அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு உச்ச நீதின்றத்தில்  தள்ளுபடி

அமலாக்கத் துறை அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கின் மீது எடிட்டரும் இடைத்தரகருமான உபேந்திரா ராய் அளித்த இன்னொரு புகார் மனுவையும்  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

0
1656
உபேந்திரா ராய் மனு உச்ச நீதின்றத்தில் தள்ளுபடி
உபேந்திரா ராய் மனு உச்ச நீதின்றத்தில் தள்ளுபடி

கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதிகளான நீதிபதி ஏ. கெ. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் இருவரும் 2ஜி வழக்கு நிலுவையில் இருப்பதற்கும் இப்போதைய  வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதால் ராஜேஷ்வர் சிங் இந்த வழக்கை நடத்தக் கூடாது என்பது பொருந்தாது.எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.

இப்போதைய வழக்கு விவரங்களுக்கும் கருத்துக்களுக்கும் இந்த மனுவில் சொல்லப்பட்ட விஷயங்கள் சற்றும் தொடர்பில்லாதவை என்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராய் தரப்பில் வாதிட்ட  மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் தான் ராஜேஷ்வர் சிங் செய்த முறைகேடுகள் குறித்து எடுத்துரைத்ததால் சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறை ராஜேஷ்வர சிங்குக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டி அவரை நீக்க வேண்டும் என்றார்.

இதே ராஜூ ராமச்சந்திரன் தான் முன்பு ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கின் உதவியாளர்களான ரவி விஸ்வநாத் போன்றோரை  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தேடுவதற்கான சுற்றறிக்கையை அனுப்பிய போது அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார்.  அதிகாரி ராஜேஷ்வர் சிங்குக்காக வாதாடிய முகுல் ரோஹாட்ஜி , இது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது அதிகாரிகள் மீது சொல்லப்படுவதுண்டு; ஆனால் அந்நேரங்களில் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை காப்பாற்றியுள்ளது என்று வாதிட்டார். 2011ஆம் ஆண்டில் இருந்து இது போன்ற அற்பத்தனமான மனுக்களை நீதிமன்றத்தில் அளிப்பது அதிகரித்துள்ளது. திரும்ப திரும்ப இது போன்ற மனுக்களை சமர்ப்பிக்கின்றனர். இதனை இப்படியே பொறுத்துக்கொண்டு போகக் கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.

மிரட்டி பறித்த நூறு கோடிக்கும் அதிகமான பணம் உபேந்திரா ராயின் வங்கி கணக்கில் இருந்து சிபிஐ  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊழலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காகும் என்று ரோஹட்ஜி வலியுறுத்தினார்.  ‘’இவை அனைத்தும் உன் மீது தொடுக்கப்பட்ட தனி வழக்குகள் ஆகும். இவற்றிற்கு 2ஜி வழக்குடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.. நீ அதற்கு தனியாக ஒரு மனு அளிக்கலாம்’’ என்று நீதிபதிகள் ராயிடம் தெரிவித்தனர்.

முன்னதாக பாரதிய ஜனதாக் கட்சியின் .மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ராஜேஷ்வர சிங்கை தனது கடமையை ஆற்ற விடாமல் தடுக்கும் முறையில் ராய் அவர் மீது தாக்கல் செய்திருக்கும் மனுவை எதிர்த்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரியான சிங் மீதி ராய் அளித்துள்ள மனுவில் அவரைப் பற்றி பலஇழிவான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் இவ்வழக்கு நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். எனவே இது போல ஒரு அதிகாரியை ஆதாரமில்லாமல் குற்றப்படுத்துவோரைத் தண்டிக்க  கடுமையான அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார்.

சுவாமி ராயின் மனு பற்றி குறிப்பிடுகையில் ராய் ‘’ சி பி ஐயை  எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்  என்று என்னை தான்தோன்றித்தனமாக குற்றப்படுத்துவது தகாது’’ என்றார்.  இந்த மனுவில் என்னை மூத்த புலனாய்வு அதிகாரி என்றும் அமலாக்கத் துறையின் சில பகுதிகள் என் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டு  மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் மனுவை தயாரித்தது தகாத செயல் என்றார். அவர் எவ்வாறு இப்படி ஒரு மனுவை தயாரிக்கலாம் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ராஜூ ராமச்சந்திரன் ‘’ ‘நான் அந்தப் வரிகளை  திரும்ப பெற்று கொள்கிறேன்’ என்றார். இவ்வாறான மனுவை சமர்ப்பித்த ராயை நீதிமன்றம் கடுமையான முறையில் அணுக வேண்டும் என்று சுவாமி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். நீதிபதி ஏ. கெ. சிக்ரி மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகிய இருவரும் ராய் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகிறார்.  இந்த வெட்டி மனுவால் அரை மணி நேரம் வீணாகிவிட்டது என்றனர். .

2ஜி வழக்குகளில் மனுதாரராக இருக்கும் நீதிபதி பிரஷாந்த் பூஷனும், இது போன்ற வெட்டி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். மத்திய அரசின் வக்கீல்களான துஷார் மேத்தா, விக்ரம்ஜித் பானர்ஜி மற்றும் அமான் லேகி ஆகியோரும் இது போன்ற மட்டமான   வீணான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல்  இவற்றை தள்ளுபடி செய்துவிட  வேண்டும் என்றனர்.

ஆரமபத்தில் உபேந்திரா ராய் தனது வக்கீல் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டது தனக்கு தெரியாது என்று கூறி இந்த மனுவைத் திரும்பப் பெற்றுகொண்டார். இந்த மாதிரி திருகு தந்திரங்களை இனி நீதிமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த மத்திய அரசு வக்கீல்கள் இனி இது போன்றவற்றைத் தாம் ஆதரிக்க மாட்டேம் என்றும் இது மாதிரியான வெட்டி மனுக்களை இனியும் அவர் சமர்ப்பித்தால் அதற்கு தக்க முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் எச்சரித்தனர்.

உபேந்திர ராய் மே மாதம் மூன்றாம் தேதி சி பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். BCAS எனப்படும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிடம் போலியான எடிட்டர் அடையாள அட்டையைக் காட்டி நுழைவு சீட்டுக்கான அனுமதியை பெற்ற வழக்கிலும் மும்பை தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கிலும் சந்தகத்துக்கிடமான முறையில் பணப் பரிவர்த்தனைகளைச் செய்த வழக்கிலும் ராயை கைது செய்தனர். இத்துடன் அமலாக்கத் துறையினரும் ராய் மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சி பி ஐ  அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கறுப்பு பணத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வழக்காகும்.முதல் தகவல் அறிக்கையில் சி பி ஐ அதிகாரிகள் ராய் 2017ஆம் ஆண்டில்  மட்டும் இவரது வங்கி கணக்கில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு இலட்ச ரூபாய்க்கு அதிகமாக நடந்துள்ளது. இவர் கணக்கில் இருக்கும் 79 கோடி ரூபாயில் இந்த ஒரு வருடம் மட்டுமே 78.51கோடி ரூபாய் சேர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here