ராகுல் காந்திக்கு இந்தியா தவிர வேறு இரண்டு குடியுரிமை, – ரகசியம் அம்பலம் ஆயிற்று

ராகுல் காந்திக்கு மண்டை குடைச்சல் தொடங்கிவிட்டது - ஏன் ராகுல் ராவுல் வின்சி என்ற பெயரை உபயோகித்தார்?

0
2087
ராகுல் காந்திக்கு மண்டை குடைச்சல் தொடங்கிவிட்டது - ஏன் ராகுல் ராவுல் வின்சி என்ற பெயரை உபயோகித்தார்?
ராகுல் காந்திக்கு மண்டை குடைச்சல் தொடங்கிவிட்டது - ஏன் ராகுல் ராவுல் வின்சி என்ற பெயரை உபயோகித்தார்?
செய்தி சுருக்கம்

  • ராகுலிடம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய குடியுரிமையுடன் இரண்டு இந்திய பாஸ்போர்ட்கள் உண்டு
  • ராவுல் வின்சி என்ற பெயரில் ராகுல் ஏன் கேம்ப்ரிட்ஜில் சான்றிதழ் பெற்றார்?
  • அமேதியில் ரிட்டர்னிங் ஆபிசர் ராகுலின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் தாமதம் ஏன்?

ராகுல் காந்திக்கு மண்டை குடைச்சல் தொடங்கிவிட்டது. 2௦௦4 இல் தனது நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்த போது அவர் பிரிட்டனில் குடியுரிமை பெற்றிருந்தார்.  அங்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த போது ராவுல் வின்சி என்ற பெயரில் ஒரு சான்றிதழ் பெற்றிருந்தார். துருவ் லால் என்ற சுயேச்சை வேட்பாளர் புகார் அளித்திருந்ததன் பேரில் அமேதி ரிட்டர்னிங் ஆபிசர் ராம் மனோகர் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுலின் விண்ணப்பப் படிவத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யாமல் அதை  வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார். இந்த புகார் வரவில்லை என்றால் ராகுலின் விண்ணப்பம் இந்நேரம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் சுயேச்சை வேட்பாளர் புகார் அளித்ததால் விண்ணப்பம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. [ராகுல் கேரளாவில் வய நாட்டிலும் போட்டி இடுகிறார்].

ராவுல் வின்சி என்ற பெயரை பயன்படுத்திய  மர்மம் விலகியது

தற்போது சென்னையில் வசிக்கும் ஒய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஒருவர் 1994 இன் தொடக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக [சோனியா காந்தியின் உத்தரவுப்படி] தன்னை அணுகினார் என்றும் அப்போது தான் ராவுல் வின்சி என்ற பெயரில் ராகுல் காந்திக்கு ஒரு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டி இருந்தது என்றும் தெரிவித்தார்.  அக் காலகட்டத்தில்  ராகுல் காந்தி வெளிநாட்டில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அதிகாரிகள் அவருக்கு ஏற்கெனவே ராகுல் காந்தி என்ற பெயரில் ஒரு பாஸ் போர்ட் இருப்பதால் இன்னொரு பாஸ்போர்ட் வழங்குவது சட்டப்படி குற்றம் ஆகும் என்று தெரிவித்தானர்.  ஆனால் சொன்னதை செய் என்று தமக்கு உத்தரவு வந்ததால் போலி பாஸ்போர்ட் வழங்கியதாக இந்த ஒய்வு பெற்ற சென்னை அதிகாரி நம்மிடம் தெரிவித்தார். அப்போது இவர் தான் பாஸ்போர்ட் வழங்கும் பிரிவில் பணியாற்றி கொண்டிருந்தார்.

‘புதிய பாஸ்போர்ட் ராவுல் வின்சி என்ற பெயரில் ராகுல் காந்தியின் பிறந்த நாளுடன் 48 மணி நேரத்தில் சோனியா காநதியின் விட்டுக்கு அனுப்பப்பட்டது. பாஸ்போர்ட்டை பெற்று கொண்டதும் இது தொடர்பான அனைத்து கோப்புகளையும் [Intelligence Bureau (IB)],புலானய்வு பிரிவுக்கு அனுப்பிவிடும்படி எங்களுக்கு உத்தரவு வந்தது’ என்றார் அந்த அதிகாரி.

‘இலண்டனில் ராகுல் காந்தி இன்னாரெனத் தெரிந்தால் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்று சோனியா காந்தி அஞ்சுவதால் வேறொரு பெயரில் பாஸ்போர்ட் கேட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு சரியான காரணம் அல்ல என்றாலும் இதன் ரகசியம் இன்னும் புலப்படவில்லை’ என்று நம்மிடம் தெரிவித்த அதிகாரி அதன் பிறகு பல நாடுகளில் தூதராகவும் இருந்திருக்கிறார்.

2௦13 ஆம் ஆண்டு ‘ரா’  எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் [Research and Analysis Wing (RAW) ] மற்றும் புலானாய்வு பிரிவினர் இந்த அதிகாரியைச் சந்தித்து போலி பெயரில் ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கியது பற்றி விசாரித்தனர். ‘சுப்பிரமணிய சுவாமியின் புகாரின் பேரில் இந்த விசாரணை நடப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து நானும் என் நண்பரான சுவாமியிடம் பேசினேன்’ என்றார்

இந்த அதிகாரியின் கருத்துப்படி ராகுல் காந்தி இந்த போலி பெயரை பயன்படுத்தி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படித்திருக்கின்றார். சான்றிதழும் பெற்றிருக்கிறார்.  இதே பெயரில் இலண்டனில் வங்கி கணக்குகளும் தொடங்கியுள்ளார். இத்தாலியில் வாழும் சோனியா காந்தியின் சுற்றத்தார் பலருக்கு வின்சி என்பது குடும்பப் பெயராக உள்ளது. எனவே இவரும் தனது தாய் வழி குடும்பப் பெயரை தன பெயருடன் ஓட்ட வைத்துக்கொண்டார்.

ராகுல் காந்தி தன்னுடைய பிறந்த நாளைக் குறிப்பிட்டு ராவுல் வின்சி என்ற பெயரில் இலண்டனில் உள்ள பார்க்க்லஸ் வங்கியில் 504664922071640796 என்ற எண்ணில் வங்கிக் கணக்கை தொடங்கி இருக்கிறார்.

வெளிநாடுகளில் பயணிக்கும் போது ராகுல் தன்னை ராவுல் வின்சி என்று தான் குறிப்பிட்டுள்ளார்.  தான் ராஜிவ் காந்தியின் மகன் என்பது தெரியக் கூடாது என்பதற்காக இன்னொரு பெயரில் பாஸ்போர்ட் வாங்கி தைரியமாக உலவி வந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டியல் கல்வி படிக்கும் போதும் இதே பெயரில் பதிவு செய்து படித்து சான்றிதழ் வாங்கியுள்ளார். . இந்த தகவலை சுவாமி குறிப்பிட்டு உள்துறை அமைச்சகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

பிரிட்டனில் புதிய வங்கி கணக்கு 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதினெட்டாம் தேதி தொடங்கப்பட்டது. 2௦14ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி முடிக்கப்பட்டது. அதாவது  பி ஜே பி ஆட்சிக்கு வந்த ஆறாவது மாதம் இக்கணக்கு முடிக்கப்பட்டது. சுவாமி அனுப்பிய புகாரில் ராவுல் வின்சியின் வீட்டு முகவரி 2 Frognal Way,  London என்பதாகும்.  இந்த முகவரி தான் ராவுல் வின்சி என்ற பிரிட்டிஷ் குடிமகன் தன நிறுவனத்தைப் பதிவு செய்யக்  கொடுத்திருக்கும் வீட்டு முகவரியும் ஆகும்.  இரண்டு பெயர்களுக்கும் கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த நாள் ஜுன் 19, 197௦ என்பது தான்.  இது மாறவே இல்லை. இந்த ஆவணங்கள் ராகுல் காந்தி பல பாஸ்போர்ட்களை பல பெயர்களில் வைத்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்நிலையில் சட்டப்படி இவருடைய இந்தியக் குடியுரிமையும் பாஸ்போர்ட்டும்  ரத்து செய்யப்பட வேண்டும்.

பிரிட்டன் குடியுரிமை வெளிப்பட்டது

2௦15 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமி பிரிட்டனில் ராகுல் காந்தி வேறொரு புதிய பெயரில்  ஒரு கம்பெனியைப்  பதிவு செய்திருப்பதன் ரகசியத்தை அம்பலப் படுத்தினார்.  2௦௦4 முதல் 2௦௦8  இரண்டு முகவரிகளில் பிரிட்டனின் குடிமகனாக ராகுல் காந்தி வாழ்ந்திருக்கிறார். அவர் பெரிய ஃபிராடு பேர்வழியாக இருந்திருக்கிறார். மேலும் ராகுல் காந்தி இதே போலி பெயரில் பிரிட்டனில் வருமான வரியும் செலுத்தியிருக்கிறார்.

சுவாமி அளித்த ஆவணங்களில் ராகுல் காந்தி தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்றும் தான் 51 Southgate Street, Winchester, Hampshire SO23 9EH. என்ற முகவரியில் வசிப்பதாகவும்  தெரிவித்து தனது கம்பெனியை அங்கு பதிவு செய்திருக்கிறார்.  பெகாப்ஸ் லிமிடெட் [Backops Limited ]என்ற நிறுவனத்தில் இவருக்கு 66% பங்குகள் இருந்தன.  இவருடைய இரண்டாவது முகவரி  2, Frognal Way, London என்பதாகும். ஆக இவருக்கு இலண்டன் மற்றும் ஹெம்ப்ஷயர் என்ற நகரங்களில் இரண்டு வீடுகள் இருந்துள்ளன. இவை தவிர ஒரு கம்பெனியும் இருந்துள்ளது.

சுவாமி பல நேரங்களில் பிரியங்காவும் அவரது கணவரும் இன்னும் இத்தாலியக் குடியுரிமையை வைத்திருப்பதாகக் தெரிவித்துள்ளார். இத்தாலியத் தாய் வயிற்றில் பிறந்ததற்காக 197௦ இல் இவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை ஆகும். இத்தாலியில் இவ்வாறு குடியுரிமை வழங்குவது சட்டப்படி குற்றமில்லை என்றாலும் இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை வைத்திருப்பது கிரிமினல் குற்றம் ஆகும்.

எல் கே அத்வானி தலைமையிலான பாராளுமன்ற அறக்குழு 2௦15 நவம்பர் முதல் இவ்விஷயத்தில் மௌனம் காக்கிறது. இது  ஏன் என்று தெரியவில்லை. இக்குழு இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி விசாரிக்கும்படி சொல்ல வேண்டும்.அப்படி செய்யவில்லை. ராகுல் காந்தியிடம் இது குறித்து விசாரணை நடத்தி அவரது இந்தியக் குடியுரிமையைப் பறித்து அவரது மக்களவை  உறுப்பினர் பதவியைச் செல்லாதபடி ஆக்கவேண்டும். அவரது எம் பி பதவியை ரத்து செய்ய வேண்டும்.  ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை; ராகுல் காந்தி விவகாரம் உள்துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை  கிணற்றில் போட்ட கல்லைப் போலவே இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here