கெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஒப்புதல்

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க போவது கெஜ்ரிவாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்

0
1209
ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க போவது கெஜ்ரிவாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்
ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க போவது கெஜ்ரிவாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்

டில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று [29 -11-2019]  அனுமதி வழங்கியது 2017 இல் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ. வழக்கு பதிந்தது. அதிகளவில் பினாமி சொத்துக்களை வைத்திருப்பதாக வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும்  இவர் மீது வழக்குகள் பதிந்துள்ளன.

இலஞ்சத்தையும் ஊழலையும் எதிர்த்து கட்சி ஆரமபித்து நடத்தி வந்த கெஜ்ரிவாலுக்கு அவரது அமைச்சரவையை சேர்ந்த சத்தியேந்திர குமார் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சி பி ஐ யும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது. சத்தியேந்திர குமார் மீதான குற்றப் பத்திரிகை அவர் ஐம்பத்து நான்கு போலி நிறுவனங்கள் வைத்திருப்பதையும்  ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதையும் கருப்பு பண மோசடியில் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்துகின்றன.

2009-10 மற்றும்  2010-11 நிதி ஆண்டுகளில்  M/s Akichan Developers Private Limited, M/s Indo Metal Impex Private Limited, M/s ParyasInfosolutions Privat Limited and M/s Manglayatan Projects Private Limited என்ற பெயர்களில் பல போலி நிறுவனங்களை தொடங்கினார். இவற்றின் முலமாக தனது கருப்பு பணம் பதினாறு கோடியை 2010-11 – 2015-16 நிதி ஆண்டுகளில் கணக்கில் கொண்டு வர  முயன்றார். கல்கத்தாவை சேர்ந்த ஜிவேந்திர மிஸ்ரா, அபிஷேக் சொக்காணி, ராஜேந்திர பன்சால் ஆகியோர் முலமாக ஹவாலா மோசடிகளில் ஈடுபட்டார். இந்த மோசடி வேலைகளுக்காக் இவர் 54 போலி நிறுவனங்களை உருவாக்கினார்.

கணக்கில் காட்ட இயலாத கருப்பு பணத்தைதனது  போலி நிறுவனங்களின் உதவியுடன் காசோலைகளாக மாற்றி கணக்கில் ஏற்றியதுடன் இவர் இரு நூறு பிக்காவுக்கும் அதிகமான விவசாய நிலங்களை வாங்கினார்.  இந்நிலங்களை தனது நிறுவனங்கள் மூலமாக கண்காணித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்லா, அவுசந்தி, நிஜாம்பூர், புதான், மற்றும் தில்லியின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் இருக்கும் சொத்துக்களை [புறம்போக்கு நிலங்களை] ஸ்ரீ ஜெயின் முலமாக பராமரித்து வந்தார்.

வருமான வரித் துறையினரின் சோதனை

வருமான வரித் துறையினரின் சோதனையின் போது .16.39 கோடி ருபாயை ரொக்கமாக அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த பணம் அவருடைய போலி நிறுவனங்களின் உதவியுடன் வெளியே வந்த பணம் ஆகும். இது போன்ற பணப் பரிவர்த்தனைகள் மூலமாகவே அவர் இருநூறு பிகா நிலம் வாங்கி இருக்கிறார் என்பதும் புலனானது. 2016 ஆம் ஆண்டு வருமான வெளியீட்டு திட்டத்தின் கீழ் இந்த நிலங்கள் அவரது பினாமியான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் பேரில் வாங்கியிருப்பது தெரிய வந்தது.  ஆனால் வருமான வரி துறையினரின் விசாரணையில் இந்த இருவருக்கும் அந்த நிலத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றனர்.   இந்த ஊழல் குறித்து வருமானவரி அதிகாரி ஒருவர் தெரிவித்த பொது ஹவாலா தரகர்கள் பண மோசடி குறித்து ஒப்பு கொண்டனர் என்றார். மேலும் அந்த அதிகாரி, சத்தியேந்திர குமார் உத்தரவின் பேரில் இந்த பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக தெரிவித்தார். ஜெயினிடம் இருந்து இந்த 16.39 கோடிக்கான தொகைக்கு ரசீது வாங்கியிருப்பதாகவும்  அதற்குரிய  கமிஷன் தொகை பெற்றிருப்பதாகவும் ஜெயின்கள் கணக்கு காட்டியுள்ளனர்

டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜெயின் அளித்த ரிட் மனுவில் அகிசான் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிடட்  வழக்கில் கொல்கத்தாவில் உள்ள மூன்று ஹவாலா தரகர்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்த போலி நிறுவனங்களின் உதவியுடன் வந்தது தான் இந்த 16.39 கோடி என்று ஜெயின் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பதினாறு கோடியை வருமான வெளியீட்டு திட்டத்தின் கீழ் அரசிடம் இப்பணத்தை ஒப்படைத்து விட்டார். இவை சத்தியேந்திர குமார் இந்த ஜெயின்கள் மூலமாக கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வர முயன்றது நிரூபனமாகியுள்ளது.

28.12.2013 முதல்  14.02.2014 வரையிலான முதல் ஆட்சி காலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு அதிகாரமின்றி குடியிருக்கும் பகுதிகளை முறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டன.  இந்த ஆட்சிக் காலத்தில் சத்தியேந்திர குமாரிடம் இருக்கும் விளை நிலங்களை  ஜெயின் சகோதர்களிடம் இருந்து எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்த அதிகாரமில்லா இடங்கள் மற்றும் விவசாய  நிலங்களை குடியிருப்புகளாகவும் கடைகளாகவும்  மாற்ற ஜெயின்கள் முலமாக சத்தியேந்திரன் முயன்று வருகிறார். இதுமட்டும் நடந்து விட்டால் அவருடைய முதலீட்டுக்கு பல மடங்கு பலன் கிடைத்துவிடும். ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலும் மற்ற தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தின் முழு பலனையும் அனுபவிக்க தயாராகிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

ஒரு முறை சத்தியேந்திர ஜெயின் கத்தை கத்தையாக பணத்தை கெஜ்ரிவாலுக்குக் கொடுப்பதை பார்த்தேன் என்று அமைச்சர் கபில் மிஸ்ரா சொல்லியதால் அவரை கெஜ்ரிவால் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். வரி ஏய்ப்பு செய்த ஒருவரிடம் இருந்து நள்ளிரவில் இரண்டு கோடி ருபாய் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தி கெஜ்ரிவால் மீதும் துணை முதலமைச்சர் மனீஷ் சிசொடியா மீதும் சுப்பிரமணிய சுவாமி வழக்கு பதிய அனுமதி கேட்டு காத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here