ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமசிஷ்யர்கள் சபை பதிலடி

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் நிலவும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து ஆஸ்ரம சிஷ்யர்கள் நமக்கு எழுதிய கடிதத்தில் புதிய நிர்வாகக் குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்

1
5350
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம்: புதிய வில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது: சிஷ்யர்கள்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம்: புதிய வில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது: சிஷ்யர்கள்

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள புதிய நிர்வாகக் குழு பற்றி இக்கடிதத்தில் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன

புதிய நிர்வாகிகளான மூவர் அடங்கிய இந்த குழுவினர் ஆங்கவன் சுவாமிகள் எழுதியதாகச் சொல்லும் உயில் ஆங்கிலத்தில் உள்ளதாக சிஷ்யர்கள் கூறுகின்றனர்

தர்மத்தை பாதுகாக்க மேன்மைப்படுத்த முயல்வோருக்கு தர்மமே பாதுகாப்பு

ஸ்ரீரங்கம் ஸ்ரீமட் ஆண்டவன் ஆசிரமத்தைச் சேர்ந்த சிஷ்யர்கள் சார்பாக நம்முடைய செய்தி தளத்திற்கு எங்களுடைய நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று  ஒரு நன்றிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பின்வரும் விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிஜேபியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமியிடம் எங்களுடைய ஆசிரம பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போது அதை அவர் பொறுமையோடு செவிமடுத்ததற்கு நன்றி.

1980 இல் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானதாகும்.1907 முதல் 1989 வரை வாழ்ந்த ஒன்பதாவது ஜீயரான திருக்குடந்தை ஆண்டவன் சுவாமிகள் பி ஜே பி தலைவரான சுப்பிரமணியன் சுவாமியை பற்றி குறிப்பிட்ட போது “அவர் பின்னாளில் தர்ம யுத்தம் நடத்தும் மாவீரராக பெரும் தலைவராக உருவாகுவார்” என்றார். அவரது அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை சீடர்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம். திருக்குடந்தை ஆண்டவனின் ஆசி எங்களுக்கு இந்த சிரம வேளையில் சுப்ரமணிய சுவாமி அவர்களின் மூலமாக உதவிக்கு வந்துள்ளது.

இந்த PGurus செய்தி இணையதளத்தில் எங்களைப் பற்றிய செய்தி கட்டுரை வெளியிட்டிருந்ததைப்  படித்தோம். அதிலுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் நாங்கள் பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஆண்டவன் சுவாமிகள் மட்டுமே இந்த ஆசிரமத்தின் தனிப்பெரும் அதிகாரம் படைத்த ஒரே அதிகாரி ஆவார். இவர் மட்டுமே ஆசிரமத்தின் சமய நடவடிக்கைகளுக்கும் நிர்வாகக் காரியங்களுக்கும் முழு அதிகாரம் படைத்தவர் ஆவார். ஸ்ரீ ராமானுஜரால் நிறுவப்பட்ட ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தம் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் ஆகியவற்றை பரப்பும் நோக்கத்துடன் ஆசிரமத்தின் மற்றும் அவருடைய அன்றாட சடங்கு சம்பிரதாயங்களில் உறுதுணையாக இருக்கவும் வேத விற்பன்னர்களின் குழுவொன்று நியமிக்கப்படும். இக்குழுவின் தலைவராக ஸ்ரீகாரியம் விளங்குவார்.ஆசிரமத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பது கணக்கு வழக்குகளை பார்ப்பது போன்ற சமய நடவடிக்கைகள் அல்லாத விஷயங்களையும் ஸ்ரீ கார்யமே கவனித்துக்கொள்வார். தற்போது புதிதாக உருவாகி இருக்கும் நிர்வாகக் குழுவில் வேத அறிஞர் எவரும் இல்லை என்பதால் இக்குழுவினரால் எந்த சமய சம்பிரதாயங்களையும் செய்ய இயலாது. அவற்றைப் பற்றிய ஞானம் புதிய நிர்வாகக் குழுவினர் எவருக்குமில்லை.

அடுத்த ஆண்டவனை நியமிப்பது என்பது ஒரு சமயம் சார்ந்த நடவடிக்கையாகும். ஆண்டவன் ஸ்வாமிகள் திருநாடு அடைந்த பிறகு அவர் எழுதப்பட்டதாக ஒரு போலியான உயில் பற்றி தெரிவிக்கப்பட்டது.ஆசிரம அதிகாரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளஸ்ரீ காரியத்துக்கு தெரியாமல் நடந்ததாக சொல்வதே இந்த உயிலை  நிராகரிப்பதற்கு தக்க ஆதாரமாகும். ஆசிரமத்தில் ஸ்ரீ காரியத்திற்கு தெரியாமல் எந்த ஒரு செயல்பாடும் நடப்பது கிடையாது; நடக்கவும் கூடாது. இந்நிலையில் ஆண்டவன் ஸ்வாமிகள் ஸ்ரீ காரியத்தை புறக்கணித்துவிட்டு இந்த ஆசிரமத்திற்கான  உயிலை தயாரித்தார் என்பதை பச்சைக் குழந்தை கூட நம்பாது. புதிய நிர்வாகக் குழு என்ற பெயரில் தாமாகவே மூன்று பேர் சேர்ந்து தங்களை ஒரு குழு என்று அறிவித்துக் கொண்டு தங்களிடம் ஒரு உயில் இருப்பதாகவும் அதன்படி தான் சில காரியங்களைச் செய்யப் போவதாகவும் அந்த உயிலை நிறைவேற்றும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுவது சுத்த அபத்தமாகும். ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் அடுத்த ஆச்சாரியாரை நியமிப்பார் என்று  மூவர் குழு தெரிவிப்பது நம்பக கூடியதாக இல்லை.

மூவர் குழு சுட்டிக்காட்டுகின்ற உயில் இன்னும் வித்வான்கள் மத்தியிலோ அல்லது பக்தர்களின் பார்வைக்கு வரவில்லை. அது மிக ரகசியமாக அவர்களிடமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆசிரமத்தின் நலம்விரும்பிகளில் ஒருவர் ‘’திருக்குடந்தை ஆண்டவனால் எழுதப்பட்ட உயிலின் நகல் ஒன்றை காட்டினார். அதில் ஐந்து பக்கத்திற்கு தமிழில் எழுதப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு ஜூலை 11 பதின்மூன்றாம் நாள் இந்த உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா பக்கங்களிலும் திருக்குடந்தை ஆண்டவன் தேவநாகிரி எழுத்தில் கையெழுத்திட்டுள்ளார் இவருடன் மைசூர் ஆண்டவனும் ஸ்ரீதேவி ரங்காச்சாரி அவர்களும் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சமயச் சான்றோர் ஆவர். இந்த உயிலின் நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் ஆண்டவன் ஸ்வாமிகள் தனக்கு அடுத்து நிர்வாகக் குழுவின் தலைவராக ஸ்ரீ கார்யத்தைத் தான்  நியமித்துள்ளார்.இந்த உயிலையும் இப்போது மூவர் குழுவினரிடம் இருப்பதாகச் சொல்லப்படும் உயிலையும்  ஒப்பிட்டுப் பார்ப்போம் இவர்கள் தம்மிடம் இருப்பதாக சொல்லும் உயில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர் வேத விற்பன்னர்கள் அல்லர். ஸ்ரீ காரியமும் இல்லை.. வித்வான் எவரும் கிடையாது. எனவே இந்த உயில் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை தெளிவாக உணரலாம். இந்த உயிலுக்கும் ஆண்டவன் சுவாமிகளுக்கும் எவ்வித தொடர்பும் இருக்க இயலாது என்று நாங்கள் கருதுகிறோம்

தன்னுடைய பெயர் வெளியே தெரியக்கூடாது என்று நினைக்கும் இந்த ஆசிரமத்தை சேர்ந்தஒரு வேத விற்பன்னர் ஆசிரமம் பற்றி சில தகவல்களை நம்மிடம் எடுத்துரைத்தார். அதாவது ஆசிரமத்திற்கு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்கள் தவிர திருப்பதி, காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், உப்பிலியப்பன் கோவில், திருவஹீந்திரபுரம், நெய்வேலி,நாகப்பட்டினம், மதுரை, திருப்புல்லாணி, சென்னை, ஹைதராபாத், மைசூர், பெங்களூர், மும்பை, ரிஷிகேஷ், பத்ரிநாத், திருவனந்தபுரம், புது டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களிலும் சொத்துகள் உண்டு. திருக்குடந்தை ஆண்டவன் காலத்தில் இந்த ஆசிரமத்தின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதன் மதிப்பு சுமார் எந்நூறு கோடிக்கும் அதிகமானது என்பது தெரியவந்தது..ஆண்டவன் சுவாமிகள் தன்னுடைய வாரிசின் அனுமதியின்றி எந்தச் சொத்தையும் விற்கவும் வாங்கவும் ஒத்திக்கு விடவும் யாரையும் நியமிக்கவில்லை. எவருக்கும் இந்த அதிகாரத்தை அவர் வழங்கவில்லை இந்த விவகாரங்கள் குறித்து புதிய நிர்வாகக் குழுவின் தலைவரிடம் கேட்டதற்கு அவர் மௌனத்தையே தனது பதிலாக அளித்தார்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன்  சிஷ்யா சபாவில் பணக்காரர்களோ வக்கீல்களோ ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகளோ உறுப்பினர்களாக இல்லை. இந்த சபையில் வேதவிற்பன்னர்கள், வேதாந்தம் மற்றும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றோர் மட்டுமே. இந்த சபாவை  அலங்கரிக்கின்றனர். இம்மாபெரும் சபையினர் மீது மூவர் குழுவும் தன் அதிகாரத்தையும் பலத்தையும் காட்டி குற்றம் சுமத்துகிறது. இதைப் பார்க்கும்போது பாண்டவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களுடன் கிருஷ்ண பரமாத்மா இருந்ததனால் வெற்றி அவர்களுக்கே கிடைத்தது. இதைத்தான் தர்மம் அவர்கள் பக்கமே இருந்தது என்கிறோம். அதுபோல ஸ்ரீரங்கநாதரின் ஆசியுடன் இந்த தர்மயுத்தத்தில் சிஷ்யா சபா வெற்றி பெறும். ஆண்டவன் சாமிகள் ஆசிரமத்திற்கு வரும் ஒவ்வொரு பக்தனும் அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டியே வருவதால் இங்கு பக்திக்கும் பக்தர்களுக்கும்மட்டுமே இடம் உண்டு.அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்ரீ நாராயண ஆச்சாரியார் மற்றும் ஸ்ரீ லட்சுமண ஆச்சாரியார் ஆகிய இருவரும் சன்னியாசம் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டனர். மூன்றாவது மனிதர் காலமாகிவிட்டார். இந்தக் குழு தனக்கு செல்வாக்கு படைத்த சமூகப் பெரியவர்கள் சிலரின் ஆதரவு இருப்பதால் மட்டுமே அடுத்த ஆண்டவன் சுவாமிகளை தேர்ந்தெடுத்து விடுமா அல்லது ஆசிரமத்திற்கு சமய நடவடிக்கைகளை முக்கியம் என்பதை உணர்ந்து ஸ்ரீ காரியத்தின் தலைமையில் இயங்கும் குழுவினரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்து விடுமா

இன்னொரு அதிர்ச்சி தரத்தக்க தகவல் என்னவென்றால் புதிய குழுவின் தலைவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் நாள் எழுதப்பட்டதாக காட்டும் கடிதத்தில் ஆண்டவன் சுவாமிகள் இறப்புக்கு முன்பு இந்த ஆசிரமத்தின் ஸ்ரீ காரியமாக இருந்து வந்த உ.வே. வீரராகவாச்சாரியார் தன்னுடைய ஸ்ரீ கார்யம் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது.  இது ஒரு பதவி விலகல் கடிதம். ஆண்டவன் ஸ்வாமிகள் இல்லாத இவ்வேளையில் செல்வாக்கு படைத்த மூவர்குழுவினர் ஸ்ரீ காரியத்தையும்ஆசிரமத்தை விட்டு தூக்கி எறிந்து விட முடியுமா. ஸ்ரீ காரியம் இல்லை என்றால் இந்த ஆசிரமத்தின் சமய நடவடிக்கைகளை சமய ஆச்சாரங்களை யார் கவனித்துக் கொள்வார்

மீண்டும் நாங்கள் இங்கு வலியுறுத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் இந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு எதிரிகள் அல்ல. ஆசிரமத்தை சமய அறிவு படைத்தவர் ஒருவர் தலைமையேற்று நடத்த வேண்டும் என்பது எங்களுடைய விண்ணப்பம் வேண்டுகோள் பிரார்த்தனை. எனவே இதனை நிறைவேற்ற நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகுந்த பக்தியோடு பிரார்த்தனை யோடும் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் சிஷ்யா சபா என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறோம் .எங்களுக்கு ஸ்ரீரங்கநாதரின் ஆசி எப்போதும் உண்டு என்று உறுதியாக நம்புகிறோம். அதுபோல தர்மத்துக்காக போர் தொடுக்கும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஆதரவும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தர்மம் வெல்லும் ஆசிரமத்தின் மகிமை மீண்டும் மலரும் எனக் காத்திருக்கிறோம்.  ஆசிரமத்தை லாப நோக்கத்தோடு நிர்வாகம் செய்ய முனைந்துள்ள இந்த மூவர் குழுவிடம் இருந்து கைப்பற்றி பழைய சம்பிரதாயங்களோடு அதனை நல்ல முறையில் நடத்த  வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனையாகும்.

நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது.– “வரலாறு நெடுகிலும் செயல்படக்கூடியவர்கள் செயல்படாமல் இருந்ததால் தான் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் செயல்பட்டிருந்தால் நீதியின் குரல் உரக்க ஒலித்திருக்கும். அப்போது தீமை அழிந்து நன்மை வெல்வது உறுதி”.

தாசன்

ஸ்ரீ கோவிந்தராஜன் ஐயங்கார் சவுரிராஜன் ஐயங்கார்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சிஷ்யா சபா

நான் மதுராந்தகம் வேதபாடசாலையில் கிருஷ்ண யஜுர் வேத பயிற்சி பெற்றவன்; மேலும் வியாகரனத்தில் சிரோண்மணி பட்டம் பெற்றவன்; சமஸ்கிருத இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் வேத பாஷ்ய ஒப்பீட்டாய்வில் முனைவர் பட்டமும் பெற்றவன்; ஆண்டவன் சுவாமிகளிடம் ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், ரகசியத்ரயஸாரம் மற்றும் பகவத் விஷயம் கலாட்சேபம் போன்றவற்றை நிறைவு செய்துள்ளேன்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here