நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி வருவது தெளிவாகும். சி பி எம் அரசின் கைக்கூலியாக செயல்படும் காவல் துறை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இந்துக்களைக் கைது செய்துள்ளது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. கைது செய்யும் அளவுக்கு இந்துக்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் பொது இடங்களில் சரணம் ஐயப்பா என்று சொல்கின்றனர். அது கூடாதாம். ஏன் பொது இடத்தில் சரணம் ஐயப்பா என்று சொல்வது என்ன கிரிமினல் குற்றமா?
கைது செய்யப்பட்டவர்களில் ஐநூறுக்கு மேற்பட்டோர் மீது பெயிலில் வர முடியாதபடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தில் பதிமூன்று இலட்சம் பிணை தொகை கட்டினால் மட்டுமே பிணையில் நீதிமன்றன் இவர்களை விடுவிக்கும். கம்யுனிசம் உச்சத்தில் இருந்த நாட்களில் ருஷ்யாவிலும் அண்மையில் கொரியாவிலும் “முதல்வரே கடவுள்” என்ற கருத்தில் அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைகளே நினைவுக்கு வருகின்றன.
கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியலை சி பி ஐ [எம்] கட்சியின் உள்ளூர் தலைவர்களே தயாரித்து காவல்துறையினரிடம் வழங்கினர். மாவட்ட மாநில தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி இந்தப் பட்டியலை தயார் செய்தனர். மாநில அரசிடம் இருந்து கோயில்களை தமது பொறுப்பில் எடுக்க வேண்டும் என இந்துக்கள் முடிவு செய்ததால் இவர்களை மிரட்டி பணிய வைக்க அரசு இந்த வன்முறை நடவடிக்கையை காவல் துறையின் மூலமாக மேற்கொண்டு வருகிறது.
இரவு நேர மது விருந்துகளில் கலந்துகொள்ளும் பெண்களான ரெஹானா ஃபாத்திமா, மேரி மற்றும் பிந்து போன்றவர்களை கோயிலுக்குள் கொண்டு வரப் போட்டிருந்த திட்டம் பாழானதால் சி பி ஐ – எம் கட்சி நடத்தும் மாநில அரசு குறிப்பாக அம்மாநில அரசின் முதல்வர் பினரயி விஜயன் பக்தர்கள் வேஷத்தில் கோயிலுக்குள் செல்ல முயன்ற போலி வேஷதாரிகளை, மாவோயிஸ்டுகளை அங்கு போக விடாத அவர்களை அனுமதிக்காத ஐயப்ப பக்தர்களையும் இனி கோயிலுக்கு அருகிலேயே போக விட கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் சந்நிதானப் திறப்பின் போது பக்தர் எவரையும் இரண்டு நிமிடத்துக்கு மேல் சந்நிதிக்குள் இருக்க விட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த முறை கோயிலுக்குள் செல்வோர் மூன்று முறைக்கு மேல் ‘சரணம்’ சொல்ல இயலாது. சாமி தரிசனம் முடிந்த உடனேயே வெளியே வந்துவிட வேண்டும். கோயிலுக்குள் வேறு எங்கேயும் இருக்க கூடாது.
கேரள போலிசார் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ‘’கேரள பக்தர்களே பெண் பத்திரிகையாளர்கள் மூவரையும் கோயிலுக்குள் போக விடாமல் தடுத்தனர். அவர்களால்தான் அந்த மூன்று பெண்களும் கோயிலுக்கும் போக முடியவில்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். சி பி ஐ [எம்] தலைவர்கள் கோயிலுக்குள் போக கூடிய நடுத்தரவயது பெண்களை கணக்கெடுத்துள்ளனர். இக்கணக்கெடுப்பு பணியை இவர்கள் பகுதி நேர போதகராக பெந்தேகொஸ்தே தேவாலயத்தில் பணியாற்றி வரும் மனோஜ் ஆபிரகாம் என்ற காவல் துறை உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த பெண்களை பெண் போலிஸ்களுக்கான சீருடையை அணிய வைத்து போலிஸ் வேடத்தில் கோயிலுக்குள் அழைத்து செல்ல முனைந்தனர். இந்து செயற்பாட்டாளர்களிடம் இருந்து இந்த பெண்களை மறைத்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் இந்து செயற்பாட்டாளர்கள் நாள் முழுக்க 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்ததால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தரான சேட்லூர் வரதா தேசிகன் பத்ரி ‘’நாங்கள் கோயில் வாயிலை இரவும் பகலும் தீவிரமாக கண்காணித்து வந்தோம். எங்களை மீறி ஒரு ஈ எறும்பு கூட உள்ளே புகுந்துவிடாமல் கண்காணித்தோம். கோயிலின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்’’ என்றார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக விடாமல் சபரி மலைக்கு போய் ஐயப்பனை தரிசித்துவிட்டு வருகிறார்.
கோயில் மரபுகளுக்கு மீறி இளம்பெண்களை அனுப்புவது கூடாது என்று வாதிட்ட இந்து பக்தர்களை சி பி ஐ அரசு காவல்துறையினரை ஏவி சரமாரியாக அடித்தது. கோயிலின் ஆண்டு நிகர வருமானம் பதினைந்தாயிரம் கோடி என்பதால் பினரயி விஜயன் இக்கோயிலை ஒரு பணம் காய்க்கும் மரமாக கருதிவிட்டார். ஆண்டு முழுக்க கோயிலை திறந்து வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அது முறையல்ல என்று தேவசம் போடு மறுத்துவிட்டது. ஆண்டு முழுக்க திறந்து வைத்தால் பக்தர்கள் கூட்டம் குவியும்; காணிக்கை கொட்டும்; அர்சுக்கு செலவழிக்க நிறைய பணம் கிடைக்கும் என்று பினரயி விஜயன் பகல் கனவு கண்டார். இந்த கோயில் காணிக்கை பணத்தை தன் கட்சி கருவூலத்துக்கு கடத்தி கொண்டு போகத் திட்டமிட்டார்.
கோயிலுக்கு பக்தர்கள் போகும் வழியில் எல்லாம் பல விதமான தொழில் மற்றும் வியாபாரங்கள் நடத்த வாய்ப்பு இருப்பதால் இந்தக் கோயிலை ஆண்டு முழுக்க திறந்து வைத்தும் இன்னும் இளம்பெண்களையும் அனுமதித்தால் கூட்டம் அதிகரிக்கும் வர்த்தகமாக்குதல் எளிது என பினரயி போட்ட திட்டம் சுக்கு நூறானது. பல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஐயப்பன் கோயியலை சுற்றி கோயில் இடத்தில் ‘மால்’கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட திட்டமிட்டிருந்தனர். பின்னர் இதே திட்டத்தை மற்ற கோயில்களிலுக்கும் கொண்டு போக கருதினர். கோயில் பணத்தை கட்சியினர் அனுபவிக்க அனுமதிக்கலாம் என நினைத்தனர். ஆனால் ஐய்யப்பன் அவர்களின் திட்டத்தை நிறைவேற்றவில்லை.
ஐயப்பனும் சபரி மலையும் இன்று கேரளாவில் இந்துக்கள் ஒன்றிணைய ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. சாதியால் பிரிந்து நின்ற நாயர்களும் ஈழவர்களும் இன்று இந்த பிரச்னைக்காக தம் பிரிவினையை மறந்து மதத்தால் ஒன்று கூடிவிட்டனர். உள்ளூர் காங்கிரஸ் கட்சி தன் வாக்கு வங்கியை காப்பாற்ற வேண்டி இந்தப் பிரச்னையில் இருந்து விலகி நிற்கும்படி ராகுல் காந்தியையும் சோனியா காந்தியையும் கேட்டுக்கொண்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் இங்குள்ள இந்துக்கள் அடங்கிப் போகவில்லை என்றால் போலிசாரை விட்டு ‘முடித்துவிட வேண்டும்’’ என்ற கொலை வெறியில் இருக்கின்றனர். மாநில முதல்வர் பினரயி விஜயன் Child Evangelism Fellowship, என்ற படத்தை மாநிலம் முழுக்க போட்டு காட்டி ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் மூலமாக வேகமான மத மாற்றத்துக்கு ஒத்துழைத்து வருகிறார்.
சபரி மலையின் தற்போதைய ஆண்டு வருமானம் பதினைந்தாயிரம் கோடியாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கட்சியினர் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கின்றனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் சுற்றுலா பயணிகளுக்கு சபரிமலை கோயிலை சுற்றி காட்டி, அதைக் கொண்டும் பணம் சம்பாதிக்க அரசு திட்டமிட்டிருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத இக்கட்சியினர் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக இக்காரியங்களில் இறங்குவது பணத்துக்காக்த் தானே தவிர எந்த நன்மையும் உத்தேசித்து அல்ல. சமீபத்தில் கேரள அரசின் புதிய சுற்றுலா திட்டத்தில் ஐயப்பன் கோயிலின் அரவனை பாயாசமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் போகாதவர்களுக்கு எப்படிகோயில் பிரசாதம் வழங்க முடியும்? கேரள அரசு போக்குவரத்து துறை இப்படி ஒரு திட்டத்தை எப்படி அறிவிக்கலாம்?. அரவனை பாயாசம் என்பது பக்தியுள்ள இந்துக்களுக்கு வழங்கப்படும் பிரசாதமே தவிர கடையில் விலைக்கு விற்கப்படும் ஓர் இனிப்பு பதார்த்தம் அல்ல.
இந்துக்களின் இந்த ஒற்றுமை நீடித்தால் 2019 பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள இருபது தொகுதிகளில் குறைந்தது மூன்றாவது பி ஜே பிக்கு கிடைக்கும். அங்கு பி ஜே பி கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லை. இதே வேகத்தை நீடிக்க செய்யும் ஆர்வமோ முனைப்போ இல்லை. கோஷ்டி பூசலால் பிரிந்து கிடக்கின்றனர். இதனால் கட்சி செயல்பாடுகள் தீவிரமாக நடக்கவில்லை. மாநிலக் கட்சி தலைவர் இந்த பிரச்னைகளை தீர்த்து வைத்தால் கேரளாவிலும் தாமரை மலரும்.
முதலமைச்சர் பினரயி விஜயனும் அவரது கூட்டாளியான கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் கொடிவேரி பாலகிருஷ்ணனும் இந்துகளுக்கு எதிராக அவர்களை நசுக்கவும் ஒடுக்கவும் பலப்பல திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் மாந்திரிகம் மற்றும் ஏவல், பில்லி, சூனியம் வைப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பேபி என்பவருக்கு எதிராக பில்லி சூனியம் வைத்து தன் குடும்பத்தை பேபி வைக்கும் மாந்திரீக வித்தைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார். ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பில்லி சூனியம் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களுக்கு வாடிக்கை. பினரயி விஜயன் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். அவரை அப்பதவியில் இருந்து விடுவித்து வேறொரு வரை முதலமைச்சராக்க வேண்டிய சூழ்நிலை இப்போது கேரளாவில் நிலவுகிறது.
கேரளாவில் இருந்து ஒரு பாராளுமன்ற சீட் கூட பெறாத பி ஜே பி இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் வெற்றி வாகை சூட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள சி பி ஐ –எம் கட்சிகள் தடையாக இருக்கின்றன. ஊடகங்களும் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குமே ஆதரவாக உள்ளன. ஜனம், ஜன்ம பூமி, கேசரி ஆகியவற்றுக்கு எதிராக இருக்கும் மலயாள ஊடகங்கள் அனைத்தும் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லீம் அடைப்படைவாதிகளின் கைகளில் உள்ளன. ஜலந்தரில் பணியாற்றி வந்த பிஷப் ஃபிராங்கோ மூலக்கல் தன் சபையில் இருந்த பதினெட்டு கன்யாஸ்த்ரீகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார் என்ற செய்தியை இருட்டடிப்பு செய்தன. கன்யாஸ்த்ரீகள் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டம் தொடங்கிய பின்பு தான் அரசு பிஷப்பை கைது செய்ய அனுமதித்தது. பிஷப்புக்கு ஆதரவாகவே ஊடகங்களும் இருந்து வந்தன. மார்கிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவே கேரளாவில் கிறிஸ்துவ முஸ்லீம் சார்புடைய ஊடகங்கள் செயல்படுகின்றன.