ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் – இலஞ்சம் கொடுத்த இந்திராணி  அரசு தரப்பு சாட்சி ஆனார்

    ப சிதம்பரத்துக்கு மரண அடி காத்திருக்கிறது. ப. சி. அரசியல் கனவுகள் ‘பணால்’

    0
    2944
    ப சிதம்பரத்துக்கு மரண அடி காத்திருக்கிறது. ப. சி. அரசியல் கனவுகள் ‘பணால்’
    ப சிதம்பரத்துக்கு மரண அடி காத்திருக்கிறது. ப. சி. அரசியல் கனவுகள் ‘பணால்’

    முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஊழல் கதைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் அவருக்கு இலஞ்சம் கொடுத்த ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி அரசு தரப்பு சாட்சியாக மாறினார்.  கடந்த வியாழன் அன்று சிறப்பு நீதிமன்றம் இந்திராணி முகர்ஜி அப்ருவராக அனுமதி அளித்தது. முக்கிய  குற்றவாளியான ப. சிதம்பரத்தின் இலஞ்ச இலாவண்யங்களை இனி இந்திராணி தோலுரித்து காட்டுவார். இவ்வழக்கில் ப. சி. முக்கிய குற்றவாளி ஆவார். இந்திராணி அடுத்த குற்றவாளி.  நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சியாக மாறிய இந்திராணி முகர்ஜி சாட்சியங்களுக்குத்  தேவையான கோப்புகளைப் பார்வையிட்டு  உறுதி செய்வதற்காக அவர் ஜூலை 11 அன்று நீதிமன்றத்துக்கு நேரில் வர வேண்டும் என  அழைப்பாணை பிறப்பித்தது .

    வருமான வரி துறையினரிடம் இருந்து நோட்டிஸ் வந்ததும் இந்திராணி தன்  கணவர் பீட்டருடன் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசி உதவி கேட்டார்.  இந்திராணியை இவ்வழக்கில் இருந்து ப. சி. விடுவிப்பதாக உறுதி அளித்து தன் மகன் கார்த்தியிடம் ஐந்து கோடி கொடுத்துவிடும்படி கூறினார்

    இந்திராணி முகர்ஜி தன்னுடைய மகள் ஷீனா போரா வழக்கில் இப்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனரும் அவரது கணவருமான  பீட்டர் முகர்ஜியும் அதே சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். இந்திராணி முகர்ஜி அரசு தரப்பு சாட்சியாக சம்மதித்ததால் நீதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.

    இந்திராணி ஏற்கெனவே சி பி ஐ அதிகாரிகளிடமும் அமலாக்கத் துறையினரிடமும் தான் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் நிறுவனத்துக்கு ஐந்து கோடி ருபாய் இலஞ்சமாக அளித்ததை ஒப்புக்கொண்டார். அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக ப சிதம்பரத்தின் மகனுக்கு  ஐந்து கோடி ரூபாய் இலஞ்சமாகக்  கொடுக்கப்பட்டது. ஐ என் எக்ஸ் மீடியா என்ற டிவி சேனலுக்கு தான் சட்டத்துக்கு புறம்பாக 305  கோடி  ரூபாய் முதலீடாகக் கொண்டு வருவதில் வருமான வரித்  துறையினரின் பிர்ச்னை இருப்பதாகத் தன்னை மிரட்டி இந்த இலஞ்சப் பணத்தை கேட்டு வாங்கினர் என்று இந்திராணி முகர்ஜி புலனாய்வு துறை அதிகாரியிடம் முன்பே தெரிவித்துள்ளார்.

    ஐ என் எக்ஸ் மீடியா இலஞ்ச வழக்கு

    அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் 2௦௦7இல் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெறும் ஐந்து கோடி மட்டுமே அந்நிய முதலீட்டைக் கொண்டு வர அனுமதி வழங்கியது. ஆனால் இந்திராணி 3௦5 கோடி ரூபாய் கொண்டு வந்ததால் 2008 இல் வருமான வரித்  துறையினரிடம் மாட்டிக் கொண்டார். வருமான வரி துறையினரிடம் இருந்து நோட்டிஸ் வந்ததும் இந்திராணி தன்  கணவர் பீட்டருடன் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசி உதவி கேட்டார்.  இந்திராணியை இவ்வழக்கில் இருந்து ப. சி. விடுவிப்பதாக உறுதி அளித்து தன் மகன் கார்த்தியிடம் ஐந்து கோடி கொடுத்துவிடும்படி கூறினார். இத்தகவலை  இந்திராணி தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஐந்து கோடி ரூபாய் கார்த்தியின் இரு வேறு நிறுவனக் கணக்கில் [Advantage Strategic Consulting and Chess Management Services] பற்று வைக்கப்பட்டிருந்ததை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர். இலஞ்சம் கணக்கில் வந்து சேர்ந்ததும் ப. சிதம்பரம் வருமான வரித் துறையினரை இந்திராணியிடம் பிரச்னை செய்யக் கூடாது என்று அடக்கி வைத்தார். இந்திராணிக்கு அந்நிய முதலீடாக  3௦5 கோடி ரூபாய் வருவதில் இருந்த தடைகளை அகற்றினார்.

    ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் இருந்த ஊழல் அமலாக்கத் துறையின் அதிகாரியான  ராஜேஸ்வர சிங் ‘ரெய்டு’ நடத்திய பிறகே அம்பலமானது. அவர் 2௦14 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரத்தின் வீட்டிலும் கார்த்தியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினார். இந்தச்  சோதனையின் போது ப.சி. குடும்பத்தினருக்கு அசையாச்  சொத்துகள்  பதினான்கு வெளிநாடுகளிலும் பண இருப்பு இருபத்தொரு  வங்கிகளிலும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அமலாக்கத் துறையும் வருமன வரித் துறையும் இணைந்து ப. சி. குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது.

    2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி பி ஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியைக் கைது செய்தனர். ப.சிதம்பரத்துக்கு பயம் தொற்றிக்கொண்டது. உடனே டில்லி உயர் நீதிமன்றத்துக்கும் 2 ஜி நீதிமன்றத்துக்கும்  போய் இடைக்கால ஜாமீன் பெற்றார். 2௦18 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அமலாக்கத்  துறை அதிகாரிகள் டில்லி, ஊட்டி, இலண்டன் மற்றும் ஸ்பெயினில் இருக்கும் கார்த்தியின் 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வழக்கில் இணைத்தனர்.

    இதற்கிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வழக்கில் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அவரது கூட்டாளிகளாக இருந்த நான்கு முக்கிய அரசு உயர் அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க சி பி ஐ அனுமதி பெற்றது. இவர்கள், நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாகியான சிந்துஸ்ரீ குள்ளார், சிறு குறு மத்திய  தொழில் அநூப் கே பூஜாரி, தற்போது ஹிமாசலப் பிரதேசத்தின் தலைமைச் செயலராக இருக்கும் பிரபோத் செக்சேனா , ஒய்வு பெற்ற செயலர் ரபீந்திர  பிரசாத் ஆகியோர் ஆவர். இவ்வழக்கு தொடர்பான கோப்பு நிதி அமைச்சகத்தில் அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.. சி பி ஐ முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்தியையும் இவர்களைக் கைது செய்ய அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here