மே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு

நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் - தீர்ப்பு 26 அன்று

0
1794
நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் - தீர்ப்பு 26 அன்று
நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் - தீர்ப்பு 26 அன்று

பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்களும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக  மோதிக்கொண்ட பிறகு நீதிபதி வரும் 26 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றார். திங்கள் அன்று சுவாமி சோனியா காந்தி தரப்பில் வேண்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தான் நீதிமன்றத்தில் அளித்துவிட்டதாகவும்  அதனால்  அவர் ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்  இனியும் வீண் விவாதங்களில் காலம் தாழ்த்த கூடாது என்று வாதிட்டார்.

முக்கிய குற்றவாளியான சோனியா காந்தியின் சத்தியப் பிரமாணப்படி அனைத்து மூலப்படிவங்களும் அவரிடமே உள்ளன. அவர் அவற்றின் நகல்களைத்தான் அவர் சமர்ப்பித்தார். அவரால் சான்றளிக்கப்பட்ட படிவத்தை நான் வைத்திருக்கிறேன். யங்  இண்டியன் என்ற பத்திரிகைக்கு வருமான வரி மதிப்பீடு செய்து 249 கோடி அபராதம் விதித்தற்கான ஒளிநகல் [ஜெராக்ஸ்] படிவமும் அளித்துள்ளேன். அந்த படிவத்தை  அவர்களும் உயர்நீதிமன்றத்திலும் அளித்துள்ளனர். நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக பத்து கோடி செலுத்தும்படி ஆணையிட்டுள்ளது. இப்போது அவர்கள் அந்த  ஆவணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இதை விடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறிய சுவாமி சோனியா காந்தியைக் குற்றவாளி என்று குறிப்பிட்டது காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு எரிச்சல ஊட்டியது. .

காங்கிரஸ் வழக்கறிஞர்களான ஆர். எஸ். சீமாவும் ரெபேக்கா ஜானும் அற்பத்தனமான வாதங்களை முன்வைத்து சுவாமி காலதாமதம் செய்வதாக கண்டனம் தெரிவித்தனர்.. அவர் சமர்ப்பித்தவற்றில் பெரும்பாலானவை நகல் படிவங்கள் என்றும புகார் மனுவில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி அவர் சமர்ப்பித்த நகல்கள் நம்பகத்தன்மை உடையன அல்ல என்று வாதிட்டனர்.

சுவாமி தான் உச்ச நீதிமன்றத்துக்கு போய் குற்றவாளியிடம் இருந்து சான்றளிக்கப்பட்ட படிவங்களை கேட்டு வழக்கு பதிவு செய்வேன் என்றார். ஒளி நகலொ வேறு நகலொ? அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது மறுத்துவிடுங்கள். இதை  நீங்கள் செய்ய மறுப்பதேன்? மூல படிவங்கள் உங்களிடம் தானே இருக்கின்றன என்றார்.

முப்பது நிமிடங்கள் விசாரணையும் குறுக்கு விசாரணையும் நடந்த பிறகு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி சமர் விஷால் வரும் 26ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here