கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்

0
3328
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்

இந்துக்களை சந்திக்கு இழுக்கும் செயலில் இறங்கியவர்களின் சாயம் வெளுத்துவிட்டது

இந்து மத அமைப்புகளுக்கும் கட்சிக்கும் எதிராக இடது சாரியினர் துளி ஆதாரமும் இன்றி திட்டமிட்டு  உருவாக்கிய கொலைப்பழியில் அவர்களின் சதி அம்பலமாகிவிட்டது.

ஆர் எஸ் எஸ் பிஜேபி கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த கௌரி லங்கேஷ் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அவருடைய ஆதரவாளர்களான இடதுசாரி –விடுதலை இயல் கொள்கையினர் இந்துசமய ஆதரவாளர்களை

சமுதாயத்தில் இடதுசாரியினர் என்றும் விடுதலை இயல் பிரிவினர் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு பிரிவினர் பேச்சுரிமை மற்றும்  சமயச்சார்பற்ற நிலை போன்றவற்றின் மொத்த குத்தகைதாரர்கள் ஆக தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் இவர்களில் ஒருவரான கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரின் தனி உதவியாளரே இப்போது கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என கர்நாடகப் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கொலைகுற்றம்சாட்டப்பட்டவர்களில் பத்தாவது நபராக சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் [Special Investigation Team (SIT]சார்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இடதுசாரிகள் கௌரி லங்கேஷ் கொலை நடந்த சில மணி நேரத்தில் அவசர அவசரமாக தங்களின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை தொடங்கிவிட்டனர். ஏன் இவ்வாறு இந்து சமயச் சார்பாளர்கள் மீது அவசரப்பட்டு குற்றம் சாட்ட வேண்டும்? பெங்களூருவில் கௌரி லங்கேஷ் குடியிருந்த வீட்டிற்கு வெளியே அவரை சிலர் சுட்டுக் கொன்று விட்டனர். இந்நிகழ்ச்சி நடந்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இச்சம்பவத்தில் அவர் கடுமையாக விமர்சித்து வந்த வலது சாரி சிந்தனையாளர்களுக்கும் இக்கொலைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்ற போதும் எவ்வித முன் யோசனையும் இன்றி போலீஸ் புலனாய்வு தொடங்குவதற்கு முன்பே வலதுசாரிகளை கொலையாளிகள் என்று இடதுசாரிகள் குற்றம் சுமத்தினர். இந்த குற்றச்சாட்டை சுமத்துவது அவர்களுக்கு மிகவும் எளிதாக தோன்றியது. ஒரு வலதுசாரி நபர் கூட அந்த நேரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கவில்லை. போலீஸ் விசாரணையும் தொடங்கி இருக்கவில்லை. இருந்தபோதும் கொலைக்குற்றம் அரசியல் காரணங்களுக்காக நடந்தது என்று இடதுசாரியினரால் முத்திரை குத்தப்பட்டு விட்டது. இப்போது கைதாகி இருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினரின் தனிச்செயலர் அவசரக் குடுக்கை இடதுசாரிகளின் குற்றச்சாட்டைப்  பொய்யாக்கி விட்டார்

கௌரி லங்கேஷ் கொலை நடந்தபோது சோனியா காந்தி வலதுசாரி சிந்தனையாளர்களை கடுமையாகத் தாக்கினார் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. இவற்றை  இக் கொலைச்சம்பவம் நினைவூட்டுகிறது. என்றார்.

ராகுல் காந்தி இன்னும் நேரடியாக பொறுப்பற்ற கருத்துக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிட்டார்.‘’பிஜேபிக்கு எதிராக பேசுவோர் எவராக இருந்தாலும் அவர்களின் பேச்சு முடக்கப்படும்; அவர்களின் வாய் கட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.‘’கௌரி லங்கேஷின் கருத்துக்களை மக்கள் கேட்க விடாமல் அவரை பிஜேபி நிரந்தரமாக மௌனமாகி விட்டது’’ என்றார்.என்ன நடந்தது என்பது தெரியாமலேயே பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சியினர் இன்னும் சிலரும்  இதே கருத்தை இன்னும் சற்று விரிவாக பேசி வந்தனர். அபிஷேக் மனு சிங்வி ‘அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் விடுதலை சிந்தனையாளர்களும் பகுத்தறிவாளர்களும் ஒரே மாதிரியான கொலை திட்டத்திற்கு [pattern theory]’ பலியாக்கப்படுகின்றனர், என்றார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியலை வாசித்தார் அந்த பட்டியலில் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி இப்போது கவுரி லங்கேஷ் என்று வரிசைப்படுத்தி தன் ஆராய்ச்சியை நிறைவு செய்தார். ஒரே மாதிரி செய்கை அல்லது கொலை திட்டம் என்பது பொதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரிமைப்பட்டதாகும். இதுவே இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி தொண்டர்களுக்கு எதிராக அவர்களை அழித்துக் கொல்லப்  பின்பற்றப்படும் கொலைத் திட்டமாகும். கம்யூனிஸ்ட் கட்சியினர் தாங்கள் வலதுசாரி இந்துத்துவா தொண்டர்களுக்கு எதிராக நடத்தும் அநியாயங்களை எதிர்த்து  வெளியே மூச்சு விடுவது கிடையாது.

ஆர்எஸ்எஸ் பிஜேபி கொள்கைகளை எதிர்த்து கௌறி லங்கேஷ் எழுதியதால் தான் கொலை செய்யப்பட்டார் என்று இடது சாரியினர் வைத்த குற்றச்சாட்டில் துளிகூட ஆதாரம் இல்லை. இந்து சமயம் மற்றும்  இந்துத்துவம் போன்றவற்றை தாக்குவதற்கு இடதுசாரிகள் மூட நம்பிக்கை, இருண்மை போன்றசொற்களைப்பயன்படுத்துகின்றனர். பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரியப்படுத்தி கர்நாடக அரசு உண்மையான கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எங்களுடைய இயக்கங்களைச் சேர்ந்த எவரும் இந்த கொலையில் சம்பந்தப் படவில்லை என்று தெளிவாக பகிரங்கமாக கூறினார். மேலும் காங்கிரசின்  அர்த்தமற்ற குற்றச்சாட்டு பொய்யானது அவர்களால் முடிந்தால் இந்தக் குற்றச்சாட்டை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து காட்டலாம் என்றும் சவால் விட்டார்

இன்றைக்கு இந்த வழக்கு பற்றி நாம் தெரிந்து இருக்கும் விபரங்கள் இவை;

  1. இதுவரை போலீஸ் 10 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது
  2. இவர்களில் ஒருவர் கூட ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபியை சேர்ந்தவர் கிடையாது
  3. முதலில் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நவீன் குமார்
  4. இந்த ஸ்ரீராம் சேனை ஒரு சமயச் சார்பற்ற அமைப்பாகும் இதற்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி க்கும் எவ்வித தொடர்பும் இல்லை
  5. மற்றொரு பகுத்தறிவாளர் கொலையில் தொடர்புடைய நான்கு பேர்களை இந்த வழக்கிலும் கைது செய்து விசாரித்து வந்தனர்
  6. மகாராஷ்டிராவில் பூனேயில் வாழ்ந்த நரேந்திர தபோல்கர் என்ற இடதுசாரி சிந்தனையாளரின் கொலைக்கும் கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் சிலர் பேசி வந்தனர்

சிறப்பு புலனாய்வுக் குழு சில அப்பாவிகளை கைது செய்து மிரட்டி விசாரித்து வருவதாகவும் அவர்கள் மீது இடதுசாரியினர் குற்றம் சுமத்தினர்.ஆனால் போலிஸ் விசாரணையில் கௌரி லங்கேஷ் குடும்பத்தாருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவருடைய சகோதரர் இந்திரஜித் லங்கேஷ்  சிபிஐ விசாரணை கோரிய போது,‘கர்நாடக அரசு இதற்கு முன்பு நடந்த இடதுசாரி எழுத்தாளர் கல்புர்கியின் கொலை வழக்கையும் சரியாக விசாரிக்க வில்லை’ என்றும் போலிசின் மீது குற்றம் சுமத்தினார் மேலும் கௌரி லங்கேஷுக்கு அடிக்கடி  கொலை மிரட்டல் இருந்ததாகவும் அவருடைய குடும்பத்தினர் அது பற்றித் தெரிந்திருந்ததாகவும் இந்திரஜித் தெரிவித்தார்

அதி வேளையில் கௌரி லங்கேஷ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிலர் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் விசாரணை தமக்கு திருப்தி அளிப்பதாகவும் அந்த விசாரணை முறையான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். கௌரி லங்கேஷ் குடும்பத்தில் பல தகராறுகள் இருந்துவந்தன என்பதால் இந்திரஜித்தின் கண்டனத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும் ஊடகங்களில் அறிக்கைகள் வெளிவந்தன. இடதுசாரியினர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினரை இந்தக்கொலைவழக்கில் தொடர்புபடுத்த எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது பலன் அளிக்கவில்லை.

இடதுசாரியினர் நினைத்ததைப் போல இக்கொலை குற்றத்தைச் செய்தவர்கள் வலதுசாரியினர் அல்ல என்பது இப்போது தெளிவாகத் தெரியவந்துள்ளது.இக்கொலைபற்றிய  விசாரணை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது ‘சகிப்புத்தன்மையின்மை, கொள்கை வெறி’ போன்ற அர்த்தமற்ற கருத்துக்களை முன்வைத்து இடதுசாரியினர் பிஜேபி ஆர்எஸ்எஸ் காரர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லை என்பதை கர்நாடகாவில் பிஜேபி கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற தனிப்பெரும்பான்மை உணர்த்திவிட்டது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ்காரர்கள் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இடது சாரிகளின் செல்வாக்கு தொடர்ந்து இந்தியாவில் சரிந்துகொண்டே வருகிறது. எனவே காங்கிரஸ்காரர்கள், அரசு விருதுகளை திருப்பித் தருவோர் [‘award wapsi], மற்றும் இடதுசாரிகள் சேர்ந்து நடத்தும் கூத்துக்களில் இவ்வாறான பொறுப்பற்ற போலியான குற்றச்சாட்டுகளை இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here