கேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு மாத காலத்துக்கு இராமாயணம் தொடர்பான கொண்டாட்டநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது

0
2502
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு மாத காலத்துக்கு இராமாயணம் தொடர்பான கொண்டாட்டநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு மாத காலத்துக்கு இராமாயணம் தொடர்பான கொண்டாட்டநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக சீதாராம் யெச்சூரி பொறுப்பேற்றதும் மேலோட்டமாக பார்க்கும்போது நிறைய விஷயங்கள் மாறுவதாக தெரிந்தது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில் வரும் பதினேழாம் தேதி முதல் ஒரு மாதம் வரை இராமாயணம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜுலை 25 அன்று ஒரு மாபெரும் பொதுக் கூட்டமும் நடத்தப்படும். இராமாயணம் குறித்து சின்னஞ்சிறிய கிளைகளிலும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் பொறுப்பு Student Federation of India (SFI) என்ற அந்த கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் சிவதாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடைசியில் ஜெய் ஸ்ரீ ராம் என அவர்கள் முழங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாநிலம் முழுக்க இராமாயணத்தை பாடமாக நடத்த ஆசிரியர்களும் சமஸ்கிருத விற்பன்னர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களைக் கொண்டு ஆங்காங்கே பாட வகுப்புகள் நடத்தவும் விவாதங்கள் நடத்தவும்  கட்சி திட்டமிட்டிருப்பதாகவும்மலையாளப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று பேரணிகள் ஊர்வலங்கள் நடத்தி வருகின்றன.. கடந்த ஐந்து ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி அன்று ஊர்வலங்கள் நடத்தி வளர்ந்து வந்த ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முனைந்த மார்க்சிஸ்ட் கட்சி பிறகு தனது இறை மறுப்பு கொள்கையை விடுத்து தானும்கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தை நடத்த ஆரம்பித்துவிட்டது. அடுத்த கட்டமாக இராமாயணத்தை தன தொண்டர்களுக்குக் கற்றுக் கொடுத்து அதில் அவர்களை விஷயம் தெரிந்தவர்களாக்கவும் முன் வந்துள்ளது. பல்வேறு இராமாயண பதிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் கட்சிக்குள் விவாதம் நடக்கிறது.

1980களில் கம்யுனிஸ்ட் உறுப்பினர்கள் கோயிலுக்குப் போகக் கூடாது என்று கட்சிக்குள் எழுதப்படாத சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் கட்சி தலைவர்களின் மனைவிமார் கோயிலுக்குச் சென்றனர். கட்சியின் பொது செயலர் இ எம் எஸ் நம்பூதிரிபாட் அவர்களின் மனைவி ஆர்யா அந்தர்ஜனம் கோயிலுக்குப் போய் வருவார். மெல்ல மெல்ல தலைவர்களும் கோயிலுக்குப் போய்  இறை வழிபாடு நடத்தவும் காணிக்கைகள் செலுத்தவும் தொடங்கினர். பின்னர் காங்கிரஸ் கட்சியினரும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரும் கோயில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பது கண்டு தாங்களும் அந்த பதவியை அடைய விரும்பி கட்சியின் விதிகளை மாற்றி அமைத்தனர். நிர்வாகக் குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் இடம் பெற வேண்டும் என்றனர். இதற்கு கட்சிக்குள் பல எதிர்ப்புகள் முகிழ்த்தாலும் கோயில் மக்கள் கூடும் இடங்கள் என்பதால் கட்சி சம்மதித்தது. இவர்களின் மக்கள் சேவையில் மகேசன் சேவையும் இணைந்து விட்டது.

கேரளாவில் ஆடி மாதம் [ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை] இராமாயண மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்து கோயில்களிலும் இந்து முக்கியஸ்தர்களின் வீடுகளிலும் தினமும் இராமாயணம்  வாசிக்கப்பட்டு அதன் கருத்து மலையாளத்தில் எடுத்துச் சொல்லபப்டும்.  இது ஒரு மாபெரும் மக்கள் நிகழ்ச்சியாக மாறி வருவதை கவனித்த மார்க்சிஸ்ட் கட்சி தானும் அதில் அடி எடுத்து வைக்க முனைந்துள்ளது. இப்போது சில அமைப்புகள் மூலமாக தானும் தன தொண்டர்களுக்கு இராமாயணம் கற்றுத் தர முனவந்துள்ளது.

அண்மையில் சில வருடங்களாக கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலங்கள் நடத்த தொடங்கிய பிறகு கிருஷ்ணர் பற்றிய சில புதுமையான  வாசகங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறது.. கிருஷ்ணரை யாதவ குலத்தின் தலைவர் என படம் போட்டு தன சிவப்பு வண்ண கட்சி போஸ்டர்களை வடிவமைக்கின்றது.. இடையர்களின் புரட்சி வீரனாகவும் கண்ணனை அழைக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி இராமாயண மாதம் கொண்டாடுவதற்கு நல்லதொரு தலைப்பு சூட்டவும் ஆலோசித்து வருகிறது. கடைசியில் ஜெய் ஸ்ரீ ராம் என அவர்கள் முழங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here