பொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா?

தமிழக அரசு பொன் மாணிக்கவேல் அவமதிக்கிறது; தொல்லை கொடுக்கிறது; அதிகாரத்தைப் பறித்து இடமாற்றம் செய்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தன்னைப் பழைய பதவியிலேயே தக்க வைக்கும்படி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்

1
2417
தமிழக அரசு பொன் மாணிக்கவேல் அவமதிக்கிறது; தொல்லை கொடுக்கிறது; அதிகாரத்தைப் பறித்து இடமாற்றம் செய்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தன்னைப் பழைய பதவியிலேயே தக்க வைக்கும்படி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்
பொன் மாணிக்கவேல்

கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட பிரமுகர்களையும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் கைது செய்த ஸ்டார் அதிகாரியான பொன். மாணிக்கவேலை தமிழக அரசு அப்பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது

பொன். மாணிக்கவேல் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில்  முக்கியமானவர் ஆவார். அவர் ஒரு நிஜ ஹீரோ.அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருப்பதால் கோவிலில் இருந்து கடத்திச் செல்லும் சிலைகளை மீட்டுக் கொண்டு வரும் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்.

பொன் மாணிக்கவேல் தனது இத்தனை ஆண்டுகால பணியிலும் காலில் இறக்கை கட்டிக் கொண்டு சுறுசுறுப்பாகப் பணியாற்றும் பழக்கம் உடையவர். புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு போன்ற துறைகளில் அவர் பல ஆண்டுகள் திறமையாகப் பணி செய்து உள்ளார். பல உயர்மட்ட வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார். அதன் பின்பு அவருக்கு தண்டனை பிரிவு என்று சொல்லக்கூடிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொறுப்பு தரப்பட்டது. அவர் இந்த பிரிவிலும் செவ்வனே பணியாற்றி வருகிறார். குற்றவாளிகளின் அந்தஸ்தைக் கருத்தில் கொள்ளாமல் அவர் எவராயிருந்தாலும் கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்துகிறார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கோயில் சிலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒரு காவல்துறை பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவு கோயிலில் இருந்து கடத்திச் செல்லப்படும் சிலைகளை மீட்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்தியா பிரைட் ப்ராஜெக்ட் [India pride project] நிறுவனரான அனுராக் சக்சேனா, சிலை கடத்தல் பற்றி குறிப்பிடும் போது “1100 சிலைகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம். பொன். மாணிக்கவேல் அவருடைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இல்லையெனில் தமிழக கோயில்களில் ஒரு சிலை கூட இருந்திருக்காது. அங்கு உள்ள அரசியல் கட்சிகள், சிலை கடத்தலுக்கு உகந்ததாக உள்ளன”.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்பு பொன் மாணிக்கவேல் சிலை கடத்தழில் ஈடுபட்ட பல உயர்மட்ட கொள்ளைக்காரர்களையும் ஊழல் அதிகாரிகளையும் கைது செய்துள்ளார். இந்த கைது நடவடிக்கைகள் இம்மாநிலத்தின் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொன்மாணிக்கவேல் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட அரசியலின் பலிகடா ஆகி போன பொன் மாணிக்கவேல் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகளால் தூண்டப்படும் சில நச்சுப் பிரச்சாரங்கள் அவருடைய நேர்மைக்கு எதிராக நிற்கின்றன.

சென்னையில் வாழும் செயற்பாட்டாளர், ரங்கநாதன் என்பவர் தனது ட்விட்டரில் கடத்தப்பட்ட சிலை  கடத்தலே  திராவிட கட்சிகளுக்கு இவ்வளவு லாபம் தருகிறது என்றால் பின்பு அவர்கள் கோயில் நிலம், நகை, சொத்து, பணம் போன்றவற்றை கொள்ளையடிப்பதில் ஏன் ஆர்வம் காட்ட மாட்டார்கள்? இவற்றையும் சிலைத் திருட்டு மீட்புப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில்  மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்துகொண்டு சிலை திருட்டில் ஈடுபட்ட காதர்பாஷா போன்றவர்களை பொன் மாணிக்கவேல் அடையாளம் காட்டியுள்ளார் இந்த காதர்பாஷா போலீஸ் மீட்டெடுத்துக் கொண்டு வரும் சிலைகளைக் கூட நல்ல விலைக்கு விற்கிறார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்த மிகப்பெரிய கடத்தல் கும்பலிடமிருந்து பொன்மாணிக்கவேல் 11 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தார் அவற்றில் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி கிராமத்தில் இருக்கும் சோம்நாத் ஈஸ்வரன் கோவிலைஸ் சேர்ந்த  ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஒரு சிலையும் இருந்தது. சிலை திருட்டு கும்பலில் உள்ள சஞ்சீவி அசோகன், சுபாஷ் கபூர், தீனதயாளன் போன்றவர்களை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் சிலை மீட்பில் மட்டுமல்ல காவல்துறை கட்டுப்பாட்டிலும் ஒழுங்கிலும் மிகுந்த பற்று உடையவர். தன் பிரிவில் பணியாற்றுகின்ற காவலர்களின் தோற்றம், சீருடை போன்றவற்றில் மிக்கவும்கண்டிப்புடன் இருப்பார்.  யாரும் சுருங்கிய அழுக்கான சீருடை அணிந்து வருவதை அவர் விரும்பியதில்லை

முதலமைச்சரின் அறைக்குள் போகும்போது அவர் தன்னுடைய காலணியை கழட்ட மறுத்ததால் அவரை இடமாற்றம் செய்திருப்பதாகவும்  ஒரு வதந்தி நிலவுகிறது.சீருடையில் இருக்கும் போது காவலர்கள் ஷுவை கழட்டக் கூடாது.  மேலும் பொன் மாணிக்கவேல் போராட்டத்திற்கு அஞ்சாத துணிவான நெஞ்சம் படைத்த பாரம்பரியம் மிக்க தேவர் குலத்தைச் சேர்ந்த சேர்ந்தவர். இதனால் அவர் தன் கடமையை தவிர வேறு எவருக்கும் தலை வணங்கியது இல்லை. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் காரர்களை கண்டுபிடிக்க தனக்கு ரகசிய தகவல் அளிப்பதற்காக அடித்தள மக்கள் சிலரை ரகசிய தகவலாளிகளாக வைத்து இருக்கிறார். இவர்கள் ஆட்டோ ஓட்டுபவர்களாகவும் சிறு வியாபாரம் செய்பவர்களாகவும் கூடை வியாபாரம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

சிலை கடத்தல்காரர்கள் சிலைகளை கடத்தி கொண்டு போக எல்லாவகையான தந்திரங்களையும் பின்பற்றுகின்றனர். உர மூட்டைகள், சமையல் கேஸ் சிலிண்டர், கார்டன் ஃபர்னிச்சர் கார் டிக்கி மற்றும் இதர பாகங்கள் போன்றவற்றிற்குள் ஒளித்துவைத்து சிலைகளைக் கடத்துகின்றனர். ஆனால் இவை எல்லாவற்றையும் பொன் மாணிக்கவேல் என்ற இந்த அதிகாரி துரத்திப் போய் கண்டுபிடித்து விடுகிறார். இவருடைய பணி பாராட்டப்பட வேண்டிய பணியாகும்.

அவருடைய அண்மைக்கால சாதனைகள் சில

அண்மையில் சோழர் காலத்து பிரபல மன்னரான ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சிலைகளை பொன் மாணிக்கவேல் மீட்டுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து காணாமல் போன ராஜராஜசோழன் சிலையும் அவருடைய அரசி லோகமாதேவி சிலையும் இவரால் இப்போது மீட்கப்பட்டுள்ளது. இவர் இச்சிலைகள் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மியூசியத்தில் இருப்பதை மோப்பம் பிடித்து அவற்றை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.  தற்போது இச்சிலைகள் மீண்டும் ராஜராஜன் சோழன் கட்டிய பெரிய கோவிலுக்குள் [பிரகதீஸ்வரர் ஆலயம்] வைக்கப்பட்டுள்ளன.

கோயில் நிலங்களையும் சொத்துக்களையும் முறைகேடாக விற்றது நிதி மோசடி செய்தது போன்ற குற்றத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றிய எம் கவிதாவை பொன்மாணிக்கவேல் அண்மையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.இவரைஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தன் பொறுப்பில் எடுத்து விசாரித்து உண்மைகளை அவர் வாயில் இருந்து வரவழைத்த பின்பு அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.  காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு இரண்டு சிலைகள் செய்வதற்காக தங்கம் வாங்கியதிலும் நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மோசடி செய்ததற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

கோயில் நிலங்களும் மூர்த்திகளும் திடீர் திடீரென்று மறைந்து விடுவது குறித்து தனி ஒருவனாக நின்று பொன் மாணிக்கவேல் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறார். கோவில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் இக்குற்றங்களின் புலனாய்வவை மேம்படுத்தவும் உதவும் வகையில் நீதிமன்ற ஆணை வலுவாக இருப்பதனால் பொன் மாணிக்கவேல் இப்பணிகளை செவ்வனே செய்ய முடிகிறது.

அரசியல் மற்றும் பிற  இடையூறுகள்

சிலை மீட்பு பிரிவுக்கு பிரதீப் வி பிலிப் என்பவரையும் காதர்பாஷா என்பவரையும் நியமித்திருப்பது நகைப்பிற்குரியதாகும். இந்து மதத்தைச் சார்ந்த அதிகாரிகளை நியமிக்காமல் விக்ரக வழிபாட்டின் நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவ முஸ்லீம் அதிகாரிகளை நியமிப்பதால் விக்கிரகங்கள் தொலைந்து போகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. இந்த காதர் பாஷா காவல் துறை மீட்டுக் கொண்டு வைத்த சிலைகளை விற்ற குற்றத்திற்கு கைதாகி இருப்பது இக்கேள்விக்கு அரண் சேர்க்கிறது.

நீதிமன்றத்தை அணுகி தன்னுடைய பழைய பதவிக்காகப் போராடும் சூழ்நிலைகு தமிழக அரசு பொன்மாணிக்கவேலைத் தள்ளிவிட்டது.தமிழக அரசால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வில்லை அவருடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டன அவருக்கு பணியில் தேவையற்ற இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டன. அவர் அதிக முயற்சி எடுத்து சிலைகளை மீட்டுக் கொண்டு வரும் இவ்வேளையில் அரசு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றத் துணிந்தது ஏன்

திருக்கோயில்களுக்காக போராடி வரும் டி ஆர் ரமேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இறந்த பின்பு நரகத்துக்குத்தான் போவார்கள் என்பது உறுதி; ஆனால் அதற்காக இந்தப் பிறவியில் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப இயலாது.இந்நிலைமை நேர்மையாகப்  கடமையாற்றும் பொன் மாணிக்கவேல்போன்றவர்களை விரக்தியில் தள்ளுகிறது.

காவல் துறையிலும் அதற்கு வெளியேயும் இருக்கும் பலர் பொன் மாணிக்கவேலின் சிறப்பான சீரிய பணியை பாராட்டுகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவருக்கு நிறைய பாராட்டுகள் வந்து குவிகின்றன. கல்லூரி கருத்தரங்குகளில் அவரைப்பற்றிய ஆய்வுரைகள் வாசிக்கப்படுகின்றன.சிலை மீட்பில் நம்மில் பலருக்கும் உண்மையான ஹீரோ யார் என்பது தெரியும். ஆனால் இப்படிப்பட்ட செயல்வீரர்களை செயல்பட விடாமல் தடுப்பது அவமானகரமான செயல் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதுபோன்ற துரதிஷ்டவசமான நிலைமை தமிழகத்தில் நீடிக்கிறது என்று அனுராக் சக்சேனா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பொன் மாணிக்கவேல் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் அந்த இனம் பழமையானது உறுதியானது தான் எடுத்த போராட்டத்திலிருந்து பின்வாங்காது. எனவே இப்போது நடக்கும் போராட்டத்திலிருந்து  அவர் பின்வாங்க மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here