக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. காங்கிரசார் செய்த பொன் வங்கி கடன் வழங்குதல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவற்றை ஏன் நமது  தொழில் நுட்ப பிரிவு அக்கறை எடுத்து பிரசாரப் படங்கள் தயாரித்து மக்கள் பார்வைக்கு வைக்கவில்லை. அவர்களிடம் இந்த ஊழல் குறித்து நாம் சிந்தனையை எழுப்பியிருக்க வேண்டும். போனின் பேசியே வங்கி கடன் வாங்கி விடுதல் பற்றி ஒரு நகைச்சுவை சித்திரத்தை எடுத்து வெளியிட்டிருந்தால் அதை பார்ப்பவர் உணர்ந்து சிரித்து மகிழ்வதொடு காங்கிரசுக்கு ஒட்டு போடுவதையும் தவிர்த்து இருப்பார்.

ஒரு பணக்காரர், நிதி அமைச்சரிடம் போய் கடன் தொகை தேவை என்கிறார். அமைச்சர் வங்கி நிர்வாக அதிகாரியிடம் சொல்கிறார். வங்கி அதிகாரி தான் ஒரு பங்கு கமிஷன் எடுத்துக்கொண்டு கடன் தொகையை தருகிறார். எல்லோரும் வரிசையாக ஆளுக்கு கொஞ்சம் கமிஷன் எடுத்து கொள்கின்றனர். இது ஒரு அமைச்சர் மேற்பார்வையில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை என்பதை நகைச்சுவையாக சொல்லி ஆழமாக பதிய வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஒன்று இரண்டு அல்ல ஐம்பத்திரண்டு இலட்சம் கோடி கடனாக போய்விட்டது. வங்கி கஜானா காலி. இந்த தொகையை கொண்டு பதிமூன்று வருடங்களுக்கு வருமான வரி செலுத்தி இருக்கலாம். விவசாயிகளின் கடனை அடைத்திருக்கலாம், ஏன் நதிகளை கூட இணைத்திருக்கலாம். கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் நான் நூறு பில்லியன் டாலர் மதிப்பு உடையவன்; வேண்டுமானால் கேட்டு பாருங்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். இப்போது  சரி நான் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஊழல் பேர்வழியை அவர் தந்தை ப. சிதம்பரத்தை இந்த அரசு இன்னும் ஏன் கைது செய்யமால் சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறது.

ஒரு தாக்குதல் தான் மிகப் பெரிய தற்காப்பு என்பதை உணர வேண்டும். தடுத்து கொண்டிருந்தால் மட்டும் போதாது எதிர் தாக்குதல் நடத்தவும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ரபேல் ஊழல் பற்றி நம்மை காங்கிரசார் கடுமையாக தாக்கியதால் மட்டுமே அவர்கள் இன்று வெற்றி பெற்றுள்ளனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போது அதை மக்கள் நம்பத் தொடங்குகின்றனர். எனவே பி ஜே பியினர் எதிர் தாக்குதல் நடத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். நமது சாதனைகளை உரக்க சொல்ல தெரிந்திருக்க வேண்டும், தொழில் நுட்ப உத்திகளால் எதிரிகளின் முகத்திரையை கிளிக்கவும் அவர்களின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தும் நாம் முன் வர வேண்டும் .

இவற்றை இனியாவது பி ஜே பியின் தொழி நுட்ப பிரிவினர் செய்வார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here