காற்றோடு பறக்கும்  காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்

காற்றினிலே போகும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

0
2660
காற்றினிலே போகும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்
காற்றினிலே போகும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கு  அறிவித்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதி முதல் அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வரை அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன.

அதிகப் பயன் தருவதாகக் நம்பப்படும் காங்கிரசின் பல வாக்குறுதிகள் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவதுண்டு. மக்களும் அதை வசதியாக மறந்துவிடுகின்றனர். ஆனால் நினைவு செல்களில் இருந்து தேடி எடுக்கும்போது தான் நாம் காங்கிரசின் போலி வாக்குறுதிகளால் தொடர்ந்து  ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற உண்மை சுடும்.

இப்போது ராகுல் காந்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 72,000 வழங்கப்படும் என்று புதிய  வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்

“இன்று வரலாற்றுச் சிறப்புடைய நன்னாள்.

வறுமையின் மீது காங்கிரஸ் தன்னுடைய கடைசி தாக்குதலை நடத்திய நாள்.

இந்தியாவில் வறுமையில் வாடும்  ஐந்து கோடி குடும்பங்களும் இனி  ஆண்டுதோறும் 72000 ருபாய் பெறும். ‘இந்தியாவுக்கு நியாயம்’ என்பதே எங்களின் கனவு; எங்களின் உறுதி மொழி.

மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.”

என்று மார்ச் 25ஆம் நாள் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மார்ச் 25ஆம் தேதி மாதச்  சம்பளம் ரூ.12,000 க்கும் குறைவாகப் பெறும் அனைவருக்கும் இனி மாதந்தோறும்  ரூ.6,000 கிடைக்கும்  என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐந்து கோடி குடும்பங்கள் இத்திட்டத்தால் பலன் அடையும், என்கிறார். இதற்கு ரூ.3.6 லட்சம் கோடி தேவைப்படுகிறது.  இத்தொகை தனிநபர் வரி முலம் ஒரு அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கக் கூடிய அளவிலான வருமானத் தொகை  ஆகும்.  இத்திட்டம் அமுலுக்கு வந்தால் இந்தியாவில் இருபது சதவிதம் அல்ல ஐம்பது சதவிதம் பேரும் இதனைப் பெற முயற்சி செய்வார்கள் என்று நான் ஆணையிட்டு கூறுகிறேன். சிறு வணிகம் செய்வோரும் நாள் சம்பளத்துக்கு வேலை  செய்வோரும் வங்கி மூலமாக பணம் பெறுவது கிடையாது. அவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் பயனாளியாக முயல்வர். வேலை செய்து பிழைக்கும் தெம்பு இருப்பவர்களும் இந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு சோம்பேறியாகக் காலம் கழித்து விடுவர். வேலைக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள்.

அண்டை நாடுகளில் இருந்தும் ஏழை மக்கள் இங்கு புலம்பெயர்ந்து வந்து இப்பணத்தை பெற முயலலாம். வட இந்தியாவில் பங்களா தேஷ் மற்றும் ராக்கினில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக புலம்பெயர்ந்து வந்த மக்கள் ஏராளமானோர் சிறு சிறு வேலைகளைச்  செய்து பிழைக்கின்றனர். இவர்களுக்கு இந்த ஆறாயிரம் ரூபாய் என்பது வரப் பிரசாதமாக அமையும். எனவே இதைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வர்.

இந்த திட்டத்தில் உள்ள குறைபாடு யாது?

மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வோரை மிகுந்த மண் உளைச்சலுக்கு உள்ளாக்கும் மோசமான திட்டம் இது. தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை அரசு கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக்கி  விடும். ஒருவரின் உழைப்பின் பலனை இன்னொருவர் எடுத்து அனுபவிப்பதா? வேலை எதுவும்  செய்யாமல் இருந்துகொண்டு நோகாமல் நுங்கு தின்ன நினைக்கும் ஒருவருக்கு அரசு மாதப் பணம் கொடுக்கிறது  என்பது உழைப்பாளிகளுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும். இங்கு நாம் நினைவு கூர வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவில் விவசாயிகள் வரி செலுத்துவது கிடையாது. பெரும் பணக்காரர்கள் தங்களது கணக்காயர் மூலமாக வரி செலுத்தாமல் இருப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்வர். அதனால் அவர்களின் வரிப் பணம் குறைந்துவிடும். மேலும் காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தை பொருளியல் நிபுணர்களோடு ஆலோசித்து அறிவித்ததாக சொல்வது அபத்தம். தேர்தல் பரபரப்பு முடிந்ததும் இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்பது தெரிய வரும்.

கர்நாடகா & மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ஆனதா?

ஒரு மாநில அரசு தான் கொடுக்காத கடனை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?  கர்நாடகாவில் 44,௦௦௦ கோடி ருபாய் தள்ளுபடி செய்ததால் வெறும் 800 விவசாயிகளே பலன் அடைந்தனர். கொடுத்த வாக்குறுதி என்னவென்றால் இருபத்து நான்கு மணி நேரத்தில் அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்பதாகும்.  இருபது இலட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளிலும் பொது துறை வங்கிகளிலும் கடன் பெற்றிருந்தனர். கடன் தள்ளுபடி பற்றி அறிவித்து எட்டு மாதங்கள் ஆகியும் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 43 இலட்சம் விண்ணப்பதாரர்களின் கடனை தள்ளுபடி செய்ய இயலவில்லை. இவர்களில்   இருபது இலட்சம் பேர் வெளி வங்கிகளில் கடன் பெற்றவர்கள் ஆவர். டைம்ஸ் ஆஃப்  இந்தியா கட்டுரை வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆன பின்னரும் இக்கடனை அடைக்க அரசிடம் பணம் இல்லை. அனைத்து மாநில அரசுகளும் அரசு ஊழியருக்கு மாதச் சம்பளம் தரவும் ஓய்வூதியப் பணம் தரவும் மாநில அரசுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் பணம் இல்லாமல் திண்டாடுகின்றன. இதில் கடன் தொகையை எப்படி தள்ளுபடி செய்ய முடியும். விவசாயிகள் வங்கிகளில்  வாங்கிய கடனுக்கு வங்கிக்கு எப்படி அரசுகள் கடனைச்  செலுத்தித் தீர்க்க முடியும்.

மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை.  வெறும் பதிமூன்று ருபாய் மட்டுமே கடன் தீர்க்கப்படும் என்பதை அறிந்த  விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  போப்பால் நகரில் இருந்து 19௦ கி மீ தொலைவில் உள்ள ஆகர் மால்வா என்ற ஊரைச்  சேர்ந்த சிவநாராயணனும் சிவபாலும் தங்கள் பெயருக்கு எதிரே தள்ளுபடி செய்யப்பட கடன் தொகை ரூ 13 என்று குறிப்பிட்டிருததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வர் கமல் நாத்  இரண்டு இலட்சம் வரையிலான கடனை அடைத்துவிடுவதாக வாக்குறுதி அளித்தார். சிவநாராயணனும் சிவபாலும் இருபதினாயிரம் கடன் வைத்துள்ளனர்.

ராகுல் காந்தி நிறைவேற்ற இயலாத போலி வாக்குறுதிகளைத் தேர்தல் வானில் பறக்க விடுகிறார். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மகிழ்ச்சி தரும் இத்தகவல் உண்மையில் நடைமுறைக்குக் கொண்டு வர இயலாத போலி அறிவிப்பு ஆகும். இதை நம்பி மக்கள் ஏமாற  வேண்டாம்.

References:

[1] Rs.44,000 crore loan waiver has helped only 800 farmers so far: Karnataka, Dec 13, 2018. Times of India

[2] Farmers shocked to get Rs.13 Loan Waiver in Madhya PradeshJan 24, 2019, NDTV.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here