ஹஸ்முக் ஆடியா பகிரங்கமாக தன் பணி ஓய்வு பற்றி பேசினாலும் அவர் அந்தரங்கமாக சில பல வேலைகளைச் செய்து பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து தன் பணி நீட்டிப்புக்கும் அனுமதி வாங்கி விட்டார். ஆனால் இந்த பணி நீட்டிப்பு ஆணைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதன் பிறகு தான் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹஸ்முக் ஆடியா நிதி அமைச்சகத்தில் இருந்த இணை அமைச்சர்களை அன்றும் இன்றும் என்றுமே மதித்தது கிடையாது. முக்கியமான கூட்டங்கள் பற்றி அவ்ர்களுக்கு தெரிவித்ததில்லை. [NDPS – Narcotic Drugs and Psychotropic Substances Act ) போதை மருந்து தொடர்பான சட்டங்கள் குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டங்களுக்கு ஆடியா வந்ததில்லை. இது இணைஅமைச்சர் தலைமை தாங்கி நடத்தும் கூட்டம் என்பதால் அதை அலட்சியப்படுத்தி விடுவார். இக்கூட்டங்கள் தேர்தலில் பி ஜே பி தோற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பற்றி நடந்த போது அவை வெறும் நிதி சார்ந்த கூட்டம் மட்டும் கிடையாது; அவை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதையும் ஆடியா நினைத்து பார்த்ததில்லை. இவை அனைத்தும் இணைச் செயலர் உதய் குமாவட் தான் கவனித்து வந்தார்.
ஆடியாவின் வெறுப்பும் சலிப்பும் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவரே சர்வ வல்லமையும் பெற்ற நிதி அமைச்சர் மாதிரி நடந்து கொள்வார் . அவர் மிகுந்த கடுமையும் பிடிவாதமும் காட்டுவார். அந்த பதவிக்குரிய மரியாதையை வழங்க மாட்டார். அலட்சியமாக செயல்படுவார். சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அமைச்சரவை கூட்டங்கள் நடந்த போது ஆடியா அவற்றில் கலந்து கொண்டதில்லை. அவர்கள் அவ்வரியை அமல்படுத்துவது குறித்து செய்த பரிந்துரைகள் அனைத்தையும் ஆடியா புறக்கணித்தார். பின்பு அந்த வரி மிகுந்த விமர்சனத்துக்கு உட்பட்டு இப்போது பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் பியுஷ் கோயல் கொண்டு வர விரும்பிய பதவி மாற்றங்கள் அனைத்தையும் ஆடியா மறுத்துவிட்டார். ஒன்றை கூட அவர் அனுமதிக்கவில்லை. மேலும் இணைச் செயலர் எவரும் அமைச்சரிடம் எந்த கோப்பையும் அனுப்பக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.
வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவர் “பிடிவாதத்தின் மறு பெயர் தான் நிதி செயலர் ஆடியா” என்கிறார். ஜி எஸ் டி வரியை கொஞ்சம் மாற்றும்படி அவர் கேட்டதற்கு ஆடியா “நீங்கள் உங்கள் பிசினஸ் ‘மாடலை’ மாற்றுங்களேன்” என்று முகத்தில் அடித்தது போல பதில் கூறினாராம்.
பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி நிதி அமைச்சகம் குறித்து பல்வேறு தகவல்களுக்காக முப்பத்தியொறு மனுக்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பி உள்ளார். நிதி அமைச்சரிடம் “இந்த ஆடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதனால் ஆடியா தன் துறையின் இணை செயலர்களிடம் தன்னை கேட்காமல் எந்த தகவலையும் யாருக்கு அனுப்பக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தி இருக்கிறாராம். இயன்றவரை எந்த மனுவுக்கும் பதில் தரக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறாராம். 2016ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் ஆடியா தங்கக் கட்டிகளை அன்பளிப்பாக பெற்று கொண்ட குற்றத்திற்காக அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றுசுவாமி நிதி அமைச்சர் ஜேட்லிக்குஅனுப்பிய மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய அரசாங்க வரலாற்றில் முதன் முறையாக ஒரு நிதி துறை செயலர் தான் தேர்தல் ஆணையராக பணி புரிய விரும்புவதாக பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதி கேட்டிருப்பது இதுவே முதன் முறை ஆகும். பணி நீட்டிப்பு பெற விரும்பிய ஆடியா தன் துறையில் அதை கேட்காமல் தேர்தல் ஆணையத்தில் கேட்டது வியப்பளிக்கிறது. இது தவிர அவர் ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையம் மற்றும் கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனெரல் போன்ற பதவிகளுக்கும் போக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையத்துக்கு இப்போதைக்கு முழு நேரத் தலைவர் என்று யாரும் கிடையாது, இந்திய தபால் பிரிவில் தெரிவான 1978 பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி அரவிந்த் செக்சேனா இப்போது அதற்கு தற்காலிகத் தலைவராக இருந்து கவனித்து வருகிறார். அவரும் ஹஸ்முக் ஆடியா போல அங்கு தானே தலைவராக வந்து விட வேண்டும் என்ற ஆசையுடன் தீபக் குப்தா இடும் உத்தரவுகளை எல்லாம் தலை மேற்கொண்டு செய்து வருகிறார். ஆடியா கேட்ட நான்கு பதவிகளும் அவருக்கு கிடைக்கவில்லை என்றால் கடைசியாக அவர் பிரதமர் அலுவலகத்துக்குள் போக முயற்சி செய்வார்.
ஆடியா தன் பணி நீட்டிப்புக்கு ஒரு ‘வெற்று காரணம்’வேறு சொல்லி வருகிறார். அதாவது பட்ஜெட் வருவதால் அவரது சேவை இந்தியாவுக்கு தேவை என்று தம்பட்டம் அடித்துகொள்கிறார். பாராளுமனறத்தேர்தல் நெருங்கி வருவதால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட மாட்டாது. இதற்கான முடிவு ஒரு வாக்கெடுப்பின் மூலமாக 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்படும். பிறகு ஏன் ஆடியா பணி நீட்டிப்புக்காக அலட்டிக்கொள்ள வேண்டும் ? எந்த தகவலை சுவாமியிடம் இருந்து ஆடியா மறைக்க நினைத்து தன் துறையின் இணைச் செயலர்களிடம் எந்த தகவலும் அளிக்க கூடாது என்கிறார். தன் அமைச்சர்களை அலட்சியப்படுத்தி வரும் ஒரு செயலரை தொடர்ந்து பணி நீட்டிப்பு தந்து பிரதமர் உபசரிப்பாரா? இன்னும் பத்து நாட்களில் இதற்கான விடை கிடைத்துவிடும். இது குறித்து இன்னும் பல விஷயங்களை வாசகர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்