காங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது ஏன்?

காங்கிரசார் தன் குற்றச்சாட்டில் நிதின் சந்தேசாரா மற்றும் ராபர்ட் வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரி ஆகியோர் பெயர்களை வங்கிக் கடனை செலுத்தாமல் ஓடிப்போனவர்களின் பட்டியலில் குறிப்பிடவில்லையே

0
2428
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்

ஓடிப்போன ஊழல் பேர்வழிகளின் பட்டியல் – பட்டேல்  வதரா ஆட்களின் பெயர்கள் எங்கே?

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்

தனக்கு எதிராக ‘கோல்’ போட்ட காங்கிரஸ் ஊழல் என்றாலே அதில் தனி தேர்ச்சி பெற்று விளங்குவது காங்கிரஸ் கட்சி என்பது ஊரறிந்த செய்தி ஆகும். சில நாட்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் பதினைந்து அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர் முன்னிலையில் வங்கிகளில் கடன் வாங்கி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப்போனவர்களின் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுவரை நாட்டை விட்டு தப்பித்து ஓடி பிழைத்து கொண்டவர்கள் இருபத்தி மூன்று பேர் என்று கணக்கு காட்டியது. இவர்கள் அனைவரும் ஓடி தப்பித்துக்கொள்ள ‘ரூட்’ போட்டுக் கொடுத்தவர் மோடி என்றும் அவர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் இந்தப் பட்டியலில் பத்தொன்பது நபர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. மீதி நான்கு பேர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை? இது தான் இன்றைய கேள்வி.

அகமத் பட்டேல்

வங்கி மோசடியாளர்களின் பட்டியலில் விடுபட்ட நால்வரில் மூவர் அகமத் பட்டேலுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் மூவரும் ஆந்திரா வங்கியில் ஐயாயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததற்காக சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். அமலாக்கத் துறையினர் இவர்களின் சொத்துக்களை இவர்கள் வாங்கிய கடனுக்காக முடக்கியுள்ளனர். நிதின் சந்தேசாரா, அவர் சகோதரர் சேதன் சந்தேசாரா மற்றும் அவரது மனைவி தீப்தி சந்தேசாரா ஆகியோர் மீதான வழக்குகளை துபாயில் இருந்து இதியாவுக்கு மாற்ற சி பி ஐயும் அமலாக்கத் துறையும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த ஊழலில் சிக்கிய மற்றவர்கள் தாங்கள் அகமத் பட்டேலின் வீட்டுக்கு பலமுறை பணப்பைகளைக் கொண்டு போய்க் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். சந்தேசாரா – ஸ்டெர்லிங் பையோடெக் குழுமத்தின் உரிமையாளர்களான நிதின் மற்றும் சேதனுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அகமத் பட்டேலின் மகன் ஃபைசல் பட்டேல், மருமகன் இர்ஃபான் பட்டேல் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜானி என்ற பெயருடைய ஹாவாலா பணப் பரிவர்த்தகர் அகமத் பட்டேலின் வீட்டுக்கு பல முறை பணப்பைகளை கொண்டு போய் தான் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். குஜராத் பணிப்பிரிவு அதிகாரி அஸ்தானா சூரத்தில் காவல் துறை ஆணையராக இருந்த சி பி ஐயின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஸ்டெர்லிங் குழுமத்திடம் இருந்து 3.8. கோடி ரூபாய் பெற்றதாக பிடிபட்டிருக்கிறார். பரோடாவில் உள்ள இதே ஸ்டெர்லிங் நிறுவனம் ஒன்றில் அதிக சமபளம் பெறும் அதிகாரியாக இக்காவல் துறை ஆணையரின் மகன் அங்குஷ் அஸ்தானா பணியாற்றி வந்தார். ராகேஷ் அஸ்தானாவின் மகள் திருமணம் ஸ்டெர்லிங் குழுமத்துக்கு சொந்தமான மிகப் பெரிய பண்ணை வீட்டில் நடைபெற்றது. இது போனற பல கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் காங்கிரஸ் இவர்கள் பற்றி தன் பட்டியலில் எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்?

சந்தேசாரா குழுமத்தினர் அஸ்தானவுக்கு கொடுத்த பணமும் சலுகைகளும் அவர் அகமத் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. அதே சமயம் அவர் பி ஜே பி தலைவர்களிடமும் நல்ல புரிதலுடன் இருந்து வந்தார். அஸ்தானா போன்ற குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த பல அரசு உயர் அதிகாரிகள் காங்கிரசுக்கும் பி ஜே பிக்கும் ஒரே சமயத்தில் வேண்டியவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த அதிகாரிகள் இரட்டை குதிரை சவாரி செய்வதில் எப்போதும் கெட்டிக்காரர்கள். இரு கட்சியினரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். தற்போது ஊழலை எதிர்த்து போராடுவதாக நாடகம் ஆடும் காங்கிரஸ் கட்சி தந்திரமாக அகமத் பட்டேலின் பெயரை மட்டும் நீக்கி விட்டு மற்றவர்களின் பெயர்களை மட்டும் அம்பலப்படுத்தி வருகிறது. அவர்கள் இருபத்தி மூன்று பேர் என குறிப்பிடாமல் பத்தொன்பது பேர் என்று கூட குறிப்பிட்டிருக்கலாம். 23 பேர் என்று குறிப்பிட்டதால் இப்போது மீதி பேர் எங்கே என்ற கேள்வி எழுகிறது. கீழே காங்கிரசார் தந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.

விடுபட்ட மற்ற பெயர்கள் வேறு யார் யார் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கின்றன? ஆயுத வியாபரி சஞ்சய் பண்டாரி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதராவுக்கு மிகவும் நெருக்கமானவர். விசாரணையின் போது இருவருக்கும் உண்டான நெருக்கம் வெளிப்பட்டது. இலன்டனில் வதராவின் பினாமியாக பண்டாரி இருந்து வருகிறார். வதராவுக்குரிய வீடு இவர் பெயரில் தான் இலணடனில் வாங்கப்பட்டதும் இப்போது அம்பலமாகி விட்டது. இப்போது வெளிவந்துள்ள ரஃபாலே விஷயத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் பண்டாரி முகவராக இருந்து செயல்பட்டிருப்பதும் வெளியாகிவிட்டது. இராணுவத்துக்கான ஆயுதங்கள மற்றும் போர் விமானங்கள் வாங்கிய போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதரா சார்பில் இந்த பண்டாரி தான் பல முறை முகவராக இருந்து ஆயுத ஒப்பந்தங்களில் பேரம் பேசியிருக்கிறார்.

ராபர்ட் வதரா

சஞ்சய் பண்டாரி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரியகையின் நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தாவுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி நமது செய்தி தளம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகளின் பதிவு இருவரும் 478 முறை ஒருவரோடு ஒருவர் பேசியிருப்பதை உறுதி செய்கிறது. இந்த உண்மை வெளிவந்ததும் ஷிஷிர் குப்தா தனது டிவிட்டர் தொடர்பை சில வாரங்களில் நிறுத்திவிட்டார். சஞ்சய் பண்டாரி நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். இதனால் அறியப்படுவது யாதெனில், ‘இனிமேல் காங்கிரஸ் ஊழலை பற்றி பேசாமல் இருப்பதே நலம்.’

2018ஆம் ஆன்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியல் இதோ:

AICC Press Release Sept 15, 2018 on Fugtives & Bank Defaulters by PGurus on Scribd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here