தமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா? அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்?

கவர்னர் சொல்லும் விஷயங்களில் முக்கியமானவற்றை நீக்கிவிட்டு பத்திரிகைகளுக்குஅளிப்பது ஏன்?

0
2690
கவர்னர் சொல்லும் விஷயங்களில் முக்கியமானவற்றை நீக்கிவிட்டு பத்திரிகைகளுக்குஅளிப்பது ஏன்?
கவர்னர் சொல்லும் விஷயங்களில் முக்கியமானவற்றை நீக்கிவிட்டு பத்திரிகைகளுக்குஅளிப்பது ஏன்?

தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அங்குள்ள பணீயாளர்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்களே. ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக செயல்படக் கூடிய அரசு அதிகாரிகளையே அங்கு நியமிப்பது சகஜம். இங்கு பணி செய்ய அரசு பணியாளர்களை மிகவும் கவனமாக தெரிவு செய்வர். ஏனென்றால் அப்போது தான் கவர்னர் மாளிகையின் செயல்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இந்த மாதம் ஆறாம் தேதி சென்னையில் நடந்த ‘தரமான கல்வியை விரிவாக்குதல்’ என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பொதுவாக கவர்னர் மாளிகையின் மக்கள் தொடர்பு துறை அவரது பேச்சை பத்திரிகைகளுக்கு கொடுப்பது மரபு..

சனிக்கிழமை கவ்ர்னர் உரையாற்றும்பொது தமிழ் நாட்டில் கல்வித்துறையை ஸ்வாஹா செய்து கொண்டிருக்கும் ஊழலை பற்றி காரசாரமாக சாடினார். “தமிழ் நாட்டில் துணைவேந்தர் நியமனத்துக்கு இலஞ்சம் வாங்குவதை அறிந்து வருத்தமுற்றேன். இங்கு அதிகப் பணம் கொடுப்பவருக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்படுகிரது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. இந்நிலையை மாற்றியாக வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார்.

கவர்னர் தமிழ் நாட்டுக்கு வந்த பிறகு ஒன்பது துணைவேந்தர்களை நியமித்திருக்கிறார். ‘அவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கின்றனரே தவிர இலஞ்சம் பெற்றுக்கொண்டு அல்ல. இந்த நியமனங்களில் ஒரு குற்றமும் பிழையும் யாரும் கண்டுவிட முடியாது’’ என்று தன் பேச்சில், குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இருக்கும் கல்வியாளர்கள் உயர் கல்வித்துறையில் ஊழல்வைரஸ் போலப் பரவி வருவது குறித்து ஆத்திரம் அடைந்திருந்த வேளையில் கவ்ர்னரின் கணிப்பு மிகச் சரியாக இருந்ததை கண்டு  நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  மூத்த கல்வியாளரும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்லூரியின் கௌரவத் தலைவருமான பேரா. எம் ஆனந்தகிருஷ்ணன் நம் செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியில் “இப்போது பல்கலைக்கழகத்தின் அளவுக்கு ஏற்ப ஏழு கோடி முதல் இருபது கோடி வரை பேரம் பேசப்படுகிறது” என்று துணை வேந்தர் நியமனத்துக்கான தொகையை பற்றி குறிப்பிட்டார்.இந்த நிலைக்கு திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் தான் பொறுப்பு என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசின் மகன் இளம் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி தமிழகத்தில் துணை வேந்தர், துறை தலைவர், பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் நியமனங்களுக்கு அரசு பெற்ற இலஞ்சத் தொகை குறித்து ஒரு பட்டியல் அனுப்பினார். அவரது தந்தை மருத்துவர் இராம்தாஸ் பணியில் சேரும் விரிவுரையாளர்களிடம் இருந்து ரூ. நாற்பது இலட்சம் வரை இலஞ்சம் வாங்கப்படுவதாகத் தெரிவித்தார். துணைவேந்தர் பதவிக்கு பத்து கோடி வரை வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

விரிவுரையாளர் பதவிக்கு இலஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்படும் துணைவேந்தரை தமிழகத்தில் தான் காணமுடியும். பாரதியார் பல்கலைக்கழகத்  துணைவேந்தர் இவ்வாறு இலஞ்சம் வாங்கும் போது கையும்களவுமாக பிடிபட்டார். வேலை வேண்டியவர் ‘செக்’கும் ரொக்கமுமுமாக கணபதியின் கையில் கொடுக்கும்போது இலஞ்ச ஒழிப்பு போலிசார் அவரைப் பிடித்தனர். அன்று முதல் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக கணபதி நீக்கி வைக்கப்பட்டார்.

டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதற்கொண்டு இன்னும் பலர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக உலவி வருகின்றனர்.

பி ஜே பி தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமத்தியதாக கவர்னர் மீது பாய்கின்றன. அவர் தகுதி பார்த்து துணை வேந்தர்கள் நியமித்ததை எதிர்த்து அவரை தரமில்லாத சொற்களால் [நரி ஓநாய்] ஏசுகின்றன.

முக்கியப் பகுதிகள் நீக்கப்பட்டன

மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிகைகளுக்கு அளித்த கவர்னர் உரையில் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன. கவர்னரே தான் மேடையில் பேசும்போது அவற்றை விட்டுவிட்டாலும் அதிகாரி அதனை சேர்த்து தான் பத்திரிகைகளுக்கு கோடுத்திருக்க வேண்டும். கவர்னர் பேசி முடித்த பிறகு தான் பத்திரிகைகளுக்கு அவரது உரை நகல் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ராஜ் பவனைப் பல பெரியாரியவாதிகளும் இடதுசாரி சிந்தனையாளர்களும் ஆக்கிரமித்துள்ளனர்.  ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து கவர்னர் முடிவெடுக்கட்டும் என்று மாநில அரசு தெரிவித்ததை உடனடியாக செயல்படுத்தப் போவதாக  ஒரு வதந்தி கவர்னர் மாளிகையில் இருந்து பரப்பப்பட்டது.  பின்பு அதனை மறுத்து கவர்னர் விரைவாக ஒரு அறிக்கை அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

ஊடகத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்களை கவர்னர் மாளிகையின் மக்கள் தொடர்பு துறையில் இருந்து தள்ளி வைத்திருப்பதாகவும் அதனால் அங்கிருந்து வரும் பத்திரிகை அறிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரிவதில்லை என்றும் கூறுகின்றனர்.  கவர்னர் உரையின் முக்கிய பகுதிகளை நீக்கிவிட்டு பத்திரிகைக்கு அனுப்பியது யார் என்பது பற்றி கவர்னர் ஒரு விசாரனை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.

கவர்னர் தயார் செய்த உரை இதோ:

Final – Quality Education 06.10.2018 by PGurus on Scribd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here