சுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி அமைச்சகத்திடம் மனு தாக்கல்

பெரு முதலாளிகளுக்கு ஜி எஸ் டி என் நிதி உதவி, வரிவிலக்கு அளித்திருப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பத்து மனுக்கள் அளித்து விவரம் கேட்டுள்ளார்

0
2934
செயலர் ஆடியா  மூலம் நடைபெறும் இலஞ்ச இலாவண்யங்களை ஊருக்கு அமபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சுவாமி
செயலர் ஆடியா  மூலம் நடைபெறும் இலஞ்ச இலாவண்யங்களை ஊருக்கு அமபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சுவாமி

நிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார்

நிதி அமைச்சகத்தில் செயலர் ஆடியா  மூலம் நடைபெறும் இலஞ்ச இலாவண்யங்களை ஊருக்கு அமபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சுவாமி அந்த அமைச்சகத்துடன் நேரடி மோதலைத் தொடங்கிவிட்டார்.  நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் அந்த அமைச்சகத்தின் செயலரான ஆடியாவை பதவியில் இருந்து இறக்கி அவர் மீது குற்றவியல் வழக்கு பதிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேரடியாகக் கேட்டுக்கொண்ட சுவாமி அதற்கு ஜேட்லி இணங்காததால் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினார். தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 26ஆம் தேதி பத்து மனுக்களை அளித்து சில பெரிய நிறுவனங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விவரங்களை கேட்டுள்ளார். மேலும் வாங்கிய வங்கி கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி போன நீரவ் மோடியிடம் இருந்து ஹஸ்முக் ஆடியா பெற்றுக்கொண்ட தங்கக் கட்டிகளை அவர் குடியரசுத் தலைவரின் பொக்கிஷத்தில் [தோஷகானாவில்] சேர்த்தது குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்  இவை தவிர அனில் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு நிதி அமைச்சகம் அளித்த சலுகைகள் குறித்தும் சுவாமி கேட்டிருக்கிறார்.

சுவாமி கேட்டிருக்கும் இந்த விவரங்களை தருவது எப்படி என்று நிதி அமைச்சகப் பணியாளர்கள் குழம்பி போயுள்ளனர். சுவாமி அனுப்பிய பத்து ஆர் டி ஐ மனுக்களையும் எடுத்துக்கொண்டு ஆடியா அமைச்சர் ஜெட்லியிடம் ஓடினார். ஏனென்றால் சுவாமி கேட்டிருந்த பல விவரங்கள் வெளியே சொன்னால் ஆபத்தானவை. சுவாமி நிதி அமைச்சகம் அந்த பெரிய நிறுவனங்களுக்கு பொது நிதி விதிமுறைகளில் [General Financial Rules (GFR)] இருந்து முரண்பட்டு வரி விலக்கு அளீக்கும் முன்பு நிதி அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றதா? என்று ஒரு மனுவில் கேட்டுள்ளார். பொது கணக்கு குழுவினரால் [CAG] தணிக்கையிடக் கூடாது என்பதற்காகசட்டத்துக்கு புறம்பாக  ஜி எஸ் டி என் இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பெரும்பான்மையான பங்குகள் ஹெச் டி எஃப் சி வங்கியிலும் ஐ சி ஐ சி ஐ வங்கியிலும் உள்ளன. இந்த சட்ட முறைகேடுகள் குறித்து நாம் இதற்கு முன்பும் பல செய்தி கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

சுவாமி கேட்டிருக்கும் அடுத்த சில கேள்விகளாவன: தனியார் நிறுவனமான இன்ஃபோசிசை டெண்டர் மூலமாகத் தெரிவு செய்யாமல் அதனை சுயமாகத் தெரிவு செய்து அதற்கு மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜி எஸ் டி என் விலக்கு அளிக்கப்பட்டது எப்படி என்று கேட்டுள்ளார்.ஜி எஸ் டி என் அமைப்பில் ஆடியா தற்காலிகத்  தலைவர் ஆனது குறித்தும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முடிவு எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்பது சுவாமி கோரும் தகவல் ஆகும். தனியார் வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டிருக்கும் ஜி எஸ் டி என் அமைப்பில் ஓர் அரசு அதிகாரியான ஆடியா தலைவராக கூடாது  என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி துறை ஆட்சேபனை தெரிவித்தது. இந்த ஆட்சேபனைகளை மீறி ஆடியா எவ்வாறு தலைவர் ஆனார் என்றும் சுவாமி தகவல் கேட்டிருக்கிறார்.

அரசு அதிகாரிகள் வெளி நாடு செல்லும்போது அவர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளை குடியரசு தலைவரின் பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டும் என்பது நியதி ஆனால் இங்கு இருக்கும்போது 2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஆடியாவுக்கு தபாலில் பரிசாக வந்த தங்கக் கட்டிகளை அந்த பொக்கிஷத்தில் சேர்த்தது ஏன் அதற்கான தகவல் ஆதாரங்கள் உண்டா என்றும் சுவாமி கேட்டுள்ளார். இந்த தங்கக் கட்டிகள் கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் இந்தியாவை விட்டு ஓடி போன நீரவ் மோடி ஆடியாவுக்கு அளித்த அன்பளிப்பு ஆகும்.  இன்னும் ஆடியா ஒரு பச்சை பொய்யை துணிந்து சொல்லி வருகிறார் அவருக்கு அந்த தங்கக் கட்டிகளை யார் அனுப்பினார்? ஏன் அனுப்பினார்? என்பன தெரியாதாம். [ நம்புங்கள் நண்பர்களே]

அனில் அம்பானி, ரத்தன் டாடா ஆகியவர்களின் அறக்கட்டளைக்கு மத்திய அரசு அளித்த வரி விலக்குகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சுவாமி தகவல் கேட்டுள்ளார். சுங்கம் தொடர்பான ஒரு விஷயத்தில் அனில் அம்பானிக்கு நூறு கோடி ரூபாய்க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   அதுபோல டாட்டா அறக்கட்டளை நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்வரிவிலக்கை அளித்ததில் ஆடியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இது குறித்த தகவலையும் சுவாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போட்டு கேட்டுள்ளார். நெதெர்லாந்தில் வருமான வரி செலுத்தாமல் பிரச்சனையைச் சந்தித்து வந்த வோடஃபோன் நிறுவனத்துக்கு  இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக சமரசம் பேச ஏற்பாடு செய்தது ஏன்?

நிதி அமைச்சகம் சுவாமி கேட்ட தகவல் மனுக்களுக்கு பதில் அளிக்க  ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது. ஆடியா நிதி அமைச்சகத்தின் அனைத்து பிரிவு தலைவர்களையும் சுவாமிக்கு பதில் அளிக்கும் முன்பு தன்னிடம் ஆலோசித்த பின்பே பதில்களைத் தயார் செய்ய வேண்டும் எனு கடிதம் அனுப்பியுள்ளார். இது விவகாரமான விஷயம் என்பதால் தன்னை கலந்து கொள்ளாமல் யாரும் தன்னிச்சையாக சுவாமிக்கு பதில் அனுப்ப கூடாது என்று கட்டளை இட்டுள்ளார்.  ஆடியா அடுத்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிரார். இதே பணியில் நீடிக்க முயற்சி எடுத்துவருகிறார். அல்லது தேர்தல் ஆணையர் பதவியை பெறலாம் எனத் திட்டமிட்டுள்ளார். இந்நேரத்தில் இந்தக் கேள்விகளை அனுப்பி தகவல்களைக் கேட்டு சுவாமி அவருக்கு தீவிர மண்டைக் குடைச்சல் கொடுக்கிறார். ஜி எஸ் டி என் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் அல்லது தங்கக் கட்டிகள் தொடர்பாக ஆடியாவை நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி  அலைய வைக்க பார்க்கிறாரே என்று ஆடியா அரண்டு போயுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here