குஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு

அரசின் நிர்வாக சேவைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த குஜராத் பிரிவினைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி

0
1540
அரசின் நிர்வாக சேவைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த குஜராத் பிரிவினைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி
அரசின் நிர்வாக சேவைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த குஜராத் பிரிவினைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி

இந்திய அரசின் நிர்வாகத்தை உலுப்பும்  வகையில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரிவினைச் செயற்பாடு  பற்றிய சிந்தனை  டில்லி மாநகரில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு இடையிலான  போட்டியும் பொறாமையும் நாட்டு நிர்வாகத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்க்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தேசத் தலைநகரின் முக்கிய பொறுப்புகளில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த  அரசு உயர்அதிகாரிகளையே நியமிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இவர்களில் சிலர் பிரதமர் மோடியிடம் மிகவும் நெருக்கமாக காட்டிக்கொண்டு சூப்பர் பிரதமராக செயல்பட்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

டில்லியில் ‘உனக்கு நான்; எனக்கு நீ’ என்று முதுகு சொறிந்து விடும் ஊடகவியலார், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மத்திய அரசு அமைச்சர்கள் இப்போது இந்த குஜராத் அதிகாரிகளின் பிரிவுகளில்  ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  யாரைப் பார்த்தாலும் குஜராத் அதிகாரிகள் ‘நீ என் பக்கமா? என் பகைவன் பக்கமா?’ என்று நேரடியாக கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த இரு பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில்  சேராவிட்டால் அந்த நபர் படும் வேதனையை இனி காண்போம்.

காட்சி 1 சி பி ஐ

சி பி ஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு இந்த பிரிவினையால் நேரடியாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் குஜராத் பணிப்பிரிவு உயர அரசு அதிகாரிகள் அதே பிரிவைச் சேர்ந்த மற்ற அரசு அதிகாரிகளைக் கண்டாலே  வெறுத்து ஒதுக்குகின்றனர். சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா என்ற ஐ பி எஸ் அதிகாரியை சி பி ஐ இயக்குனராக நியமித்தனர்.இவர் அந்த சி பி ஐயில் இருக்கும் மற்றவர்களுக்கு ஆகாதவராக இருக்கிறார். பல வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை தயாரிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. காங்கிரஸ் தலைவர்  அஹமது பட்டேலுக்கு நெருக்கமான ஹவாலா இடைத்தரகராக செயல்பட்ட மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்து வரும் மொயின் குறைஷியிடம் இருந்து அஸ்தானா இலஞ்சம் பெற்ற  வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் அதிகாரிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில அதிகாரிகள் அகமது பட்டேலுக்கு சார்பாக இருந்துகொண்டு சி பி ஐக்கு எதிராக வேலை செய்கின்றனர். அமித் ஷாவும் பிரதமரும் எவ்வளவோ முயற்சி செய்தும் நிர்வாகத்தில் ஊழலையும் இலஞ்சத்தையும் குறைக்க இயலவில்லை.

தற்பொது சி பி ஐயின் கூடுதல் இயக்குனராக இருந்து வரும் 1987ஆம் ஆண்டின் குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஏ கெ ஷர்மாவுக்கு எதிராக யாரோ ஒருவர் அனுப்பிய மொட்டை பெடிஷன் அல்லது போலி மனுக்களுக்கு மதிப்பளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிரணியைச் சேர்ந்த பிரதமரின் தனி செயலர் ராஜிவ் டொப்னொ துடிக்கிறார்.. சி பி ஐ விசாரித்து வரும்வழக்குகளின் புலனாய்வு அதிகாரியாகவும் ஏ கெ ஷர்மா இருந்து வருகிறார். இவர் அஸ்தானாவை விட பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்.  இதனை ராகுல் காந்தி கூட அவரது பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். சி பி ஐ தனது சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா மீது தொடுத்திருக்கும் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இந்த ஷர்மா தான் இருந்து வருகிறார்.

ராஜிவ் டொப்னொ மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கு நெருக்கமானவராக இருந்தார். இவரை ஏன் இன்னும் பிரதமர் அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

நிலக்கரி ஊழலில் ராகேஷ் அஸ்தானாவுக்கும் ஏ கெ ஷர்மாவுக்கும் இடையிலான கருத்து மோதல் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் செயலர் பாஸ்கர் குல்பேக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்று தெ வயர் என்னும் செய்திதளம் தெரிவித்துள்ளது. குல்பேயையும் டொக்னோவையும் யார் பிரதமர் அலுவலகத்தில் நியமித்தது?

2ஜி மற்றும் நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட ஒரு பெரிய தொழில் குழுமத்தை  வழக்குகளில் இருந்து காப்பாற்ற சூப்பர் பிரதமர் முயல்வதாகவும் இதற்கான கோப்புகள் சி பி ஐயின் கூடுதல் இயக்குனர் ஏ கெ ஷர்மா வசமிருப்பதாகவும்  தெ வயர் என்ற செய்திதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அஸ்தானா வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் குழி தோண்டி புதைக்க ஏ கெ ஷர்மா முயன்று வருகிறார். ராகேஷ் அஸ்தானாவுக்கு சி பி ஐ யின் இயக்குனராக பதவி உயர்வு வழங்க பெரியளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு நம் முன் எழும் சந்தேகம் என்னவென்றால் சி பி ஐயில் இருந்து ஏ கெ ஷர்மாவை வெளியேற்ற ராகேஷ் அஸ்தானா துடிப்பது ஏன்? ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்கும் ராஜீவ் டொப்னோ ஆதாரமில்லாத போலி மனுக்களின் அடிப்படையில் ஏ கே ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது ஏன்? ஏன் அந்த சூப்பர் பிரதமர் ஏ கெ ஷர்மாவை கழட்டிவிட்டு அஸ்தானாவை தக்க வைக்க திட்டமிடுகிறார். இவற்றிற்கு விடை கிடைத்தால் நிர்வாகச் சிக்கலுக்கு காரணமான களைகளைக் கண்டுபிடித்து களைந்து விடலாம்.

இன்னும் தெளிவாக சொன்னால், ராகேஷ் அஸ்தானா ஷர்மாவோடும் சி பி ஐ இயக்குனரோடும் ஒரே சமயத்தில் மோதுகிறார்.  அஸ்தானா சி பி ஐ இயக்குனர் மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதை எழுதி தந்தது சூப்பர் பிரதமர். பின்னர் அவர் இந்த மனுவை ஊழல் கண்காணிப்பு தலைமை  ஆணையருக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சகச் செயலாளரிடம் நெறிப்படுத்துகிறார். இவ்வாறாக அமைச்சக அலுவலகம், ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையம், மற்றும் சி பி ஐ ஆகியன இணைந்து செயல்படுகின்றன. பின்பு இவர்கள் கட்டப் பஞ்சாயத்து மூலமாக பேசி தீர்க்க முயல்கின்றனர். ஏ கெ ஷர்மா என்ற நேர்மையான அதிகாரி தான் சி பி ஐ முன்னாள் நிதி அமைச்சர்  ப சிதம்பரத்தின் மீது வழக்கு தொடுக்க காரணமானவர். இன்னும் பல வழக்குகளை தொடுக்க அவர் தயாராக இருக்கிறார். அவரை வெளியேற்ற இவர்கள் தயாராக இருக்கின்றனர். என்னே கலியின் கொடுமை!

காட்சி 2 – நிதி அமைச்சகம்

1985ஆம் ஆண்டு பணிப்பிரிவைச் சேர்ந்த ஜி சி முர்மு பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பெயரில் வங்கி மற்றும் நிதிசேவை பிரிவில் உள்ள ஹஸ்முக் அடியாவுக்கு கீழ் பணியாற்றி வந்தார். எல்லோரிடமும் நட்பாக இணக்கமாக பழகும் முர்மு ஆடியாவிடம் மட்டும் சற்று வித்தியாசமாக பழகி வந்தார்.  முர்மு 2018ஆம் ஆண்டு வருவாய் செயலர் பதவியை குறி வைத்த போது ஆடியா அதை வரி ஆணையர் பி டி வகேலாவுக்கு பெற்று தர முன் வந்தார். இந்த வகேலா 1986ஆம் ஆண்டு குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்தவர்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியைவிட்டு சென்ற பிறகும் நிதி அமைச்சகத்தை வகேலா மூலமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கனா காண்கிறார் ஆடியா, என நார்த் பிளாகில் [மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி]  ஒரு பேச்சு பரவியுள்ளது. இதற்கு முன்பு எப்போதுமே நிதி அமைச்சருக்கு கிஞ்சித்தும் மரியாதை கொடுக்காத ஆடியா இப்போது அவரோடு அதிக நெருக்கம் பாராட்டுகிறார். இந்த நெருக்கத்தை முர்மு கொஞ்சமும் விரும்பவில்லை. இந்த நெருக்கத்தின் மூலமாக ஆடியா முருமுவை வருவாய் செயலராக விடாமல் தடுக்க திட்டமிடுகிறார். தற்போது நிதி அமைச்சகத்தில் எந்த முக்கிய பணியும் முர்முவுக்கு வழங்கப்படவில்லை. செய்யும் வேலைகளுக்கும் அவர் ஆடியாவிடம் அறிக்கை அளிக்க வேண்டும் இது தான் தற்போதைய நிலை. CBDT மற்றும் CBEC துறைகளில் இருப்பவர்கள் முர்முவுடன் இணக்கமாக இருக்கின்றனர். இது வேறு ஆடியாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. முர்மு அந்நிய நாடுகளுக்கு போய் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதைடில்லியில்ஆடியா தடுக்கிறார். தன்னுடைய கருத்துக்களை பரிந்துரைகளை சொல்லி அவற்றையே அவருடையதாகத் தெரிவிக்கும்படி கூறுகிறார்.

நிதி அமைச்சகத்தில் முர்மு ஆடியாவால் ஓரம் கட்டப்படுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் யாரும் அதை ஆதரிக்கவில்லை. இதனால் அறியப்படுவது யாதெனில் நண்பர்களே! நிதி அமைச்சகத்தில் குப்பை கொட்ட வேண்டும் [அதாவது பணி செய்ய வேண்டும்] என்று நினைப்பவர்கள் ஆடியாவை உரசி பார்க்க கூடாது.

காட்சி 3 – பிரதமர் அலுவலகம்

வடக்கு பிளாக்கிலும் தெற்கு பிளாக்கிலும் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்தவர்களே இருந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் முறைத்துக் கொள்கின்றனர். இந்த முறைப்பும் வெறுப்பும் பிரதமர் அலுவலகத்தையும் விட்டு வைக்கவில்லை. 1979ஆம் ஆண்டை சேர்ந்த குஜராத் பணிப்பிரிவின் அதிகாரி கைலாசநாதன் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்ததும் சூப்பர் பிரதமராக தன்னை கருதிக் கொண்டிருப்பவருக்கு பயம் வந்துவிட்டது. எங்கெ கைலாசநாதன் தன் இடத்தை பிடித்துக்கொள்வாரோ என அஞ்சுகிறார். ஏனென்றால் இதே மாதிரி ஒரு முறை 1983ஆம் ஆண்டின் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த, தற்போது குஜராத்தின் தலைமைச் செயலராக இருக்கும்  ஐ ஏ எஸ் அதிகாரி ஜெ என் சிங் விஷயத்தில்   நடந்திருக்கிறது.  1978ஆம் ஆன்டின் குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி எச் கே நந்தாவை பிரதமர் புது டில்லிக்கு வரவழைத்த போது நடந்தது. தற்போது நந்தா ஹட்கோ எனப்படும் வீட்டு வசதி  மற்றும் நகர் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் என்ற முக்கியமான பொறுப்பை ஏற்றார். அதனால் சூப்பர் பிரதமரின் அதிகாரம் தப்பித்தது.  ‘’பிரதமர் ‘வா என்றால் சூப்பர் பிரதமர் போ’’ என்பார். இது தான் பிரதம அலுவலகத்தின் இன்றைய யதார்த்தம்.

மத்திய அரசு அலுவலகங்களில் 4% பதவிகளில் இன்று குஜராத் பணிப்பிரிவை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளில் எல்லாம் அவர்களே இருக்கின்றனர். இவ்வாறு டில்லியில் நடப்பது இது முதல் முறை அல்ல என்றாலும் அணி திரள்வதும் எதிர்ப்பு உணர்ச்சியுடன் இருப்பதும் இதுவே முதன் முறை ஆகும். இதனை கண்டிக்காமல் வளர விட்டால் இதுவே பூதாகரமாக உருவெடுத்து மத்திய அரசின் நிர்வாக நலனைக் கெடுத்து சிதைத்துவிடும்.

காட்சி 4 தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here