ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா டிரஸ்டின் தலைவர் வெங்கட்

ஏர் ஏஷியா: சிதம்பரம் & அஜித் சிங்குக்கும் விரைவில் அழைப்பாணை [சம்மன்]

0
1503
ஏர் ஏஷியா: சிதம்பரம் & அஜித் சிங்குக்கும் விரைவில் அழைப்பாணை [சம்மன்]
ஏர் ஏஷியா: சிதம்பரம் & அஜித் சிங்குக்கும் விரைவில் அழைப்பாணை [சம்மன்]

ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டட் (AAIL) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்க ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாகியும் டாடா டிரஸ்டின் மேலாண் அறங்காவலர் ஆர். வேங்கடரமணனும் இலஞ்சம் கொடுத்து அரசின் கொள்கை விதிகளை தவறாகக் கையாண்டு சர்வதேச உரிமம் பெற்றனர் என்பதற்காக மத்திய புலனாய்வு துறை [சி.பி.ஐ] இவர்கள் இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது. தீபக் தல்வார் என்ற இடைத்தரகரும் இக்குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார். இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் விமானப் போக்குவர்த்து துறை அமைச்சர் அஜித் சிங்கிடம் இருந்து மலேசியாவை சேர்ந்த ஏர் ஏஷியா இந்தியாவில் கூட்டுத்தொழில் தொடங்க  அந்நிறுவனத்துக்கு முறைகேடான  அனுமதியை பெற்றுத்தந்தார்.

மலேஷியாவின் பெரும் தொழிலதிபரான பெர்னாண்டசின் கையளான ‘போ லிங்கம்’ என்று அழைக்கப்படும் தருமலிங்கம் கனகலிங்கம் என்பவர் மலேசியாவை சேர்ந்த ஏர் ஏஷியா பெர்ஹாத் நிறுனத்தின் தலைமை நிர்வாகி ஆவார். இவரும், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் .  இது தவிர  ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டட் மற்றும் ஏர் ஏஷியா பெர்ஹாத் நிறுவனங்களும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டடுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று 2012 பி.ஜே.பி. தலைவரான சுப்பிரமணியன் சுவாமி டில்லி உயர் நீதி மன்றத்தை அணுகிய போது இந்தியாவின் விமான போக்குவரத்து துறையும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமும் [FIPB] செய்திருக்கும் முறைகேடுகள் வெளியே தெரிய வந்தன.  அரசு பல முறை சுவாமியின் வழக்கை தள்ளிவிட நினைத்து கால அவகாசம் கேட்டபடி இருந்தது. வரும் ஜுலை மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. சி. பி ஐக்கும் அமலாக்க துறைக்கும் சுவாமி அண்மையில் அனுப்பியுள்ள மனுவில் ஏர்செல் மேக்சிஸ், 2ஜி ஊழல் போன்றவற்றில் இருப்பது போல இந்த வழக்கிலும் ப. சிதம்பரமே முக்கிய வில்லன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மாபெரும் ஊழலுக்கு தலைவராக செயல்பட்டவர் டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா தான் என்றும் தெரிவித்திருந்தார்

2016. இல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி ஏர் ஏஷியா மூலமாக ரத்தன் டாடாவின் பணம் துபாயில் இருக்கும் ஹமீத் ரேசா மலகோடிபோர் என்பவருக்கு போய்ச் சேர்வதாகவும் இந்த ஹமீத் அமெரிக்காவால் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் தெரிவித்தார். இந்த உண்மை மிஸ்த்ரியால் ஆணையிடப்பட்டு டாடா குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட தணிக்கை ஆய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அமலாக்க துறையும் இந்த வழக்கை கருப்பு பணக் கோணத்திலும் விசாரித்து வருகிறது.

இந்தியக் குற்றவியல் பிரிவு 120 -B இன் கீழ் [குற்றவியல் சதி] மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்கள்  [13[2] , 13 [1] ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான தேடுதல் வேட்டை டில்லி , மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள ஐந்து நிறுவனங்களில் நடைபெற்றதாக சி.பி.ஐ செய்தி தொடர்பாளரான ஆர். கெ. கௌர் தெரிவித்தார்.

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறுதல், தடையில்லா சான்றிதழ் பெறுதல், 5/20 விதியை தளர்த்துதல் ஆகியவற்றிற்கு  இடைத்தரகர் மூலமாக இலஞ்சம் கொடுத்து முறைகேடான வழிகளைப்  பின்பற்றினார். இருபது விமானங்கள் வைத்திருக்கும் நிறுவனம் ஐந்து வருட அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே வெளிநாட்டுக்கு விமான சேவை தொடங்க முடியும் என்ற, 5/20 விதியைத் தளர்த்த வேங்கடரமணன் ஊழலில் ஈடுபட்டார். ஃபெர்னான்டஸ் தன்னிடம் பதினெட்டு விமானங்களே இருந்த நிலையில் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி பெற ஆசைப்பட்டார். இலஞ்சம் கொடுத்து 2014 ஆம் ஆண்டு மே மாதம் இந்த அனுமதியை பெற்றார்.

முதல் தகவல் அறிக்கையில் (FIR) ஃபெர்னாண்டசும் அவரது  இந்திய கூட்டாளியான டாடா சன்சின் பிரதிநிதியான வெங்கட்ராமனும் அரசு அலுவலகத்தில் இருந்து அனுமதிகளை பெறத் தவறான வழிகளை கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2014 பொது தேர்தலுக்கு முன்பே 5/20 விதியை தளர்த்த சிங்கப்பூரில் உள்ள ஹெச். என். ஆர் டிரேடிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனரான ராஜேந்தர் டுபேயும் மும்பையில் உள்ள டாடா  ஃபுட் சர்வீசசின் தலைவரான சுனில் கபூரும் புது டில்லியில் உள்ள டி.டி.ஏ கன்சல்ட்டிங்கின் நிறுவனரும் முதல்வருமான தீபக் தல்வாரும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டநற் என்று  சி..பி.ஐயின் அறிக்கை தெரிவிக்கிறது.

ராஜேந்தர் டுபே ஏர் ஏஷியா அதிகாரிகள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்தித்து பேசி அனுமதி கடிதங்களை பெற உதவினார். சுனில் கபூர் மலேசியாவை சேர்ந்த பெர்ஹாத் நிறுவனத்தின் போ லிங்கம என்பவருடன் வந்து மும்பை ஒட்டலில் உள்ள ஃபோர் சீசன்ஸ் காபி ஷாப்பில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீராம் என்பவரிடம் ஐம்பது லட்சம் ருபாயைக் கொடுத்தார். இத்தொகை ஸ்ரீராம் தனக்கு 5/20 விதியை தளர்த்தி கொடுத்தால் அவருக்கு பிரதியுபகாரமாக விமானத்தில் உணவு வழங்கும் ஒப்பந்தத்தைத் தருவதரகு ஒப்புக்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் அமைச்சகத்துக்கு விதியை தளர்த்தும்படி ஒரு ரகசிய குறிப்பு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் நாள் மற்றொரு ரகசியக் குறிப்பும் அனுப்பப்பட்டது அதன்படி அமைச்சகம் செயல்படமுடியவில்லை; காரணம், அதற்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துவிட்டது.

சி.பி.ஐ தனது முதல் தகவல் அறிக்கையில் மற்றொரு குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது. அதாவது, ஒரு போலி ஒப்பந்தத்துக்காக துபேயின் ஹெச்.என்.ஆர் ட்ரேடிங் நிறுவனத்துக்கு ஏர் ஏஷியா நிறுவனம் 12.28 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. இந்த பணம் தல்வார் மற்றும் கபூர் போன்ற இடைத்தரகர்கள் மூலமாக இந்திய அமைச்சக அதிகாரிகளைச் சந்திக்கவும் அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கவும் பயன்பட்டுள்ளது.

2013-14க்கு இடையிலான  அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைப்படி அந்நிய விமான நிறுவனங்கள் இந்திய விமான நிறுவனத்தில் 49% பங்குகளே வைத்திருக்க வேண்டும்.  இந்திய பங்குதாரரே நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பார்.  இதுவும் ஏர் ஏஷியா நிறுவனத்தில் மீறப்பட்டுள்ளது. மலேஷியாவின் பெர்ஹாத் நிறுவனமும் இந்தியாவின் டாடா சன்சும் இணைந்து உருவாக்கிய ஏர் ஏஷியா–பெர்ஹாத்தின் முழுநிர்வாகமும் மலேஷிய நிறுவனத்திடமே இருந்தது. இதனால் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பல்வேறு விதிகள் பின்பற்றப்படவில்லை. இப்போது இந்நிறுவனம் செயல்படவில்லை.

ஃபெர்ணான்டசும் போ லிங்கமும் மறைமுகமாக ஒர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஏர் ஏஷியாவும் [ஃபெர்னாண்டஸ் இதன் பிரதிநிதி] பெர்ஹாத்தும் [போ லிங்கம் இதன் பிரதிநிதி] 2013 ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏர் ஏஷியா [இந்தியா] லிமிட்டட் நிறுவனத்தை கூட்டு நிறுவனமாகக் கொள்ளாமல்  பெர்ஹாத்தின் கிளை நிறுவனமாக ஆக்கிவிட்டது.

இந்த கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களும்  நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் இந்த நோக்கத்தினைப் புரிந்துகொண்டே செயல்பட்டு விதிகளை மீறி இருப்பதால் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறி அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்றிற்கு முழு நிர்வாகப் பொறுப்பையும் அளித்ததாக குற்றம் சாட்டப்பட முகாந்திரம் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் சி.. பி. ஐ குறிப்பிட்டுள்ளது.

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் விதிகளை மீறியது தெள்ள தெளிவாக்கப்பட்டுள்ளது. எனவே  முன்னாள் அமைச்சர்கள் ப சிதம்பரம் மற்றும் அஜித் சிங்குக்கு விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பபடும் என்றும் சி.பி ஐ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here