சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன் கோபம்?

அருண் ஜெட்லி சிகிச்சைக்கு அமெரிக்கா வந்திருக்கும் இந்த சமயத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கி விஷயத்தில் சி பி ஐ விரைந்தெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர் குறைபட்டுக் கொள்வதேன்?

0
1433
அருண் ஜெட்லி சிகிச்சைக்கு அமெரிக்கா வந்திருக்கும் இந்த சமயத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கி விஷயத்தில் சி பி ஐ விரைந்தெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர் குறைபட்டுக் கொள்வதேன்?
அருண் ஜெட்லி சிகிச்சைக்கு அமெரிக்கா வந்திருக்கும் இந்த சமயத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கி விஷயத்தில் சி பி ஐ விரைந்தெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர் குறைபட்டுக் கொள்வதேன்?

சில வாரங்களாக முன்னாள்  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார். அதனால் அவரைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுத்தேன்  நமது செய்தித்தளத்தில் இதுவரை பல கட்டுரைகள் அவரைப் பற்றி விமர்சித்து வெளிவந்துள்ளன. ஆனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவரைப் பற்றி நாம் எதுவும் விமர்சித்து எழுத வேண்டாம் என்று என் நண்பர்கள் என்னிடம் தெரிவித்த பிறகு நான் எதுவும் இதுவரை எழுதவில்லை. சந்தா கோச்சர் மற்றும் ஐ சி ஐ சி ஐ வங்கி அதிகாரிகளின் மீது சி பி ஐ முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்தது பற்றி அவர் ஆத்திரத்துடன் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவுகளைப் பார்த்த பிறகு என்னால் அமைதியாக இருக்க இயலவில்லை. இந்தப் பதிவுகளில் சிறிதளவு நியாயம் கூட இல்லை. ஐ சி ஐ சி ஐ வங்கியில் இருந்து கடன் வழங்குவதில் பொய், புரட்டு, பித்தலாட்டங்களில் சிக்கிய அவ்வங்கியின் தலைவர் சந்தாவுக்காக ஒரு நிதி அமைச்சர் பரிந்து பேசுவதும் அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்காக ஆத்திரம் கொள்வதும் அநியாயமான  செயல் என்பதால் என் மௌனத்தை முறித்துக்கொண்டு அவரை எதிர்த்துப் பேசத் தயாராகிவிட்டேன்.

நீங்கள் சுத்தமாக திருந்த மாட்டீர்கள். நீங்கள் உங்கள் உடம்பைப்  பார்த்துக் கொள்ளுங்கள். சி பி ஐ தனது. வேலையைக் கவனிக்கட்டும்.

ஜெட்லி அவர்களே நீங்கள் சி பி ஐக்கு எதிரான கருத்துக்களைக் கூறி உங்களின் மத்திய  அரசை [அதாவது பிரதமரை] எதிர்ப்பதன் மூலமாக உங்களின் எல்லையைத் தாண்டுகிறீர்கள்.  எங்கள் செய்தி தளம் முதன் முதலில் சந்தா கோச்சர் மற்றும் அவர் கணவர் நடத்திய வங்கிக்கடன் நாடகங்களைப் பற்றி செய்தி வெளியிட்ட போது உங்களின் ஆதரவால் அனைத்து ஊடகங்களும் இச்செய்தியை வெளியிடாமல் இரண்டு வருடங்களுக்கு மௌனம் காத்தன. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி நாங்கள் இந்த ஊழல் குறித்து  செய்தி வெளியிட்டோம். அதன் பிறகு இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. பின்னர் மெல்ல மெல்ல மற்ற செய்தி ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட தொடங்கின. இதனால் வங்கியில் இருந்து சாந்தா கோச்சார் வெளியேற்றப்பட்டார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?

ஜெட்லி அவர்களே உங்களுக்கு குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ப சிதம்பரம் தொடர்பான என் டி டிவி வழக்குகளிலும் இதையே செய்து வருகிறீர்கள். இந்த வழக்கில் அதிகக் கடன் வாங்கிய வீடியோகானின் தலைவர் வேணுகோபால் தூட் உங்களுக்கு மிகவும் வேண்டியவர். அமைச்சராக இருக்கும் நீங்கள் உங்களின் பழைய மோசமான தொடர்புகளை எல்லாம் இப்போது உங்களின் அமைச்சுப் பணியில் குறுக்கே வர அனுமதிக்கக் கூடாது. சி பி ஐ தனது கடமைகளைச் செய்வதை நீங்கள் விமர்சிப்பது இது முதல் தடவை அல்ல. நீங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த போதும் 2018 ஜுலை மாதம்  வங்கியாளர்களுடன் நடத்திய காணொளி சந்திப்பில் இது போல புலனாய்வு அமைப்புகள் தமது கடமையைச் செய்வதை விமர்சித்து பேசினீர்கள்.

உங்களுடைய டிவிட்கள் பிரதமரின் மனதை புண்படுத்தும். சி பி ஐ பிரதமரின் உத்தரவின் பேரில் தான் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா? இது என்ன பிரம்ம சூத்திரமா? புரிந்துகொள்ள கடினமான விஷயமா? நீங்கள் சி பி ஐ யை விமர்சிப்பது பிரதமரின் உத்தரவை விமர்சிப்பது போலாகிவிடுமே. இது உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் விமர்சிக்கிறீர்களா? நீங்கள் குறைந்த பட்சம் பிரதமரிடமாவது விசுவாசமாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு லட்சம் மக்கள் புறக்கணித்த உங்களை அவர் ஆதரித்து அமைச்சர் பதவி கொடுத்தாரே அதற்கு ஒரு நன்றி விசுவாசம் உங்களிடம் இருக்க வேண்டாமா? அப்போது நாடெங்கும் பி ஜே பி அலை வீசியதால் அக்கட்சியினர் நின்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வந்தனர். அந்த அலையில் கூட நீங்கள் வெற்றி பெற முடியாமல் மோசமான தோல்வியைப் பெற்றீர்கள்.

ஜெட்லி  அவர்களே, ஒரு அமைச்சருக்குரிய கடமை என்னவென்று நான் உங்களுக்கு கற்றுத் தரவேண்டியதில்லை. இப்போது உங்களின் உடல்நிலை காரணமாக உங்களுக்குத் துறை ஒதுக்கப்படா விட்டாலும் நீங்கள் இன்னும் அமைச்சராகத் தான் இருக்கிறீர்கள். மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லையா? அல்லது இது தான் நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மையா?

இந்த வயதில் உங்களுக்கு புத்திமதி சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. நீங்கள் சுத்தமாக திருந்த மாட்டீர்கள். நீங்கள் உங்கள் உடம்பைப்  பார்த்துக் கொள்ளுங்கள். சி பி ஐ தனது. வேலையைக் கவனிக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here