விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா?

விவசாயிகள் தங்களது போராட்ட திட்டங்களையும், அணுகுமுறைகளையும், அரசு ஊழியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றமரபு சார்ந்த அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்

0
1544
விவசாயிகள் தங்களது போராட்ட திட்டங்களையும், அணுகுமுறைகளையும், அரசு ஊழியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றமரபு சார்ந்த அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்
விவசாயிகள்

இந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் ஆவர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (GDP), சுமார் 17 சதவீதம் விவசாயதுறையினால் தான் ஏற்படுகின்றது. கிராமப்புறங்களில் சுமார் 70 சதவீதம் மக்கள் விவசாய தொழிலை சார்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர்.

சமீப காலங்களில் நாடெங்கும் விவசாயிகள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும், அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை மற்றும்பல அரசின் நலத்திட்டங்கள் தங்களை சரியான முறையில் அடைவதில்லை என்று கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களில்ஈடுபடும் நிலையை கண்டு, நாட்டு மக்கள் கவலையோடு விவசாயிகளின் நிலைமையை கவனித்து வருகின்றனர்.

தொன்று தொட்ட காலம் முதல், இந்தியாவில் விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும், விவசாயத் தொழில் பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வருகின்றது.விவசாயிகளின் உழைப்பினால் தான் நமக்கு அன்றாட உணவு கிடைக்கின்றது என்பதை உணர்ந்திருக்கும் மக்கள், விவசாயிகளின் பிரச்சினைகளையும், போராட்டங்களையும்பொதுவாக ஆதரவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று உள்ள நிலையில், எந்த அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளைபுறக்கணிக்க முடியாது. அப்படி செய்தால், அந்த அரசு மக்களால் தேர்தலில் பெரிதளவில் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.

அதே சமயம், விவசாயிகளின் போராட்டங்களில் சில தருணங்களில் வன்முறை ஏற்படுவதாலும், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற விளைபொருட்களை வீதிகளில் வீசிஎறிந்தும், பாலை வீதிகளில் ஊற்றி ஒடச்செய்தும் போராட்டங்கள் நடத்தப்படுவதாலும், விவசாயிகளின் போராட்டங்களின் அணுகுமுறையில் எந்த அளவில் நியாயம் உள்ளது என்பதுகுறித்து நாட்டு மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

அரசின் அணுகுமுறைகள்

விவசாயிகள் தங்களது போராட்டங்களில் சுவாமிநாதன் குழுவினர்; ஆய்வு அறிக்கையையும், சிபாரிசுகளையும் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டுமென்று கோரிவருகின்றனர். சுவாமிநாதன் குழுவின் ஆய்வறிக்கை 2004 முதல் 2006ம் ஆண்டு காலகட்டத்தில், ஐந்து அறிக்கையாக நீண்ட ஆலோசனை மற்றும் ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுமத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சுவாமிநாதன் குழுவின் ஆய்வறிக்கையில் நீர்ப்பாசன முறையில் சீர்திருத்;தம், நில உடைமையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், விளைபொருட்களின் உற்பத்தி திறனை கூட்டவேண்டிய தேவை, ஆராய்ச்சி மூலமும், அரசின் ஊக்க திட்டங்களாலும் ஏற்படுத்தக் கூடிய முன்னேற்ற வாய்ப்புகள்,சந்தையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை விலை நிர்ணயம் போன்ற பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

நிதர்சனமான நிலை என்னவென்றால், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசுகள் சுவாமிநாதன் குழு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பல சிபாரிசுகளை நிலைமைக்குஏற்றபடி, முடிந்த அளவில் அமல்படுத்தியுள்ளது. இதனை மறுக்க முடியாது.

விவசாயிகளின் முன்னேற்றத்தை குறித்து அரசு அமல்படுத்திய திட்டங்களில், கிசான் க்ரேடிட் கார்டு, விவசாய பயிர் காப்பீடு (Crop insurance policy) விவசாயத்திற்கு இலவசமின்சாரம், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் இணைய வர்த்தக முறை (e-commerce) விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விளைபொருட்களின் குறைந்த பட்ச விலை நிர்ணயம் போன்றவைகள் அடங்கும். மேலும், இடைத்தரகர்களின் பங்கை குறைக்கநடவடிக்கை, விவசாயம் சார்ந்த சில உப தொழிற்களான ஆடு வளர்த்தல் போன்றவற்றிற்காக ஊக்கம் அளிப்பது போன்ற பல நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

பலவிதமான மண்வளம், பருவ நிலைகள், விவசாயிகளின் பலவிதமான பாரம்பரிய எண்ண ஓட்டங்கள், நம்பிக்கைகள் உள்ளடக்கிய, பரந்து விரிந்துள்ள இந்திய நாட்டில், அரசு பலநடவடிக்கைகள் எடுத்திருப்பினும், விவசாயிகளுக்கு திருப்தி ஏற்படும் அளவில், போதுமான அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது ஒரளவு உண்மை. மேலும், சமீப காலங்களில்பருவகாலங்கள் அடிக்கடி மாறி வருவதால் எதிர்பார்த்த காலங்களில் மழை பெய்யாமலும்,சில சமயங்களில் அபரிமிதமாக மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதாலும், அண்டை மாநிலங்களுக்குள் தண்ணீரை பங்கு செய்து கொள்வதில் அரசியல்வாதிகளின் முதிர்ச்சி குறைவினால் ஏற்படும் நடைமுறை சிக்கலினாலும், பல பிரச்சினைகள் விவசாயிகளுக்குஏற்பட்டு அவர்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில், மத்திய அரசும் சில சமயங்களில் செய்வதறியாது குழம்பி போய்விடுகின்றது

சுவாமிநாதன் குழு அறிக்கையில், 10 சதவீதம் அளவு விவசாயிகளிடம்;, நாட்டிலுள்ள விவசாய நிலத்தில் 54 சதவீதம் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவாமிநாதன் குழுஆய்வறிக்கையில் நாட்டிலுள்ள விவசாய நில பரப்புகளை பரவலாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பரிந்துரை கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையைநிறைவேற்றுவது மிகவும் கடினம். ஏன் சாத்தியமில்லை என்று கூட கூறலாம்.

கேரளாவில், பல ஆண்டுகளுக்கு முன் நம்பூதிரிபாட் முதலமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் அரசு நில உடைமைகளை விவசாயிகளிடம் பரவலாக விநியோகிக்க முயற்சிசெய்தது.அதிக அளவு விவசாய நிலத்தை உடைமையாக கொண்டவர்களை எதிர்த்து போராட்டம் நடத்த, விவசாய ஊழியர்களும், கட்சி தொண்டர்களும் ஊக்குவிக்கப்பட்டனர். இதற்குவேண்டி பல நில சீர்திருத்த திட்டங்களும்; அமல்படுத்தப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கையின் முடிவு மோசமான நிலையை ஏற்படுத்தியது. விவசாய துறையில்வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் ஏற்பட்டன. விவசாயிகளின் மத்தியில் பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு மாறிய போது இத்தகைய வன்முறையை தூண்டிய நில சீர்திருத்ததிட்டங்;கள் கைவிடப்பட்டன.

விவசாயிகள் என்பவர் யார்?

விவசாயிகளின் போராட்டங்களை குறித்து விவாதிக்கும் போது, எத்தகைய நிலையிலுள்ள விவசாயிகளை குறித்து பேசுகிறோம் என்பதை குறித்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது.

விவசாயிகளை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.

ஒன்று, நில உடமையாளர்கள் விளை நிலத்தை குத்தகைக்கு விட்டு ஆண்டுதோறும் குத்;தகைத் தொகையை வசூலிப்பவர்.இவர்களில் பெரும்பாலோர் அரசு துறையிலோ அல்லதுதனியார் துறையிலோ வேலை செய்து கொண்டு அல்லது சொந்த தொழிலில் ஈடுபட்டு, நாட்டின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இரண்டாவது, விவசாய நிலத்தை தனது நேர்ப்பார்வையில், வேலைக்கு கூலி ஆட்கள் கொண்டு விவசாயம் செய்பவர்கள்.இவர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்வதில்லை.

மூன்றாவது, அன்றாடம் கூலி பெற்றுக்கொண்டு நிலத்தில் இறங்கி உழைப்பவர். இதில் ஆண்களும், பெண்களும் அடங்குவர். இவர்களுக்கு தினசரி அடிப்படையில் கூலி கிடைக்கும்என்றாலும், நிரந்தர வேலை கிடையாது. வேலை கிடைக்காத நாட்களில் கூலி கிடையாது.

விவசாயிகளில் மிகவும் அல்லல் படுபவர்கள் இந்த மூன்றாவது பிரிவான விவசாய கூலி தொழிலாளர்கள் தான்.தற்போது பல நில உடைமையாளர்கள் பெரிதளவில் விவசாயத்திற்குட்ராக்டர் போன்ற இயந்திரங்களை உபயோகிக்க முற்படுவதால், விவசாயத்தில் கூலி வேலை கிடைப்பதும் குறைந்து கொண்டிருக்கின்றது.

விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி,தங்களது பிரச்சினைகளை அரசு மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் சமயங்களில் முதல் இரண்டு பிரிவுகளிலுள்ள விவசாயிகளின்பிரச்சினை குறித்து தான் விரிவாக அலசப்படுகிறது. விவசாயத்துறையில் கீழ் மட்டத்திலுள்ள லட்சக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை குறித்து யாரும்பெரிதளவில் பேசுவதாக தெரியவில்லை.அவர்கள் ஒதுக்கப்படுகிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.

விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கலாம்?

விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்;ற செய்தி வரும் போது,இந்திய நாட்டின் மனசாட்சி குலுங்குகிறது. நாடே சோகத்தில் வருந்துகிறது.

விவசாயி தற்கொலையின் காரணங்களை குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வில், விவசாயி தற்கொலைக்கு அடிப்படை காரணம் கடன் சுமையால் கந்துவட்டிக்காரர்களால் ஏற்படும் மனஉளைச்சல் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

விவசாயிகளுக்கு விவசாயத்திற்காக குறைந்த வட்டியில் கடன் கொடுக்க பல அரசு திட்டங்கள் உள்ளன. ஆனால், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கொடுக்க அரசு திட்டங்கள் போதிய அளவில் இல்லை. அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும்.அடமானம் வைக்க கீழ் மட்;டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வசதி கிடையாது. வீட்டில் திருமணம்,குழந்தைகளின் படிப்பு அல்லது வைத்தியம் போன்ற தேவைகளுக்கு பணம் தேவைப்படும் போது விவசாயிகள் கந்துவட்டிக்காரர்;களை அணுகுகின்றனர்.

விவசாயிகளின் தற்கொலை மிகுந்த வருத்தம் அளிக்கும் நிலை என்றாலும், பல விவசாயிகளின் தற்கொலை கந்துவட்டிக்காரர்களின் பிடியில் அவர்கள் சிக்குவதால் தான்ஏற்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பொருளாதார சீர்குலைவினால் விவசாயிகள் தற்கொலை செய்வதை நியாயப்படுத்தினால் வேறு பல துறைகளிலுள்ள பலரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்வதையும்நியாயப்படுத்த வேண்டும்.

அரசின் அவசர முடிவுகள்

விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெரும்போது அரசு பயந்து போகிறது. இந்த போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கத்தின் நிதி நிலைமையைசரிவர கணக்கில் கொள்ளாமல், பல கோடி ரூபாய் அளவிற்கு விவசாய கடனை தள்ளுபடி திட்டத்தை அறிவிக்கின்றது. மேலும், விவசாயிகளை தற்காலமாக திருப்தி செய்யும் விதமாக, தேவையான அளவு முன்யோசனை இல்லாமல,; பல சலுகைகளை அவசரமாக அறிவித்து விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வழி ஏற்படுத்துகிறது.

மரபு சார்ந்த அமைப்புகள் முன்னுதாரணமா?

மரபு சார்ந்த அமைப்புகளின் ஊழியர்கள் தங்களது ஒற்றுமையான போராட்டத்தினால், அரசு நிர்வாகத்தை நிலைகுலைய செய்து தங்களது தேவை என்று நினைப்பவைகளை பெற்றுக்கொள்கின்றனர். தங்களது செய்கையால் சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளை குறித்தோ,பொது மக்களுக்கு ஏற்படும் அல்லல்களை குறித்தோ கவலைப்படுவதில்லை.

விவசாயிகள் தங்களது போராட்ட திட்டங்களையும், அணுகுமுறைகளையும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றமரபு சார்ந்த அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.

இத்தகைய தன்னலம் உள்ள போக்கை மரபு சார்ந்த அமைப்பின் ஊழியர்கள் கடைபிடித்து சாதித்து கொள்வதைப் போல, தாங்களும் செய்வது தான் விடிவுகாலத்திற்கு உள்ள ஒரே வழிஎன்று பல விவசாயிகளும் கருத தொடங்கியுள்ளனர். இந்த போராட்ட அணுகுமுறை தவறில்லை என்ற எண்ண ஒட்டத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டதாக விவசாயிகள்எண்ணுகின்றனர்.

மாறிவரும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை

விவசாயிகள் பல நிச்சயமற்ற நிலையினாலும், அவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாலுள்ள பிரச்சினைகளாலும், இக்கட்டான நிலையை சந்தித்து வருகின்றனர் என்பது முற்றிலும் உண்மை.

மரபு சார்ந்த அமைப்புகளின் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், அடிக்கடி பஞ்சப்படி உயர்வு,ஓய்வு ஊதிய திட்டம், வருடாந்திர போனஸ் போன்ற பல வகையில் வருமானம் உள்ளன. பொதுவாக, இவர்களை காட்டிலும் விவசாயிகள் குறிப்பாக கீழ் மட்டத்திலுள்ள விவசாயிகள் கடுமையாக உழைக்கின்றனர். விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின்நலத்தை காப்பது நாட்டின் கடமை.

சில சமயங்களில், விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டாலும், தகாத முறையில் போராட்டங்களை நடத்தினாலும் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டியது, ஆக்கபூர்வமாக அவர்களது இன்னல்களை
குறைக்க முயலுவது நாகரீக சமுதாயத்தின் கடமை.

விவசாயிகளின் முக்கியத்துவத்தையும்,தேவைகளையும் சரியாக புரிந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2022ம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசுமுயல்கிறது என்று கூறியுள்ளார். இருப்பினும், 2022ம் ஆண்டு இந்த குறிக்கோள் சாத்தியமாகுமா என்று விவசாயிகள் சந்தேகப்படுகின்றனர்.

சுவாமிநாதன் குழு அறிவித்துள்ள பல ஆலோசனைகள் ஆக்கபூர்வமானவை. பல ஆலோசனைகள் கடந்த பல வருடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சில ஆலோசனைகள், அமல்படுத்தும் போது முழு அளவில் வெற்றி பெறாததிற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்தில் ஊறிகிடக்கும் ஊழலும், ஒழுங்கீனமும் தான்.கந்துவட்டிக்காரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளின் அட்டகாசம் அடக்கப்படவில்லை.

பேராசிரியர் மற்றும் தலை சிறந்த விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிநாதன் குழு அளித்த ஆலோசனைகளை இன்றையகாலகட்டத்திற்கு ஏற்ப, பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட ஆலோசனைகளை அமல்படுத்தியதில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு, திரு.எம்.எஸ்.சுவாமிநாதனின்தலைமையில் மீண்டும் ஒரு குழு அமைத்து தற்போதைய காலத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை கூறுமாறு மோடி அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here