சித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்

ஜிஹாதிகள் வந்து போக வசதியாக கர்தார்பூருக்கு பாதை அமைக்க அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர இம்ரான் கானை சித்து வானளாவ புகழ்ந்துள்ளார்

0
1175
ஜிஹாதிகள் வந்து போக வசதியாக கர்தார்பூருக்கு பாதை அமைக்க அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர இம்ரான் கானை சித்து வானளாவ புகழ்ந்துள்ளார்
ஜிஹாதிகள் வந்து போக வசதியாக கர்தார்பூருக்கு பாதை அமைக்க அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர இம்ரான் கானை சித்து வானளாவ புகழ்ந்துள்ளார்

நவ்ஜோத் சிங் சித்து இம்ரான் கானை நண்பன் என்று சொல்ல உண்மையில் வெட்கப்பட வேண்டும். அதை விடுத்து இம்ரான் கானுடன் தான் மிகவும் நெருக்கம் என்று சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறார்.

பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில அரசுக்கு மட்டுமல்ல பாரதத்துக்கே பெரிய தலைவலியாக இருக்கிறார். அவர் பாகிஸ்தானின் படைத்தளபதி ஜெனெரல் காமர் ஜாவேத் பாஜ்வாவை கட்டிப் பிடித்து மகிழ்ந்த போதே அவரைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். இப்போது பாகிஸ்தான் பிரதமரை நண்பர் என்கிறார். நாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறோம்.

காஷ்மீருக்குள் ஜிஹாதிகள் வருவதற்கு வசதியாக கர்தார்பூர் வரை போடப்படும் சாலைக்கு இம்ரான் கான் அடிக்கல் நாட்டினார். அப்போது சித்து “என் நண்பர் இம்ரான் வாழ்க’’ என்று கோஷம் எழுப்பினார். “அவர் மிக நல்ல மனிதர். சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்; கர்தார்பூர் வரை சாலை வசதி செய்து தருவேன், என்றார். இப்போது செய்து முடிக்க அடிக்கல் நாட்டுகிறார்; அவர் துணிச்சல்காரர். அஞ்சா நெஞ்சன்’’ என்று அவரை வானளாவ புகழ்ந்தார்.

கான் நல்ல நண்பர். யாருக்கு? நிச்சயமாக இந்தியாவுக்கு அல்ல. நமது ராணுவ வீரர்களையும் குடிமக்களையும் கொன்று குவிக்கும் ஐ எஸ் ஐ ஆட்களுடனும் தீவிரவாதிகளுடனும் தான் சித்துவுக்கு நட்பு. சித்து இந்த ஆட்களுடன் நட்பு வைத்திருக்க வெட்கப்பட வேண்டும் ஆனால் அதை செய்யாமல் இம்ரான் என் நண்பர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். பாரதிய ஜனதா கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் செயல்பாடும் இருக்க கூடாது என்பதை சித்து ஏற்றுக்கொள்வதே இல்லை.  அவர் தனது முதலமைச்சர் அமரீந்தர் சிங் சொல்வதைக் கூட கேட்பதில்லை. முதல்வரே சித்து மீது அதிக கோபத்துடன் தான் இருக்கிறார்.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்லிக் டிவியில் பேசும்போது முன்னாள் இராணுவ அதிகாரி சிங், “நீங்கள் ஒரு மாநிலத்தின் அமைச்சர். இந்தியக் குடிமகன்; இந்தியாவைத் தாக்கும் எந்த இராணுவத்தையும் நாம் ஆதரிப்பது இல்லை; அதனால் நீங்களும் பாகிஸ்தானை ஆதரிக்க கூடாது’’ என்று கூறினார். மேலும் “அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. கேமரா முன் பேட்டி கொடுத்து பழகியவர் என்பதால் கேமரா வெளிச்சத்தைப் பார்த்தவுடன் மதி மயங்கி எதையாவது உற்சாகமாகப் பேசி விடுகிறார். அதன் பின் விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை. போன முறை அவரைப்பார்த்த போது, ‘நீங்கள் பாகிஸ்தானின் ராணுவ தளபதி பாஜ்வாவைக் கட்டிப்பிடித்தது தவறு; அவரால்  தினமும் நமது படை வீரர்கள் செத்து மடிகின்றனர்.  எனது பட்டாலியனில் இருந்து ஒரு மேஜரும் இரண்டு ஜவான்களும் சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்டனர்’’ என்றேன்.

நமது தளபதி சிங்கின் அறிவுரைகள் சித்துவின் காதில் ஏறவில்லை. சிங் இன்றைய அரசியலில் அரிதாகக் காணப்படுகின்ற தெளிவான சிந்தனையும் நேரடியாக பேச்சும் கொண்டிருப்பதற்காக பாராட்டப்பட வேண்டியவர் ஆவார். சித்து இப்படியே பேசி கொண்டிருந்தால் அவரால் பாகிஸ்தானின் போலி சமாதான உணர்வைப் புரிந்து கொள்ள இயலாது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இம்ரான் கான் தான் பேசும் போது ‘’இந்தியாவுடன் பாகிஸ்தான் அதே நாகரிகமான உறவுமுறையைப் பின்பற்றத் தான் விரும்புகிறது’’ என்கிறார். நமக்கு இடையிலான் ஒரே பிரச்சனை காஷ்மீர் தான் .என்றார்.

அப்புறம் ஹபிஸ் சையத்? நவம்பர் 26 நடந்த வன்முறை? பத்தன்கோட்டில் ஊரியில் நடந்த வன்கொடுமைகள்? அதற்கு முன்பு பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதல்? இந்தியாவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள்? இவை எல்லாம் பிரச்சனைகள் இல்லையா? பாகிஸ்தானியர் நம் மக்களை கொன்று போடுவார்கள், ஊர்களுக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு  சேதம் விளைவிப்பார்கள்; அதே சமயம் நம்முடன் நாகரிகமான உறவுமுறை தேவை என்று பேசவும் செய்வார்கள். இது போலித்தனமான பேச்சு; பம்மாத்து வேலை. இந்த பித்தலாட்டங்களைப் புரிந்துகொள்ளாத சித்து மாதிரியான ஆட்கள் பாகிஸ்தானைத் தோளில் தூக்கி  வைத்து கொண்டாடுகின்றனர்.

நல்ல வேளை! வெளி நாட்டுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவித்து விட்டார். அத்துடன் நில்லாது, ‘பாகிஸ்தான் தனது தீவிரவாதச் செயல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு உட்கார முடியும்’ என்றும் தெரிவித்துவிட்டார்.

இந்திய அமைச்சர்களான ஹர்சிம்றத் கவுர் பாதல் மற்றும் ஹர்திப் சிங் பூரி ஆகியோர் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சுஷ்மா கலந்து கொள்ளவில்லை. ‘’நான் ஏற்கெனவே பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். அப்போதும் நான் தான் சமாதானம் பற்றி பேசினேன். அவர்கள் அதற்காக எதையும் செய்யவில்லை. பின்னர் என்ன நடந்தது? பத்தன்கோட் வன்முறை அரங்கேறியது. பிறகென்ன நடந்தது? ஊறி வன்முறை. இனி நாங்கள் பெரியளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

நிச்சயமாக சித்துவால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. அவருக்கு கிரிக்கட்டாலும் டி வி விளம்பரங்களாலும் கிடைத்திருக்கும் பிரபல்யம் அவருக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பை தோற்றுவித்துள்ளது. அவர் தன்னுடைய அறிவு, புகழ், பேச்சு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்கிறார்.  ஒருவர் அமைதியாகப் பேசும்போது அவ்வாறு பேசுகிறவர் நல்லவராக இருப்பார்  என்று மக்களால் நம்பப்படுவதும் ஒரு காரணம் ஆகும்.  இந்த சமூகப் பண்பாட்டுச் சூழலில் தான் சித்து போன்றவர் பெரு மதிப்பை பெறுகின்றனர். இப்படித்தான் இவர் பஞ்சாபின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். அங்கிருந்து  வெளியேறி விட  இதுவே ஏற்ற தருணம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here