ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின்  ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது

இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ]  கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது

0
1717
இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ]  கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது
இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ]  கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் – சலாஃபி குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடர் கண்காணிப்பு

ஸ்ரீ லங்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த  ஐ எஸ் ஐ எஸ் என்ற சர்வதேச இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கும் கேரளாவுக்கும் இடையிலான தொடர்பு இப்போது அம்பலமாகி உள்ளது. திங்கட்கிழமை அன்று இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு ரியாஸ் அபூபக்கர் என்ற 29 வயது இளைஞனைக் கைது செய்தது.  அவருக்கும் ஸ்ரீ லங்காவில் குண்டு வைத்து 25௦க்கு அதிகமானோரைக் கொன்றழித்த ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் இணையத் தொடர்பு இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை தேசியப் புலனாய்வு அமைப்பு அபூ பக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகளில் அபு தஜானா என்று பெயரிட்டு அழைக்கப்படும் அபூ பக்கர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் காசர்கோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஐ எஸ் ஐ எஸ்  தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்.

தேசியப் புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் ‘’இன்று [(29.04.2018] என் ஐ ஏ ரியாஸ் என்ற ரியாஸ் அபூ பக்கர் என்ற அபு துஜானா என்பவரை கைது செய்தது. இவர் வயது 29, பாலக்காட்டை சேர்ந்தவர், காசர் கோடு மாவட்டத்தின் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர், [(RC No. 02/2016/NIA/KOC) தீவிரவாதச் செயல்களுக்கான சதித் திட்டம் தீட்டியவர் என்பதற்காக என் ஐ ஏ கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையின போது அவர்  அப்துல் ரஷித் அப்துல்லா என்ற அபு ஈசாவுடன் நீண்ட காலமாக இணைய வழித் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவருடைய ஒலிப்பதிவுகளைக் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். அபு ஈசாவின் ஒலிப்பதிவுகளுள் ஒன்று இந்தியாவில் பல் வேறிடங்களில் குண்டு வெடிப்பு நடத்துவது பற்றியதாகும். ஐ எஸ் ஐ எஸ் வழக்கில் வலப்பட்டணத்தில் [வாழப்பட்டணத்தில்] குற்றம் சாட்டப்பட்ட அபு காலித் என்ற அப்துல் கய்யோம்  என்பவருடனும் இணைய வழித் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அபூ பக்கர் விசாரணையின் போது தெரிவித்தார். ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த ஜஹ்ரான் ஹாஷிம் என்பவரின் காணொளிகளையும் ஒலிப்பதிவுகளையும் ஒரு வருடத்துக்கு மேலாகக் கேட்டு வந்திருக்கிறார். மேலும் கேரளாவில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்புக்கு  [என் ஐ ஏ] ஏற்கெனவே ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கும் சிரியாவுக்கும் போய்விட்ட அப்துல் ரஷித், அஷ்ஃபாக் மஜீத், அப்துல் கய்யோம் ஆகியோர் இங்கு சிலருடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. ‘இத்தகவலை உறுதி செய்துகொள்ளும் நோக்கத்தில் என் ஏ ஐ காசர்கோட்டில் இரண்டு இடங்களிலும் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் 28.04.2019 அன்று  ஆய்வு நடத்தியது. இந்த இடங்களில் மூன்று குழு உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2௦16 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதிவானது. ஏனென்றால் அக்கால கட்டத்தில்  திடீரென்று காசர்கோட்டில் இருந்து 15 இளைஞர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் அனைவரும் சிரியாவில் உள்ள ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டனர். இப்போது இந்த 15 பேரில் 14 பேர் ஆப்கானிஸ்தானிலும் ஒருவர் சிரியாவிலும் உள்ளனர். ஸ்ரீ லங்கா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ள ரியாஸ் அபூ பக்கர் வரும் ஏப்ரல் முப்பதாம் தேதி [இன்று] நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்’ என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புடன் தொடர்புடைய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜிஹாதி குழுக்களிடம் என் ஐ ஏ விசாரணை நடத்துகிறது. ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுக்களை இணையத்தில்  கேட்டுப் பரவசமாகி  அவரைப் பின்பற்றுகிறவர்கள் தமிழ்நாட்டிலும்  கேரளாவிலும் ஏராளமானோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here