நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி

காங்கிரஸ் கட்சியிடமிருந்து 90 கோடி ரூபாய் கடன் வாங்கியது உண்மை அல்ல என்பது நிரூபனம்

0
1693
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி  வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வரும் யங் இண்டியன் என்ற நிறுவனத்திற்கு எதிராக சுப்பிரமணியசுவாமி நடத்தும் வழக்கில்  விசாரணை நீதிமன்றத்தில் அவர் இந்த சான்றாவணங்களை ஒப்புவித்தார். காங்கிரஸ் தலைவர்களின் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமி சமர்ப்பித்த இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட வருமானவரி துறையின் ஆவணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வருமான வரி ஆணை யங்இண்டியன் நிறுவனத்துக்கு  கிடைத்த 415 கோடி ரூபாய்க்கு வரி கட்டாமல் அதை மறைத்ததற்காக வருமான வரித் துறை 250 கோடி ரூபாய்  அபராதம் விதித்ததற்கான சான்று ஆவணம் ஆகும். இந்த  415 கோடி வருமானம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டட் மூலமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு கிடைத்தது. அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் 2011 வரை நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்டு வந்தது.

ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் வாதாடிய போது 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் பத்தாண்டுகளாக 137 காசோலைகளில் காங்கிரஸ் கட்சி அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 90 கோடி வரை கடனாக கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் வகைகளான ஆர் எஸ் சீமா மற்றும் ரெபேக்கா ஜான் ஆகியோர் வருமான வரி ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். சுப்பிரமணிய சுவாமி முத்திரையிட்ட உறையில் வைத்து வருமான வரி ஆணையை கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷாலிடம் ஒப்படைத்தார். இரண்டாம் நாளாக அவர் சாட்சி சொல்லவந்த போது இந்த வருமான வரி ஆவணத்தை தன்னுடைய சாட்சியமாக சமர்ப்பித்தார். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பேரில் சோனியா காந்திக்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்வது முழுப்பொய் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சுவாமி நீதிமன்றத்தில் திட்டவட்டமாக எடுத்துரைத்தார் இந்த பொய் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அச்சொசியேடட் ஜர்னல்ஸ்  லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக ஜோடித்து சொன்ன  பொய்யாகும். அதுவும் யங் இண்டியன் என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கி அதுவும் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்ட இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார் சுவாமி.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 200 கோடி ருபாய் கடன் பெற்றதாக  சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதற்கான பதிவு அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிட்டட்  நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களிலோ காங்கிரஸ் கட்சியின் கணக்கு ஏடுகளிலோ காணப்படவில்லை. இந்த உண்மையை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் 90 கோடி கடனாக பெற்றது என்பது ஒரு பொய்யான தகவல் என்று கூறி அந்த தகவலை ஏற்க மறுத்துள்ளனர்.,என சுவாமி தன்னுடைய சான்றாவணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது தெரிவித்தார்.

போன வாரம் சோனியாகாந்தியின் வழக்குக்காக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் வாதாடிய போது 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் பத்தாண்டுகளாக 137 காசோலைகளில் காங்கிரஸ் கட்சி அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 90 கோடி வரை கடனாக கொடுத்துள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கருத்தை மத்திய அரசு வக்கீல் ஆனந்த் ராய் மேத்தா மறுத்துரைத்தார். இது ஒரு பொய்யான தகவல் என்றும் இந்த தகவலுக்கான ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனால் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று அவர் மறுத்து வாதாடினார். மேலும் இதை நிறுவுவதற்கு வருமான வரித்துறை இன்னும் போதுமான கால அவகாசம் கொடுத்துள்ளதால் அதை  உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஆவணங்களின்  உண்மைத்தன்மையை அறிய வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆவணங்களை ஆராய்ந்து அதன் உண்மையை அறியும் படி நீதிபதி தெரிவித்தார். அவர்  இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இரண்டாம் நாளாக நீதிமன்றத்தில் வாதாடிய சுவாமி காங்கிரஸ் தெரிவித்த 90 கோடி கடனுக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் 2015இல்  விசாரணை நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் சோனியா காந்தி  தரப்பில் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சுவாமி “நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களைத்தான் நான் இப்போது இங்கு சமர்ப்பிக்கின்றேன்” என்றார். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 99.1 சதவீத பங்குகளை மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் ஆவணங்களையும் சமர்ப்பித்தார். யங் இண்டியன்நிறுவனத்தின் இயக்குனராக  இருப்பவர்களுக்கு யங் இண்டியன் நிறுவனத்தில் உரிமையில்லை என்பதும் இலாபத்தில் பங்கில்லை என்பதும் சுவாமி சமர்ப்பித்த ஆவணங்களில் . ஆனால் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களான மோதிலால் , ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமந்துபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் யங் இண்டியன் நிறுவனத்திலும் இயக்குனர்களாக இருக்கின்றனர் என்று சுவாமி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சுவாமி சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி. இதற்கிடையே மோதிலால் வோரா இந்த வழக்கு தொடர்பாக சுவாமி ட்விட்டரில் பதிவு எதுவும் போடக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here