ஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும்  நேரடி வேண்டுகோள்

எப்போது ஜெயராம் ரமேஷும் அவரது காங்கிரஸ் ஆட்களும் ஊழல் பற்றி பேசினாலும் அது சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்து அவர்களையே தாக்குகிறதே

0
1578
எப்போது ஜெயராம் ரமேஷும் அவரது காங்கிரஸ் ஆட்களும் ஊழல் பற்றி பேசினாலும் அது சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்து அவர்களையே தாக்குகிறதே
எப்போது ஜெயராம் ரமேஷும் அவரது காங்கிரஸ் ஆட்களும் ஊழல் பற்றி பேசினாலும் அது சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்து அவர்களையே தாக்குகிறதே

16ஆம் தேதி வெளியான கேரவன் என்ற பத்திரிக்கை The D-Companies[ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. ஏதோ புதிதாக புலனாய்வு கட்டுரை எழுதி இருக்கிறார்களே கொள்ளைக்கார தாதாவை பற்றி சொல்ல போகிறார்கள் போல என்று எதிர்பார்த்து வெகு சுவாரசியத்துடன் நான் வாசிக்கத் தொடங்கினால்  அது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவல் பற்றிய கட்டுரை. கட்டுரை மிக நீளம் தான் ஆனால்  ஆதாரங்கள் மிக மிக  குறைவு. இந்தியப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வரி ஏய்ப்பு தளங்களை பற்றிய கட்டுரை

ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் ஆகும்.

இந்தக் கட்டுரை. வந்த மறு நாளே அதாவது ஜனவரி 17 ஆம் தேதி ஜெயராம் ரமேஷ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் கேமன் தீவுகளில் இருந்து வரும் வரி ஏய்ப்பு விவரங்களை தன்னுடைய கேரவன் பத்திரிக்கை வெளியிட்டதால் ரிசர்வ் வங்கி கேமன் தீவுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய விவரங்களை வெளியிட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விவேக்கின் பணமும் அந்த தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கேமன் தீவுகளில் இருந்து  வரும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும்  ஒரு கருத்து சொல்லப்பட்டிருந்தது. இந்த தகவலைக் கேட்டதும் தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வரும் ஜெயராம் ரமேஷ் மீது விவேக் உடனே மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இது தான் ஜெயராம் ரமேஷுக்கு கிடைத்த பலன்.

சிதம்பரம் குடும்பத்தினர் நிலை என்ன?

கேமன் தீவுகளில் பணத்தை முடக்கி வைக்கும் விவரங்களை ஜெயராம் ரமேஷ் விவரித்திருந்தார். அதுவும் பணமதிப்பின் நீக்கத்துக்கு பிறகு தான் இந்த அநியாயம் நடப்பது போலவும் அதன் பிறகே இந்தியாவின் பண முதலைகள் தங்களின் வருமானத்துக்கு வரி செலுத்தாமல் கேமன் தீவில் கொண்டு போய் பதுக்குவதாகவும் கட்டுரை விளக்கியது. பொய்யை என்ன தான் விளக்கி கூறி  இருந்தாலும் உண்மை எவ்வாறு மறைந்து போகும்?

கேமன் தீவுகளில் இந்த வரி ஏய்ப்புக்கு உதவக்க்குடிய வகையில் பல வாய்ப்புகள் இருப்பதை உண்மை. ஆனால் பெரும்பாலும்   மொரிஷியஸ் தீவுகளே வரி ஏய்ப்பாளருக்கு போலி நிறுவனங்களைத் தொடங்கி கருப்புப் பணத்தை குவிக்க புகலிடமாக இருக்கிறது. அங்கு இரட்டை வரி விலக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்வது எளிது. இவ்வாறு மொரிஷியசில் நிறுவனங்கள் தொடங்கும்போது அதற்கான பணத்தை கேமன் தீவுகளில் வைத்திருக்கும் முதலீட்டில் இருந்து கொண்டு வந்தனர்.
படம் 1. போலி நிறுவன அடுக்குகள்

இக்கட்டுரைத் தொடர் வரி ஏய்ப்பு தளங்களின் அச்சுறுத்தல் பற்றி விளக்குகிறது. இதில் வரியை ஏய்ப்பதற்காக அவர்கள் பின்பற்றும் பல்வேறு ஏமாற்று முறைகள் பற்றி விளக்கி இருந்தோம். [அதில் கார்த்தி சிதம்பரத்தின்  நண்பர்களும் கேமன் தீவில் உள்ள தெ வாக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரை பயன்படுத்திய விவரங்கள் தரப்பட்டுள்ளன].  இவை அனைத்தும் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் ஆகும். எல்லா பணமூம் கேமன் தீவுகளை இருந்து வருவதாகவே  கணக்கு காட்டப்பட்ட காலம் அது. ஜெயராம் ரமேஷ் அவர்களே ப சிதம்பரம் இந்தியாவுக்குள் அந்நிய முதலீட்டு வாரியம் மூலம் கொண்டு வந்த முதலீடுகள் குறித்து ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வற்புறுத்துவிர்களா? அவ்வாறு வந்த முதலீடுகளுக்கு கேமன் தீவில் உள்ள தொடர்பு பற்றி ஆராயலாமா? உங்கள் ஆட்சிக்காலத்தை எண்ணி பாருங்கள் எத்தனை ஊழல்? எத்தனை வரி ஏய்ப்பு? அத்தனைக்கும் விசாரணை கமிஷன் வைத்தால் நாடு தாங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here