இன்னும் எவ்வளவு காலம் உபேந்திரா ராய் மௌனம் காப்பார்? அமலாக்கத் துறையினர் நாடெங்கும் அவர் வாங்கி வைத்திருக்கும் அவரது மனையடி சொத்துக்கள் மற்றும் பங்களாக்களை முடக்கிவிட்டநனர்.
புதன்கிழமை அன்று அமலாக்கத் துறையினர் உபேந்திர ராய் முறைகேடான வழிகளில் சம்பாதித்து வாங்கிய இருபத்தேழு கோடி ரூபாய் மதிப்புள்ள பல பங்களாக்கள், ஆடம்பர வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் சொகுசு கார்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். லக்னோ, நோய்டா , கிரேட்டர் கைலாஷ் மற்றும் புது டில்லியில் உள்ள ஆடம்பர விடுகள், பங்களாக்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளை அமலாக்கத்துறையினர் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். இவற்றை மதிப்பிடும் ரியல் எஸ்டேட்காரர்கள் இச்சொத்துக்களின் உண்மையான மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்தனர். ‘’அமலாக்கத் துறை அதிகாரிகள் சொகுசுக் கார்கள், மியுச்சுவல் ஃபண்டு நிறுவன முதலீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வங்கி இருப்புகள் அனைத்தையும் தமது வசப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கான தற்காலிக ஆணையும் உபேந்திரா ராய் மீது பிறப்பிக்கப்பட்டு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவை கறுப்பு பணத்தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன, என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முடக்கப்பட்ட சொத்து மதிப்பு 26.65 கோடி என்றும் அவர் தெரிவித்தார்.
அமலாக்கத் துறையினரின் அறிக்கைப்படி முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலில் C -24, கிரேட்டர் கைலாஷில் உள்ள மூன்று மாடி ஆடம்பர பங்களா, நோய்டாவில் அறிஹன்ட் பாரடைசோவில் உள்ள 104ஆம் எண்ணுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு, லக்னோவில் சரஸ்வதி அப்பார்ட்மெண்டில் உள்ள உச்சி மாடி சொகுசு வீடு, லக்னோவில் ஷாலிமார் இம்பிரியலில் உள்ள D9 804 குடியிருப்பு, புது டில்லியில் ஹெய்லி சாலையில் ஆஷாதீப்பில் உள்ள 804 ஆம் எண்ணுள்ள குடியிருப்பு , நோய்டாவில் ஜலவாயு விகாரில் உள்ள 368 ஆம் குடியிருப்பு ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
மத்தியப் புலானய்வு துறையினரால் உபேந்திரா ராய் கருப்பு பணத் தடை சட்டத்தின் கீழ் ஜூன் மாதம் எட்டாம் நாள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சந்தேகத்துக்கிடமான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முறை கேடான வழிகளில் மற்றவர்களை மிரட்டிப் பணம் பெறுதல் ஆகிய வழக்குகளில் அவர் கைது செய்யபட்டார்.
அதற்கு முன்னர் அவர் மே மாதம் மூன்றாம் நாள் தவறான தகவலைக் கொடுத்து விமான நிலையத்தில் நுழைவதற்கான அனுமதி சீட்டு பெற்று அதன் மூலமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பணப் பரிவர்த்தனைகளைச் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். மும்பையில் வாழ்ந்த ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக சிபிஐ அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் [சி பி ஐ] தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் 2017ஆம் ஆண்டில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். ராயின் வங்கி கணக்கில் 79 கோடி ரூபாய் இருப்பு உள்ளது அதில் 78.51 கோடி ரூபாய் இந்த ஒரு ஆண்டுக்குள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பி குருஸ் செய்தி உபேந்திரா ராய் முறைகேடாக சேர்த்த சொத்து விவரத்தையும் இவரது சொத்துப் பட்டியலையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.