முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல் – பகுதி 3

முறைகேடாக சம்பாதித்த  பணத்தைச் ‘சுற்றி விடுவதால்’ பன்மடங்காக பெருகும் வித்தை

0
2323
முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல்
முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல்

சர்வதேசக் குடிமகன்  என்ற பெயரில் சிலர் எவ்வாறு  வரி  ஏய்ப்பு செய்கின்றனர்? [பகுதி 1] என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். [பகுதி 2]. இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம்

ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவாள் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதை நிஜம் என்று நிரூபிப்பது போல சர்வதேசக் குடியுரிமை பெற்ற சிலர் தங்களிடமிருக்கும் சில கோடிகளில் ஒரு போலி நிறுவனத்தை வரி ஏய்ப்புக்கு உதவும் தீவுகளில் தொடங்கி அங்கு சில ஜால வித்தைகளைக் காட்டி, தாம்  முதலீடு செய்த பணத்தை பல மடங்காக்குகின்றனர்.

சுற்றி விடுதல் (Roundtripping)

ஹவாலா மூலமாக இந்தியப் பணம் வெளிநாட்டுக்குப் போய்விட்டால் கேமன் தீவுகள் அல்லது மொரீஷியஸ் தீவுகள் மூலமாக அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர். இவ்வாறு இந்தியாவுக்குள் வரும்போது அந்த பணம் கறுப்பு மாறி வெள்ளை ஆகிவிடுகிறது மேலும் இதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

Figure 1. போலி நிறுவனங்களில் அடுக்கு முறை

இந்த போலி நிறுவனங்கள் வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் இலஞ்சம் கொடுக்கவும் உதவுகின்றன. கேமன் தீவுகளில் உள்ள நிறுவனங்கள் மூலமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இலஞ்சம் கொடுக்கலாம். இந்த வழிமுறைக்கு சரியான எடுத்துக்காட்டு வாசன் ஐ கேர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட வாசன் கண் மருத்துவமனை ஆகும். கார்த்தி சிதம்பரம் அதிக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் வாசன் கண் மருத்துவமனையில் சீகோயா இண்டியா என்ற நிறுவனமும் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் என்ற நிறுவனமும் தொழில்முதலீட்டு பங்குகளை வாங்கி  [venture capital] பெரிய அளவில் முதலீடு செய்திருந்தன. இந்த தொழில்முதலீட்டு பங்கு நிறுவனங்களை அமலாக்கத் துறையினர் சோதனை செய்தபோது அந்த நிறுவனங்கள் குறித்து சில கேள்விகள் எழுப்பினர்.  இந்த முதலீட்டில் நிலை என்ன என்பது நமக்கு தெரியவில்லை அது குறித்து அறிந்துகொள்ள முயல்வோம்.

கார்த்தி சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவரான கே. பி. பால்ராஜ் என்பவர் முன்பு சீகோயா இண்டியா என்ற நிறுவனத்தின் பனுதார்ராக இருந்தார். பின்னர் இவர் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் மாறினார்.  கேமன் தீவுகளில் அமலாக்க துறையினர் ஆய்வு செய்த போது  இவர் ஒரு தனிநபர் உரிமை நிறுவனம் [Personal Holding Company ] ஒன்றின் உரிமையாளராக இருந்தார். இந்த நிறுவனம் பின்பு கேமன் தீவுகளில் இருந்த தனது அனைத்து சொத்துக்களையும் மொரீஷியஸ் தீவுகளில் இருந்த ஒரு தனி நபர் உரிமை நிறுவனத்துக்கு மாற்றிவிட்ட்தை கணடறிந்தனர்.  இது பற்றி பின்னர் விரிவாகக் காண்போம்.

நிலையான நிறுவனங்களை உருவாக்காமல் தவிர்த்தல்

மேலே காட்டியபடி இந்த நிறுவனங்கள் சற்று சிக்கலானதாகவே இருக்கின்றன. ஒரு நிறுவனம்,  மொரீஷியஸ் அல்லது இந்தியாவின் குடியுரிமை பெற்ற ஒருவரால் தொடங்கப்பட்டு இரட்டை வரி விதிப்பை தடுத்து [DTAA,] அனைத்து சலுகைகளையும் பெற்று இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்பித்து கொள்ளலாம். இது போன்ற ஒரு  நிறுவனம் நிரந்தர நிறுவனமாக அமைந்து இந்தியாவிலேயே தொடங்கப்பட்டு இங்கேயே பணியாளர்களை நியமித்து இங்கேயே தன் முடிவுகளை எடுத்து வந்தாலும் கூட இரட்டை வரி விதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இப்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் நிறுவனம் வரி செலுத்தியாக வேண்டும். ஆனால் இங்கும் பல கணக்காயர்களின் உதவியாலும் வழக்கறிஞர்களுன் உதவியாலும்  வரி விதிப்பில் இருந்து தப்பிக்க என்னென்ன வழி முறைகள் உண்டோ அனைத்தையும் செய்கிறார்கள்.  அவ்வாறு பின்பற்றப்படும் சில வழிமுறைகள் வருமாறு;

  1. தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்கள் இந்தியாவில் எந்த சொத்தும் தொழிலும் இடமும் சொந்தமாகவோ ஒத்திக்கோ இருக்க கூடாது.
  2. தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில் பணியாளர் எவரும் இருக்கக் கூடாது.
  3. தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில்இந்த தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் சார்பில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அதிகாரம் பெற்றவர் எவரும் இந்தியாவில் இருக்கக் கூடாது.
  4. தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில்தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் சார்பில் முதலீடு செய்யவோ மேலாண்மை செய்யவோ எவரும் இருக்கக் கூடாது. தொழில் நிதி சார்ந்த அனைத்து முடிவுகளையும் இயக்குனர் குழு அல்லது முதலீட்டு குழு அல்லது இரண்டு குழுக்களும் சேர்ந்து எடுக்க வேண்டும். தொழில்நிதி குறித்து மொரீஷியஸ் துணை நிறுவனங்கள் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் இயக்குனர் குழு அல்லது முதலீட்டாளர் குழு அல்லது இரண்டு குழுக்களாலும் சேர்ந்து தான் எடுக்கப்படும்.  பொது பங்குதாரர்  நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பார். பொது பங்குதாரர் எடுக்கும் முடிவுகளைத்தான் முக்கியப் பொதுப் பங்குதாரரும் [Ultimate General Partner] எடுப்பார். இந்த முடிவுகளைத் தான் முதலீட்டுக் குழுவினரும் இயக்குனர் குழுவினரும் எடுப்பார்கள். [ஆக பொதுப் பங்குதாரரின் முடிவே முதலீட்டுக் குழுவினரின் முடிவாகவும் இயக்குனர் குழுவினரின் முடிவாகவும் அறிவிக்கப்படும்].
  5. மொரிஷியஸ் துணை நிறுவனங்களின் முதலீட்டு குழு மற்றும் இயக்குனர் குழு / முக்கியப் பொது பங்குதாரர் ஆகியோரில் பெரும்பான்மையோர் இந்தியக் குடிமக்களாக இருக்கக் கூடாது. [இந்தப் பெரும்பான்மையோரை கணக்கிடும் போது மொரிஷியஸ் துணை நிறுவனங்களின் இயக்குனர்களும் அங்கு தங்கியிருந்து பணிகளைக் கவனித்து வரும் நிர்வாகிகளையும் கணக்கில் சேர்க்க கூடாது]
  6. இயக்குனர் குழு/ முதலீட்டாளர் குழு/ பொது பங்குதாரர் போன்றோர் இந்தக் குழுக்களில் பெரும்பான்மையோர் இந்தியாவில் இருப்பதால் அவர்கள் இல்லாமல் கூட்டங்கள் நடத்தி முடிவுகள் எடுக்க கூடாது
  7. இயக்குனர் குழுவிலும் முதலீட்டாளர் குழுவிலும் எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு வெளியேயும் செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும். மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ முதலீட்டு குழு மற்றும் இயக்குனர் குழு / முக்கியப் பொது பங்குதாரர் போன்றோர் இயக்குனர் குழு/ முதலீட்டாளர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மூல  படிவத்தையும் நிறுவனப் பதிவேடுகளின் மூல படிவத்தையும் [மூலப் பத்திரம்] வைத்திருக்க வேண்டும்.
  8. தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் ஆகியோர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும். இதற்கு இயக்குனர்களும் இந்தியாவுக்கு வெளியே நிர்வாகிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில்…

மேற்கூறிய விவரங்கள் பல் வகையினவாகத் தோன்றினாலும் மொத்தத்தில் ஒரே நிதியை கொண்டு இந்தியாவில் உள்ள முக்கியப் பொது பங்குதாரர்களைக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் இந்தியாவிலேயே நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் இதற்குரிய நிறுவனம் மட்டும் இந்தியாவில் நிரந்தரமான அமைப்பாகத்  தொடங்கப்படுவதில்லை. இதனால் வரி செலுத்தாமல் இந்த முதலீடு தப்பித்து கொள்கிறது.

ஒரு வேளை இந்தியாவில் ஒரு ஊரில் இந்தத் தொழில் நடைபெற்றால் இங்கு முடிவுகள் எடுக்கவும் ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் சிலர் பணி அமர்த்தப்படுகின்றனர்.இவர்கள் நடத்தும்  பத்திரிகையாளர் சந்திப்புகள், இவர்களுக்கு விசிட்டிங் கார்டு அச்சடிப்பது, போன்றவற்றில் கூட அதீத கவனம் செலுத்தப்படுகிறது. இவர்களை ஆலோசகர்கள் என்று தான் அடையாளப்படுத்துகின்றனர். இவர்களின் ஆலோசனைகளை முதலீட்டாளர் குழுவினர் மறுத்துவிடுவது உண்டு. இயக்குனர் குழுவும் முதலீட்டாளர் குழுவும் சில ஆலோசனைகளை வேண்டுமென்றே மறுத்ததுண்டு.

மேலே குறிப்பிட்டிருக்கும் பொது நிறுவனங்களைத் தவிர்த்தல் பற்றி இன்னும் ஏராளமாக தகவல்கள் உள்ளன. அவை அனைத்தையும் இப்போதே விளக்க இயலாது; இனி வரும் வாரங்களில் காண்போம்…

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here