
ஏ ஜே எல் எனப்படும் Associated Journals Limited(AJL) நிறுவனத்தின் மூலமாக அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் சோனியா காந்தியும் ராகுலும் சேர்ந்து இக்கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடக் கூடாது என்று விண்ணப்பித்திருந்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தான் முன்பு பிறப்பித்த காலி செய்யும் உத்தரவையே அது மீண்டும் உறுதி செய்தது. (L & DO), எனப்படும் பெரு நகர் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் இந்த பிரச்சனையில் கையில் எடுத்து வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் வழங்கப்பட்ட டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு சோனியா மற்றும் ராகுலுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு என்ற செய்தித் தாளை நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது அதை நிறுத்திவிட்டது ஆனால் அந்த பத்திரிக்கை நடத்துவதற்கு சலுகை வாடகையில் கொடுத்த கட்டிடத்தை காலி செய்யாமல் உள் வாடகைக்கு விட்டு இலாபம் சம்பாதிக்கிறது. கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளாக இந்த ஹெரால்டு ஹவுஸ் என்ற கட்டிடத்தை காங்கிரசின் தலைவர்கள் கட்சி பத்திரிகையின் பேரால அனுபவித்து வந்தனர். இப்போது அந்த பத்திரிக்கையை நிறுத்திவிட்டு யங் இண்டியன் என்ற பெயரில் பேருக்கு இணைய தளத்தில் ஒரு செய்தித்தாளை நடத்துவதாக சொல்லிக்கொண்டு அந்த கட்டிடத்தை விதிமுறைகளுக்கு மீறி உள் வாடகைக்கு விட்டுள்ளது. இந்த யங் இண்டியன் பத்திரிகை கதை எல்லாம் செல்லாது. காங்கிரஸ் தலைவர்களால் ஒப்பந்தம் முற்றிலும் மீறப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெருநகர் மேம்பாட்டு அமைச்சகத்துடனான ஒத்தி ஒப்பந்தம் முடிந்துவிட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி காலி செய்திருக்க வேண்டும்.
“ஏ ஜே எல் நிறுவனம் தனது முதன்மை நோக்கத்தில் இருந்து தவறிவிட்டது. . பத்திரிக்கை நடத்த கொடுத்த கட்டிடத்தின் பெரும் பகுதி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தரை தளமும் அதற்கு அடியில் உள்ள அடித்தளமும் முன்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை பணிக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது மேல் மாடியில் மட்டும் பேருக்கு யங் இண்டியன் நடக்கிறதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று நீதிபதி சுனில் கவுர் தனது 17 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
‘’யங் இண்டியன் என்ற நிறுவனம் ஒரு அறக்கட்டளை என்றாலும் கூட அது ஏ ஜே எல் நிறுவனத்தின் 99 சதவீதப் பங்குகளை வாங்கியிருப்பதால் அதனுடைய பணி நடைமுறை [modus operandi].கேள்விக்குரியதாகிறது. மேலும் இவ்வாறு பங்குகளை வாங்கிய முறையும் சரியாக நடைபெறவில்லை. அதிலும் முறைகேடுகள் உள்ளன. என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்து சோனியாவும் ராகுலும் இந்த கட்டிடத்தில் இருந்து மாதந்தோறும் எண்பது இலட்சம் வாடகை பெறுகின்றனர். தரை தளத்தையும் முதல் மாடியையும் பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
“இடத்தை காலி செய்யச் சொல்வது பண்டித நேருவின் பாரம்பரியத்தை குற்றம் சொல்வதாகும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. தவறான வகையில் அந்த கட்டிடத்தை பயன்படுத்தியது குற்றம் என்பதால் காலி செய்வது அவசியமாகும். இதில் நேருஜியின் புகழுக்கு எந்த களங்கமும் ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. குற்றம் செய்தவர்கள் தேவையில்லாமல் நேருஜியின் பெயரில் இவ்வழக்கில் இழுத்துவிட்டு தப்பிக்க பார்க்கின்றனர். அவர்கள் நேருஜியை பற்றி பேசுவது வீண் வாதம் ஆகும்”, என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் அக்டோபர் முப்பதாம் தேதி உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த கட்டிடத்தை காலி செய்ய உத்தரவிடும்படி மனு செய்தது. இந்த மனுவுக்கு அடிப்படை காரணமாக இருந்தவர் பி ஜே பி யின் மூத்த தலைவரும் மனுதாரருமான சுப்பிரமணிய சுவாமி ஆவார். காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜர் ஆனார். அரசு சார்பில் துஷார் மேத்தா இவ்வழக்கில் ஆஜரானார். வழக்கு விசாரணை நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் இன்னும் இரண்டு வாரத்துக்குள் கட்டிடத்தை காலி செய்யவேண்டும் என்றும் அவ்வாறு செய்ய தவறினால் உரிமையல்லா குடியிருப்புகளை அகற்றுதல் என்ற சட்டத்தின் கீழ் அரசே அக்கட்டிடத்தைக் காலி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெருநகர் மேம்பாட்டு அமைச்சகத்துடனான ஒத்தி ஒப்பந்தம் முடிந்துவிட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி காலி செய்திருக்க வேண்டும். நவம்பர் பதினைந்துக்குள் காலி செய்து கட்டிடத்தை தம்மிடம் ஒப்படைக்கும்படி பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நட4வடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தது.
ஏ ஜே எல் தனது மனுவில் நேஷனல் ஹெரால்டு இணைய தளத்தில் ஆங்கிலத்தில் வருவதாகக் தெரிவித்திருந்தது. இந்தியில் நவ ஜீவன் மற்றும் உருது மொழியில் குவாமி ஆவாஸ் ஆகிய பத்திரிகைகளும் இணைய இதழ்களாக வருகின்றன என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது. போன ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி நேஷனல் ஹெரால்டு சண்டே என்று ஒரு ஆங்கில இதழை ஞாயிறு பதிப்பாக மட்டும் தொடங்கியது. இத்துடன் ஹிந்தியில் ஞாயிறன்று மட்டும் வெளிவரும் நவ ஜீவன் பத்திரிகையும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இவை இரண்டும் இங்கு அச்சு பத்திரிகைகள் வருகின்றன என்பதை உறுதி செய்வதற்கான கண் துடைப்பு வேலை ஆகும்.
சென்ற முறை ஆய்வுக்கு சென்றிருந்த போது கூட அச்சு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்த தரை தளத்துக்கு கீழே உள்ள பகுதி காலியாக கிடந்தது. ஏ ஜே எல் நிறுவனத்தின் ஏறத்தாழ அனைத்து பங்குகளும் யங் இந்தியன் லிமிட்டெடுக்கு விற்கப்பட்டு விட்டன. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் முகவரியில் யங் இண்டியன் நிறுவனம் இயங்குவதாக அரசின் அனுமதி பெறாமலேயே மாற்றிவிட்டனர். யங் இண்டியனில் 76% பங்குகள் சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் உள்ளன. எஞ்சியவை மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டசிடம் உள்ளன. பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் இந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நிறுத்திவிட்டு பேருக்கு யங் இண்டியன் பத்திரிகையை நடத்துவதாக சொல்லிக்கொண்டு முழு கட்டிடத்தையும் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றது நேரு குடும்பம் என்பதை தனது மனுவில் தெளிவாகத் தெரிவித்துள்ளது.