16ஆம்  நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் எங்கே – மத்திய தகவல் ஆணையம் கேள்வி

மன்னர் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு தானமாக அளித்த நகைகளின் பட்டியலைக் காட்டி அந்த நகைகள் அனைத்தும் எங்கே?

0
2133
மன்னர் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு தானமாக அளித்த நகைகளின் பட்டியலைக் காட்டி அந்த நகைகள் அனைத்தும் எங்கே?
மன்னர் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு தானமாக அளித்த நகைகளின் பட்டியலைக் காட்டி அந்த நகைகள் அனைத்தும் எங்கே?

பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மாமன்னரான கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த ஏராளமான தங்க நகைகளும் வைர வைடுரியங்களும் தொலைந்து போய்விட்ட மர்மம்  குறித்து மத்திய தகவல் ஆணையம் அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. நகைகள் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து மத்திய மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை இன்னும் நீடிக்க விடாமல் மத்திய தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. கிருஷ்ண தேவராயர் திருமலை திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் பற்றி வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் அடிப்படையிலும் பதிவுகள் இருக்கின்றன. இவற்றின் உதவியால் மத்திய தகவல் ஆணையம் திருப்பதியில் காணாமல் போன நகைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய தகவல் ஆணையம் காணாமல் போன நகைகள் குறித்து இந்தியத் தொல்லியல் துறை, பண்பாட்டு துறைக்கான அமைச்சகம், ஆந்திர  மாநில அரசு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்  ஆகியவற்றிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீதர் ஆசார்யலு பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளார். அதில் திருமலை திருப்பதி கோவிலை மாநில அரசின் ஆளுகையில் இருந்து விடுவித்து தேசிய மரபுச் சின்னம் [national heritage monument] ஆக்கும்படியும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை  கேட்டுப் பெற்று இக்கோயிலை பண்பாட்டு மரபுச்  சின்னமாக அறிவிக்கவும் அதன் நகைகளைப் பாதுகாக்கவும் முயற்சிகள் எடுக்கும்படி கோரியுள்ளார்.

பி கெ எஸ் ஆர் அய்யங்கார் என்பவர் திருப்பதி கோயிலை தேசிய மரபு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  பிரதம மந்திரியின் அலுவலகத்தில் தகவல் கேட்டதற்கு மத்திய தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருக்கோயில்கள குறித்து இந்த வேண்டுகோளை அரசுக்கு வைத்தார். இவரது இந்தக் கோரிக்கை பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டும் அவருக்கு உரிய பதில் கிடைக்காததால் இறுதியாக மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.  தகவல் உரிமை விவகாரங்களில் இறுதியாக இருப்பது இந்த மத்திய தகவல் ஆணையம் என்பதால் கடைசியாக இந்த ஆணையத்தை அணுகி தன கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனக்கு தெரிவிக்குமாறு கேட்டு அறிந்தார்.

ஆணைய அதிகாரி ஆச்சார்யலு திருமலை திருப்பதி தேவஸ்தானம்  ஆயிரத்தி ஐநூறு ஆணடுகளுக்கு முற்பட்ட கோயிலின் கட்டிட அமைப்புகளைப் பாதுகாக்கத் தவறி விட்டது என்றார். .மேலும் 2011 ஆம் ஆண்டு தொல்லியல் தலங்களையும் பண்டைய நினைவு சின்னங்களின் மிச்ச சொச்சங்களையும் பாதுகாக்கும் சட்டத்தின் [1958] கீழ் இக்கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக  நிறைவேற்றாமல் அதைக் கிடப்பில் போட்டுவிட்டது, என்றார்.

2011இல் ஹைதராபாத் நகரில் உள்ள தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையின் இயக்குனரின் அறிக்கை ஒன்றில்  இருபது உறுப்பினர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில் திருமலையில் உள்ள திருப்பதி கோயில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில்  கிருஷ்ண தேவராயர் இக்கோயிலுக்கு அளித்த நகைகள் பற்றிய குறிப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதை ஆணையர் தம் பதிலில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் உள்ள நகைகள் எதுவும் இப்போது கோயிலில் இல்லை. இதை மனுதாரர் குற்றச்சாட்டாகப் பதியவில்லை என்றாலும் பண்பாட்டுத் துறையின் இயக்குனர்  நகைகளை கண்டுபிடிக்க முயலவில்லை என்பதை பெரிய கண்டுபிடிப்பாகப் பதிவு செய்கிறார். எனினும் இது குறித்து 2011ஆம் ஆண்டுமுதல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நகைகள் பற்றிய ஆய்வுக்காக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான டி பி வாத்வா மற்றும் ஜகன்னாத ராவ் ஆகியோரைக் கொண்டு ஒரு சுய மதிப்பீட்டு குழுவை அமைத்தது , என்று ஆச்சார்யலு பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். .

1952ஆம் ஆண்டு முதல் திருக்கோயிலில் பராமரிக்கப்படும் திருவாபரணம் என்ற பதிவேட்டில் விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயரிடம் இருந்து பெற்றதாக எந்த நகை பற்றிய குறிப்பும் காணப்படவில்லை என்று குறிப்பெழுதிவிட்டனர். . இத்துடன் இவர்களின்  ஆய்வு நிறைவு பெற்றது.

1939, ஆம் ஆண்டு திருக்கோயிலுக்கு நகைகளை தானமாக ஒரு பட்டர் அளித்த குறிப்பு தவிர 1952 ஆண்டுக்கு முந்தைய பதிவுகள் எதுவும் அந்த பதிவேட்டில் இடம்பெறவில்லை. விலை உயர்ந்த எல்லா நகைகளும் வேறு  ஏதாவது பதிவேட்டில் காணப்படுகின்றனவா அல்லது அந்தக் காலத்தில் நகைகளை பதிவு செய்வது வேறு முறைகள் எதுவும் இருந்தனவா என்பதும் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

அந்த அறிக்கையில் கர்ப்பக்கிருகத்தில் பணிபுரியும் பட்டர்களிடம் விசாரிக்கலாம்; ஒரு சிறப்பு குழு அமைத்து திடிர் ஆய்வுகள் நடத்தலாம்; என அந்த சிறப்புக்  குழுவினர் பரிந்துரை நல்கினர். இந்த நீதிபதி வாத்வா குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நகைகளைப் பற்றிய ஒரு முறையான ஆண்டுவாரியான கொடையாளர்வாரியான பட்டியலைத் தயாரிக்க முன்வரவில்லை.

2009ஆம் ஆண்டில் போடப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த ஆந்திரா உயர் நீதிமன்றம் கோயில் நகைகள் குறித்து ஒரு விவரமான பட்டியலை என் இன்னும் உருவாக்கவில்லை. இப்பணியில் திருக்கோயில் தேவஸ்தானம் தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியது. அய்யங்கார் தனது மனுவில் திருமலை வெங்கடேசுவரர் சந்நிதியின் [மகா துவாரம்] முன் இருந்த பதினைந்தாம் நூற்றாண்டில் சலுவா மல்லதேவர மகராஜ் என்பவரால் கட்டப்பட்ட சிற்ப வேலைப்பாடு மிகுந்த ஆயிரங்கால் மண்டபத்தை 2003இல் தேவஸ்தானம் எந்தவிதக் காரணமும் இன்றி இடித்துவிட்டது..

இந்த மண்டபம் பெருமாளை சேவித்துவிட்டு வரும் பக்தர்கள் மகாதுவாரம் முன்பு அங்கு உட்கார்ந்து சற்று இளைப்பாறவும் நாராயணன் நாமத்தை ஜெபிக்கவும் மண்டபத்தின் சிற்ப வேலைப்பாடுகளை கண்டு ரசிக்கவும் பயன்பட்டது. இப்போது அந்த மண்டபம் அங்கு இல்லை. திருமலை கோயில்களைப் பண்டைய மரபு சின்னங்களாக அறிவித்து இருந்தால்  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் இது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட இயலாது. கார்மம் இன்றி மண்டபத்தை இடித்திருக்காது. என்று ஆச்சார்யலு தேவஸ்தானம் மீதான அதிருப்தியை கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

முன்பெல்லாம் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். இப்போது அப்படி அளிப்பதில்லை. ஆந்திர அரசின் இந்து அறநிலயைத்துறையின் கீழ் இயங்கும் இந்த திருக்கோயில் ஒரு பொது அமைப்பு என்பதையும்  தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குக் கட்டுப்பட்டது என்பதை தேவஸ்தானம் மறந்துவிட்டது. நீதிபதி வாத்வா மற்றும் நீதிபதி ஜெகன்னாத ராவ் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையின் விவர்ணகளை தேவஸ்தானம் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.. அவர்கள் திருக்கோயில் நகைகளுக்கு வெளிப்படையான தெளிவான பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்பதை தம் அறிக்கையில் வலியுறுத்தினர்.

விஜயநகரப் பேரரசின் நகைகளையும் தேசிய மரபுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியது தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறையின் தலையாயக் கடமை ஆகும். பிரதமர் அலுவலகத்தின் தலைமையின் அவர்களின் வழிகாட்டுதலில்  இந்த பண்பாட்டு துறையின் திருமலை திருப்பதி கோயில்கள் போன்ற பண்டைய இந்து சமய அமைப்புகளை தேசிய மற்றும் உலகப் பண்பாட்டு சின்னங்களாக அறிவித்து பராமரிக்க ஆவன  செய்ய வேண்டும்  என்று ஆச்சார்யலு தெரிவித்துள்ளார். .

பிரதமர் அலுவலகம் ஒரு மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளிப்பது மட்டுமே தனது கடமை என்றிருந்து விடாமல் இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருப்படியான பயனுள்ள நல்ல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்த முனைய வேண்டும்.

ஒரு காலத்தில் இந்தியா என்பது திருமலை திருப்பதியின் வைரம் பதித்த தங்க நகைகளுக்காகவும் அறியப்பட்டது. எனவே இந்த திருப்பதி கோயிலின் அரும் பொக்கிஷத்தை இங்குள்ள அரசியல்வாதிகளின் ஆசைகளுக்கு தீனி ஆக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று ஆச்சார்யலு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here