ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 2

ஜின்னா ஆசைப்பட்டது போல பஞ்சாப் மற்றும் பெங்காலை பாகிஸ்தானோடு முழுமையாக இணைக்க முடியவில்லை

0
2833
ஜின்னா ஆசைப்பட்டது போல பஞ்சாப் மற்றும் பெங்காலை பாகிஸ்தானோடு முழுமையாக இணைக்க முடியவில்லை
ஜின்னா ஆசைப்பட்டது போல பஞ்சாப் மற்றும் பெங்காலை பாகிஸ்தானோடு முழுமையாக இணைக்க முடியவில்லை

ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 1.

கேரிசன் நாடு [இராணுவ நாடு]
பேரா. அகமது தன்னுடைய நூலில் பாகிஸ்தான் எவ்வாறு இராணுவத் தலைமையை ஏற்கும் நாடாக மாறியது என்கிறார். அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ரேட்க்லிஃப்ல் என்ற பிரிட்டிஷ்காரரால் வரையப்பட்ட ரேட்க்லிஃப் எல்லை கோடு இந்தியாவுக்கே சாதகமாக அமைந்துவிட்ட்து என்று சொல்லிவிட்டு தனது நாட்டை இராணுவ நாடாக மாற்றிவிட்டனர், என்கிறார்.

இவ்வாறு பாகிஸ்தான் மாறியதற்கு முக்கிய காரணம் ஜின்னா ஆசைப்பட்டது போல பஞ்சாப் மற்றும் பெங்காலை பாகிஸ்தானோடு முழுமையாக இணைக்க முடியவில்லை. டில்லிக்கு அருகில் குர்காவோனில் சர்வதேச எல்லைக்கோடு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் வருகிறது. அங்கு வரை பஞ்சாப் விரிந்து படர்ந்து இருக்கிறது. அதனால் ஜின்னா பஞ்சாபை முழுமையாக கைப்பற்ற நினைத்தார். அது முடியவில்லை. அப்படி நடந்திருந்தால், இந்தியா, இன்று இராணுவத் தலைமை ஏற்ற நாடாக மாறியிருக்கும். இந்தியாவில் எல்லையைக் குறிக்கும் சரவதேச எல்லை கோடு லாஹூர் [16 கி மீ], சியால்கோட் [18 கி. மீ], குஜ்ரான்வாலா [28 கி மீ] மற்றும் இன்னும் அருகில் ஷேகுபுரா வழியாக செல்கிறது,
என்கிறார் பேரா.அகமத்.

தரை போர் நடந்தால் பஞ்சாப் முழுவதும் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால் பாகிஸ்தான் எப்போதும் தனது நாட்டின் எல்லையை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது அதற்காக இராணுவத்தை பலப்படுத்தி அதன் கீழ் மக்களை கொண்டு வந்தது.

ஆக பஞ்சாபை பிரித்ததன் விளைவாக பாகிஸ்தான் இராணுவ நாடாக பரிணமித்தது. ரேட்க்லிஃப் எல்லை கோடு பாகிஸ்தானுக்கு பாதகமாக அமைந்துவிட்டது என்று அவர்கள் தெரிவித்தாலும் நான் முஸ்லீம் லீக் கட்சி கேட்டுக்கொண்டபடி 99.9% பாகிஸ்தானியருக்கு அந்த எல்லைக்கோடு ஆதரவாகவே அமைந்தது என்பதை சவால் விட்டு சொல்வேன் என்று ஆவேசப்படுகிறார், பேரா. அகமத்.

பஞ்சாப் எல்லை ஆணையம் விவாதம் நடத்திய போது, முஸ்லீம் லீக் அவர்களிடம் ‘முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி அப்படியே எங்களுக்கு கத்திரித்து விடப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தது. “இந்துக்களும் சீக்கியரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த நூறு ஆண்டுகளாக பஞ்சாபுக்கு எண்பது சதவீத வருவாய் இவர்களிடமிருந்தே கிடைத்தது. மேலும் பஞ்சாபில் இவர்களுக்கு தொழில் கூடங்களும் வீடுகளும் என ஏராளமான சொத்துக்களும் உண்டு” என்று வாதிட்டதாக பேரா அகமத் எடுத்துரைக்கிறார்.

இதற்கு எதிராக முஸ்லீம் லீக் வாதிட்ட போது பஞ்சாபில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் முதல் அடிப்படையே தவிர சொத்து, வருமானம், தொழில், போன்றவை இரண்டாம் பட்சம் என்று தெரிவித்துவிட்டது. எனவே பஞ்சாப் முழுதும் பாகிஸ்தானில் சேர வேண்டும் என்று வாதிட்டது. முஸ்லீம் லீக் லாஹூரை கேட்டது, அதே சமயம் சீக்கியர்களும் அது குரு அர்ஜுன் சிங்கின் பிறப்பிடம் என்பதால் தங்களுக்கு வேண்டும் என்றனர். சியால்கோட்டுக்கு சீக்கியரும் இந்துக்களும் தனித்தனி சமயம் மற்றும் புராணக் காரணங்களுக்காக வேண்டும் என்று வாதாடினர்.

சீக்கியர் ஷேகபுரா, நான்கானா சாஹிப், குஜ்ரன் வாலா [இது மகாராஜா ரஞ்சித் சிங்கின் பிறப்பிடம்] ஆகிய இடங்கள் தமது மதம் தொடர்பான இடங்கள் என்பதால் கேட்டனர். அத்துடன் மான்டோகோமெரி, அல்லது சாஹிவால், மற்றும் லியால்பூர் பகுதிகளில் அவர்களுக்கு நிறைய இடங்கள் சொந்தமாக இருந்ததனால் அவற்றையும் வேண்டும் என கேட்டனர். ஆனால் இப்போது நீங்கள் பார்த்தால் இந்த இடங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருப்பது புரியும் என்வே ரேட்க்லிஃப் எல்லைக்கோடு இந்தியர்களுக்கு ஆதரவானது என்று குற்றம் சுமத்துவது அறிவீனம் ஆகும், என்று கடுமையாகச் சாடுகிறார், பேரா அகமது.

இந்தியாவின் வைஸ்ராயாக [1943 -47] இருந்த வேவெல் குர்தாஸ்பூரை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருந்தார். அது நம் நாட்டுக்கு இய்றகையான வேலியாக அமைந்துவிடும். மேலும் அம்ரித்சாரை சுற்றிலும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் வாழ்வதால் அவர் இந்த முடிவுக்கு வந்தார். ஆனால் குர்தாஸ்பூரில் அதிகமாக கிடைக்கவில்லை. மாறாக காஷ்மீர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. ஹோஷியார்பூர் வழியாக இந்தியாவில் இருந்து காஷ்மீர்ருக்கு செல்ல வழி
ஏற்பட்ட்து 1947இல் வைசிராயாக பொறுப்பேற்ற மவுண்ட்பேட்டன் இந்தியர் கேட்ட எந்த நிலப்பகுதியையும் தரவில்லை. வேவெல் தருவதாக சொன்னவற்றையும் அவர் பாகிஸ்தானுக்கே கொடுத்துவிட்டார்.

வேவெல் இட்நியர் கேட்டதெல்லாம் அவருக்கு தருவதாக வாக்களித்திருந்தார், என வேவெலுக்கு ஆதரவாக பேசுகிரார் பேரா அகமது. “குர்தாஸ்பூர் என்பது சின்ன விஷயம் தான்; ஆனால் முஸ்லீமாகிய நாங்கள் ஒரு சின்ன விஷயத்தை கூட மற்றவர்களுக்கு விட்டு தர மாட்டோம். என்றனர் பாகிஸ்தானியர்.

ஒப்பீடு

1947இல் இந்தியாவில் 9.5% ஆக இருந்த முஸ்லிம்கள் இன்று 14.4 %ஆக வளர்ந்துள்லனர். ஆனால் பாகிஸ்தான் பிரிவினையான நாளில் இருந்தே மற்ற மதத்தவரை ஒடுக்கி ஒடுக்கி அவர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டது.

பாகிஸ்தான் பிரிந்த போது அங்கிருந்த இந்துக்களும் சீக்கியர்களும் அங்கேயே இருந்திருந்தால் அவர்களும் இன்று பத்து பதினோரு சதவீதம் அதிகமாக எண்ணிக்கையில் பெருகி இருப்பர்.

சில இந்துக்கள் சிந்து பகுதியில் இருந்துவிட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இந்து என்று அடையாளம் காட்ட ஒருவர் கூட இல்லை. பாகிஸ்தானில் பஞ்சாபியப் பண்பாடு கலாச்சாரம் என்று சொல்லிக்கொள்ளவும் அவர்கள் எதுவும்
மிச்சம் வைக்கவில்லை. அங்கு வாழ்ந்த கிருஷ்ண சந்தர் இல்லாமல் பஞ்சாபின் கலாச்சாரம் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியுமா? ஆனால் இன்று எதுவும் அங்கு கிடையாது.

இன்றைக்கு கிருஷ்ண சந்தர் பற்றி அங்கு யாரும் பேச முடியாது. அவரை யாருக்கும் தெரியாது. மன்டொ டே [சாதத் ஹாசன்] அங்கு இப்போது கொண்டாடப்படுகிறார். யாரும் கிருஷ்ண சந்தர் பற்றி மூச்சு விடுவதில்லை. பேசினால் தணடனைக்குள்ளாவார்கள்.

நமக்கு நம்முடைய கடந்த காலம் குறித்து எதுவுமே தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here