பெட்ரோல் விலை குறைய மூன்று யோசனைகள்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளரும் ஏற்றுமதியாளரும் பெட்ரோல் விலையை குறைக்க செய்ய வேண்டியவை

0
1455
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளரும் ஏற்றுமதியாளரும் பெட்ரோல் விலையை குறைக்க செய்ய வேண்டியவை
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளரும் ஏற்றுமதியாளரும் பெட்ரோல் விலையை குறைக்க செய்ய வேண்டியவை

டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான மதிப்பு வேறுபாட்டை முடிந்த வரை சரிசெய்யவும் பெட்ரோலின் விலையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகின்றது. நான் ஏற்கெனவே பலமுறை பெட்ரோலிய விலை ஏற்றம் எவ்வாறு அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற முக்கியப் பொருட்களின் விலையை அதிகரிக்க காரணமாகிறது. என எழுதி இருக்கிறேன். பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அளவு உயர்ந்தால் அரிசி, கோதுமை, வெங்காயம் போன்றவற்றின் விலை நான்கு ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிடும். அரிசி, கோதுமை மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வோர் மற்றும் பெட்ரோல் சுத்திகரிப்போர் பெட்ரோல் விலையை குறைக்க இங்கு மூன்று ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதை கேட்டு நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் அது நீங்கள் பாரத பூமிக்கு செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாகும்.

மூன்று ஆலோசனைகள்

  1. நாள் நிர்ணய விலையில் [ஸ்பாட் விலை] பெட்ரோல் வாங்குவதை நிறுத்துங்கள் – அதுவும் பிரிமியத்துடன் வாங்காதீர்கள். [நாள் நிர்ணய விலை அல்லது ஸ்பாட் விலை என்பது பின்னர் எப்போதோ வாங்கப்போகும் ஒரு பொருளுக்கு அதாவது பெட்ரோலுக்கு இப்போதே விலையை நிர்ணயித்துக் கொள்வதாகும். பிரிமியம் என்பது அவ்வாறு அன்றைக்கு நிர்ணயித்த விலையுடன் குறிப்பிட்ட சதவீதத்தை அதிகமாக்கி வழங்குவதாகும். இந்தக் கூடுதல் சதவீதம் பிரிமியம் எனப்படும்] இவ்வாறு வாங்கும்போது உங்களின் இறக்குமதி விலை அதிகமாகி விடுகிறது.. இதனை நீங்கள் பல போலி நிறுவனங்களின் பேரில் வாங்குகிறீர்கள். எப்போதும் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் வாங்கும் விலையை வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். கச்சா எண்ணெய் எடுக்கும் நைஜீரியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் இருந்து பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வாங்கும் விலைக்கே நாமும் வாங்க வேண்டும். 2018ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கான ஸ்பாட் விலைகள் பற்றி கீழ்க்காணும் அட்டவணை தெரிவிக்கிறது.

  2. ஈரான் நாட்டிடம் இருந்து பெட்ரோலை வாங்குங்கள். அந்நாடு நாள் நிர்ணய விலையில் [ஸ்பாட் விலை] 18 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது. மேலும் விலையில் ஒரு பகுதியை ரூபாயாக ஏற்றுக்கொள்ளவும் ஈரான் தயாராக இருக்கின்றது. அந்நாட்டின் அமெரிக்க பிரதிநிதிகளோடு பேசி இந்தியா அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்யவேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து பேசி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் முழுமைக்கும் ரூபாயைக் கொடுக்க ஒப்புதல் பெற வேண்டும்.
  3. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு விலையை முதலிலேயே குறைத்து நிர்ணயிக்கக் கூடாது. புலனாய்வு அமைப்புகள் விரிவான தகவல்களைத் திரட்டி ஆராய்ந்து இதனால் வரும் சட்டப் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக நமக்கு தெரிவித்துள்ளன. எனவே இந்த முறையை பின்பற்றாமல் இதனை நாட்டின் நன்மை கருதி விட்டுவிடுங்கள். என் வார்த்தையை நம்புங்கள். நான் சொல்வதை கேளுங்கள் – பெறுவதை விட கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. இதனையே திருவள்ளுவர் ஈத்துவக்கும் இன்பம் என்றார். நான் சொல்வதைக் கேட்பீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here