1954 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் ஜனாதிபதியின் உத்தரவால் இந்திய அரசியலுரிமை சட்டத்தில் பிரிவு 35A ரகசியமாக சேர்க்கப்பட்டது. [பாராளுமன்ற அனுமதி பெறாத இச்சட்டம் மக்கள் விரோத சட்டமாகும்] எனவே இந்த நாள் ஒரு கருப்பு தினமாகிறது.
இந்த சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீரில் வாழாத அனைத்து பொது மக்களும் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளும் குறிப்பாக அம்மாநிலத்துப் பெண்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு இந்த சட்டம் மிகுந்த ஆத்திரத்தை உண்டு பண்ணுகிறது. இந்த ஆத்திரத்தை அவர்கள் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் அங்கு முதல்வர் மெஹ்பூபா முப்தியின் அரசில் பங்கு வகிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் காட்டுகின்றனர். தற்போதைய இந்த ஆத்திரத்துக்கான காரணங்களையும் நோக்கங்களையும் விட்டுவிடுகிறேன். காஷ்மீரி தலைவர்களும் பிரிவினைவாதிகளும் முப்தியின் முழு ஆதரவோடு இணைந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீரில் வாழாதவர்களும் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் பெண்களும் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து -சீக்கிய அகதிகளும் எதிர்க்கட்சியை சேர்ந்த பாருக் அப்துல்லாவும் அவர் மகன் ஓமர் அப்துல்லாவும் முதல்வரும் சைபுதீன் சோஸ் முதலான காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக மேஹ்பூபா துணிச்சலான ஒரு செயலை செய்தார். தன் வீட்டை விட்டு கிளம்பி ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்கு போய் அவரை சந்தித்து இந்த சட்டப் பிரிவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது காங்கிரஸ் முதலான மற்ற கட்சிகளை இவர்கள் பரம எதிரிகளாக கருதும் எண்ணத்தை உறுதி செய்கிறது. மேலும் இது காஷ்மீரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாகிவிட்டது.
சட்டப் பிரிவு 35A என்றால் என்ன?
சட்டப் பிரிவு 35A என்றால் என்ன? அது என்ன சலுகை அளிக்கிறது? இச்சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் வாழாத இந்தியர் எவரும் அந்த மாநிலத்தில் ஒரு கையளவு இடம் கூட வாங்க உரிமையில்லை எனத் தெரிவிக்கிறது.. இந்த சட்டப்படி இந்தியாவின் ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி கூட அந்த மாநிலத்தில் சொத்து வாங்க முடியாது.
இந்த சட்டப் பிரிவில் யார் கை வைத்தாலும் விளைவு பயங்கரமாக இருக்கும் என்று காஷ்மீரி மக்கள் அச்சுறுத்துகின்றனர். ஜம்முவிலும் லடாக்கிலும் வசிப்பவர்களுக்கும் வேறு வழியில்லை என்பதால் அவர்களும் இவர்களுடன் ஒத்துப்போகின்றனர். இந்த சட்டப்பிரிவை சிறிது மாற்றினாலும் கூட இந்திய தேசியத்துக்கு ஆதரவு கிடையாது என மிரட்டுகின்றனர். இவ்வாறு மாற்ற நினைப்பவர்கள் காஷ்மீரின் முஸ்லிம் மக்கள் தொகையை நசுக்க திட்டமிடுவதாகக் கருதுகின்றனர். அங்கு இப்போது 99.99% பேர் முஸ்லிம்கள் ஆவார். இது நம் மீது அவர்கள் வைக்கும் அபாண்டமான குற்றச்சாட்டு
1954இல் நேரு அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டாமல் அங்கு விவாதிக்காமல் தன்னிச்சையாக இச்சட்டத்தை இயற்றி பிறர் அறியாமல் ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்கி பின்னிணைப்பாக சேர்த்துவிட்டார்.
சட்டப் பிரிவு 35A என்றால் என்ன? அது என்ன சலுகை அளிக்கிறது? என்றால் இச்சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் வாழாமல் மற்ற மாநிலத்தில் வாழும் எவருக்கும் அங்கு நிலம் வீடு என சொத்துக்கள் வாங்க உரிமையில்லை. இந்த சட்டப்படி ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி கூட அந்த மாநிலத்தில் ஒரு அங்குல இடம் கூட வாங்க முடியாது. இந்த சட்டப் பிரிவு இந்தியாவில் மற்ற மாநிலத்தாருக்கும் காஷ்மீர் மக்களுக்கு இடையே ஒரு தடுப்பு சுவரை எழுப்பியுள்ளது.
மேலும் இச்சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு அங்கு வசிக்கும் ஒருவருக்கு குடியுரிமை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது. அங்கு மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சென்று படிக்கவும் அரசின் உதவிபணம் பெறவும் இயலாது. சட்டப்பிரிவு 35A
இந்த சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் வாழாத அனைத்து இந்தியரையும் பாகிஸ்தானில் இருந்து வந்து அங்கு வசிக்கும் இந்து அகதிகளையும் மொத்தத்தில் ஏழைப் பெண்களையும் பெருமளவில் பாதிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானில் உள்ள சியல்கோட் பகுதியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் இந்து-சீக்கிய அகதிகள் இங்கு வந்தனர். அவர்களுக்கும் அங்கு குடியுரிமை இல்லை. அவர்களும் சொத்து வாங்கும் உரிமை, கல்வி உரிமை, அரசு பணிகளுக்கான உரிமை, ஒட்டு போடும் உரிமை, வங்கியில் கடன் பெறும் உரிமை என எந்த உரிமையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்திய தேசியவாதிகள் ஆனால் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. அவர்களும் சுமார் ஐம்பதாண்டுகளாக நீதி கேட்டு போராடுகின்றனர் ஆனால் எந்த பலனும் இல்லை.
ஜம்மு காஷ்மிரில் பெண்களை திருமணம் செய்பவர் மற்ற மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கும் அவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடையாது. அவர்களின் நிலையும் பாகிஸ்தானில் இருந்து வந்த கைதிகளின் நிலையும் ஒன்று தான்.
இந்த சட்டப்பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக இந்த மாதம் ஒன்றாம் தேதி அந்த மாநிலத்தில் தடகள வீராங்கனை ராதிகா கில், ஜம்மு பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் வரலாறு படிக்கும் ஏகலவ்யா, ஜம்முவில் காந்தி நகரின் வால்மீகி காலனியை சேர்ந்த விஜயகுமார், ஆகியோர் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு சஃபாய் கரம்சாரி எனப்படும் நாற்பதாயிரம் துப்புரவு பணியாளர் சார்பில் தொடுக்கப்பட்டது. இவர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக இங்கு வசித்துவந்த போதும் இவர்களுக்கு துப்புரவு பணி தவிர வேறு பணிகள் தர முடியாது என காஷ்மீர் அரசு தெரிவிப்பதால் இவ்வழக்கு போடப்பட்டுள்ளது.
1957இல் ஜம்மு காஷ்மீர் அரசால் குர்தாஸ்பூர் மற்றும் அம்ரித்சாரில் இருந்து அம்மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் அங்கு வேலை பார்த்து வந்த துப்புரவு பணியாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இவர்களை மாநில அரசு பணிக்கு அமர்த்தியது. இப்போது இவர்கள் துப்புரவு பணியை மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர்.
இந்த வழக்கில் அவர்கள் பிறந்ததில் இருந்து அந்த மாநிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு எநத உரிமையும் இல்லாததால் அவர்கள் தங்களுக்கு மாநில உதவி பெறும் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி, ஆசிரியவியல் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் உரிமை, மாநில அரசில் வேலை பார்க்கும் உரிமை ,சொத்து வாங்கும் உரிமை, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, ஆகியன வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் 1957இல் இங்கு குடிபெயர்ந்து வந்த 272 சஃபாய் கரம்சாரிகளின் வழி வந்தவர்கள் ஆவர்.
நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர், இது அரசியலுரிமை சட்டத்தின் மீது எழுப்பப்படும் கேள்வி ஆதலால் அது சார்ந்த மற்ற வழக்குகளுடன் இதுவும் சேர்க்கப்படும் என்றார். விசாரனைக்கான மறு தேதியாக மே மாதம் பதினான்காம் தேதி தெரிவிக்கப்பட்டது. தற்செயலாக இந்த தேதி இதே அரசியலுரிமை சட்டம் அறிவிக்கப்பட்ட தேதியாகவே அமைந்துவிட்டது. இந்த நாள் இந்திய அரசியலுரிமை சட்டத்தின் கருப்பு தினம் ஆகும்
மத்திய அரசின் கட்டளைப்படி இந்த சட்டப்பிரிவின் மீதான வழக்குகளை 2017 ஆம் ஆண்டு அக்டேபர் மாதம் 30ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அப்போது அரசு வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால் அரசு தனது சார்பில் சில கருத்துக்களை தெரிவிக்க தீனேஷ்வரை நியமித்திருப்பதால் உச்ச நீதிமன்றம் ஆறு மாதத்துக்கு இவ்வழக்கை தள்ளி வைப்பதாக அறிவித்தது. டில்லியில் செயல்பட்டு வரும் ‘நாங்கள் குடிமக்கள்’ [We the citizens] என்ற பொது நலத்தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கில் அரசு தனது சத்திய பிரமாணத்தை பதிவு செய்ய விரும்பவில்லை.என்று அட்டர்னி ஜெனெரல் தெரிவித்துவிட்டார். இந்த வழக்கு குடியரசு தலைவர் இந்த சட்டப்பிரிவை கொண்டு வந்திருக்கவே மாட்டார் என்று சவால் விட்டது.
இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் யுனியன் பிரதேசங்களிலும் வாழ்கின்ற அனைவரும் சம உரிமை பெறுவதாக அரசியலுரிமை சட்டத்தின் முன்னுரை குறிப்பிட்டுள்ளது. அந்த சம உரிமையை அனைவருக்கும் வழங்க மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இணைந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.