இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக இருந்த போது 1923இல் Madras Hindu Religious Endowments Act என்ற சட்டம் அறிமுகம் ஆனது. இந்த சட்டம் இந்து மதத்துக்கான சட்டமாக இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
இப்போது நான் விவாதிக்கப் போவது நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான விஷயம் ஆகும். மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மன்னர்கள் தானமாக கொடுத்த நிலம் அவர்களிடம் இருந்து சில செட்டியார்களுக்கு கை மாறி பின்னர் 1894ஆம் ஆண்டில் புனித மரியாள் தேவாலயத்தின் கத்தோலிக்க சபைக்கு மாறிவிட்டது. 1863 ஆம் ஆண்டு இனாம் பதிவேட்டில் இந்த நிலம் பட்டர்களுக்கு இனாமாக கொடுத்ததாக பதிவாகியுள்ளது. அந்த பதிவேட்டில் இரண்டு பட்டர்களின் பெயரும் அவர்களின் அர்ச்சகாள் சேவைக்கு தேவதாயமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் இனாம் பதிவேட்டில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தேவதாயம் என்பது அர்ச்சகரின் சேவைக்கு ஆண்டவனின் வருமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாகினமா என்ற சொல்லை நான் உங்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு ஒரு சொல்லே சமஸ்கிருதத்தில் கிடையாது என்கின்றனர். இச்சொல் கோயிலின் அத்யாத்ய்காமா [நிரந்தர நன்மை] அல்லது ஆதினமகா [உரிமை கொண்டாடுதல்] என்ற சொற்களில் பொருளை கொண்டுள்ளது. தமிழ் நாட்டு கோயிலில் எதற்கு சமஸ்கிருதம் பயன்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். சில கல்வெட்டுகளில் சட்ட சொற்கள் சமஸ்கிருதத்தில் தான் எழுதப்பட்டுள்ளன.
பட்டர்கள் இந்த நிலத்தை விவசாயம் செய்து தங்கள் தேவைகளுக்கு போக கோயிலுக்கும் கொடுப்பதுண்டு. இந்நிலத்தை அவர்கள் விற்க இயலாது எனவே இந்த நிலத்தை செட்டியார்களுக்கு மாற்றி தந்தது செல்லாது. அறுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 49 ஏக்கர் பரப்பளவுள்ள இந்நிலம் மதுரை நகரின் மத்தியப் பகுதியில் உள்ளது. உச்ச நீதிமன்றம் இந்நிலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்த பின்பும் இந்நிலம் செயின்ட் மேரிஸ் தேவாலயத்தின் பொறுப்பிலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இந்து சமய அற நிலைய துறையே இந்நிலை அபகரிப்புக்கு பொறுப்பாகும். திமுக ஆட்சியின் பொது ஒரு தாசில்தார் இந்நிலம் தேவாலயத்துக்கு சேர வேண்டியது என பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். இதற்கு திமுகவும் இந்து சமய அற நிலையத்துறையும் பொறுப்பாகும். இது பெரிய நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
திமுக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் கத்தோலிக்க சமயத்தின் தேவாலயப் பொறுப்பில் இருக்கும் நிலத்தை மீட்டு அர்ச்சர்களிடம் ஒப்படைக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசித்ததால் அதில் மிக தெளிவாக நீதிபதி இதயதுல்லா வழக்கு விவரங்களை அலசி ஆராய்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி இந்நிலம் கோயில் பட்டர்களுக்கே திருப்பி தரப்பட் வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார். [பக்கம் 17]
உயர் நீதிமன்றம் இந்த இனாம் நிலத்தை தன்னிடம் வைத்துக்கொள்ளும்படி தெரிவித்ததா அல்லது இந்து கோயிலிடம் திருப்பி தரும்படி தெரிவித்ததா என்பது நமது அடுத்த கேள்வி.
Supreme Court judgment:
The Roman Catholic Mission … by on Scribd
Why was Jan 10 1966 ruling of the supreme court disobeyed?by Tehsildar then ? in June 1968 ? Nothing but corruption un-caught by partnering DMK which never appealed against such unruly order Making Contempt of Apex court order of Jan 1968. Catch that rober tehsildaar for corruption put him on Lie detector if alive. If dead confiscate his property as penalty, & return the temple property to the Archagars.