இடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க

பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இருந்து ஒரு கணமும் பின் வாங்காமல் இருக்கும்படியாக இடது சாரி அமைப்பினர் நன்கு ஊக்கப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்

0
2475
பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இருந்து ஒரு கணமும் பின் வாங்காமல் இருக்கும்படியாக இடது சாரி அமைப்பினர் நன்கு ஊக்கப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்
பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இருந்து ஒரு கணமும் பின் வாங்காமல் இருக்கும்படியாக இடது சாரி அமைப்பினர் நன்கு ஊக்கப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்

ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வரவும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருடைய கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாமல் இடது சாரிகள் எழுப்பிய கண்டனக் குரல் கருத்துச் சுதந்திரத்தின் ஒடுக்குமுறையாக  அமைந்துவிட்டது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளத்தால் சூழப்பட்டு பேரிடருக்கு உள்ளான கேரளா மாநிலத்தில்  நல்லவர்களாகத் தம்மை காண்பித்து கொள்ள இடது சாரிகள் ஒருங்கிணைந்து  திறமையாகச் செயல்படுகின்றனர், என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. பிரிவினை சக்திகளை வளரவிட்டு இந்த உலகத்தை தரை மட்டமாக்கும் தமது முயற்சியில் எள்ளளவும் தயக்கம் காட்டாமல் அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு அத்ன்படியே கருத்து சிரத்தையுடன் செயல்படுகின்றனர்.

ஆனால் அதே சமயம் வலது சாரிகளின் பதிலடி அல்லது எதிர்வினை  ஒருமுனைப்படுத்தப்பட்டதாக இல்லாமல் சிதறடிக்கப்பட்டு உள்ளது. வலது சாரி அமைப்புகள் தம்முள் முரண்பட்டு ஒற்றுமை இல்லாமல் காணப்படுகின்றன.  இது  வரமா சாபமா எனத் தெரியவில்லை. வலது சாரிகளிடம் இருக்கும் கருத்து ஆழம்,  அகன்ற அறிவின் வெளிப்பாடாக இருந்தாலும் அது நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. கலையியல், தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் எனப் பல துறை சார்ந்ததாக வலது சாரிகளின் அறிவு அமைவதால்  அவை ஒரு முகப்பட்டதாக இல்லை. சமுக வலைத் தளத்தில் அல்லது பொது வெளியில் வலது சாரிகளின் கருத்து ஒரே குரலாக ஓங்கி ஒலிப்பது  கிடையாது. வலது சாரியில் பல வல்லுனர்கள் இருந்தாலும் அவர்கள் தமது ஆங்கில அறிவால் பேனா முனையால் உலகத்தையே திசை திருப்பக் கூடிய திறமையாளர்களாக இருந்தாலும் அவர்களை ஓரணியின் கீழ் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தாத காரணத்தால் அவர்கள் பல்வேறு அமைப்புக்களாகச் சிதறிக்கிடக்கின்றனர்.  இதனால் வலது சாரியின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒருமித்து ஒலிப்பதில்லை. இடது சாரியினரின்  ஒருமித்த குரலில் வலது சாரியினரின்  குரல் அடங்கிப் போய்விடுகிறது.


இடது சாரியினர், உலகளவில் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அழிவுத் திறனும் நச்சுத் தன்மையும் இணைந்த  ஆங்கில அறிவுடன் பெரும்பாலும் கலையியல் துறை சார்ந்த இவர்கள் தம்மை ‘அறிவு ஜீவிகளாக’ காட்டிக்கொண்டு பயணிக்கின்றனர். இவர்கள் குறிப்பிட்ட பிரச்னை குறித்து ஆழ்ந்த அறிவு இல்லாமல்  மார்க்சியம், பின் நவீனத்துவம், புதிய காலனியாதிக்க கொள்கை,  போன்ற சில கொள்கை சார்ந்த விஷயங்களையே வார்த்தை ஜாலங்களோடு விரிவாகப் பேசி தம்மை அறிவு ஜீவிகளாகக் காண்பிக்கின்றனர். சில புள்ளி விவரங்களை மக்கள் நம்பும்படியாக எடுத்துரைத்து தமது கருத்துக்களை தீவிரமாகப்  பிரச்சாரம் செய்கின்றனர்.

தார்மீகவாதிகள் பிரிவைச் சேர்ந்த [வலது சாரி என்று அழைப்பதை விரும்பாத] ராஜீவ் மல்ஹோத்ரா இடது சாரிகளின் ஒருமித்த எதிர்ப்பால் தமது கருத்தை டிவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவும் வகையில் சேவா இண்டர்நேஷனல் என்ற அமைப்புக்கு நிதி உதவி அளியுங்கள் என்றார். .[இந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டு விட்டதால் அதனை இப்போது எடுத்துக்காட்ட இயலவில்லை]. அவர் தனது கருத்தை வேறு சொற்களால் இன்னும் சிறப்பாக எடுத்துக் கூறி இருக்கலாம்.  அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. மற்ற பிரிவினருக்கு உதவ வேண்டாம் என்று குறிப்பிடவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருவாரியான இந்துக்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நல்ல நோக்கத்துடன் அவர் சேவா இன்டெர் நேஷனல் அமைப்புக்கு நிதி உதவி அளியுங்கள் என்றார். இது இந்துக்களுக்கு மட்டும் உதவுங்கள் மற்றவர்களைப் பரிதவிக்க விடுங்கள் என்று அவர் தெரிவித்த்ததாக கருதப்பட்டு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்துக்களுக்கும்  உதவுங்கள் என்று வேறு எவரும் பகிரங்கமாக சொல்ல விரும்பாத விஷயத்தை இவர் டிவிட்டரில் பதிவிட்டார்.டிவிட்டரில் நடத்திய கருத்துக் கணிப்பு அவரது உண்மையான உள்ளக்  கருத்தை வெளிப்படுத்தியது.

இந்தியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினர் என்ற பேரில் கூடுதல் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சலுகை ஆகும்.  பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு தமது வாய்ப்புகளை விட்டு கொடுப்பதை வேறு எங்குமே பார்க்க இயலாது.  ஆனால் இந்த ஏற்றத் தாழ்வு  கல்வி துறை, சட்டத் துறை, கோவில் நிர்வாகம் என பல்வேறு துறைகளில் இந்தியாவில் காணப்படுகிறது.  நமது அரசியல்வாதிகள் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வேறெங்கும் இல்லாத இந்த கொடுமையை நமக்குச் செய்துள்ளனர். சிறுபான்மையினர் சலுகையை உடனடியாக நீக்க வேண்டும்; நீக்காவிட்டால்  இந்தியாவில் வாழும் பெரும்பான்மையினரான இந்துக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் எனப் பல வகையிலும் பாதிக்கப்பட்டு வாய்ப்புக்களை இழந்து காலப்போக்கில் அவர்கள் சிறுவாய்ப்பினராகி விடுவர்.

இந்த சிறுபான்மையினர் சலுகைகளை எவ்விதத்திலும்  நியாயப்படுத்த முடியாது. இவர்கள் உலக அளவில் பெரும் பான்மையினர் ஆவர். இவர்கள் தமது மதத்தை பின்பற்றாதவர்களை தமக்கு சமமாக நடத்துவது கிடையாது. அவர்களைத் தமக்கு கீழ்ப்பட்டவராகவே நடத்துகின்றன. உலகளவில் வலுவான அதிகாரம் மிக்க குருமார்களைக் கொண்ட மிகப் பெரிய சமய அமைப்புக்கள் இந்த இரு மதங்களை நடத்திவருகின்றன.

இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அந்த சர்வ தேச அமைப்புக்களே கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. அந்த அமைப்புக்களே இந்த இரு சமயத்தவருக்குமான எல்லா முடிவுகளையும்  எடுக்கின்றன. இந்த அமைப்புகளில் எதுவும் இந்தியாவில் இல்லை; இந்தியாவைச்  சார்ந்தும் இல்லை; இந்திய வாழ்வியல் குறித்த சிந்தனையும் இந்த அமைப்புகளிடம் இல்லை. வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் இந்த சமயம் சார்ந்த அமைப்புகளின் பணம், நிவாரண நிதி என்ற பெயரில் இந்தியாவுக்குள் வரும். இதைத்தான் ராஜீவ் மல்ஹோத்ரா ஒரு சிறிய வீடியோவை காட்டி விளக்கியிருந்தார்.

ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் இந்துக்களுக்கு உதவுங்கள் என்ற அர்த்தத்தில் தனது கருத்தை பதிவு செய்ததும் இடது சாரிகள் நிவாரண உதவியில் மதத்தின் பெயர் எதற்கு எனக் கேட்டு எதிர்ப்பு கனைகளைச் சரமாரியாக எய்து அவர் மனதைத் துளைத்து விட்டனர். அவர் அமைதியைக் குலைத்து விட்டனர். இதனால் அவர் தன் பதிவை  நீக்கிவிட்டார்.அவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்ட பயன்படுத்திய வார்த்தைகளை பாருங்கள் , “vile”, “bigot”, “hate-monger”, “knickerati”, “divisive” மற்றும் பல. கருத்து முரண் உள்ளவர்களிடம் எதிர் வாதம் செய்யும் பொது நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களை நல்லவர்களை போலவும் உலக சமாதானத்துக்கு உழைக்கும் உத்தமர்களைப் போலவும் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் என்ன செய்கின்றனர்  என்றால் நாட்டுக்குள் பிரிவினையை உருவாக்கி ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை வளர்க்கின்றனர்.

இந்த வெள்ளச் சேதத்தை பயன்படுத்தி நாட்டின் தென் பகுதியில் உள்ள மாநிலங்கள் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புமாறு நாட்டை வடக்கு தெற்கு என்று இரு கூறாகப் பிரிக்க முனைகின்றனர். வட மாநிலங்களில் சத்ரபதி சிவாஜி மற்றும் சர்தார் பட்டேல் சிலைகளை நிறுவ செலவழித்த பணத்தை கணக்கு காட்டி தமக்கு வெள்ளச் சேதத்தை போக்க நிவாரண நிதி அளிக்கும்படி கோருகின்றனர். அதே சமயம் மத்திய ராணுவப் படை பிரிவினர் அங்கு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உதவியதை குறிப்பிடுவதில்லை. அதனை நன்றியோடு நினைத்து பார்ப்பதில்லை.

மத்திய அரசுக்கு சொந்தமான இதிய ரயில்வே துறையினர் இலவசமாக தண்ணீரும் நிவாரண பொருட்களும் கொண்டு சென்று விநியோகித்ததை மறந்துவிட்டனர். நிவாரண உதவி சாராத மற்றொரு இழப்பீட்டு உதவியைச் செய்ய முன்வந்த மத்திய அரசை அவர்கள் மதிப்பதில்லை. நிவாரண உதவியோடு சேராமல் ‘ஏழைகளில் ஏழைக்கு’ இலவசமாக வீடுகள் கட்டி தரும் திட்டத்தை அங்கே செயல்படுத்துவதாகத்  தெரிவித்ததையும் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை.  மேலும் பி ஜே பி ஆளும் மாநிலங்களில் இருந்து எந்த நிதி உதவியும் செய்யவில்லை என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.PayTMநிறுவனர்வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததற்காக அவரை கேலி செய்துள்ளனர். அதற்கான [UPI/E]கட்டுப்பாடுகள் சில இருப்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நிவாரண உதவியாக வழங்கப்படும் தொகை சிறிதாயினும் பெரிதாயினும் அதை உதவும் உள்ளத்துக்காக நன்றியோடு நோக்க வேண்டும். ஆனால் இடது சாரியினர் நிவாரண உதவி செய்வோரை எள்ளி நகையாடுகின்றனர். அவர்களை மதிப்பது கிடையாது. தங்களை மட்டும் நல்லவர்கள் என்றும்  மனித நேயம் உள்ளவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு  பொய்யும் புரட்டும் பேசி வருகின்றனர்.

இடது சாரியினர் செய்யும் குற்றங்கள் ஏராளம். ஆனாலும் அவர்களின் கொள்கை யாராலும் வெற்றி கொள்ள முடியாதபடி  தலை நிமிர்ந்து நிற்கிறது.  ஒருவர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பின்பு அடுத்தவர் அடுத்தவர் எனச் சங்கிலித் தொடர் போல இந்த பிரச்சாரம் வலுவாகத்  தொடர்கிறது. இடது சாரி அமைப்புக்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட இயக்கமாகச் செயல்படுவதால் இவ்வாறு உலகளவில் விரைந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் முறை இவர்களிடம் காணப்படுகிறது. தெ நியுஸ் மினிட் என்பது இவர்களின் பிரச்சாரத் தளமாகும். இத்தளத்தில் முதலில் வெறுப்புணர்வை ஊட்டும் ஒரு கட்டுரை வெளியிடப்படும் பின்பு நாட்டில் உள்ள அனைத்து இடது சாரி வெளியீடுகளும் இக்கருத்தைப் பரப்பி விடும்.

லூத்யேன்ஸ் அல்லது பெங்களுருவில் ஏ. சி. அறையில் அமர்ந்தபடி ஆசிரியர்கள் எழுதி பரப்பும் வெறுப்பூட்டும் கட்டுரைகளும் செய்திகளும் அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாக பெயர் சொல்லிக்கொண்டு நாடு முழுக்க பரப்பப்படும்.   இந்த நச்சுப் பிரச்சாரம் எதையும் அறியாத நமது ஆர் எஸ் எஸ் அமைப்பினர்  பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் சேற்றிலும் சகதியிலும் உழன்று கொண்டிருகின்றனர்.

ஆர் எஸ் எஸ் அமைப்பை இடது சாரிகள் இந்து தீவிரவாத அமைப்பு என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  ஆனால் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பினர் யாரையும் சாதி மதம் கேட்டு மீட்பது கிடையாது. அது தான் இந்துக்களின் பெருந்தன்மை எல்லோரையும் சக மனிதராக கருதும் உயர்வான எண்ணம் கொண்டவர்கள் இந்துக்கள்.  இதனைப் புரிந்துகொள்ளாமல், சிறுபான்மையினரை மட்டுமே அதிகமாக நம்பி இயக்கம் நடத்தி வரும் இடது சாரியினர் இந்துக்கள் மீது துவேஷப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த ‘வெறுப்பு அரசியலை’ ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


உண்மையான புள்ளி விவரங்களை வெறுக்கும் இடது சாரியினர் ராஜீவ் மல்ஹோத்ரா போன்றோர்  ஏதேனும் தெளிவான பதிவுகள் இடும்போது அப்பாவி ஆட்டுக்குட்டியைத் தாக்கும் ஓநாய் கூட்டம்  போல பாய்ந்து குதறி எடுக்கின்றனர். ‘இந்துக்களுக்காக  இந்துக்கள்‘ என்று மல்ஹோத்ரா பதிவை இட்டதும் சித்தார்த்த் வரதராஜன் முதற்கொண்டு அண்ணா வெட்டிக்காட் வரை அவர் மீது பாயத் தொடங்கிவிட்டனர்.  இதுவரை இரண்டு கட்டுரைகள் மல்ஹோத்ராவின் கருத்தை  எதிர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில கட்டுரைகள் அவர்களின் வெறுப்புத் தோய்ந்த விஷமத்தனமான மொழி நடையில் வெளிவரலாம். அவர் மீண்டும் சமூக வலைத்தளங்களுக்கு வந்து தன மனதுக்கு சரியென்று தோன்றிய கருத்தை வெளியிட முடியாதபடி அவருக்கு மரண அடி கொடுத்துவிட்டு  தம்மை ஏழைகளின்பால் கருணை உள்ளவர்கள் போல இடது சாரியினர் காண்பித்துக் கொள்கின்றனர்.

சமூக வலைத் தளம் என ஒன்றில்லாவிட்டால் இவர் போன்ற சாமான்யரின் உள்ளக் கிடக்கையை நம்மால் அறிந்துகொள்ளவே இயலாது. சாமான்ய மக்களில் பலர் இந்துக்களுக்காகவும்  மனம் இரங்குகின்றனர் என்ற கருத்தே வெளிவராமல் மறைக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களில் சிறுபான்மையினருக்கே அதிக நிவாரணங்களும் சலுகைகளும் கிடைத்திருக்கும். இன்று அவருக்கு முக நூலில் ஐம்பது இலட்சம் பெரும் யு டியுபில் ஒரு இலட்சம் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இடது சாரியினரின் வெறுப்பு அரசியலை எதிர்த்து ஒன்று திரண்டிருக்கும் ஆதரவாளர்கள் ஆவர்.  இந்த ஆதரவு இடது சாரியினரின் அடிவயிற்றில் புளியை கரைக்கிறது. அவர்களை அச்சுறுத்துகிறது. இந்த ஆதரவு தளம் என்பது தானே உருவானது. யாரும் திட்டமிட்டு இந்துக்களுக்கு ஆதரவாக ஃபேஸ் புக்கில் உருவாக்கவில்லை. இந்த ஆதரவை அழிக்க வானத்தில் பறக்கும் வல்லூறு போல இடது சாரியினர் தருணம் நோக்கி காத்து கிடக்கின்றனர். இந்துக்கள் எச்சரிக்கையாக ஒன்றிணைந்து செயல்பட்டால இடது  சாரியினரின் வெறுப்பு அரசியலை முறியடிக்கலாம்.

இடது சாரியினருக்கு தெய்வம் என்றாலே தீண்டப் படாத விஷயம் ஆகும். தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் இறந்து விடுவர்.  தெய்வம் இருப்பது உண்மை என்றால் அது நடக்கட்டும். இது ஒரு சோதனை காலம். தார்மீகவாதிகளை ஒடுக்கும்போது அவர்கள் திமிறி எழுத்து ஒடுக்கியவரை நசுக்க முனைவது சரிதானே. இடதுசாரிகளின் வெறுப்பு அரசியலை எதிர்ப்போம் வெல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here