
சில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகையாளர்களும், திரு.மோடி பிரதம மந்திரியாக பதவி ஏற்றபின், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கணிசமான அளவில் பெருகியுள்ளது என்றுகுற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தியாவில் தற்போது நிலவும் நிலைமையை கவனமாக ஆராய்ந்தால், வேலையில்லா நிலைமை பெருகியுள்ளது என்ற குற்றச்சாட்டுமிகைப்படுத்தப்பட்ட வாதம் என்பது தெளிவாக புரியும்.
வேலையில்லாத நிலைமை பெருகியுள்ளது என்று சில அரசியல் கட்சிகள் குறை கூறும் நிலையில், பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
வேலையில்லாத நிலையை குறித்து நம்பகத்தன்மையான புள்ளிவிவரங்கள் யாரிடம் உள்ளது?
அரசாங்கம் நடத்தும் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலுள்ள (Employment Exchange) புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு வேலையில்லா நிலைமை பெருகியுள்ளது என்றுகூறப்படுகின்றது. உண்மை நிலை என்னவென்றால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தங்களது பதிவுகளை புதிப்பித்து கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில்; பெரும்பாலோர் தனியார் அலுவலகங்களில் வேலை செய்கின்றனர் அல்லது சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ததின் முக்கிய நோக்கம் அரசுஅலுவலகங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான், அரசு வேலை கிடைக்கும்வரை தங்களது பதிவுகளை அவ்வப்போது புதிப்பித்து கொண்டு வருகின்றனர். அரசு வேலையில் அமர்ந்தால் கிடைக்கும் சுகம், அவ்வப்போது சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகளை குறித்து மக்களிடம் அரசு வேலையில் அமர்வதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.
பதிவு செய்தோர் மீண்டும் பதிவை புதிப்பித்து கொண்டு வரும் நிலையில், புதியதாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடி பதிவு செய்வதால் பதிவு செய்தோரின்எண்ணிக்கை அசுர வேகத்தில் கூடிவருகிறது.பதிவு செய்தோர் மீண்டும் பதிவை புதிப்பிக்கும் போது உண்மையிலேயே அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா என்றுவேலைவாய்ப்பு அலுவலகங்கள் தீவிரமாக கண்காணிப்பதில்லை.
சில அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அவ்வப்போது வேலைவாய்ப்பு நிலவரத்தை குறித்து புள்ளிவிவரங்களை சேகரித்து ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம்.ஆனால், இந்த ஆய்வறிக்கை சிறிய அளவில் மக்களிடம் விவரங்களை கேட்டு, அந்த புள்ளிவிவரங்களை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தி தங்களது கருத்தை தெரிவிக்கின்றன. 130கோடி மக்கள் தொகையுள்ள, பரந்து விரிந்துள்ள இந்திய நாட்டில் சிறிதளவில் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில், வேலைவாய்ப்பு நிலைமையை குறித்து தீர்மானிப்பதில் தவறுகள்ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தேர்தல் முடிவுகளைப்பற்றிய கருத்து கணிப்பில், சிறிதளவு மக்களின் கருத்தை அறிந்து கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்ததையஅணுகுமுறையில் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு செய்வது சரியான வழியல்ல.
இந்தியாவில் வேலை செய்பவர்களை, அமைப்பு சார்ந்த ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் (Unorganised working class) என்று இரண்டுவிதமாக பிரிக்கலாம். நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 60 சதவீத மக்கள் வேலைக்கு செல்லும் வயதில் உள்ளவர்களாக கணக்கில் கொள்ளலாம். இவர்களில் சுமார் 90 சதவீதம் மக்கள் அமைப்பு சாராத அமைப்புகளின்ஊழியர்கள் ஆவர். இவர்களில் சிலர்
முழுதளவில் அல்லது பகுதி அளவில் (semi skilled) தொழில் தெரிந்தவர்களாக இருக்கலாம்.மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட துறையில் திறமையில்லாமல் கூலி வேலை, விவசாயம்,கட்டுமானப்பணி, போன்ற பல துறைகளில் தங்களது தகுதிக்கும்,திறனுக்கும் ஏற்றவாறு பணியாற்றி கொண்டிருப்பவர்கள். இதில் ஆண்களும், பெண்களும் அடங்குவர்.
ஏராளமானவர்கள் சொந்த தொழில்., சிறு வியாபாரம், வீட்டு வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களை வேலையில்லாதவர்களாக கருதக்கூடாது. இந்த நிலை குறித்து விளக்கும்போது, பிரதம மந்திரி மோடி தெருவில் பக்கோடா விற்பவர்களும் வேலையுள்ளவர்களே என்று கூறினார். இதில் என்ன தவறு?
உண்மை நிலை என்னவென்றால் வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதே . அத்தகைய வேலைவாய்ப்புகளோஅல்லது சொந்த தொழில் வாய்ப்புகளோ அவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.
வேலையில்லாத நிலைமை பெருகியுள்ளது என்று சில அரசியல் கட்சிகள் குறை கூறும் நிலையில், பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டில் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் சிறிய வேலை செய்ய மின் பணியாளர் (எலக்ட்ரிஷியன்), தச்சர் (கார்பென்டர்), வெல்டர் போன்றவர்கள் கிடைக்காமல் பல நாட்கள்காத்திருக்க வேண்டியுள்ளது என்ற நிலைமையை பலரும் எடுத்துக் கூறுவதை தினந்தோறும் கேட்டு வருகிறோம்.
விவசாயத்துறையில், கட்டுமானத்தொழிலில் ஆட்கள் தேவையான அளவில் கிடைக்கவில்லை என்று கூறி, வேறு வழியில்லாமல் இயந்திரங்களை அதிக அளவு உபயோகிக்க வேண்டியகட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாயத்துறையில் உழுவதற்கும், அறுவடை செய்யவும், போதுமான அளவு ஆட்கள் கிடைக்காததால், டிராக்டர் உபயோகிக்கப்படுவது வேகமாகஅதிகரித்துவருகிறது.
சில தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டால் பத்திரிக்கைகளில் விரிவாக செய்திவருகிறது. ஆனால்,ஆயிரக்கணக்கானோர், வேலைகளில் அமர்ந்து வருகிறார்கள் இது செய்தியாக வெளியிடப்படுவதில்லை.
அரசுத்துறைகளில் நிர்பந்;தமாக வேலை குறைப்பு செய்வது அபூர்வம். நிறுவனங்களில் விருப்ப ஒய்வு திட்டம் (Voluntary retirement) அமல்படுத்தும் போது, ஏராளமானோர் விருப்ப ஒய்வுபெற விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தங்களது விருப்பத்திற்கும், சௌகரியத்திற்கும் ஏற்றவாறு வேறு வேலை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையே என்பதாகும்.
இந்தியாவில் பல குறை கூறும் செய்திகள் பத்திரிகையில் வெளிவரும் போது மக்கள் நம்பிவிடுகின்றனர். அந்த செய்தியை சீர்தூக்;கி ஆராய மக்களுக்கு தேவையான வசதிகள் இல்லை.இந்த நிலையில் தான், வேலையில்லா நிலைமை கூடிவருகிறது என்ற குறை கூறும் விமர்சனங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக உள்ளன.
இந்தியாவின் பொருளாதார நிலைமை (Gross domestic product – GDP) ஆண்டொன்றிற்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கூடிவருகிறது என்ற உண்மையை எல்லோரும்ஒப்புக்கொள்கின்றனர். பொருளாதாரம் இந்த அளவில் கூட வேணடுமென்றால் தொழில்துறையும், சேவைத்துறையும், வேறு பல துறைகளும் முன்னேற வேண்டும்.இத்தகையமுன்னேற்றம் ஏற்படும் போது, வேலைவாய்ப்புகள் எப்படி கூடாமலிருக்கும் ?. கூடாமலிருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
இந்த நிலையை, வேலை ஏற்படுத்தாத முன்னேற்றம் (Jobless growth) என்று சில எதிர்;கட்சிகள் வர்ணிக்கின்றன. இந்த விமர்சனம் செய்திதாள்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தக் கூடியதலைப்பாக இருக்கலாம் ஆனால், வேலைவாய்ப்பு ஏற்படுத்தாத முன்னேற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமல்ல.
இயந்திர மனிதன் (robot) போன்ற இயந்திரம் செய்யும் முறைகள் ஏற்பட்டாலும், அவற்றை சார்ந்த பல உபதொழில் வாய்ப்புகள் (பராமரிப்பு போன்றவை) ஏற்பட்டு வருகின்றன.
130 கோடி மக்களுள்ள இந்தியாவில் சுமார் 40 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர். எதிர்கட்சிகள் கூறுவது போல அபரிமிதமான வேலையில்லா நிலைமை இருப்பின், ரகளையும்,போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்திருக்கும். இத்தகைய அவலமான நிலை ஏதும் ஏற்படவில்லை.
இன்று வேலையில்லாமல் இருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளாகவோ அல்லது பார்வையற்றவர்களாகவோ இருக்கலாம். இவர்களுக்கு வேலைக்கு அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடுஇருப்பினும், அவை முழுவதுமாக நிரப்பப்படவில்லை. தனியார் துறையிலும் இவர்களுக்கு வேலை கொடுக்க தயங்குகிறார்கள். ஆனால,; சமூக ஆர்வலர்கள், மற்றும்மாற்றுத்திறனாளிகளின் இயக்கங்களின் அயராத முயற்சியால் இந்த நிலை மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது.
எந்த தொழிலிலும் திறமை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடல் உழைத்து கூலி வேலை போன்ற வேலையில் ஈடுபட விருப்பமில்லாதவர்களாக சிலர் இருக்கலாம். சில பட்டதாரிகளுக்கும்,பொறியியல் படித்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது. எந்த குறிப்பிட்ட தொழிலிலும் திறமை வளர்த்து கொள்ளாதவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகஉள்ளது. இவர்களெல்லாம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் நிலையையே விரும்புகின்றனர். எத்தனை குமாஸ்தாக்களை நாட்டில் அமர்த்த முடியும்?
இந்த நிலையை சரியாக புரிந்து கொண்டுள்ள மோடி அரசு, தொழில் கற்றுக் கொடுப்பதற்கும், நிர்வாக அறிவை ஏற்படுத்தவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து தனிப்பட்டமக்களின் திறனை (Skill development programme) வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி முகாம்களை நாடெங்கிலும் அமைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்று வேலையில்அமர்ந்துள்ளார்கள்.சொந்த தொழில்களை தொடங்கியுள்ளனர்.