ஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV ஊழல்

NDTV நிறுவன ஊழல் விவகாரம்: சி.பி.ஐ இதையும் வேடிக்கை பார்க்கிறதா?

0
2580
NDTV நிறுவன ஊழல் விவகாரம்: சி.பி.ஐ இதையும் வேடிக்கை பார்க்கிறதா?
NDTV நிறுவன ஊழல் விவகாரம்: சி.பி.ஐ இதையும் வேடிக்கை பார்க்கிறதா?

என்.டி.டி.வி (NDTV) நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணத்தை கொண்டு வர அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (FIPB) அனுமதி பெறுவதில் ஊழல் செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த ஊழல் குறித்து தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் மத்திய புலனாய்வு துறை (CBI) மற்றும் அமலாக்க துறை (ED) ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு செயல்படா நிறுவனத்தின் பேரில் அந்நிய முதலீட்டை பெற்று இந்தியாவில் உள்ள மற்ற செயல்படா நிறுவனங்களில் முதலீடு செய்வது என்ன விந்தை?

ஏர் ஏஷியா விவகாரத்தில் மத்திய புலனாய்வு துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தவுடன் நம்முடைய இந்த பி குருஸ் இணைய தளம் போன காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை பற்றி ஆராய்ச்சி செய்து பொது மக்களுக்கும் தெரியப்படுத்தியது. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் தவறு நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்பது போல காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய அதே சந்தேகம் இந்த வழக்கிலும் வந்துவிடக் கூடாது என்பதில் பி குருஸ் அக்கறை எடுத்துக்கொள்கிறது.

நாங்கள் என்ன கண்டுபிடித்தோம்?

சந்தேகத்துக்குரியவர்கள் என்.டி.டி.வியும் அதன் மேம்பாட்டாளர்களும் தான்.
2007 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 5 ஆம் நாள் என்..டி.டிவி. தனது துணை நிறுவனங்களான என்.டி.டி.டிவி. இமேஜின், என்.டி.டி.டிவி. கண்வேர்ஜென்ஸ், என்.டி.டி.டிவி லேப்ஸ் & என்.டி.டி.டிவி லைப் ஸ்டைல் ஆகியவற்றுக்கு அந்நிய முதலீட்டை கொண்டுவர அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றது. என்.டி.டி.டிவி செய்தி துறை சார்ந்தது ஆகும். செய்தி துறை அல்லாத வேறு நிறுவனம் நடத்த எப்படி செய்தி நிறுவனமான என்.டி.டி.டிவி அந்நிய முதலீட்டைத் தருவிக்க முடியும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அனுமதி இலண்டனில் உள்ள என்.டி.டி.டிவி நெட் ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு பெறப்பட்டது. இது என்.டி.டி.டிவியின் ‘ஷெல்’ நிறுவனம் ஆகும் அதாவது பெயரளவுக்கு வைத்திருக்கும் ஒரு செயல்படா நிறுவனம்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு செயல்படா நிறுவனத்தின் பேரில் அந்நிய முதலீட்டை பெற்று இந்தியாவில் உள்ள மற்ற செயல்படா நிறுவனங்களில் முதலீடு செய்வது என்ன விந்தை?

இந்த செய்தியின் இறுதியில் இந்த அனுமதி கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது காண்க. இந்த அனுமதிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதை ஆராய்வோம்.

அனுமதிக்கான  விதிமுறைகலின் நகல்
Fig 1. அனுமதிக்கான விதிமுறைகலின் நகல்

நான்காம் மற்றும் ஐந்தாம் விதிகள் தெளிவாக உள்ளன; இலண்டனில் உள்ள என்.டி.டி.டிவி நெட் ஒர்க்ஸ் (NDTV Networks).,நிறுவனத்துக்கு முதற்கட்ட பொது நிதி [IPO] அவசியமாகும். அடுத்து அந்நிய முதலீட்டுக்கான பங்குகளின் மதிப்பு இதன் துணை நிறுவனங்களான என்.டி.டி.டிவி. இமேஜின் (NDTV Imaging), என்.டி.டி.டிவி. கண்வேர்ஜென்ஸ் (NDTV Convergence), என்.டி.டி.டிவி லேப்ஸ் (NDTV Labs) & என்.டி.டி.டிவி லைப் ஸ்டைல் (NDTV Lifestyle) ஆகியவற்றுக்கு வரையறுக்கப்பட வேண்டும். இந்த பங்குகளின் மதிப்பு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி எனப்படும் பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தின் வழிகாட்டி விதிகளின் படி நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. இதை ITAT (Income Tax Appellate Tribunal) ஆணை தெளிவுபடுத்துகிறது.

ITAT (Income Tax Appellate Tribunal) Orderஇன் நகலாகும்
Fig 2. ITAT (Income Tax Appellate Tribunal) Orderஇன் நகலாகும்

இந்த ஆணை தெளிவாக நமக்கு சில விஷயங்களை தெரிவிக்கிறது. [டில்லி உயர் நீதிமன்றத்தின் ரிட் மனுவும் இதற்கு ஆதாரமாக விளங்குகிறது] இலண்டனில் உள்ள என்.டி.டி.டிவி. நிறுவனம் முதற்கட்ட பொது நிதியை வழங்கவில்லை. அடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய நிதி அமைச்சகம் அப்போது என்ன செய்தது? செய்தி ஒளிபரப்புத் துறை ஏன் இதை கவனிக்கவில்ல்லை?

இந்த என்.டி.டி.டிவி நிறுவனம் தவறான முறையில் பணத்தை வெளி நாட்டில் இருந்து இங்கே கொண்டுவந்துவிட்டு எந்த வரியும் செலுத்தாமல் தப்பித்துவிட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் இந்நிறுவனத்தின் மீது தாக்கல் செய்த ரிட் மனுவின் [984/2015 ]விவரத்தை பாருங்கள் [ஆகஸ்ட் 1, 2016]. 2018 ஆம் ஆண்டு மே மாதம் வருமான வரித்துறை இந்நிறுவனத்த்தின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ததை கீழே காணுங்கள்.

என்.டி.டி.டிவி.யின் தலைமை நிர்வாகி கே. வி. எல். நாராயண ராவ் அளித்த ஸ்டேட்மென்ட்/அறிக்கை
Fig 3. என்.டி.டி.டிவி.யின் தலைமை நிர்வாகி கே. வி. எல். நாராயண ராவ் அளித்த ஸ்டேட்மென்ட்/அறிக்கை

சி.பி.ஐ, நிதி அமைச்சகம், செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகம் ஆகியன செயல்படவே இல்லை என்று தோன்றுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவான உடனேயே செய்தி ஒளிபரப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணையை தொடங்கவில்லை. இதுவரை ஏன் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று விசாரித்திருக்க வேண்டாமா? 2011-2013 களில் இருந்தே விஷயம் தெரிந்திருந்தும். ஏன் இவர்கள் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தனர் இது மட்டுமல்ல. அவர்கள் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஆறாம் விதியை உறுதி செய்ய வேண்டும் [அனுமதி கடித நகலில் பாருங்கள்] ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் உனக்கு இது எனக்கு அது என்பது போல ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து நூறு சதவீதமும் வரியில்லாமலே இந்த தொகையை உள்ளே கொண்டுவந்துள்ளனர். மேலும் இதற்கு என்.டி.டி.டிவியே நேரடியாக விண்ணப்பிக்காமல் ஒரு தரகரை நியமித்தது ஏன்? வெளிநாட்டில் இருந்து செய்தி துறைக்கு பணம் வரக்கூடாது என்ற விதி இருந்தும் இந்திய செய்தி நிறுவனமான என்.டி.டி.டிவிக்கு பணம் அனுமதித்தது ஏன்?

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி பணம் வந்துள்ளது. அதை பார்த்துக்கொண்டு நிதி அமைச்சகமும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகமும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சும்மா இருந்துவிட்டன. அனுமதி கடிதத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் வாசித்து பாருங்கள்.

அந்நிய உதலிட்டு மேம்பாட்டு வாரியத்தின் வரையறைகள்
Fig 4. அந்நிய உதலிட்டு மேம்பாட்டு வாரியத்தின் வரையறைகள்

மத்திய புலனாய்வு பிரிவு (CBI) பணப் பரிவர்த்தனை நடந்த காலகட்டத்தின் மின்னஞ்சல்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. . இவற்றில் பணம் அங்கிருந்து ஒரு தரகர் கைக்கு மாறி அவரிடம் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெளிவாகிறது. மொத்த பரிவர்த்தனையும் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் வருமான வரித்துறையினர் முன்பு இயக்குனர் வந்து தனது தவறை ஒத்துக்கொள்ளவேண்டும். 2013 ஆம் ஆண்டு அக்டோபர் ,நவம்பர் மாதங்களிலிருந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. அமலாக்கத் துறை செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு தகவல் அனுப்பிய பிறகும் அந்த அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், யாரோ ஒரு ‘பெரிய மனிதரின் செல்வாக்கு’ நடவடிக்கை எதுவும் எடுக்க விடாமல் தடுக்கிறது. அது உண்மையாக இருந்தால் உடனே பிரதம மந்திரியின் அலுவலகமும் முக்கிய அதிகாரிகளும் அந்த பெரிய மனிதரின் கையை [செல்வாக்கை] கட்டிப்போட்டுவிட்டு என்.டி.டி.டிவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கீழே அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் நகல் தரப்பட்டுள்ளது:

FIPBApprovalDoc-007 by PGurus on Scribd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here