சிறுபான்மையினரின் கருணையினால் மட்டுமே தமிழகத்தில் இந்துக்கள் வாழ முடியும் என்ற நிலை இருப்பதை கடந்த மூன்று நாட்களாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நமக்கு உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் இந்துக்களுக்கும் இந்துக் கடவுளர்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் இருப்பதனால் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக் கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுகின்றன. இந்து சமய பண்டிகைகள் அதன் பழமை மாறாமல் நடைபெறுவதற்கு தமிழக அரசு உதவுவதில்லை.
தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 6000 சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு .விற்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி டாலர்கள் ஆகும். இந்த சிலை கடத்தலுக்கு கோயில் அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்கள் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் போன்ற சுற்றுலாத் தலங்களில் பெரிய பண்ணை வீடுகளைக் கட்டி சொகுசு கார்களில் பவனி வந்து கோடீஸ்வரர்களாக வாழ்கின்றனர். இது குறித்து நாம் பின்னர் விவரமாகக் காண்போம்.
தமிழகத்தில் இஸ்லாமிய கிறிஸ்துவ அடிப்படைவாதிகளால் தீர்மானிக்கப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் அங்கீகரிக்கும் வழிகளில்தான் இங்கு இந்துக்கள் வாழமுடியும் என்பது இன்றளவும் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் நாத்திகவாதியான ஈ வெ ராமசாமி நாயக்கரின் திராவிடக் கழகத்தின் வழி வந்தனவாகும். இவை திராவிட நாட்டில் வாழும் இந்துக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதுகிறது.
கடந்த மூன்று நாட்களாக விநாயகர் சதுர்த்தி தொடர்பாக நடக்கும் விழாக்களிலும் ஊர்வலங்களிலும் சிறுபான்மையினரின் கருணை மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இந்து மக்கள் தொகையை விட அதிக அளவில் இருப்பதனால் அவர்கள் பெரும்பான்மையினராக இருந்து அதிகாரம் செலுத்துகின்றனர்.
ஆடி மாதம் முதல் தை மாதம் வரை இந்துக்களின் பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசையாக வந்து கொண்டே இருக்கும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றும் விழாவிலிருந்து பொங்கல் விழா வரை தமிழகம் முழுக்க இந்துமத விழாக்கள் நடைபெறும்.ஆடிக்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். அப்போது பிள்ளையாரின் உருவங்கள் பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடப்படும். பிள்ளையார் விக்கினங்களை தீர்த்து வைத்து கல்வியும் செல்வமும் தரும் கடவுளாக கொண்டாடப்படுகிறார்.‘’பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்’’ என்ற பாடலைப் பாடியபடி பிள்ளையார் ஊர்வலம் நடக்கும்.ஊர்களில் பிள்ளையார் அரசமரத்தின் கீழ் இருந்து தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிள்ளையார் ஊர்வலம் முடிந்ததும் பிள்ளையாரை அந்த ஊர் பகுதியில் இருக்கும் ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ கரைத்து விடுவது உண்டு.
1892இல் பிள்ளையார் ஊர்வலத்திற்கு பிரிட்டிஷார் தடைவிதித்தனர். ஏனென்றால் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து நடைபெறும் இந்த பிள்ளையார் ஊர்வலம் இந்துக்களை ஒன்றிணைக்கின்றது. இந்த நிகழ்வை பாலகங்காதர திலகர் அப்போது கணபதி பப்பா மோரியா என்ற ஸ்லோகத்துடன் இந்து விழாவாக ஆரம்பித்து வைத்தார். இந்துக்கள் அனைவரையும் தேசிய உணர்வுடன் ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாக இது ஆண்டுதோறும் நடந்துவருகிறது. அப்போது இருந்தேவிநாயகர் சதுர்த்தி விழா சீரும் சிறப்புமாக பிரம்மாண்ட முறையில். இந்தியா முழுக்க நடந்து வருகின்றது.
பல ஆண்டுகளாக திராவிடர்கள் என்ற பெயரில் அதிகாரம் செலுத்தும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உருவாக்கிய சட்டங்களும் விதிகளும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் வீரியத்தை குறைத்து விட்டன. இந்த ஊர்வலம் எந்த வழியில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதைக் கூட உள்ளூர் ஜமாத்துகளும் தேவாலயங்களும் தீர்மானிக்கின்ற அளவுக்கு அவற்றின் அதிகாரம் உயர்ந்துவிட்டது. இதனால் காவல்துறையினர் கணபதி பாப்பா மோரியா எனச்சொல்லப்படும் சுலோகத்தை ஏன் பாரத மாதா கி ஜே என்ற கோஷத்தை கூட சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவித்து அவ்வாறு சொல்வோரைக் கைது வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர்.
இந்த மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகத்தில் திருநெல்வேலிக்கு70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செங்கோட்டைஎன்ற நகரத்தில் அமைதி குலைந்து மதக்கலவரம் உருவாவதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டது. தென்காசி கேரளாவுக்கு அருகில் இருப்பதால் இங்கு முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம். 2018 – 19 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டை நகரத்தில் வாழ்ந்த இந்துக்கள் பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் தாங்கள் முஸ்லிம் சகோதரர்களை புறக்கணிப்பதாக ஓர் அறிவிப்பு செய்தனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று குண்டாறு நதியில் பிள்ளையார் சிலைகளை கரைக்கும் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.இச்சம்வம் பற்றி கூறும்போது இந்த ஊரில் பிறந்து வளர்ந்த செங்கோட்டை ஸ்ரீராம் ‘’இங்கு கடவுள்களுக்கு கூட பாதுகாப்பு கிடையாதுசார்; பிள்ளையார் கூட போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வரவேண்டும்’’ என்றார்.
2011ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் சமயப்பூசல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நகராட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் பூசல்களை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. வெளியூர் ஆட்கள் ஏராளமாக செங்கோட்டையில் வந்து குடியேறியுள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று ஒரு விநாயகர் சிலையை முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் பூஜை செய்வதற்காக கொண்டு வந்து வைத்த போது சுமார் 12 குடும்பங்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. அந்த பகுதியில் மசூதி எதுவுமில்லை என்றாலும் அவர்களின் ஆதிக்கம் அங்கு அதிகமாக உள்ளது என்று உள்ளூர்வாசி கவுதமன் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து நிலைமை மோசமாகாமல் தடுத்து அப்பகுதியில் அமைதியை ஏரறபடுத்த மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவ கொண்டு அமல்படுத்தினார்.
சிலைகளை நீரில் கரைக்கும் வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஊர்வலத்தில் போலீசாரிடமும் முஸ்லிம் மக்கள் தகராறு செய்து கற்களை விட்டு எறிந்து கடைகளை மூடச்சொல்லி ஆங்காங்கே தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் ஆற்றில் விடப்பட்டன. இவ்வாறு ஆற்றில் சிலைகளை கரைத்துவிட்டு பக்தர்கள் வீடு திரும்பியபோது யாரோ ஒருவர் ஒரு சிறிய விநாயகர் கோவிலை சிதைத்து இருந்தார். மற்றொரு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் நிலைமை மேலும் மோசமாகியது என்கிறார் ஸ்ரீ ராம்.
இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும் கூட செங்கோட்டையில் இஸ்லாமியரின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது என்று பெயர் சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். பொருளாதாரரீதியாக முஸ்லிம்கள் உயர்ந்த நிலையில் இருப்பதால் அவர்களுக்கு அடங்கிச் செல்ல வேண்டிய சமூக சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்துக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழப் பழகக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், ஊர்வலத்தில் சத்தமில்லாமல் மேள தாளம் இல்லாமல் கொண்டு போக முடியுமா என்று கேட்டார். ஊர்வலத்தின் போது அதிக போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை மோசமாகப் போவதற்கான சூழ்நிலை இருப்பதை நமக்கு உணர்த்துகிறது அல்லவா என்றார் இந்தமுறை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்துக்களின் வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டுள்ளன.பிஜேபி யின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா சனிக்கிழமை அன்று அந்த பகுதிக்கு சென்று அங்கு நடந்தவற்றை நேரில் கண்டு போலிசாரிடம் இது பற்றி பேசியபோது, ‘’இது போன்ற வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதி வழியாக விநாயகர் சிலைகளை கொண்டு செல்லக் கூடாது’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். அதன்படி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதிப்பதில்லை என்பது தெரியவந்தது.
உயர்நீதிமன்றம் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதே தவிர விநாயகர் சிலை வைப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. திமுகவினர் சென்னையில் இச்சம்பவம் குறித்து தீவிரவாதப் போக்கில் பேசியுள்லனர். அடுத்த ஆண்டு முதல் காவல்துறையிடம் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை நிறுவி பூஜை செய்வதற்கும் அதை ஆற்றில் கரைப்பதற்கு எடுத்துச் செல்வதற்கும் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற பெற வேண்டிய நிலைகூட உருவாகலாம்.