வைகோவின் பேச்சு  அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்

  ‘இந்தி மொழிக்கு எதிராகப் பேசிய  காரணத்தால் வைகோவை ராஜ்ய சபா உறுப்பினராக செயல்பட விடாமல் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்’- சு சுவாமி

  0
  3014
  ‘இந்தி மொழிக்கு எதிராகப் பேசிய  காரணத்தால் வைகோவை ராஜ்ய சபா உறுப்பினராக செயல்பட விடாமல் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்’- சு சுவாமி
  ‘இந்தி மொழிக்கு எதிராகப் பேசிய  காரணத்தால் வைகோவை ராஜ்ய சபா உறுப்பினராக செயல்பட விடாமல் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்’- சு சுவாமி

  பா ஜ க மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி மாநிலங்கள் அவைத்  தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பிய கடிதத்தில் வைகோ இந்தி மொழிக்கு எதிராக பேசிய வாசகங்களை எடுத்துக்காட்டி  அவரை மாநிலங்கள் அவையில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டுள்ளார்.

  பி ஜி பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மாநிலங்கள் அவைத் தலைவர்  வெங்கையா நாயுடுவுக்கு வைகோவை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கும்படி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ‘வைகோ என்கிற வை கோபாலசாமி அவரது இந்தி எதிர்ப்பு பேச்சுக்களால் தான் அரசியல் உரிமை சட்டத்திற்கு  கட்டுப்பட்டு நடப்பேன் என்ற உறுதிமொழியில் இருந்து மீறிவிட்டார். எனவே அவரை மாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருக்க விடக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  ‘வைகோவின் இந்தி எதிர்ப்பு பேச்சு அரசியல் உரிமைச் சட்டத்தின் 351 ஆவது பிரிவின் படி  சட்ட மீறல் ஆகிறது. எனவே அவர் மீது பாராளுமன்ற  அறநிலைக் குழுவினர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று சுவாமி தலைவர் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  வைகோ ‘இந்தி மொழி ஒரு மேம்பட்ட மொழியே அல்ல என்றும் அம்மொழியில் வெளியான புத்தகம் என்றால் அது ரயில்வே துறையினர் நேரம் ரயில்களின் காட்டும் கையேடு மட்டுமே’ என்று இந்தி மொழியை இகழ்ந்து பேசியுள்ளார்

  மேலும் சுவாமி வைகோவை எல் டி டி ஈ என்ற தமிழ்  ஈழப் புலிகளை ஆதரிக்கும் தீவிரவாதி என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே  ‘அவர் இனியும் மாநிலங்கள் அவையில் உறுப்பினராக நீடிக்கும் தகுதி உடையவரா’ என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  வைகோ  ‘இந்தி மொழி ஒரு மேம்பட்ட மொழியே அல்ல என்றும் அம்மொழியில் வெளியான புத்தகம் என்றால் அது ரயில்வே துறையினர் நேரம் ரயில்களின் காட்டும் கையேடு மட்டுமே’ என்று இந்தி மொழியை இகழ்ந்து பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு இந்தியர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது. மேலும் வைகோ ‘பிரதமரையும்  நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசக் கூடாது; ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்’ என்றார். இதுவும்  தேசிய மொழிகளில் ஒன்றான இந்தியை அசிங்கப்படுத்தியதாகும்.

  இந்திய அரசியல் உரிமைச் சட்டத்தின் 351 ஆவது பிரிவு இந்தியாவின் அலுவலக மொழியாக இந்தியை  ஏற்றுக்கொண்டதைத்  தெரிவிக்கிறது.  மேலும் அவர் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை படிப்பது வெட்டி வேலை என்கிறார். ஆனால் அதே 351 ஆவது பிரிவு சமஸ்கிருத சொற்களை இந்தியில் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு இவர் பேசியது தேசியத்துக்கு இழுக்காகும் என்று வைகோ பேசியவற்றை எடுத்துக் காட்டி சுவாமி அவரை அவையில் இருந்து நீக்கும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்திய அரசியல் உரிமை சட்டத்தின் படி நடப்பேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழியை வைகோ மீறியுள்ளார். இவ்வாறு இவர் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத அபவாத செயல் ஆகும். அவரது பேச்சு இந்திய தேசியவாதிகளை வெகுவாகப்  புன்படுத்துகிறது.  எனவே இப்பிரச்னையை நாடாளுமன்ற அறநிலைக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு போய் இவரை மாநிலங்கள் அவையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார் சுவாமி. இவர் ராஜ்ய சபையின் உறுப்பினர் பதவி வகிக்க லாயக்கற்றவர் என்பதே சரியான முடிவாகும் என்று தன்  கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.  அவர் மாநிலங்கள் அவைத் தலைவருக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
  caption id=”attachment_55391″ align=”aligncenter” width=”696″]Swamy letter to Rajya Sabha Chairrman on Vaiko Swamy letter to Rajya Sabha Chairrman on Vaiko[/caption]

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here